அடிப்படைத்தகவல்கள்:
பொருளியல் என்ற சொல் ஆய்க்கனோமிக்ஸ் என்னும் பழமையான கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. ஆய்க்கோஸ் என்றால் இல்லங்கள் மற்றும் நேமோஸ் என்றால் நிர்வாகம், வழக்கம் அல்லது விதி என்று பொருள்படும்.
‘பொருளியல்’ என்றால் ‘இல்லங்களின் நிர்வாகம்’ என்று பொருள்படும். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘பொருளியல்’ என்று ஆல்ஃபிரட் மார்ஷலால் பெயர் மாற்றப்பட்டது.
செல்வ இலக்கணம் (ஆடம் ஸ்மித்) :
- தொன்மை காலத்தை பற்றி உணர்த்துகிறது.
- ஆடம்ஸமித் ‘நாடுகளின் செல்வத்தின் இயல்பும், காரணங்களும் பற்றிய ஓர் ஆய்வு’ (1776)
என்ற தனது நூலில் ‘பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்’ என்றும், - உற்பத்தியின் அளவினை அதிகரிக்க ‘வேலை பகுப்புமுறை’யையும் அறிமுகப்படுத்தினார்.
- ஆடம்ஸ்மித்தின் நூலான ‘நாடுகளின் செல்வம்’ (1776)-வெளியீட்டுக்குப்பின் பொருளியல் ஒரு தனி இயலாக உருவானது.
- பொருளியலை ஓர் ‘இருண்ட அறிவியல்’ என இரஸ்கின் மற்றும் கார்லைல் போன்றோர் கூறியுள்ளனர்.
- பொருளியல் செல்வத்தைப் பற்றியும், மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது.
- நல இலக்கணம் (மார்ஷல்) – புதிய தொன்மை காலத்தை பற்றி உணர்த்துகிறது.
- பற்றாக்குறை இலக்கணம் (இராபின்ஸ்) – புதிய யுகத்தை பற்றி உணர்த்துகிறது.
- வளர்ச்சி இலக்கணம் (சாமுவேல்சன்) – நவீன யுகத்தை பற்றி உணர்த்துகிறது.
- பொருளியல் என்பது ‘விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான சாதனங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றி படிக்கும் ஓர் அறிவியலே’ ஆகும்.
- பொருளியல் என்பது,‘மனிதனும், சமுதாயமும் பணத்தை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ, மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையால் வளங்களைக் கொண்டு, பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்து, அவற்றை தற்காலத்திலும் எதிர்காலத்திலும், மக்களுக்கிடையேயும் சமுதாயக் குழுக்களுக்கிடையேயும் நுகர்விற்காக எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை தெரிவு செய்யும் இயலாகும்’ என வரையறை செய்கிறார்.
- ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் பலர் பொருளியலை ஒரு கலையியல் என்றழைக்கின்றனர்.
பண்டங்கள்;:
• பொருளியலில் பண்டங்கள் என்பது குறிப்பிட்டு சொல்லப்படாதவரை, பணிகளையும் சேர்த்தே
குறிக்கும்.
• பண்டங்கள் மற்றும் பணிகளின் வகைகள்
அ. இலவச மற்றும் பொருளாதார பண்டங்கள் பொது மற்றும் தனியார் பொருட்கள்
ஆ. நுகர்வோர் பண்டங்கள் மற்றும் மூலதன பண்டங்கள்
இ. அழியும் பண்டங்கள் மற்றும் நீடித்து இருக்கக்கூடிய பண்டங்கள்
பயன்பாடு:
• பொருளியலில் மனித விருப்பத்தை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின்
ஆற்றலே பயன்பாடு எனப்படும்.
பயன்பாட்டின் வகைகள்:
1. வடிவப் பயன்பாடு: ஒரு பண்டம் அல்லது பணி ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் கிடைப்பது. எ.கா.துணி
2. காலப் பயன்பாடு: ஒரு பண்டம் அல்லது பணி ஒரு குறிப்பிட்ட சூல்நிலையில்
கிடைப்பது. எ.கா. மனித இரத்தம்
3. இடப் பயன்பாடு: ஒரு பண்டம் அல்லது பணி ஒரு குறிப்பிட்ட நுகர்வு மையத்தில் கிடைப்பது. எ.கா. புத்தகம்
4. சேவைப் பயன்பாடு: ஒரு நுகர்வோர் தேவையான நேரத்தில் தேவைப்படுகிற பணியினைப் பெறும்போது பெறுகிறார். எ.கா.மருத்துவர்.
5. உடைமைப் பயன்பாடு: ஒரு பொருள் விலைக்கு வாங்கப்பட்டு பயன்படுத்தப்படுவதே உடைமைப் பயன்பாடு ஆகும். எ.கா. புத்தகம்
6. அறிவுப் பயன்பாடு: அறிவுப் பயன்பாடு என்பது, ஒரு குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி பெறும் அறிவாகும். எ.கா.விளம்பரம்.
விலை: பண்டங்களின் மதிப்பை பணத்தால் குறிப்பிட்டால் அது விலை எனப்படும்.
அங்காடி: பொதுவாக அங்காடி என்பது பொருட்களை வாங்குவதும், விற்பதும் நடைபெறும் ஒரு இடமாகும்.
