தமிழ்நாடு புவியியல் – இயற்கை அமைப்பு
தமிழ்நாடு கிழக்கில் வங்காள விரிகுடாவையும், தெற்கில் இந்திய பெருங்கடலையும், மேற்கில் கேரளாவையும், வடக்கில் ஆந்திரபிரதேசத்தையும், வடமேற்கில் கர்நாடகத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. தமிழ் 1985, ஜனவரி 14 ஆம் நாள் ஆட்சி மொழியாகவும், 2004 ஆம் ஆண்டு செம்மொழியாகவும் அறிவிக்கப்பட்டது. மக்கள் தொகையில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த பரப்பில் நான்கு சதவீதம். நிர்வாகத்திற்கு 35 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் மொத்த மாநகராட்சிகள் – 15.
தமிழ்நாடு 8° 04’வடக்கு முதல் 13° 35’ வரையிலும் 76° 18’ கிழக்கு முதல் 80° 20’ கிழக்கு வரையிலும் பரவியுள்ளது. கிழக்கில் உள்ள கடற்கரைச் சமவெளி சோழமண்டல கடற்கரை என அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ளது. மத்திய உயர்நிலைப் பகுதிகள், வடமேற்கிலுள்ள மலைப்பகுதிகள் ஆகியவற்றை எல்லையாக கொண்டுள்ளது. தமிழகத்தின் பரப்பளவு 1,30,058 சதுர கி.மீ. தமிழ்நாட்டின் கடற்கரையின் நீளம் 912 கி.மீ.
- மாநிலப் பறவை – மரகதப்புறா, மாநிலப் பூ – செங்காந்தள் மலர்,
- மாநில விலங்கு – வரையாடு, மாநில மரம் – பனைமரம்.
உலக செம்மொழிகள்: இந்திய செம்மொழிகள்:
• தமிழ் • தமிழ் (2004)
• சமஸ்கிருதம் • சமஸ்;கிருதம் (2005)
• எகிப்தியன் • தெலுங்கு (2008)
• ஹீப்ரு • கன்னடம் (2008)
• கரேக்கம் • மலையாளம் (2013)
• பாஸ்க்யூ • ஒடியா (2014)
• லித்துவேனியன்
• பார்ஸி
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு:
• மலைகள் (மேற்கு தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள்)
• பீடபூமிகள்
• சமவெளிப் பகுதிகள்
• கடலோரப் பகுதிகள்
முக்கிய மலைகள்:
• மேற்குத் தொடர்ச்சி மலைகள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லச் செல்ல உயரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
• மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் நீலகிரியில் சந்திக்கின்றன.
• மலைகளின் அரசி – ஊட்டி
• பழனி குன்றுகள், வருச நாடு மலைகள், ஆண்டிபட்டி மலைகள்
• பாலக்காட்டு கணவாய், செங்கோட்டைக் கணவாய்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன.
• தென்னிந்தியாவின் உயரமான சிகரம் – ஆனைமுடி (2,695 மீ) (ஆனைமலை) தொட்டாபெட்டா (2637 மீ) (ஊட்டி), முக்கூர்த்தி (2540 மீ) (ஊட்டி)
• ஆத்தூர் கணவாய், செங்கம் கணவாய்கள் (கடலூர் – சேலம் மாவட்டங்களுக்கிடையே உள்ளன) கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன.
• கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயரமான மலை – சேர்வராயன் மலை.
• உயரமான சிகரம் – சிந்தகந்தா (ஆந்திர பிரதேசம்)
கிழக்குத் தொடர்சசி மலைகளின் வட்டாரப் பெயர்கள், அமைந்துள்ள மாவட்டங்கள்
- ஜவ்வாது, ஏலகிரி மலை – வேலூர்
- சேர்வராயன் மலை – சேலம்
- கல்வராயன் மலை – விழுப்புரம்
- பச்சை மலை – திருச்சிராப்பள்ளி
- கொல்லி மலை – நாமக்கல்
- சித்தேரி மலை – தருமபுரி
- செஞ்சி மலை – விழுப்புரம்
தென்னிந்தியாவின் முக்கிய கணவாய்கள்:
- தால்காட் கணவாய், போர்காட் கணவாய் – மகாராஷ்ட்ரா
- பாலக்காடு கணவாய் – தமிழ்நாடு, கேரளா
- செங்கோட்டைக் கணவாய் – தமிழ்நாடு, கேரளா
தமிழகத்திலுள்ள பீடபுமிகள்:
1. மதுரை பீடபூமி
2. கோயமுத்தூர் பீடபூமி
3. பாரமகால் பீடபூமி (தருமபுரி பீடபூமி) இது மைசூர் பீடபூமியுடன் இணைந்து காணப்படுகிறது.
சமவெளிகள்:
தமிழக சமவெளிகள்
1. ஆற்றுச் சமவெளி
• வட தமிழக ஆறுகள் – பாலாறு, பெண்ணாறு, செய்யாறு, பொன்னி ஆறு மற்றும் வெள்ளாறு
• மத்திய தமிழக ஆறுகள் – காவிரி, கொள்ளிடம், அமராவதி, நொய்யல், மற்றும் பவானி.
• தென் தமிழக ஆறுகள் – வைகை, குண்டாறு, வைப்பாறு, தாமிரவருணி மற்றும் கோதையாறு
முக்கிய அணைகள்:
• ஆழியாறு அணை – மேற்கு நோக்கி பாயும் ஆழியாற்றின் மேல் கட்டப்படடுள்ளது.
