Select Page

சிறந்த மாநகராட்சி :
• ஆண்டு தோறும் தமிழகத்தில் ஒரு மாநகராட்சியும், மூன்று நகராட்சிகளும் தமிழக முதல்வரின் விருதுக்கு தேர்வு செய்யப்படும்.
• இந்த ஆண்டு (2019) சேலம் சிறந்த மாநகராட்சியாகவும், தருமபுரி, வேதாரண்யம் மற்றும் அறந்தாங்கி சிறந்த நகராட்சியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
• மாநகராட்சிக்கு 25 லட்சம் பரிசும், நகராட்சிகளுக்கு முறையே 15, 10, 5 லட்சங்கள் பரிசாக வழங்கப்படும்

திருமணிமுத்தாறு ஆறு
• சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் உற்பத்தியாகி மஞ்சவாடி கணவாய் வழியாக பாய்கிறது.
• இது காவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும்.
• மேலும் காவிரி கோதாவரி நதிகளை இணைக்க மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் 60,000 கோடி ஒதுக்கியுள்ளது.

பசுமை திறன் மிகு ரயில் நிலையங்கள்:
• தென்னக ரயில்வே 62 இரயில் நிலையங்களை பசுமை திறன் மிகு ரயில் நிலையங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
• மேலும் குப்பைகளிலிருந்து எரிசக்தி தயாரிப்பு, உரம் தயாரிக்க செங்கல்பட்டில் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
• இரயில் நிலையம் எல்லைக்குள், தண்டவாளப்பகுதியில் குப்பை கொட்டினால் 5,000 அபராதமும், சிறுநீர் கழித்தல், எச்சில் துப்பினால் 1000 மற்றும் 500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சம்கௌதா எக்ஸ்பிரஸ்
• இந்தியாவின் தில்லி மற்றும் லாகூருக்கு இடையே இயக்கப்படுகிறது.
• இந்தியா சார்பாக அட்டாரி சர்வதேச எல்லை வரை இந்தியாவும், அட்டாரி எல்லை முதல் லாகூர் வரை பாகிஸ்தானும் இரயில் சேவை வழங்கப்படுகிறது.
• தார் ரயில் சேவை இந்தியாவின் ஜோத்பூர் முதல் கராச்சி வரை இயக்கப்படுகிறது.

சாலைப் பாதுகாப்பு நிதி
• சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிதி ரூ2 கோடியிலிருந்து ரூ 60 கோடியாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

மத்திய அரசின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம்:
• 18 முதல் 40 வரையுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முடியும்.
• மாதாந்திர பிரீமியம் ரூ 55 முதல் ரூ 200 வரை ஆகும்
• 60 வயதுக்குப் பின்னர் விவசாயிகளுக்கு மாதம் ரூ 3000 ஓய்வூதியமாக கிடைக்கும்
• 60 வயதுக்கு முன்பு விவசாயி இறந்தால் அவரது மனைவி ஓய்வூதியம் பெறலாம்

ஒலிம்பிக் 2020 -டோக்கியோ , ஜப்பான்

“லெகிமா” புயல் : சீனா ( மிதவெப்பமண்டலப் புயல்)


சந்திராயன் II

• ஜூலை 22,2019 இல் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் விண்கலம் ஏவப்பட்டது
• ஏவப்பட்ட நாள் முதல் 21 நாட்கள் வரை புவியைச் சுற்றி வருகிறது
• ஆகஸ்டு 14, 2019 அன்று தனது நிலவுப் பயணத்தைத் துவங்குகிறது.
• செப்டம்பர் 7 ஆம் நாள் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும்
• இவ்விண்கலத்தின் மூன்று அமைப்புகள் உள்ளன.
1. ஆர்பிட்டர் -நிலவை ஓராண்டுகள் சுற்றிவரும்
2. லேண்டர்(விக்ரம்) – 14 நாட்கள்
3. ரோவர்( பிரக்யான்) – 14 நாட்கள் (500 மீட்டர் பயணம் செய்யும்)

விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழா (ஆகஸ்டு 12)
• இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என இவர் அழைக்கப்படுகிறார்
• இவரது 100 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் பிறந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
• “சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த இந்தியா தயங்கக் கூடாது” -விக்ரம் சாராபாய்

போக்குவரத்து
• டில்லி – லாகூர் இடையேயான பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
• இச்சேவை முதன் முதலாக முன்னாள் பாரதப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களால் 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
• இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் காரணமாக 2001 இல் சேவை நிறுத்தப்பட்டது
• பின்னர் 2003 முதல் சேவை வழங்கப்பட்டு வருகிறது
• இவ்விரு நகரங்களுக்கு இடையே திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மழலையர் பள்ளிகள்:
• அரசுப் பள்ளிகளில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் துவங்கப்பட்டன
• தமிழகத்தில் 46 அரசுத் தொடக்கப் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

சமூக தினம்
• மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை சமூக தினமாக கொண்டாட இந்திய இரயில்வே திட்டமிட்டுள்ளது.


அம்மா ரோந்து வாகனம்:
• குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு இவ்வாகனம் வழங்கப்பட்டுள்ளது
• முதன்முதலில் சென்னை பிரிவு காவல்துறைக்கு வழங்கப்பட உள்ளது
• 1098 – குழந்தைகளுக்கான அவசர இலவச தொலைபேசி எண்
• 1091 – பெண்களுக்கான அவசர இலவச தொலைபேசி எண்

சௌந்திர பாண்டியனார்:
• திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி கிராமத்தில் பிறந்தார்.
• இவரது சமுதாயப் பணிகளின் காரணமாக இவரது கிராமம் “சுயமரியாதை மண்” என்றழைக்கப்படுகிறது
• தமிழக சட்டப் பேரவை 1921 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
• இவர் தமது 27 வயதில் சட்டசபை உறுப்பினரானார்.
• “பேருந்து பயணச்சீட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் பயணம் பேருந்தில் மறுக்கப்பட்டால் தண்டனை” என அச்சிட்டு வழங்கினார்
• காஃபி விவசாயிகளுக்கான விற்பனை மையங்களை ஏற்படுத்தினார்
• தந்தை பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
• 1927 ல் இவரது தலைமையில் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாடு நடத்தப்பட்டது
• இந்த மாநாட்டில் பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரைச் சேர்க்கும் வழக்கத்தை கைவிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
• செப்டம்பர் 15 இவரது பிறந்த நாள் ஆகும்

கலைமாமணி விருது (2011-2018)
• 5 சவரன் அளவுள்ள தங்கப் பதக்கங்கள்
• நலிவடைந்த கலைஞர்க்கு ரூ 3000 மாதாந்திர உதவித்தொகை

பாரதி விருது:
• புலவர் புதுமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், சிவசங்கரி

பாலசரஸ்வதி விருது:
• சி.வி. சந்திரசேகர், வைஜெயந்தி மாலாபால், வி.பி. கோபால கிருஷ்ணன்

எம்.எல். சுப்புலெட்சுமி விருது (பாடகர்கள்)
• எஸ். ஜானகி, பாம்பே சகோதரிகள், டி.வி.கோபால கிருஷ்ணன்

காவிரி 2018
• ஆகஸ்டு 13’2019 இல் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது
• கோதாவரி-காவிரி ஆறுகள் இணைப்பு (கரூரில் இணைக்கப்படும்)

கால்நடைப் பூங்கா
• விவசாயிகளுக்கு உப தொழிலான கால்நடை வளர்ப்புக்கு ரூ 1000 கோடி செலவில் சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ளது (ஆசியாவில் மிகப் பெரியது)
• நீலகிரியில் ரூ.50 கோடியில் விந்தணுக்கள் தொழில்நுட்ப திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.