செலவு: செலவு ஒரு குறிப்பிட்ட அளவு பண்டத்தை உற்பத்தி செய்வதற்கு அல்லது வாங்குவதற்கு ஏற்படும் செலவினங்களைக் குறிக்கிறது.
வருவாய்: பண்டங்கள் மற்றும் பணிகளை விற்று ஈட்டும் வருமானம் வருவாய் எனப்படும்.
வருமானம்: வருமானம் என்பது ஒரு பொருளாதார அலகால் ஒரு குறிப்பட்ட காலத்தில், ஈட்டப்பட்டதாகவோ, ஈட்டப்படாததாகவோ, பணமாகவோ அல்லது பிறவகைச் சம்பாத்தியமாகவோ பெறுவதாகும்.
பொருளியலாளர் ஏங்கலின் விதியின்படி, உணவுப் பண்டங்களுக்காக செலவிடப்படும் செலவின் சதவீதம், மொத்த செலவு (வருமான உயர்வின் போது) அதிகரிக்கும்போது குறையும்.
நுண் பொருளியலின் முக்கியத்துவம்:
1. ஒரு பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவுகிறது.
2. பொருளாதாரக் கொள்கைக்கான கருவிகளைத் தருகிறது.
3. பொருளாதார நலனின் நிலையை பற்றி ஆராய்கிறது.
4. வளங்களை திறன்பட பயன்படுத்த உதவுகிறது.
5. பன்னாட்டு வாணிபத்தில் பயன்படுகிறது.
6. பயனள்ள முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுகிறது.
7. வளங்களை உத்தம அளவில் பங்கிட பயன்படுகிறது.
8. முன் கணிப்பிற்கு அடிப்படையாக உள்ளது.
9. விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.
உற்பத்தி:
உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடே உற்பத்தி எனப்படும்.
பரிமாற்றம்:
பரிமாற்றம் என்பது பல்வேறு அங்காடி அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதோடு தொடர்புடையது. இதன் பிரிவு வர்த்தகம் மற்றும் வணிகத்தை உள்ளடக்கியது.
பொருளியலின் வகைகள்:
1. நுண்ணியல் பொருளியல்:
நுண்பொருளியல் மற்றும் பேரியல் பொளியல் என்ற சொற்களை முதன்முதலில் 1933ஆம் ஆண்டு நார்வே நாட்டு பொருளியலறிஞரான பேராசிரியர் ராக்னர்ஃபிரிஷ் பயன்படுத்தினார். பின்பு ஜே.எம்.கீன்சு 1936 ஆம் ஆண்டு வெளியிட்ட வேலைவாய்ப்பு, வட்டி, பணம் பற்றிய பொதுக் கோட்பாடு என்ற நூலின் மூலம் இந்த இரண்டு சொற்களுக்கான வேறுபாடுகளை தெளிவாக வெளிப்படுத்தி இந்த சொற்களை பிரபலமடையச் செய்தார்.
பற்றாக்குறை: தேவைக்கும் உற்பத்திக்கும்; இடையே உள்ள இடைவெளி.
உற்பத்தி: பயன்பாட்டை உருவாக்குதல்.
சேவைகள்: பணிகள், பண்டங்களைப் போன்றே பொருளாதாரக் குணங்கள் பெற்றவை. பணிகளை உரிமையாளர்களிடமிருந்து பிரிக்க இயலாது. மேலும் அவை எளிதில் அழியக் கூடியது.
மதிப்பு: பரிமாற்றத்தின் மூலம் ஒரு பொருள் மற்ற பொருள்களை பெறும் சக்தியாகும்.
விலை: பணத்தில் பண்டத்தின் மதிப்பு.
வருமானம்: குறிப்பிட்ட காலத்தில் பணமாகவோ அல்லது பணம் அல்லாத வேறு வகையிலோ, சம்பாதித்தோ அல்லது வேறு வழியாகவோ பெறுவதாகும்.
பகுத்தாய்வுமுறை:தர்க்க ரீதியான ஒரு செயல்முறையாகும். பொதுக்கருத்தில் இருந்து ஒரு
தனிக் கருத்தை அடைவது ஆகும்.
தொகுத்தாய்வு: தொகுத்தாய்வு முறை என்பது தர்க்க ரீதியான ஒரு செயல்முறையாகும். தனிக்கருத்தில் இருந்து பொதுக்கருத்தை அடைவதாகும்.
“பொருளியல் நடவடிக்கையின் ஒரே நோக்கம் நுகர்வு” என்று கூறியவர் – ஜே.எம்.கீன்ஸ்
பண்டங்களின் வகைகள்:
1. இன்றியமையாத பண்டங்கள்
2. வசதிப் பண்டங்கள்
3. ஆடம்பரப் பண்டங்கள்
காசனின் முதல் நுகர்வு விதி:
ஒருவரிடம் உள்ள ஒரு பண்டத்தின் இருப்பு கூடுகின்றபொழுது ஒவ்வொரு கூடுதல் அலகிலிருந்தும் கிடைக்கும் பயன்பாடு குறைகிறது என்று மார்ஷல் வரையறை செய்கிறார்.