• பைகாரா அணை நீலகிரி மலையில் உள்ளது. இது 1932ல் கட்டப்பட்டது. இங்கு நீர் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
• மேட்டூர் அணை: இது ஸ்டான்லி அணை எனவும் அழைக்கப்படுகிறது. 1937ல் கட்டப்பட்டது.
• பாபநாசம் அணை: இது தாமிரபரணியின் குறுக்கே கட்டப்பட்டது.
2. கடற்கரை சமவெளி (மெரினா கடற்கரை, இராமேஸ்வரம் கடற்கரை)
• உலகின் மிக நீளமான கடற்கரை – பராலோ டி காசினோ (பிரேசில்) (150 மைல்கள்)
• இரண்டாவது நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13 கி.மீ)
தமிழக கடலோர மாவட்டங்கள் (13):
திருவள்ளுர் சென்னை காஞ்சிபுரம் விழுப்புரம், கடலூர் நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர்,
புதுக்கோட்டை இராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி, கண்ணியாகுமாரி.
காலநிலை
• ஒரு இடத்தில் நிமிடத்திற்கு நிமிடம் வளிமண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களே வானிலை.
• காலநிலை என்பது புவியில 30 ஆண்டுகளில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் சராசரி ஆகும்.
• தமிழகம் வெப்பமண்டலக் காலநிலை வகையைச் சார்ந்தது.
• மே – தமிழகத்தில் மிக வெப்பமான மாதம். ஜனவரி – மிகக் குளிரான மாதம்.
• தமிழகம் தென்மேற்கு பருவகாற்றால் ஜீன் முதல் செப்டம்பர் வரையிலும் (22 சதவீதம் மழை), வடகிழக்குப் பருவகாற்றால் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் (57 சதவீதம்) மழை பெறுகிறது. ஆனால் பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையே அதிக அளவில் பெறுகிறது. சூறாவழியினால் 21 சதவீதம் மழை பெறுகிறது.
• கன்னியாகுமரி இரு பருவகாலத்திலும் மழை பெறுகிறது.
• நீலகிரி – தென்மேற்கு பருவகாலத்தில் அதிக மழை பெறும் மாவட்டம்
• கடற்கரை மாவட்டங்கள் – வடகிழக்கு பருவகாலத்தில் அதிக மழை பெறுகின்றன.
• தமிழகத்தின் சராசரி, ஆண்டு மழையளவு 98 செ.மீ
தமிழ்நாட்டின் பருவ காலங்கள்:
பருவங்கள் – தமிழ் பருவங்கள் – தமிழ் மாதங்கள்
- கோடை (ஏப்ரல் -ஆகஸ்டு) – இளவேனில்,முது வேனில் – சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி
- மழைக்காலம் (ஆகஸ்டு – டிசம்பர்) – கார்காலம், குளிர்காலம் – ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
- குளிர்காலம் (டிசம்பர்- மார்ச்) – முன்பனி, பின்பனி – மார்கழி, தை, மாசி, பங்குனி
மண் வகைகள்
- செம்மண் – தமிழகத்தில் மிகப் பரந்த அளவில் காணப்படும் மண் வகை.
- கரிசல் மண் – கோவை, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. இது பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்.
- வண்டல் மண் – இது தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. இது நெல் விளைவதற்கு ஏற்ற மண் ஆகும். தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை
- மலை மண் – இது மலைப் பகுதியில் காணப்படும் வளமற்ற மண்
- சரளை மண் – இது இந்தியாவின் பிரதான மண் வகை ஆகும். இது பீடபூமிப் பகுதிகளில் காணப்படும்
காடுகள்:
• தேசிய காடுகள் கொள்கை (1988) இன்படி ஒரு மாநிலத்தின் மொத்தப் பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். தமிழகத்தின் காடுகள் 17 சதவீதப் பரப்பிலுள்ளது.
• நீலகிரி மாவட்டம் அதிக பரப்பில் காடுகள் கொண்ட மாவட்டம்.காடுகளின் வகைகள்:
• பசுமை மாறாக் காடுகள் (அந்தமான் நிக்கோபர் தீவுகள், மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்)
• இலையுதிர் காடுகள் (மான்சூன் காடுகள்)
• சதுப்புநிலம் மற்றும் மாங்குரோவ் காடுகள்
• பிச்சாவரம் – கடலூர்
• வேதாரண்யம், கோடியக்கரை – நாகபட்டிணம்
• முட்புதர் காடுகள்
• ஊசி இலைக் காடுகள்
• பாலை நிலத் தாவரங்கள்
தமிழ்நாட்டின் வளங்கள்:
1. உயிர் வளங்கள் – தாவரங்கள், விலங்குள், பெட்ரோல் மற்றும் நிலக்கரி
2. உயிரற்ற வளங்கள் – நிலம், நீர், காற்று மற்றும் தங்கம், வெள்ளி, இரும்பு.
3. புதுப்பிக்க இயலும் வளங்கள் – சூரிய சக்தி, காற்று, ஏரிகள், ஆறுகள், கடல்கள் மற்றும் மண்
4. புதுப்பிக்க இயலாத வளங்கள் – நிலக்கரி, பெட்ரோல், கனிமங்கள்
பிற தகவல்கள்:
• சின்கோனா மரத்திலிருந்து கிடைக்கும் குயினைன் எனும் மருந்து மலேரியா நோயைக் குனமாக்குகிறது.