பிமல் ஜலான் குழு :
• இந்திய ரிசர்வ் வங்கியும்(சுடீஐ) உள்ள உபரி நிதியை 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறு தவணைகளாக மத்திய அரசுக்கு வழங்க பிமல் ஜலான் குழு பரிந்துரை செய்துள்ளது.
• சுடீஐ யிடம் 9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது
• தற்போது சுடீஐ யிடம் 28மூ உபரி நிதி உள்ளது
• நடப்பு நிதியாண்டின் (2019-2020) இல் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 3.3மூ ஆகும்

உறுப்பு 239 A :
• அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 239 யு இன் படி ஜம்மு காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
• யூனியன் பிரதேசத்திலுள்ள சட்ட சபை பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முன் அனுமதி வழங்க வேண்டும்.

புவிசார் குறியீடு :
• ஒரு பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தனித்துவம் வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும்
• பழனி பஞ்சாமிர்தத்திற்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

கிராஸ்ப்மேன் :
• சென்னை ஐஐவு ஆல் வடிவமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு ரோபோர்ட்

ஜம்மு காஷ்மீர் :
• ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 14, 2019இல் நீக்கப்பட்டுள்ளது

சந்திராயன் II :
• ஆகஸ்டு 14, 2019 இல் சந்திராயன் II தனது நிலவை நோக்கிய பயணத்தைத் துவங்கியது.
• ஆகஸ்டு 20, 2019 அல் சந்திராயன் II நிலவைச் சென்றடையும்

ஜூனியர் உலக மல்யுத்தம் :
• ஈஸ்டோனியாவில் நடைபெற்ற ஜூனியர் உலக மல்யுத்தப் போட்டியில் (60 கிலோ பிரிவு) இந்தியாவின் “தீபக் புனியா” தங்கம் வென்றார்.


முப்படைகளுக்கும் ஒரே தளபதி :
• சுதந்திர தினத்தன்று முப்படைகளுக்கும் ஒரே பதவி உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
• “ஜல ஜீவன்” திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்
• 1999 இல் கார்கில் போரில் முப்படைகளுக்கிடையேயான தகவல் தொடர்பு குறைவாக இருந்ததால் முப்படைகளுக்கும் ஒரே தளபதி உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது
• 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிறைவேற்றப்படுகிறது.

IRSAT -3

PSLV -C47  ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது.
• மேகமூட்டமான சூழலில் கூட புவியைத் தெளிவாகப் படம் பிடிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
• எல்லைக் கண்காணிப்பு, வேளாண் மற்றும் வனக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை போன்றவற்றிற்கு இவை உதவுகின்றன.

2 புதிய மாவட்டங்கள் :
• வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது
1. ராணிப்பேட்டை
2. திருப்பத்தூர்
• தற்போது தமிழகம் 37 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது

விருதுகள்
கல்பனா சாவ்லா விருது :
• சுருக்குமடி வலைப் பயன்பாட்டைக் குறைத்து மீன் வளத்தை அதிகரித்த கடலூர் மீன்வள உதவி இயக்குனருக்கு வழங்கப்பட்டது

அப்துல்கலாம் விருது :
• விண்வெளித் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய இஸ்ரோவின் தலைவர் திரு.சிவன் அவர்களுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது.

அதீத துணிவுக்கான விருது :
• கொள்ளையர்களை அடித்து விரட்டிய திருநெல்வேலி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த சண்முகவேலு, செந்தாமரை தம்பதியருக்கு வழங்கப்பட்டது

நல்ஆளுமை விருது :
• சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்கு வழங்கப்பட்டது.
• நாகநதி புணரமைப்பிற்காக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்கு வழங்கப்பட்டது
• ஜி.எஸ்.டி வரியை முறையாக வசூல் செய்த வணிக வரித்துறைக்கு வழங்கப்பட்டது
• மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான உணவுப் பூங்கா அமைக்கப்பட்டதற்காக சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது
• மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகளவில் கடனுதவி வழங்கிய சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்பட்டது