ஆடம் ஸ்மித் தன்னுடைய புகழ்பெற்ற தண்ணீர் – வைர முரண்பாட்டுக் கோட்பாட்டில் வைரம் பற்றாக்குறை காரணமாக விலை அதிகம், ஆனால் பயன்பாடு குறைவு என்றும், தண்ணீர் இன்றியமையாதது ஆனால் அதிக அளவில் கிடைக்கின்றது, விலை குறைவு மேலும் வைரத்தின் விலையை விடக்குறைவானது.
சம இறுதிநிலை பயன்பாட்டு விதி:
மார்ஷலின் கூற்றுப்படி ‘ஒரு மனிதன் பல வகையிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளைப் பெற்றிருந்தால், அதன் பலவகைப் பயன்களிடையே பகிர்ந்தளிக்கும்போது அதன் பயன்களின் இறுதிநிலைப் பயன்பாடு ஒரே அளவில் சமமாய் இருக்கும்படி பகிர்ந்தளிப்பார். ஒன்றை விட மற்றொன்றில் அதிக இறுதிநிலைப் பயன்பாடு கிடைக்குமெனில் அவர் அதிகப்பயன் பெறும் நோக்கில் குறைந்த பயன் தரும் பொருளில் இருந்து அதிக பயன் தரும் பொருளுக்கு மாற்றிவிடுவார்’.
தேவை:
• ஒரு நிறுவனம் உருவாக்குவதற்கும், நீடித்திருப்பதற்கும், இலாபம் பெறுவதற்கும் தேவை அடிப்படையாகும்.
• பொருளியலில் – ஒரு பொருளுக்கான தேவை என்பது ‘பொருளை வாங்குவதற்கான விருப்பத்தையும், போதிய வாங்கும் சக்தியையும், வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தையும் குறிக்கும்’ – ஜே. ஹார்வி.
• பொருளியலில் “தேவை என்பது பண்டத்தை வாங்கும் திறனுடன் கூடிய விருப்பத்தை குறிக்கிறது’. – ஸ்டோனியர் மற்றும் ஹேக்.
தேவை விதி:
• தேவை விதியை முதலில் 1838ல் அகஸ்டின் கூர்னாட் விளக்கினார். பின் ஆல்ஃப்ரட் மார்ஷல் இதைச் சீர்படுத்தி விரிவாக்கினார்.
• ‘விலை குறையும்போது தேவையின் அளவு அதிகரிக்கிறது. விலை அதிகரிக்கும்போது தேவையின் அளவு குறைகிறது’ – மார்ஷல்.
• ‘மற்றவை மாறாமல் இருக்கும்போது ஒரு பொருளுக்கான விலை குறையும்போது மக்கள் அப்பொருளை அதிகம் வாங்குவர், விலை ஏறும்போது குறைவாக வாங்குவர்’ – சாமுவேல்சன்.
உற்பத்தி:
• உற்பத்தி என்பது பரிமாற்றத்தின் மூலம் மற்ற மனிதர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் செயல்பாடு–து.சு. ஹிக்ஸ்
உற்பத்திக் காரணிகளின் இயல்புகள்:
• உற்பத்திக் காரணிகள் என்பது பண்டங்களை உற்பத்தி செய்யப் பயன்படும் வளங்கள் ஆகும். இது நான்கு வகைப்படும். நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் அமைப்பு அல்லது தொழில் முனைதல்.
நிலம் – பொதுவாக நிலம் என்பது மண் அல்லது பூமியின் மேற்பரப்பு அல்லது தரைப் பரப்பினைக் குறிப்பதாகும்.
உழைப்பு – உழைப்பு என்பது செயல் உற்பத்திக் காரணியாகும். சாதாரணமாக உழைப்பு என்பது உடல் உழைப்பு அல்லது திறமைசாரா உடைப்பைக் குறிக்கும்.
மூலதனம் – இயற்கையின் கொடை தவிர்த்த, வருமானம் அளிக்கக்கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம்.
‘மூலதனம் என்பது உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திக் காரணி ஆகும். ஏற்கனவே குறிப்பிட்டபடி மூலதனம் என்பது இரண்டாம் நிலை உற்பத்திக் காரணியாகும்.உற்பத்தியின் ஒரு பகுதி சேமிக்கப்படுகின்றது. இந்த சேமிப்பே மூலதனம்.’ – போம்-போவர்க்
முதலீடு புலனாகும் மற்றும் புலனாக முதலீடாக இருக்கலாம். கட்டிடங்கள், இயந்திரங்கள், தொழிற் கூடங்கள், உள்ளீடு இருப்புக்கள், சாலைகள் – புலனாகும் முதலீடுகள். விளம்பரச் செலவுகள், தொழிலாளர் பயிற்சி – புலனாகா முதலீடுகள்.
நிதி மூலதனம்:
பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்ய ஒரு நிறுவனத்திற்கு தேவையான செல்வம்- பணத்தின் மூலம் மதிப்பிடப்படுகிறது. பொதுவாக கடன்கள் மற்றும் பங்கு விற்பனை மூலமாகவோ உருவாக்கப்படுகிறது. இதன் முதன்மை நோக்கம் இலாப நோக்கிற்காக செல்வத்தை குவித்து வைப்பது.
தொழில் அமைப்பு:
ஒரு தொழிலை ஒருங்கிணைத்து ஏற்று நடத்துபவர் ‘தொழில் அமைப்பாளர்’ (அ) ‘தொழில் முனைவோர்’ ஆவார். தொழில் முனைவோர் ஒரு முக்கியமான உற்பத்திக் காரணி ஆவார்.