• வனமகோத்சவம் – அக்டோபர் மாதம்
• உலக வன விலங்கு தினம் – அக்டோபர் 4
• உலக காடுகள் தினம் – மார்ச் 21
• உலக நீர் தினம் – மார்ச் 22
சக்தி வளங்கள்:
1. மரபு சார்சக்தி வளங்கள்:
• அனல் மின்சக்தி நிலையங்கள் – நெய்வேலி, வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர்
• நீர்மின் சக்தி நிலையங்கள் – குந்தா, மேட்டூர், ஆழியார், பைக்காரா, பாபநாசம்.
• அணு மின்சக்தி நிலையங்கள் – கல்பாக்கம், கூடங்குளம்.
2. மரபுசாரா சக்தி வளங்கள்:
• சூரிய சக்தியே (போட்டான்கள்) உலகின் பெரிய மரபு சாரா சக்தி வளம் ஆகும். சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்ற போட்டோ வோல்டிக் செல்கள் பயன்படுகின்றன.
• இந்தியாவில் வருடத்திற்கு 250 முதல் 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கின்றன.
• காற்றாலைகளில் இயந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றமடைகிறது.
• தமிழ்நாட்டில் ஆரல்வாய் மொழி, முப்பந்தல் (கன்னியாகுமாரி), செங்கோட்டை கணவாய் (திருநெல்வேலி) பாலக்காட்டுக் கணவாய் (கீத்தனூர்) தேனி, பழனி, சென்னை கடலோரப்பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
• கடல் அலைகள் (ஓதங்கள்) மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
• புவியின் உள்ளுறை வெப்பத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படுவதே புலி வெப்ப சக்தி ஆகும்.
தமிழ்நாட்டின் வேளாண்மை:
• தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 56 சதவீத மக்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
• வேளாண் உற்பத்தி பொருட்கள் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருள்களாக உள்ளன.
• சாகுபடி முறைக்கு ஏற்ப விவசாயத்தை 3 வகைகாளகப் பிரிக்கலாம்.
1. தீவிர தன்னிறைவு விவசாயம் – சிறிய அளவிலான நிலத்தில் சுயதேவைக்காக உற்பத்தி
செய்யும் முறை. நீர் கிடைக்கப்பெறும் அளவைப் பொருத்து நன்செய் (ஆண்டு முழுவதும்
நீ;ர் கிடைக்கும் பகுதியில்) புன்செய் (பருவமழையை மட்டுமே நம்பி நடைபெறுகிறது)
2. தோட்டப் பயிர்கள் – தேயிலை, காபி, இரப்பர் மற்றும் மிளகு. சந்தைத் தோட்டப்பயிர்
விவசாயம் (ஆயசமநவ புயசனநniபெ) – நகர் புற சந்தைகளில் விற்பனை செய்வதற்காக
பெரிய அளவில் காய், கனி மற்றும் பூக்களை உற்பத்தி செய்தலே ஆகும்.
3. கலப்பு விவசாயம் – பயிர் வளர்ப்துடன் கால்நடை, மீன்,தேனீ, மற்றும் பறவைகள்
வளர்க்கும் முறை. இவ்விவசாய முறை காவிரி டெல்டா பகுதிகளில் நடைமுறையிலுள்ளது.
தமிழ்நாட்டின் பயிர் சாகுபடி காலங்கள்:
• காலநிலை மற்றும் மண்வளம் ஆகியவற்றைப் பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
• சொர்ணவாரி (சித்திரைப்பட்டம் அல்லது காரீஃப் பட்டம்) – சித்திரை (மே) முதல் புரட்டாசி (அக்டோபர்) வரை.
• சம்பா பருவம் (ஆடிப்பட்டம்) – ஆடி (சூலை) முதல் சனவரி வரை
• நாரைப் பருவம் (கார்த்திகைப் பட்டம் அல்லது ரபி பட்டம்) – கார்த்திகை (நவம்பர்) முதல் மார்ச் வரை
• மண்வகை, தட்ப வெப்பம், மழை அளவு, ஈரப்பதம், நிலத்தின் சரிவு போன்றன இயற்கை காரணிகள் விவசாயத்தை தீர்;மானிக்கும் இயற்கை காரணிகள் ஆகும்.
• விவசாய அறிவு, நிலத்தின் அ;ளவு, விவசாய மாற்றங்களை ஏற்கும் பண்பு – விவசாயத்தை தீர்;மானிக்கும் சமூக காரணிகள்
• கடனுதவி, அரசு மானியம், ஊக்கத் தொகை – விவசாயத்தை தீர்;மானிக்கும் பொருளாதாரக் காரணிகள்.
• கால்வாய்கள் – விளை நிலங்களுக்கு நீரை எடுத்துச் செல்ல மனிதனால் செயற்கையாக வெட்டப்பட்ட நீர் வழிகள் ஆகும். தமிழ்நாட்டில் 27 சதவீத நிலம் கால்வாய் பாசனத்தின் மூலம் பயன் பெறுகின்றன.
• மேட்டூர் அணை கால்வாய்கள் மூலம் 2.7 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன.
• கல்லனையின் 5 கால்வாய்கள் மூலம் காவிரி டெல்டா முழுவதும் பயனடைகிறது.
