NTA ஆல் நடத்தப்படும் தேர்வு பற்றிய தகவல்கள்:

NEET - தேர்வு பற்றிய தகவல்கள்:

NEET தேர்வானது 2013 - ம் ஆண்டு முதல் இந்திய அளவில் மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தகுதித் தேர்வாக ஆண்டு தோறும் மே மாதம் CBSE ஆல் நடத்தப்படுகிறது. இத் தேர்வு 2018 - ம் ஆண்டு வரையில் Pen and Paper முறையில் நடத்தப்பட்டது. தற்போது NEET (UG) ,IIT JEE (Main), NET,GPAT போன்ற தேர்வுகளை நடத்த (NTA –NATIONAL TESTING AGENCY) எனப்படும் தேசிய தேர்வாணைய முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

The National Eligibility Cum Entrance Test (NEET) UG– 2019 -ம் ஆண்டு முதல் NTA ஆல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வானது இந்திய அளவில் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே MBBS/BDS படிப்புகளை மருத்துவக் கல்லூரிகளில் தேர்வு செய்ய இயலும். இதில் 15 சதவீத இடங்கள் அனைத்திந்திய அளவிலும் 75 சதவீத இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. NTA தேர்வினை நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிடும் பனியினை மட்டும் மேற்கொள்கிறது. இட ஒதுக்கீடு பனியினை மத்திய அரசும் தொடர்புடைய மாநில அரசுகளும் மேற்கொள்ளும்.

மேலும் இந்திய அளவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் விவரங்களை https://www.mciindia.org/CMS/ என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் கடந்த 2018 - ம் ஆண்டு வரையில் ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்பட்ட தேர்வு தற்போது NTA ஆல் ஆண்டுக்கு இரு முறை (பிப்ரவரி மற்றும் மே மாதங்களில்) நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான தேர்வுக்கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணையை https://www.nta.ac.in/என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ENGINEERING EXAM:

IIT JEE (Main) – தேர்வானது இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களான NITs, IIITs and CFTI போன்றவற்றில் பொறியியல் படிப்பு பயில ஆண்டு தோறும் நடத்தப்படும் தகுதித்தேர்வு ஆகும். இத்தேர்வினை எழுத SC/STமாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 65 சதவீத மதிப்பெண்களும் இதர மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்களும் பெறுவது அவசியம் ஆகும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் B.E./B.Tech. & B. Arch./B. Planning போன்ற இடங்களை National Institutes of Technology (NITs), Indian Institute of Technology (IIITs) and Centrally Funded Technical Institutes (CFTIs) போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில்; தேர்வு செய்யலாம்.

Management Exam

Common Management Admission Test (CMAT) என்பது தேசிய அளவில் நிர்வாகம் தொடர்பாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஆகும். 2018 - ம் ஆண்டு வரை All India Council for Technical Education (AICTE) ஆல் நடத்தப்பட்டு வந்தது. 2019 ஆம் ஆண்டு முதல் NTA ஆல் நடத்தப்பட உள்ளது. Quantitative Technique, Logical Reasoning, Language Comprehension and General Awarenessபோன்ற பிரிவுகளில் Computer based தேர்வாக நடத்தப்பட உள்ளது. இத் தேர்வு தொடர்பான பாடத்திட்டத்தை https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Pharmacy Exam

GRADUATE PHARMACY APTITUDE TEST (GPAT)– என்பது M.Pharm படிப்புகளைத் தேர்வு செய்வதற்கு ஆண்டு தோறும் 2018 - ம் ஆண்டு வரை All India Council for Technical Education (AICTE) - ஆல் நடத்தப்பட்டது. 2019 - ம் ஆண்டு முதல் NTA –ஆல் நடத்தப்பட உள்ளது. Computer based online தேர்வு முறையாக நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் மாணவர்களால் பெறப்பட்ட மதிப்பெண்கள் AICTE-Approved Institutions/University Departments/Constituent Colleges/Affiliated Colleges ஆல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. College/University Teaching & Fellowship Exam

UGC - ஆல் நடத்தப்பட்ட National Eligibility Test (NET) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகத் தகுதி பெறுகிறார்கள். இத்தேர்வானது 84 பாடப்பிரிவுகளுக்கு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. கடந்த டிசம்பர் 2018 - ம் ஆண்டு முதல் NTA ஆல் நடத்தப்படுகிறது.

Contact Us