உற்பத்திச் சார்பு:
ஜார்ஜ் ஜெ. ஸ்டிக்ளர், உற்பத்தி சார்பு என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் உற்பத்தி பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் உள்ளீடுகளுக்கும் அக்குறிப்பிட்ட கால அளவில் கிடைக்கும் வெளியீடுகளுக்கும் உள்ள தொடர்பாகும் என்கிறார்.
மாறும் விகித விளைவு விதி:
ஸ்டிக்ளரின் கூற்றுப்படி,‘உற்பத்தி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிற காரணிகளின் அளவு நிலையாக இருக்கும்போது, ஓர் உற்பத்தி காரணி சம உயர்வாக அதிகரிக்கும்போது ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குப் பிறகு உற்பத்தியின் அளவு குறையும். அதாவது இறுதி நிலை உற்பத்தி குறையும்’.
விகித அளவு விளைவு விதி:
நீண்ட காலத்தில் அனைத்து உற்பத்திக் காரணிகளும் மாறக்கூடியவை. அனைத்து உற்பத்தி காரணிகளும் எண்ணிக்கையில் அதிகரிக்கும்போது வெளியீட்டில் அதிகரிப்பு ஏற்படலாம். இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பை விளக்குவதே விகித அளவு விளைவு விதியாகும்.
பொருளாதாரச் சிக்கனங்கள்:
புறச்சிக்கனங்கள்:
1. தொழிற்சாலையின் விரிவாக்கத்தினால் ஏற்படுவது.
2. நன்மைகள் பெரும்பான்மையான ஃ அனைத்து நிறுவனத்திற்கும் கிடைக்கும்.
3. ஒருங்கிணைந்த சிக்கனங்கள் கிடைக்கும்
4. நகரங்களின் அதிவேகவளர்ச்சி பற்றி விளக்கப் பயன்படுகிறது.
சமஅளவு உற்பத்திக் கோடுகள்:
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாறும் உற்பத்தி காரணிகளை பல்வேறு இணைப்பில் ஈடுபடுத்தி, ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தி செய்வதைக் காட்டும் கோடு சம அளவு உற்பத்திக்கோடு என அழைக்கப்படுகிறது. கிரேக்கச் சொற்களான ஐசோ, குவான்ட் என்னும் இணைப்புத்தான் சமஅளவு உற்பத்திக் கோடு என அழைக்கப்பட்டது. ஐசோ என்பது சமம் என்றும், குவான்ட் என்பது அளவு என்றும் பொருளாகும்.
பெர்கூஸன்,‘சம அளவு உற்பத்திக் கோடு என்பது அனைத்து சாத்தியமான உற்பத்திக் கலவைகளை பயன்படுத்தி குறிப்பிட்ட பரும அளவு உற்பத்தி வெளியீட்டினை பெறுவதாகும்’– என வரையறுக்கிறார்.
சம உற்பத்தி செலவுக்கோடு:
ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அளவு பணச் செலவில் வாங்கக்கூடிய இரு காரணிகளின் பல தொகுப்புகளைக் குறிப்பிடுவதே சம உற்பத்திச் செலவுக் கோடு ஆகும். இதனை‘சம விலைக்கோடு’ அல்லது ‘சமவருவாய் கோடு (அல்லது) ‘சம செலவுக் கோடு’ அல்லது ‘மொத்த உற்பத்தி வளைகோடு’ எனவும் அழைக்கப்படுகிறது.
அளிப்பு விதி:
அளிப்பு விதி ஒரு பொருளின் விலைக்கும், அப்பொருளின் அளிப்பிற்கும் உள்ள நேரடி உறவை விளக்குகிறது.
‘மற்றவை மாறாதிருக்கும் போது ஒரு பொருளின் விலை அதிகரிக்கும்போது அப்பொருளின் அளிப்பும் அதிகரிக்கும். மேலும், ஒரு பொருளின் விலை குறையும்போது அப்பொருளின் அளிப்பும் குறையும்’.
உற்பத்தி: உள்ளீட்டை வெளியீடாக மாற்றும் நடவடிக்கை
உற்பத்திக் காரணிகள்: உற்பத்திக் காரணிகள் நான்கு: நிலம், உழைப்பு, மற்றும் தொழிலமைப்பு இவை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
நிலம்: இயற்கையின் கொடை
உழைப்பு: உற்பத்திக்கான மனிதனின் உடல் சார்ந்த அல்லது அறிவு சார்ந்த முயற்சி
மூலதனம்: மனிதனால் உருவாக்கப்பட்ட உற்பத்திக் காரணி
தொழில் அமைப்பு: இடர்பாடுகளை ஏற்று முடிவெடுக்கும் அமைப்பு.
அளிப்பு: ஒரு விற்பனையாளர் வெவ்வேறு விலையில், எவ்வளவு பொருடகளைக் சந்தைக்குக் கொணருகிறார்.
அளிப்பு நெகிழ்ச்சி: ஒரு பொருளின் விலையில் ஏற்படும் மாற்றத்தினால், அப்பொருளின்
சம உற்பத்திக் கோடு: இரு காரணிகளின் பல்வேறு இணைப்புக் கலவைகளை பயன்படுத்தி பெறுகிற ஒரே அளவு உற்பத்தியைக் காட்டும் கோடு.