• ஏரிகள், குளங்கள் பொதுப் பணித்துறையினர் அல்லது பஞ்சாயத்தினரால் பராமரிக்கப்படுகிறது.
• செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம், மதுராந்தகம், கொளவாய், கொடைக்கானல், ஊட்டி போன்றன தமிழகத்திலுள்ள முக்கிய ஏரிகள் ஆகும்.
• கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் பகுதிகளி;ல் ஆர்டீசியன் கிணறுகள் காணப்படுகின்றன.
• தமிழ்நாடு அயனமண்டலப் பிரதேசத்தில் காணப்படும் மாநிலம்.
• நெல் – தமிழ்நாட்டின் பிரதான உணவு ஆகும்.
• பொன்னி, கிச்சிலி சம்பா போன்றன தமிழ்pநாட்டின் பாரம்பரிய நெற்பயிர்கள் ஆகும்.
• காவிரி டெல்டா பகுதிகள் இந்தியாவின் நெற்களஞ்சியம் ஆகும்.
• தமிழ்நாட்டின் நெல் ஆராய்ச்சி நிறுவனம் – ஆடுதுறை
• பருத்தி கரிசல் மண்ணில் (ரிகர் மண்) விழைகிறது. கோயமுத்தூர், திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பருத்தி அதிகமாக விளைகிறது. எம்.சி.யூ 4, எம்.சி.யூ 5 மற்றும் ஆர்.எ.5166 பருத்தி இரகங்கள்.
• கரும்பு, புகையிலை, எண்ணெய் வித்துக்கள், மிளகாய், மஞ்சள், கொத்து மல்லி ஆகியன பணப்பயிர்கள் ஆகும்.
• கரும்பு – தமிழ்நாட்டின் முதன்மையான பணப்பயிர் ஆகும்.
• புகையிலை – தமிழ்நாட்டின் இரண்டாவது பணப்பயி;ர் ஆகும்.
• தேயிலை, காபி, இரப்பர், மிளகு,முந்திரி – தோட்டப்பயிர்கள் ஆகும்.
• மிளகு – திருநெல்வேலி, கன்னியாகுமரி
• முந்திரி – கடலூர் மாவட்டம்.
• காய், கனி மற்றும் பூ – தோட்டக்கலை பயிர்கள்.
• மா – கிருஷ்ணகிரி
• வாழை – கோவை, ஈரோடு.
• திராட்சை – தேனி.
• காய்கனி, பூ – கிருஷ்ணகிரி
• தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. மன்னர் வளைகுடா பகுதியில் முத்தெடுத்தல் சிறப்புற்று விளங்குகிறது.
• தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் – கோயமுத்தூர்
• எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் – தரமணி (சென்னை)
• மண்ணின் நீரைத் தேக்கும் தன்மையை தழைச்சத்து மற்றும் மணிச்சத்து மேற்கொள்கிறது.
தமிழக அணைகள் – அமைந்துள்ள ஆறுகள் – அமைந்துள்ள மாவட்டம்
ஆழியாறு – ஆழியாறு – கோயமுத்தூர்
அமராவதி – அமராவதி – திருப்பூர்
குந்தா – குந்தா – நீலகிரி
பவானி – பவானி – ஈரோடு
மணிமுத்தாறு – மணிமுத்தாறு – திருநெல்வேலி
ஸ்டேன்லி அணை (மேட்டூர்) – காவேரி – சேலம்
பேச்சிப்பாறை – கோதையாறு – கன்னியாகுமரி
பெருஞ்சானி – பறளையாறு – கன்னியாகுமரி
பூண்டி – கோசஸ்தலையாறு – திருவள்ளுர்
சாத்தனூர் – பொன்னியாறு – திருவண்ணாமலை
சோத்துப்பாறை – வராகநதி – திண்டுக்கல்
வைகை – வைகை – தேனி
தமிழக உற்பத்தித் தொழிற்சாலைகள்:
• இரண்டாம் நிலைத் தொழில்கள் தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் ஆகும்.
• தொழில் வளர்ச்சியில் முதல் 3 இடம் வகிக்கும் மாநிலங்கள்
1. மகாராஷ்;ட்ரா 2. குஜராத் 3. தமிழ்நாடு
• மூலப்பொருட்கள், தொழில் உரிமம், மூலதன அளவு, உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகிறது.
• மூலதனம், மூலப்பொருட்கள், எரிசக்தி, தொழிலாளர்கள், போக்குவரத்து, சந்தை வசதி போன்றன தொழில் அமைவிடத்தை நிருணயிக்கும் காரணிகள் ஆகும்.
• நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள், காகித உற்பத்தி, தோல் பொருட்கள், சிமென்ட், மின் உபகரணங்கள், மோட்டார் வாகனங்கள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகியன தமிழ்நாட்டின் முக்கியத் தொழில்கள் ஆகும்.
• தென் இந்தியாவின் மான்செஸ்டர் – கோயமுத்தூர்
• தமிழ்நாட்டின் நெசவுப்பள்ளத்தாக்கு – கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர்
• 70 சதவீத உள்ளாடைகளை திருப்பூர் மாவட்டம் ஏற்று செய்கிறது
• ஆடை மற்றும் படுக்கை விரிப்பு உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
• நெசவுத் தலைநகரம் – கரூர்
• பட்டு நெசவுத் n;தாழிலில் தமிழ்நாடு நான்காம் இடம் வகிக்கிறது.
• பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி மையம் – ஓசூர்
• இந்திய அளவிலான சர்க்கரை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 10 சதவீதம் ஆகும்.
• கரும்புத் தொழிற்சாலை கழிவான கரும்புச் சக்கையிலிருந்து
(பேகேஸ்) காகிதத் தொழிற்சாலையின் மூலப்பொருள்.
• காகித உற்பத்தியில் தமிழகம் இரண்டாமிடம் வகிக்கிறது.
• கரூர் மாவட்டத்தில் புகளுரில் 1979 இல் டி.என்.பி.எல் நிறுவனம் அமைந்துள்ளது.
• இந்தியாவின் 70 சதவீதம் தோல் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.
• டானின் என்ற அமிலப் பொருளின் உதவியுடன் தோல் பதனிடுதல் செய்யப்படுகிறது.
• இந்திய சிமென்ட் உற்பத்தியில் 10 சதவீதம் தமிழ்நாடு உற்பத்தி செய்கிறது.
• மோட்டார் வாகன உற்பத்தி 8 சதவீதம் (பொது வளர்ச்சிக் குறியீடு)
• தெற்காசியாவின் டெட்ராய்டு – சென்னை
• மென்பொருள் ஏற்றுமதியில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது.
• பெரம்பூரில் அமைந்துள்ள ஐ.சி.எப் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்சாலை ஆகும்.
• இராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை – ஆவடி
• சேலம் இரும்பு எஃகு தொழிற்சாலை இந்திய அரசால் நிருவகிக்கப்படுகிறது.
• சிவகாசியை குட்டி ஜப்பான் என ஜவர்ஹர்லால் நேரு அழைத்தார்.
• நெய்வேலி – அனல் மின் நிலையம், கண்ணாடி மற்றும் பீங்கான் தொழிற்சாலைகள்
• தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் – வெண்கலச் சிலை உற்பத்தி மற்றும் இசைக் கருவிகள்.
• மகளிர் உயிர் தொழில் நுட்ப பூங்காவை அமைத்த முதல் மாநிலம் – தமிழ்நாடு.
• தமிழக சுற்றுலாத்துறை இந்திய அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
தமிழக சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
1. ஸ்ரீபெரும்புதூர்
2. இருங்காட்டுக்கோட்டை காலணி பூங்கா
3. ஒரகடம் (காஞ்சிபுரம்)
4. இராணிப்பேட்டை தோல்துறை சிறப்பு மண்டலம்
5. பெருந்துறை பொறியியல் பொருட்கள் உற்பத்தி சிறப்பு மண்டலம்
6. செய்யார் மோட்டார் வாகனம், தானியங்கி உபகரணங்கள் உற்பத்தி சிறப்பு மண்டலம்
7. கங்கை கொண்டான் போக்குவரத்து பொறியியல் உபகரணங்கள் சிறப்பு மண்டலம்.
• சிப்காட் – மாநில தொழில் மேம்பாட்டு;க் கழகம் 1972 இல் தொடங்கப்பட்டது.
கனிமவளங்கள்:
• இரும்புத்தாது – கஞ்சமலை, தீர்த்தமலை, கோடுமலை
• பாக்சைட் – சேர்வராயன் மலை, ஏற்காடு
• ஜிப்சம் – திருச்சி, பெரம்பலூர், திருநெல்வேலி
• லிக்னைட் – தமிழ்நாட்டின் நெய்வேலி நிலக்கரி
வயல்களில் இருந்து டெர்ஷியரிகால பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது
• பெட்ரோலியம் – காவிரிப்படுகை, நரிமணம்,
கோயில்களப்பால். அடியக்க மங்கலம்
புவனகிரி, பனங்குடி
• பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை- மணலி, பனங்குடி (நாகை மாவட்டம்)
தோல் தொழிற்சாலை:
1. பெரம்பலூர் (டால்மியாபுரம்)
2. கரூர் (புளியூர்)
3. கோவை (மதுக்கரை)
4. திருநெல்வேலி (தாழையூத்து)
5. சேலம் (சங்ககிரி)
6. இராமநாதபுரம் (துலுக்கப்பட்டி)
7. பெரம்பலூர் ( அரியலூர் )
பட்டுத்தொழில்
• திண்டுக்கல்லில் மிகச்சிறந்து விளங்குகிறது.
துப்பாக்கித் தொழிற்சாலை
• திருச்சி அரவாக்குறிச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளது.
• தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் சிவகாசி, திருநெல்வேலி, தருமபுரி, வேலூர் ஆகிய இடங்களில் இத்தொழில் நடைபெறுகிறது. சிவகாசி தமிழகத்தின் குட்டி ஜப்பான் என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள்
1. ஹ{ண்டாய் – இருங்காட்டுக்கோட்டை
2. லேண்ஸ்சர் மிட்சுபிஷி – திருவள்ளுர்
3. அசோக்லைலேண்ட் – எண்ணூர், ஓசூர்
4. ஸ்டேண்டர்ட் மோட்டார்ஸ் – சென்னை
5. ஃபோர்டு மோட்டார்ஸ் – மறைமலைநகர்
6. டி.வி.எஸ் மொபட்ஸ் – ஓசூர்
7. என்பீல்ட் – ராணிப்பேட்டை
முக்கிய வனவிலங்கு சரணாலயங்கள்
1. முதுமலை – யானை
2. கிண்டி பூங்கா – மான்,முதலை
3. முண்டன்துறை – சிங்கவால் குரங்கு
4. வேடந்தாங்கல் – பறவைகள்
5. களக்காடு – புலி
6. வேட்டங்குடி – பறவைகள்
7. புலிக்காட்டு ஏரி – பறவைகள்
8. சித்திரங்குடி – பறவைகள்
9. விராலிமலை – மயில்கள்
10. திருவில்லிபுத்தூர் – சாம்பல் நிற அணில்கள்
11. இந்திராகாந்தி தேசிய பூங்கா – ஆணைமலை
உயிர் கோள இருப்புகள்
1. மன்னர் வளைகுடா – இராமநாதபுரம்
2. நீலகிரி – நீலகிரி
3. அகத்தியர் மலை – திருநெல்வேலி – கன்னியாகுமரி
தமிழக தேசி பூங்காக்கள்:
1. இந்திராகாந்தி – கோயமுத்தூர்
2. முதுமலை – நீலகிரி
3. முக்குர்த்தி – நீலகிரி
4. கிண்டி – சென்னை
5. மன்னர் வளைகுடா – இராமநாதபுரம்
பறவைகள் சரணாலயம்:
1. பழவேற்காடு ஏரி – திருவள்ளுர்
2. வேடந்தாங்கல் – காஞ்சிபுரம்
3. வெள்ளோடு – ஈரோடு
4. காரைவெட்டி – பெரம்பலூர்
5. உதயமார்த்தாண்டபுரம் – திருவாரூர்
6. வடுவூர் – திருவாரூர்
7. சித்திரங்குடி – இராமநாதபுரம்
8. கூத்தன்குளம் – திருநெல்வேலி
9. கோடியக்கரை – நாகபட்டினம்
10. மேல செல்வனூர்
11. கீழச் செல்வனூர் – இராமநாதபுரம்
12. காஞ்சிரங்குளம் – இராமநாதபுரம்
13. வேட்டன்குடி – சிவகங்கை.
தமிழக வணிகம்:
• வர்த்தகம் – நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணி
• வாத்தகம் – உபரி பொருட்களை உள்நாட்டின் பகுதிகளுக்கிடையே பரிமாறி கொள்ளும்
நிகழ்வு
• பண்டைய காலத்தில் பண்டமாற்று முறை நடைமுறையிலிருந்தது.
• ஏற்றுமதி – உற்பத்தி பொருட்களை மற்றொரு நாட்டிற்கு அந்நாட்டின் பணத்திற்காக விற்பனை செய்வது. இதன் மூலம் ஏற்றுமதி செய்யும்;;; நாட்டின் அந்நிய செலாவணி அதிகரிக்கும்.
• மருந்துகள், துணிகள், தோல் பொருட்கள், இரசாயண பொருட்கள், இயந்திர பொருட்கள், தாதுக்கள், தனிமங்கள், மென் பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்கள் போன்றன இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் ஆகும்.
• தேவையான பொருட்களை பிறநாட்டில் இருந்து வாங்குவது இறக்குமதி ஆகும்.
• கச்சா எண்ணெய், மருந்துப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தாவரக் கொழுப்பு மற்றும் எண்ணெய்கள் பிரதான இறக்குமதிப் பொருட்கள் ஆகும்.
• உள்நாட்டு வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தகம் என வர்த்தகம் இரு வகைப்படும்.
• உள்நாட்டு வர்த்தகம் – ஒரு நாட்டின் பகுதிகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் வணிகம். சாலை, இரயில் போக்குவரத்தின் மூலம் இவ்வர்த்தகம் நடைபெறுகிறது.
• வெளிநாட்டு வர்த்தகம் – ஒரு நாட்டின் புவியியல் எல்லைகளைக் கடந்து மேற்கொள்ளப்படும் வர்த்தகம். துறைமுகங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
• தமிழகத்தில் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தின் மூலம் உள்நாட்டு வணிகம் நடைபெறுகிறது. பொருட்களின் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக 21 வியாபார சங்கங்கள் தமிழகத்திலுள்ளன. 303 முறைபடுத்தப்பட்ட விற்பனை கூடங்கள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் அதிக முறைபடுத்தப்பட்ட விற்பனை கூடங்கள் உள்ளன.
• விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைய 1999 ஆம் ஆண்டில் மதுரையில் முதன் முதலாக உழவர் சந்தை ஏற்படுத்தப்பட்டது.
• தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர் சங்கத் தலைமையகம் – காஞ்சிபுரம்
• ளுஐPஊழுவு – தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் அமைப்பு ஆகும். மேலும், தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.
• வர்த்தகத்தின் விளைவாக அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கும், தொழிலாளர் நலனை அதிகரிக்கிறது, நாட்டின் மொத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.
மக்கள் தொகை:
• மக்கள் தொகை பற்றிய அறிவியல் ‘டெமோகிராஃபி’
• மக்கள் தொகை பரவலை நிர்ணயிக்கும் காரணிகள்:
1. நிலத்தோற்றம் மற்றும் 2. காலநிலை ஆகியன.
• உலகில் மனித வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்க மனித வளம் மிக முக்கியமானதாகும்.