உள்ளாட்சி அமைப்பு விருது (2019) :
• சிறந்த மாநகராட்சி – சேலம்
• சிறந்த நகராட்சி – தருமபுரி , வேதாரண்யம், அறந்தாங்கி

சில தகவல்கள் :
• இந்திய அட்டர்னி ஜெனரல் – கே.கே. வேணுகோபால்
• இந்திய பாதுகாப்புத்துறை செயலர் – அஜித் தோவல்
• பாராளுமன்ற மக்களவைத் தலைவர் – ஓம் பிர்லா

70% வேலைவாய்ப்பு :
• தொழில்துறை வேலைவாய்ப்பில் 70மூ பணிகளை உள்ளுர் மக்களுக்கு வழங்கிட மத்திய பிரதேசம் அரசு முடிவு செய்துள்ளது


வாஜ்பாய் நினைவு தினம் :
• முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் முதலாவது நினைவு தினம் ஆகஸ்டு 16, 2019 இல் அனுசரிக்கப்படுகிறது.
• ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் – ஜோன்னாரோனெக்கா (போலந்து) தலைமையிடம் : நியூயார்க்
• எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் புதிய தலைவர் -சுனில் பாலிவால்
• தமிழக பள்ளிகள் அனைத்திலும் 44 மாணவர்களைக் கொண்ட மாணவர் காவல் படை அமைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உலகச் சுற்றுலா வரிசையில் இந்தியா 3வது இடம் வகிக்கிறது
பதிவுத்துறையை கணினி மயமாக்கும் திட்டம் ஸ்டார் 2.0 ஆகும்


• முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் துவக்க விழா 19.08.2019 முதல் துவங்கப்பட்டது.
• சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் முதலில் துவங்கப்பட்டது
• அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிக்க வாரந்தோறும் 2 பாட வேளைகளை ஒதுக்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
• “மகா நாயக்” சுபாஷ் சந்திர போஸின் சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புத்தகம் 1998 இல் மராத்திய மொழியில் விஸ்வாஸ் பாட்டீல் என்பவரால் வெளியிடப்பட்டது
• துறைமுகங்களின் மேம்பாட்டை அதிகரிக்க கடல்சார் வாரியத்தை அமைக்க ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.

விளையாட்டு விருதுகள் 2019
• விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் அர்ஜீனா விருது மற்றும் ராஜிவ் கேல் ரத்னா மற்றும் துரோணாச்சாரியார் விருது வழங்கப்படுகிறது

கேல்ரத்னா விருது :
• பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ7.50 லட்சம் வழங்கப்படும்
1. தீபா மாலிக்(48) – மாற்றுத்திறனாளி (குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல்)
2. பஜ்ரங் புனியா – மல்யுத்தம்

அர்ஜீனா விருது
• பூணம் யாதவ், ஜடேஜா -கிரிக்கெட்
• தேஜிந்தர் பால் சிங்தூர், முகமது அனஸ் ஸ்வப்னா – தடகளம்
• குர்பிரீத் சிங் சாந்து – கால்பந்து
• சிங்லென்கனாசிங் கங்குஜம் – ஹாக்கி
• அஞ்சும் முட்கில் – துப்பாக்கி சுடுதல்

துரோணாச்சாரியார் விருது :
• விமல் குமார் – பாட்மிண்டன்
• சஞ்சய் பரத்வாஞ் – கிரிக்கெட்
• மனோஜ்குமார்(மல்யுத்தம்) – தயான் சந்த் விருது
• அரூப் பாசக் -டேபிள் டென்னிஸ்

தயான்சந்த் விருது – ஓய்வுக்குப் பிறகு விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகிறது

உலக பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி -2019
• 1977 இல் தொடங்கப்பட்டு ஆண்டு தோறும் (ஒலிம்பிக் நடைபெறும் ஆண்டைத் தவிர்த்து) நடைபெறுகிறது
• இந்த ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறுகிறது.