சமஉற்பத்தி செலவுக் கோடு: ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அளவு பணச்செலவில் வாங்கக்கூடிய இரு காரணிகளின் பல்வகை இணைப்புகளைக் காட்டும் கோடு.
குறுகிய கால உற்பத்தி சார்பு: ஒன்றைத் தவிர மற்ற உற்பத்திக் காரணிகள் மாறாமல் இருக்கும் போது உள்ளீட்டிற்கும் வெளியீட்டிற்கும் உள்ள தொடர்பு.
நீண்ட கால உற்பத்தி சார்பு: அனைத்து உற்பத்திக் காரணிகளையும் மாற்றியமைத்துக் கொள்ளும் போது உள்ளீடு மற்றும் வெளியீட்டிற்கு இடையே உள்ள தொடர்பு.
பொருளாதார சிக்கனங்கள்: உற்பத்தியில் உயர்வு ஏற்படும்பொழுது சராசரி உற்பத்திச் செலவு குறைவது.
செலவு மற்றும் வருவாய்:
• இலாபம் (அ) நஷ்டம் ஸ்ரீ மொத்த வருவாய் – மொத்தச் செலவு
பணச்செலவு – உற்பத்திச் செலவுகள் பணத்தால் குறிப்பிடப்பட்டால் அது பணச் செலவு எனப்படும்.
• உண்மைச் செலவு – அனைத்து காரணிகளின் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும்,சங்கடங்கள், முயற்சிகள் மற்றும் தியாகங்களுக்காக அக்காரணிகளின் உடமையாளருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையாகும்.
• வெளிப்படையான செலவு – உற்பத்திக்காரணிகளை வாங்க மற்றவர்களுக்கு செலுத்தும் செலுத்துகையே வெளிப்படையான செலவு எனப்படும்.
• உள்ளார்ந்த செலவு – நிறுவனத்திற்குச் சொந்தமான உற்பத்தி வளங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உள்ளார்ந்த செலவு எனப்படும்.
• பொருளாதாரச் செலவு – ஒரு நிறுவனத்தின் உற்பத்திக்கு உறுதியான அளிப்பை முறைப்படுத்தும் சொந்த வளங்கள் மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட அல்லது வாடகைக்கு அமர்த்தப்பட்ட உற்பத்திக் காரணிகளுக்கு ஆகும் செலவுகள் பொருளாதாரச் செலவுகள் எனப்படும்.
செலவின் வகைகள்:
• நிலையான செலவுகள்
• மாறும் செலவுகள்
அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்:
சந்தைப்படுத்துதல் என்பது உற்பத்தி செய்தவற்றை அகற்றுவதற்கு புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டுபிடிக்கும் கலை அல்ல. உண்மையான வாடிக்கையாளர் நன்மதிப்பை உருவாக்கும் கலையாகும். – பிலிப் கோட்லர்
அங்காடியின் பொருள்:
பொதுவாக ‘அங்காடி’ என்பது பொருள்கள் மற்றும் பணகளை வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் இடத்தை குறிக்கும்.
நிறுவனம்:
ஒரு நிறுவனம் என்பது ஒரு தொழிலில் இருக்கும் ஒற்றை உற்பத்தி அலகாகும். பொருள் அல்லது பணியை உற்பத்தி செய்து அதற்கு விலையை நிர்ணயித்து விற்பனை செய்வதை நிறுவனம் என்கிறோம். நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இலாபம் ஈட்டுவதாகும்.
தொழில்:
தொழில் என்பது ஒரு பொருளாதாரத்தில் ஒரே மாதிரியான பொருள் அல்லது பணியை உற்பத்தி செய்யக்கூடிய பல நிறுவனங்களின் தொகுப்பை அல்லது குழுவைக் குறிக்கும்.
முற்றுரிமை:
முற்றுரிமை என்னும் வார்த்தை அழழெ மற்றும் pழடல – ஆகிய இரண்டு வார்த்தைகள் இணைந்து உருவாக்கப்பட்ட ஆங்கில பதத்தின் தமிழ்ச் சொல் ஆகும். ஆழழெ என்ற சொல் ஒன்று, pழடல என்ற சொல் விற்பதையும் குறிக்கும். இதன்படி முற்றுரிமை என்பது ஒரு பண்டத்தை அங்காடியில் ஒருவரே விற்பனை செய்வதாகும்.
குவித்தல்:
குவித்தல் என்றால் ஒரு முற்றுரிமையாளர் தனது உற்பத்திப ண்டத்திற்கு உள்ளுர் அங்காடியில் குறைந்த விலையும், வெளியூர் அங்காடியில் குறைந்த விலையும் நிர்ணயிப்பது ஆகும்.
வாங்குவோர் முற்றுரிமை:
ஒரு அங்காடி அமைப்பில் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்க ஒருவரே இருந்தால் அது வாங்குவோர் முற்றுரிமை எனப்படும். சில பண்டங்களுக்கு ஒருவரே வாடிக்கையாளராக இருப்பதால் அந்த அங்காடியில் வாங்குபவர் மிகுந்த சக்தியுடன் காணப்படுவார். முற்றுரிமையும், வாங்குபவர் முற்றுரிமையும் ஒரே போல் இருந்தாலும், வாங்கும் முற்றுரிமையாளர் அங்காடியின் தேவைப் பக்கத்திலும், முற்றுரிமையாளர் அங்காடியில் அளிப்புப் பக்கத்திலும் ஆதிக்கத்துடன் இருப்பர்.