• உலகில் மக்கள் தொகை மிக அதிகமாக வளர்ந்து வருகிறது.
• சீனா – உலகில் அதிக மக்கள் தொகை அதிகமாக கொண்ட நாடு;.
• மனித வளம் என்பது பணித்திறனுடைய மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். மனிதப் பணித்திறனை வயதின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.
1. குழந்தைகள் – 0-14 வயது வரை
2. வயது வந்தோர் – 15-64 வயது வரை
3. முதியவர்கள் – 65 வயதிற்கு மேல்
• இவ்வயதினரில் 15 – 49 வயதிற்குட்பட்டோரே அதிகமாக பொருள் ஈட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
• வறட்சி, கொள்ளை நோய்கள் போன்ற இயற்கைத் தடைகள் மக்கள் தொகை வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள் ஆகும்.
• ஏழ்மை, உணவு பற்றாக்குறை, குழந்தை பராமரிப்பின்மை, உலகப்போர் ஆகியன மக்கள் தொகை வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்.
• 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகை இந்திய மக்கள் தொகையில் 5.96 விழுக்காடு ஆகும்.
• கச்சா பிறப்பு விகிதம் – ஆயிரம் மக்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தன என்பது.
• கச்சா இறப்பு விகிதம் – ஆயிரம் மக்களுக்கு எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது.
• குழந்தை இறப்பு விகிதம் – ஓர் ஆண்டில் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் ஒரு வயதிற்குள் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை.
• வாழ்நாள் மதிப்பீடு – ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் மொத்த வாழ்நாட்களை கணக்கிட்டு அதிலிருந்து ஒரு நபரின் வாழ்நாளைக் கணக்கிடுவது.
• பாலின விகிதம் – ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர் என்பது.
• கருத்தரிப்பு விகிதம் – ஒரு பெண்ணின் வாழ்நாளில் அதிகமாகப் பிறக்கப் போகும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை.
• 1951 – 2011 ஆகிய ஆண்டு இடைவெளியில் தமிழக மக்கள் தொகை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
• தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் ஆண்டு வளர்ச்சி வீதம் 1.1 சதவீதம்.
• தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் – சென்னை, குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் – பெரம்பலூர்.
• மக்கள் தொகை பரவல் பொதுவாக சமவெளிப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
• மக்கள் அடர்த்தி – ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் வாழும் மக்கள் தொகையின் அளவு.
• 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் பாலின விகிதம் 996ஃ1000
• பாலின வீதம் அதிகமுள்ள மாவட்டம் – நீலகிரி
• பாலின வீதம் குறைவாக உள்ள மாவட்டம் – தர்மபுரி
• தமிழகத்தில் 51.55 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.
• 2011 – மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கல்வியறிவு வீதம் 80.09 சதவீதம்
• அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டம் – கன்னியாகுமாரி (91.75 சதவீதம்)
• குறைந்த கல்வியறிவு கொண்ட மாவட்டம் – தர்மபுரி (68.05 சதவீதம்)
• பாலின சமத்துவம் என்பது மட்டுமே வறுமை ஒழிப்பு என்று கூறியவர் – கோஃபி அனான்.
தமிழக போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்:
பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது.
நான்கு வகை போக்குவரத்துகள்
1. சாலைப் போக்குவரத்து
2. இருப்புப் பாதை போக்குவரத்து
3. நீர்வழிப் போக்குவரத்து
4. ஆகாயவழிப் போக்குவரத்து
தமிழகத்தில் சாலை போக்குவரத்து சிறப்பாக நடைபெறுகிறது.
நான்கு வகையான சாலைகள்
1. தேசிய நெடுஞ்சாலை
2. மாநில நெடுஞ்சாலை
3. மாவட்ட சாலைகள்
4. கிராமச் சாலைகள்
• தமிழகத்தில் 24 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
• தங்க நாற்கர சாலை தமிழகத்தில் முடிவடைகிறது.
• தமிழகத்தில் 7 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன.
1. சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம்
2. விழுப்புரம் கோட்டம்
3. கும்பகோணம் கோட்டம்
4. சேலம் கோட்டம்
5. கோயமுத்தூர் கோட்டம்
6. மதுரை கோட்டம்
7. திருநெல்வேலி கோட்டம்
• தமிழகத்தில் 64 ஆர்.டி.ஓ அலுவலகங்கள் உள்ளன.
• கிழக்குக் கடற்கரைச் சாலை வங்கக் கடலை ஒட்டிக் காணப்படுகிறது.
• தங்க நாற்கரச் சாலை புதுதில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய பெரு நகரங்களை இணைக்கிறது.
• சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையம் ஆகும்.
• சென்னை, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் மற்றும் திருச்சிராபள்ளி என தெற்கு இரயில்வே ஆறு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
• நீர்வழிப் போக்குவரத்து என்பது மிக குறைந்த செலவிலான போக்குவரத்து ஆகும். உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து மற்றும் கடல் வழிப் போக்குவரத்து என இரு வகைப்பபடும்.
தமிழ்நாட்டின் பெரிய துறைமுகங்கள்:
• சென்னை
• தூத்துக்குடி
• எண்ணூர் ஆகியவை மிகப்பெரிய துறைமுகங்கள் ஆகும்.
• கடலூர், நாகப்பட்டணம், குளச்சல், மற்றும் இராமேஸ்வரம் ஆகியன சிறிய துறைமுகங்கள் ஆகும்.