சட்டக் கல்லூரி:

• தமிழகத்தின் 13 வது அரசு சட்டக் கல்லூரி நாமக்கல்லில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்:

• இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தின் போது 3 விண்வெளி வீரர்களை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.
• விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் எஸ்.சோமநாத்
• 2019 – இஸ்ரோவின் 50 வது நூற்றாண்டு
• விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழா(2019) ஆகஸ்டு 12 இல் ஆமதாபாத்தில் (குஜராத்) துவக்கி வைக்கப்பட்டது

கோவிலாறு :

• விருதுநகர் மாவட்டம் வத்றாயிறுப்பு அருகில் இவ்வாறு உள்ளது

ஜெயிர்பொல் சொனாரோ :

• பிரேசிலின் அதிபர்
• பூமியின் நுரையீரல் – அமேசான் காடுகள்

ஸ்மார்ட் விளக்குக் கம்பங்கள் :

• இவ்விளக்கு கம்பங்கள் ஹாங்காங்கில் நிறுவப்பட்டுள்ளது
• இது பொதுமக்கள் பற்றிய துல்லியமான பல தகவல்களை சேமிக்கின்றன.

உலக பாட்மிண்டன் :

• சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெறுகிறது
• இந்தியாவின் சாய்பிரணித் (36 ஆண்டுகள் கழித்து) வெண்கலப் பதக்கம் வென்றார்.

மழை வெள்ளம் :

• 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
• அவை முறையே – அஸ்ஸாம், மேகலாயா, திரிபுரா, பீகார், உத்தரகண்ட், ஹிமாச்சல் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம்

பறவையியல் இயற்கை வரலாற்று மையம் :

• கோவை மாவட்டத்தின் ஆனைகட்டி பகுதியல் சலீம் அலி பறவையியல் இயற்கை வரலாற்று மையம் அமைந்துள்ளது.


2019 சூப்பர் ஒகினாவா கராத்தே போட்டி :

• 2019 சூப்பர் ஒகினாவா கராத்தே போட்டியில் சென்னையைச் சேர்ந்த மஹிதா சுரேஷ் கட்டா மற்றும் குஷிதே ஆகிய 2 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றார் (16-18 வயதுக்குட்பட்டோர்)

வங்கி மோசடி :

• 50 கோடிக்கு மேல் வங்கி நிதி மோசடிகளை விசாரிக்க மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) முன்னாள் ஆணையர் டி.எம். பாசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஹ்கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் ரினைசன்ஸ் :

• பஹ்ரைன் நாட்டு அரசு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு “பஹ்கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் ரினைசன்ஸ்” விருது வழங்கப்பட்டது

கீதாஞ்சலி திட்டம் :

• ஏழை மக்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் மேற்கு வங்க அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தீர்ப்புரைகள் :

• தமிழகத்தில் 14 வது சட்டப் பேரவை தீர்ப்புரைகள் முழுவதும் இணையதளத்தில் முதன் முதலாக தமிழ் மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது


சந்திராயன் – 2 :

• ஆகஸ்டு 3 இல் சந்திராயனின் எல் 3-4 கேமரா மூலம் புவியை முதன் முதலில் புகைப்படம் எடுத்தது.
• ஆகஸ்டு 21 இல் நிலவை முதன் முதலில் புகைப்படம் எடுத்தது
• ஆகஸ்டு 23 ல் இரண்டாவது முறையாக நிலவைப் புகைப்படம் எடுத்தது.

பல்லவர் கால கல்வெட்டு :

• திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பழந்தை கிராமத்தில் பல்லவர் மற்றும் விஜயநகர கால கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடி :

• சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி கிராமத்தில் 5-ஆம் கட்ட அகழ்வாயில் 2500 ஆண்டு கால குளியல் தொட்டி கண்டறியப்பட்டது.