இருமுக முற்றுரிமை: இருமுக முற்றுரிமை எனும் அங்காடியில் ஒரு உற்பத்தியாளர் (முற்றுரிமையாளர்) மற்றும் ஒரு வாங்குபவர் (வாங்கும் முற்றுரிமையாளர்) மட்டும் இருப்பர்.
பகிர்வு பற்றிய ஆய்வு: ‘சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட செல்வங்களை, உற்பத்தியில் ஈடுபட்ட உற்பத்திக் காரணிகளின் முகவர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதைக் குறிக்கும்’.
– சேப்மேன்
தனிநபர் பகிர்வு: தனிநபர் பகிர்வு என்பது நாட்டு வருமானத்தை தனிநபர்களிடையே பகிர்ந்தளிப்பதைக் குறிக்கும்.
இலாபம்:
தொழில் முனைவோர் மற்ற மூன்று உற்பத்திக் காரணிகளின் (நிலம், உழைப்பு, மூலதனம்) பணிகளை உற்பத்தியில் ஒருங்கினைப்பதற்காக வழங்கப்படும் வெகுமதியே இலாபம் ஆகும்.
இலாபக் கோட்பாடுகள்:
1. புத்தாக்க கோட்பாடு
2. இயங்கு நிலை கோட்பாடு
3. இடர்தாங்கும் கோட்பாடு
4. நிலையற்ற தன்மை தாங்கும் கோட்பாடு
இயங்குநிலை இலாபக் கோட்பாடு:
அமெரிக்க பொருளியல் அறிஞர் துடீ கிளார்க் 1900ல் இக்கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
புத்தாக்க இலாபக் கோட்பாடு:
ஜோசப் யு சும்பீட்டர் புத்தாக்க இலாபக் கோட்பாட்டை எடுத்துரைத்தார். சும்பீட்டரின் கருத்துப்படி, ஒரு தொழில் முனைவோர் உற்பத்தி செயல்பாடுகளில் வணிகத்தை நடத்துவதோடு மட்டுமல்லாமல் புத்தாக்கம் புனைபவராகவும் இருக்கிறார். ‘புத்தாக்கம் புனைவதற்கான’ வெகுமதியே இலாபம்.
இடர் தாங்கும் இலாபக் கோட்பாடு
அமெரிக்க பொருளியல் அறிஞர் கு.டீ. ஹாலே 1907-ல் இடர் தாங்கும் இலாபக் கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
நிலையற்ற தன்மையைத் தாங்கும் இலாபக் கோட்பாடு:
அமெரிக்கப் பொருளியல் வல்லுநர் யு. பிராங்க் ர். நைட் நிலையின்மைக் கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
சொற்களஞ்சியம்:
1. பகிர்வு: உற்பத்திப் பணியில் அமர்த்தக் கூடிய காரணிகளின் சொந்தக்காரர்களுக்கு அல்லது
முகவர்களுக்கு செல்வத்தைப் பகிர்தல்.
2. வாரம்: நிலத்தை பயன்படுத்துவதற்கான வெகுமதி.
3. கூலி: உழைப்பாளரின் வெகுமதி.
4. வட்டி: முதலைப் பயன்படுத்த வழங்கப்படும் விலை.
5. இலாபம்: தொழில் முனைவோர் அல்லது அமைப்புகளின் வெகுமதி.
6. போலிவாரம்: குறுகிய காலத்தில் உற்பத்திக்காக, மனிதனால் உருவாக்கப்பட்ட
உபகரணங்களின் மூலம் ஈட்டுகின்ற உபரியே போலி வாரம் ஆகும்.
7. மாற்று வருவாய்: ஒரு காரணியை அதன் தற்போதைய பயன்பாட்டில் நீடித்திருக்க
வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம்.
8. பணக்கூலி: ரொக்கப் பணமாக உழைப்பாளி வெகுமதியைப் பெறுவது பணக்கூலி ஆகும்.
9. உண்மைக் கூலி: மூலதனத்தின் ஒரு பகுதியை கடனாகப் பெருவதே கடன்நிதி.
10. புத்தாக்கம்: வியாபார நோக்கத்திற்காக கண்டுபிடிப்புகளை உட்படுததுவது ஆகும்.
இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரமானது வளரும் பொருளாதாரம். மேலும் இது இரண்டாம் நிலை பொருளாதாரம் என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் விவசாயம் பருவக் காற்றின் சூதாட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான காரணங்கள்.
1. மக்கள் தொகைப் பெருக்கம்
2. குறைவான தலாவருமானம்
3. வறுமை
4. வேலைவாய்ப்பின்மை
இந்திய தேசிய வருமானத்தை மத்திய புள்ளியல் நிறுவனம் கணக்கீடு செய்கிறது.
தேசிய வருமானம்
தேசிய வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், பணிகள் இவற்றின் மொத்த பண மதிப்பாகும்.
தேசிய வருமானம் கணகிடும் முறை:
1. உற்பத்தி முறை
2. வருமான முறை
3. செலவு முறை என்ற மூன்று முறைகளில் கணக்கிடப்படுகிறது.
தேசிய வருமானம் கணக்கிடுதலின் இன்றியமையாமை:
1. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடவும், பிற நாடுகளுடன் ஒப்பிடவும்
உதவுகிறது.
2. திட்டமிட உதவுகிறது.
3. பல்வேறு துறைகளின் நிலையைப் பற்றி அறிய உதவுகிறது.
4. வாழ்க்கைத் தரத்தை அளவிட உதவுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டில், ஓராண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றின் பணமதிப்பாகும்.
நிகர உள்நாட்டு உற்பத்தி
• மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தை கழித்தால் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
NDP=GDP – தேய்மானம்
மொத்த தேசிய உற்பத்தி
• மொத்த தேசிய உற்பத்தி என்பது ஒரு நாட்டில், ஓராண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் அளவாகும்.
• இதில் வெளிநாட்டிலுள்ள நம்நாட்டு கம்பெணிகள் ஈட்டிய இலாபத்தைச சேர்த்துக்கொள்ளவேண்டும்.
• அதேபோல, நம் நாட்டிலுள்ள வெளிநாட்டு கம்பெனிகள் ஈட்டிய இலாபத்தை கழித்து விடவேண்டும்.
புNPஸ்ரீபுனுP ூ வெளிநாட்டு, உள்நாட்டு நிகர காரணி
நிகரதேசிய உற்பத்தி
• மொத்த தேசிய உற்பத்தியிலிருந்து தேய்மானாத்தைக் கழித்தால் கிடைப்பது நிகர தேசிய உற்பத்தி ஆகும். தேசிய வருமானம் என்பதும் இதுவே ஆகும்.
NNP ஸ்ரீ புNP – னுநிசநஉயைவழைn
தனிநபர் வருமானம்
• தனிநபர்கள் ஓராண்டில் பெறுகின்ற வருமானமே தனிநபர் வருமானமாகும்.
தலா வருமானம்
• தலா வருமானம் என்பது நாட்டின் தேசிய வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள்தொகையால் வகுத்தால் கிடைப்பதாகும். அதாவது.
தலாவருமானம் ஸ்ரீ தேசிய வருமானம் ஃ மக்கள் தொகை
நாட்டு வருமான வரிசைகள்
1. மரபு வரிசை
2. திருத்தியமைக்கப்பட்ட வரிசை
3. புதிய வரிசைகள்
4. அண்மைக்கால வரிசைகள் (1981ம் ஆண்டு அடிப்படையில் ஊ.ளு.ழு செயல்படுகிறது)
• நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை எடுத்துக்கொள்ளப்படும்.
நாட்டு வருமானம் கணக்கிடுவதில் உள்ள குறைகள்
1. புள்ளி விவரம் சரியாகக் கிடைக்கப்பெறாமை.
2. இரு முறை கணக்கிடல்
3. மக்களிடம் கணக்கு வைக்கும் பழக்கமின்மை
திட்டக்குழு – 1934ல்இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை ஸ்ரீ.எம். விஸ்வேஸ்வரய்யா எழுதினார். இதுவே இந்தியாவின் திட்டமிடுதலுக்கு உருவான முதல் முயற்சியாகும்.
பாம்பே திட்டம்: மும்பையில் 1943ல் எட்டு தொழில்அதிபர்கள் சேர்ந்து, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டத்தை தீட்டினர். இதுவே பாம்பே திட்டம் ஆகும்.
காந்தியத் திட்டத்தை வகுத்தவர் ஸ்ரீமான் நாராயணன்.
மக்கள் திட்டத்தை வகுத்தவர் எம்.என்.ராய்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு திட்டக்குழு 1950 ல் உருவானது. இது பாராளுமன்ற சட்டத்தால் உருவானது. இக்குழுவில் இந்திய பிரதம்ர் தலைமையில் மாநில முதல்வர்கள்உறுப்பினர்களாக உள்ளனர்.
- நிதி ஆயோக்
13 ஆகஸ்டு, 2014ல் இந்தியாவின் 65 ஆண்டு கால பழமையான திட்ட கமிஷன் நிதி ஆயோக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. - 1 ஜனவரி, 2015 முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
- இது அரசியல் அமைப்புச் சட்டப்படியோ அல்லது பாராளுமன்ற சட்டப்படியோ உருவாக்கப்படவில்லை. கேபினட் குழுவின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
- மாநிலங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதில்முக்கிய பங்கு வகிக்கிறது.
திட்டம் காலம் முக்கிய நோக்கங்கள்
1வது திட்டம் 1951-56 விவசாயத்தை (நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம்) பெருக்குதல்
2வது திட்டம் 1956-61 பெருந்தொழில்கள் மற்றும் கனரகத் தொழில்கள் வளர்ச்சி
வேலைவாய்ப்பை பெருக்குதல், சமச்சீரான பொருளாதார வளர்ச்சி.