யுவான் :

• சீனாவின் நாணயம் யுவான் ஆகும்.

ரோஹிங்யா :

• மியான்மரின் முஸ்லீம் இன மக்கள் ரோஹிங்யாக்கள் ஆவர்.
• 2017 ஆம் ஆண்டு மியான்மர் இராணுவத்திற்கும் இம்மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறு வங்க தேசத்தில் அகதிகளாக குடியேறியுள்ளனர்.

உலக பாட்மிண்டன் போட்டி :

• சுவிட்சர்லாந்தின் ஆகஸ்டு 25, 2016 பேஸல் நகரில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் ஒடுஹாரவை 21-7, 21-7 என தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
• 2017, 2018 ஆம் ஆண்டு போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிமல் ஜலான் குழு :

• ஆர்.பி.ஐ. முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான குழு பரிந்துரையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் உபரி மற்றும் ஈவுத் தொகையில் 1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு.

சி-17 குளோப்மாஸ்டர் :

• போயிங் நிறுவனம் இந்திய விமானப் படைக்கு 11-வது சி-17குளோட்மாஸ்டர் போக்குவரத்து விமானத்தை ஒப்படைத்தது.

கல்வி தொலைக்காட்சி :

• ஆகஸ்டு 26-2019 முதல் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி தனது சேவை ஒளிபரப்பைத் துவங்கியது

மின்சாரப் பேருந்து :

• தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஆகஸ்டு 26, 2019 இல் முதன் முதலாக சோதனை அடிப்படையில் மின்சாரப் பேருந்து இயக்கப்பட்டது
• மத்திய அரசின் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மதுரை, சென்னை, சேலம், வேலூர், தஞ்சாவூர் நகரங்களில் மின்சாரப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அம்மா ரோந்து வாகனம் :

• சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக 40 அம்மா ரோந்து வாகனங்கள் ஆகஸ்டு 26, 2019 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

G-7 மாநாடு :

• பிரான்சு நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெற்ற (ஆகஸ்டு 24-26) G-7 உச்சி மாநாட்டில் பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பங்கேற்றார்.

• பிரிட்டன் பிரதமர் -போரிஸ் ஜான்சன்


தொழில் பூங்கா :

• விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் புதிய தொழில் பூங்கா, ஜவுளி பதனிடும் குழுமம் ஆகியவற்றிற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

விண்வெளி :

• விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களுக்கு எலும்பு, தசை வலுவிழக்கும் பூமிக்குத் திரும்பிய நீண்ட நாட்களுக்குப் பின்னரே சரியாகும் என ஓய்வு பெற்ற அமெரிக்க விண்வெளி வீரர் டான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் பள்ளிகள்:

• பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் சென்னையில் “ஸ்மார்ட் பள்ளிகள்” திட்டம் செயல்படுத்திட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
• இதன்படி சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் சீரமைக்கப்படும்
• இதன்படி பள்ளிகளில் சோலார் மின் வசதி, பள்ளித் தோட்டம், மாடித் தோட்டம், ஆய்வுக்கூடம் விரிவாக்கம் போன்றன ஏற்படுத்தப்படும்

முதல் பெண் டிஜிபி :

• இந்தியாவின் முதல் பெண் டிஜிபி “காஞ்சன் பட்டாச்சாரியா” மறைவு
• 2004 இல் உத்தரகண்ட் மாநில காவல்துறை டிஜிபி யாக பணியாற்றினார்

டேக்வாண்டோ :

• மலேசியாவில் நடைபெற்ற 4 வது சர்வதேச ஹீரோஸ் டேக் வாண்டோ கோப்பை 2019 போட்டியில் சென்னையைச் சேர்ந்த வீரர் உதயகுமார் தங்கம் வென்றார்.