3வது திட்டம் 1961-66 வளர்ச்சி எந்நிலையை அடைதல், தொழில் மற்றம் வேளாண்மைக்கு
முக்கியத்துவம் (குறிப்பாக அடிப்படைத் தொழில்கள்)
மூன்றாண்டுத் திட்டம் 1966-67 ஒராண்டு திட்டங்கள்
1967-68 பசுமை புரட்சிக்கு வித்திட்டது
1968-69
4வது திட்டம் 1969-74 நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு
5வது திட்டம் 1974-79 “ஏழ்மையை விரட்டுதல்” கிராமத்தில் அடிப்படை கட்டமைப்பு உருவாக்குதல், சமச்சீரான பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு
ஆண்டுத்திட்டம் 1979-80 அரசியல் நிலையின்மைக் காரணமாகத் திட்டம் எதுவுமில்லை.
6வது திட்டம் 1980-85 வறுமை ஒழிப்பு வேலைவாய்ப்பு உருவாக்குதல் பொருளாதாரத் தற்சார்பு, குறைந்தபட்ச தேவை திட்டம்
7வது திட்டம் 1985-90 நவீனமயமாக்குதல், தற்சார்பு, வேலைவாய்ப்பு மற்றும் சமூகநீதி
ஆண்டுத் திட்டம் 1990-91
1991-92 அரசியல் நிலையின்மை காரணமாக திட்டம் எதுவுமில்லை
8வது திட்டம் 1992-97 முழுவேலைவாய்ப்பை உருவாக்குதல், மக்கள்தொகையை கட்டுப்படுத்துதல், கல்லாமையை நீக்குதல், உணவுப்பொருளில் தன்னிறைவு பெற்று ஏற்றுமதி செய்யுமளவிற்கு உபரியை உண்டாக்குதல்.
9வது திட்டம் 1997-2002 உற்பத்தி துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கி, வறுமையை ஒழித்தல், வளர்ச்சி வீதத்தை அதிகப்படுத்துதல் அடிப்படைத் தேவைகளை அனைவருக்கும் வழங்குதல், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்.
10வது திட்டம் 2002-2007 ஏழ்மை ஒழிப்பு, கல்வியறிவில் வேறுபாட்டைக் களைதல், மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைத்தல், கிராம வளர்ச்சி.
• தேசிய வேளாண்கொள்கை 1993ல் அறிவிக்கப்பட்டது.
Important Announcement
TNSCERT Books - Free Download
6th Standard
- Tamil I
- Tamil II
- Tamil III
- Science I (Tamil)
- Science I (English)
- Science II (Tamil)
- Science II (English)
- Science III (Tamil)
- Science III (English)
- Social Science I(Tamil)
- Social Science I(English)
- Social Science II(Tamil)
- Social Science II(English)
- Social Science III(Tamil)
- Social Science III(English)
7th Standard
- Tamil I
- Tamil II
- Tamil III
- English I
- English II
- English III
- Science I (Tamil)
- Science I (English)
- Science II (Tamil)
- Science II (English)
- Science III (Tamil)
- Science III (English)
- Social Science I (Tamil)
- Social Science I(English)
- Social Science II (Tamil)
- Social Science II(English)
- Social Science III (Tamil)
- Social Science III(English)
8th Standard
- Tamil Part I
- Tamil Part II
- Tamil Part III
- English Part I
- English Part II
- English Part III
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Maths Part III (Tamil)
- Science Part I (Tamil)
- Science Part II (Tamil)
- Science Part III (Tamil)
- Social Science Part I (Tamil)
- Social Science Part II (Tamil)
- Social Science Part III (Tamil)
- Maths Part I (English)
- Maths Part II (English)
- Maths Part III (English)
- Science Part I (English)
- Science Part II (English)
- Science Part III (English)
- Social Science Part I (English)
- Social Science Part II (English)
- Social Science Part III (English)
9th Standard
- Tamil Part I
- Tamil Part II
- Tamil Part III
- English Part I
- English Part II
- English Part III
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Maths Part III (Tamil)
- Science Part I (Tamil)
- Science Part II (Tamil)
- Science Part III (Tamil)
- Social Science Part I (Tamil)
- Social Science Part II (Tamil)
- Social Science Part III (Tamil)
- Maths Part I (English)
- Maths Part II (English)
- Maths Part III (English)
- Science Part I (English)
- Science Part II (English)
- Science Part III (English)
- Social Science Part I (English)
- Social Science Part II (English)
- Social Science Part III (English)
10th Standard
11th Standard
- Tamil
- English
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Physics Part I (Tamil)
- Physics Part II (Tamil)
- Chemistry Part I (Tamil)
- Chemistry Part II (Tamil)
- Botony Part I (Tamil)
- Botony Part II (Tamil)
- Zoology Part I (Tamil)
- Zoology Part II (Tamil)
- History Part I (Tamil)
- History Part II (Tamil)
- Geography(Tamil)
- Political Science Part I (Tamil)
- Political Science Part II (Tamil)
- Economics (Tamil)
- Ethics Science Part I & II (Tamil)
- History Part I (English)
- History Part II (English)
- Botony Part II (English)
- Zoology Part I (English)
- Geography (English)
- Economics (English)
- English
- Political Science Part I (English)
- Political Science Part II (English)
12th Standard
- History Part I (Tamil)
- History Part II (Tamil)
- Chemistry Part I (Tamil)
- Chemistry Part II (Tamil)
- Geography
- Accountancy
- Political Science Part I (Tamil)
- Political Science Part II (Tamil)
- Economics
- Ethics
- Bio Botany (Tamil)
- Economics (English)
- Political Science (English)
- History (English)
- Geography (English)