ஜம்மு காஷ்மீர் ரூ லடாக் :

• ஜம்மு காஷ்மீர் ரூ லடாக் அக்டோபர் 31-2019 முதல் யூனியன் பிரதேசங்களாகச் செயல்பட உள்ளன.

NVSP :

• வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை வாக்காளர்களே தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் செப்டம்பர் 1, 2019 முதல் செய்ய இயலும்.
• இதற்காக NVSP என்ற இணையதளம் ரூ மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

GCTP Citizen Services (மொபைல் செயலி)

• சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் குறித்து புகார் தெரிவிக்க GCTP Citizen Services எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டுமனை அங்கீகாரம் :

• 1200 ச.அடிக்குள் கட்டப்படும் வீடுகளுக்கு இணையதளம் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது நடத்தை விதிகள் :

• இந்தியாவிலுள்ள அனைத்து சட்டப் பேரவைகளுக்கும் பொதுவான நடத்தை விதிகளை உருவாக்க குழு அமைக்கப்பட உள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிரில்லா தெரிவித்துள்ளார்.
• சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு நவம்பர் 2019 இல் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற உள்ளது.

ஒற்றுமையின் சிலை :

• அக்டோபர் 31, 2018 ஆம் ஆண்டு உலகின் உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலை (182 மீ) சர்தார் சரோவர் அணையின் அருகே அமைக்கப்பட்டுள்ளது
விளையாட்டு :

• உலக வில்வித்தை போட்டி (ஜீனியர்) – கோமாளிகா பாரி(தங்கம்)
• மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாட்மிண்டன் போட்டி – மானசி ஜோஷி(தங்கம்)


புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் :

• தமிழக அரசு, லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் கிளையை தமிழகத்தில் துவக்க 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

உலக துப்பாக்கி சுடும் போட்டி (ISF) :

• பிரேசில் நாட்டு தலைநகர் ரியோடிஜெனிரோ நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.
• இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் (தமிழகம்) தங்கம் வென்றார்(சீனியர் பிரிவு)
• ஜீனியர் பிரிவில் தங்கம் வென்று ஆசிய சாம்பியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது

FIT இந்தியா திட்டம் :

• 29.08.2019 இல் FIT இந்தியா இயக்கம் பிரதமர் மோடி தில்லியில் துவக்கி வைக்கப்பட்டது.
• உடல் சார் உழைப்பையும், விளையாட்டையும் ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்


பொதுத்துறை வங்கிகள் இணைப்பு :

• பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 12 பொதுத்துறை வங்கிகளாக மாற்றப்படும் என மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

12 வங்கிகள் :

1) பஞ்சாப் நேஷனல் வங்கி
2) யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
3) கனரா வங்கி
4) இந்தியன் வங்கி
5) பரோடா வங்கி
6) பாரத ஸ்டேட் வங்கி
7) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
8) யூகோ வங்கி
9) பாங்க் ஆஃப் இந்தியா
10) பஞ்சாப் அன்ட் வங்கி
11) பேங்க ஆஃப் மகாராஷ்டிரா
12) சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
• ஜஐனுடீஐஸ வங்கி தனியார் வங்கியாக ஜனவரி 2019ல் அறிவிக்கப்பட்டது

புவிசார் குறியீடு :

• தமிழகத்தின் காரைக்குடி செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

விண்வெளி போர்படைப் பிரிவு :

• விண்வெளியிலுள்ள அமெரிக்காவின் செயற்கைக் கோள்களைப் பாதுகாக்க விண்வெளிப் போர்படைப் பிரிவை அமெரிக்கா துவங்கியுள்ளது.

உலக துப்பாக்கி சுடுதல் (ஆண்கள்)

• இந்தியாவின் அபிசேக் வர்மா(தங்கம்), சௌரவ் சௌத்ரி(வெண்கலம்) பதக்கங்களை வென்றனர்.
• இப்போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்று வருகிறது.

Contact Us