சிறிய துறைமுகங்கள்
• கடலூர்
• நாகை
• மண்டபம்
• இராமேஸ்வரம்
• கன்னியாகுமரி
உள்நாட்டு நீர்வழி
• பக்கிங்காம் கால்வாய் – மரக்காணம் – ஆந்திரா (பெத்தகஞ்சம்)
• வேதாரண்யம் கால்வாய் – வேதாரண்யம் – நாகப்பட்டினம்
• கூவம் – சென்னை – ஆந்திரா
விமானப் போக்குவரத்து
• தபால் போக்குவரத்து மற்றும் மக்களையும் துரித வேகத்தில் கொண்டு செல்ல உதவுகிறது.
• மும்பை, டெல்லி மற்றும் சென்னை இந்தியாவின் முதல் மூன்று பெரிய விமானநிலையங்கள் ஆகும்.
• இந்தியாவில் மொத்தம் 100 விமான நிலையங்கள் உள்ளன.
• 100 வது விமான நிலையம் சிக்கிம் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
• அண்ணா பன்னாட்டு விமான நிலையம், காமராசர் உள்நாட்டு விமானநிலையம் ஆகியவை சென்னையில் உள்ளன. திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகியவை பிற உள்நாட்டு விமான நிலையங்கள்.
தகவல் பரிமாற்றம்:
• எண்ணங்களையும், தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் வழிமுறையே தகவல் பரிமாற்றம் ஆகும்.
• அஞ்சல், தந்தி, தொலைபேசி, இணையதளம், மின் அஞ்சல் மற்றும் தொலைதூர நகல் போன்றன தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.
• பொதுத் தகவல் பரிமாற்றத்திற்கு உதவுபவை.
1. செய்தி அச்சுத் துறை – புத்தகங்கள், பத்திரிக்கைகள், நூல்கள், நாளேடுகள்.
2. மின்னணு துறை – வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி, தொலைக் காட்சி, கைபேசி, மின்னஞ்சல், மின் வர்த்தகம், டெலிபிரிண்டர்.
• இந்திய வானொலி ஒலிபரப்பு 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி எனப் பெயர் மாற்றப்பட்டது.
பேரிடர் மேலாண்மை:
• பேரிடர் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கையை அதிகமாக பாதிக்கும் நிகழ்வு பேரிடர் எனப்படும்.
• இந்நிகழ்வு இயற்கையாகவோ அல்லது மனிதனாலோ ஏற்படுகிறது.
• புவியியல் சார்ந்த இடர்கள் – புவி அதிர்வு, நிலச்சரிவு, சுனாமி, எரிமலை
வெடிப்பு
• நீரியல் சார்ந்த இடர் – பனிப்பாறை வீழ்ச்சி, வெள்ளம்
• வானிலை சார்ந்த இடர் – மிக அதிக வெப்பநிலை, வறட்சி, காடுகள்
எரிதல்
• காலநிலை சார்ந்த இடர் – சூறாவளிகள், புயல், வெப்ப அலை
• உயிரியல் சார்ந்த இடர் – நோய்கள் பரவுதல், பூச்சிகள் மற்றும்
கொள்ளை நோய்கள்
• மனிதனால் ஏற்படும் இடர் – தொழி;ற்சாலை விபத்து, மாசுபடுதல், அமில
மழை, சாலை விபத்து, தீவிரவாதத்
தாக்குதல், அணை உடைப்பு, நச்சுக்
கழிவு கசிவு, போர்கள்
• சமுதாய மற்றும் சார்ந்த இடர் – நிலச்சரிவு, வெள்ளம், வறட்சி
• இந்தியாவின் இந்தியப் பெருங்கடலில் சுனாமி (ஆழிப்பேரலை அல்லது துறைமுக அலை) 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
• 1984 – போபால் (மத்திய பிரதேசம்) விச வாயுக் கசிவு (மெத்தில் ஐசோ சயனேட்) ஏற்பட்டது.
• பேரிடர் மேலாண்மை – தொடர்;ச்சியான திட்டமிடல், நிர்வகித்தல், ஒருங்கிணைத்தல், மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஆகியவற்றைத் தடுத்தல் ஆகும்.
• பேரிடர் மேலாண்மையின் படிகள் – தயார் நிலை, பொறுப்புணர்வு, மீட்சி, தணித்தல்
• இமயமலை – புவி அதிர்வு மற்றும் நிலச்சரிவுகளை எதிர் கொள்கிறது. மேலும் வெள்ளம் பனிப்பொழிவு போன்றவற்றையும் எதிர்கொள்கிறது.
• வட இந்தியச் சமவெளி – வெள்ளப் பெருக்கால் பாதிப்படைகிறது.
• இந்தியாவின் வடமேற்கு மற்றும் தக்காண பகுதி – வறட்சி, பஞ்சம், பாலைவனமாதல் மற்றும் திடீர் வெள்ளம் போன்றவற்றை எதிர் கொள்கிறது.
• கடற்கரைப் பகுதிகள் – புயல், சுனாமி, கடல் அரிப்பு போன்றவற்றை எதிர் கொள்கிறது.
• இந்தியாவில் பேரிடர் மேலாண்மையின் தலைவர்கள் கிராம அளவிலிருந்து இந்திய அளவு வரை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
• தேசிய பேரிடர் மேலாண்மையின் தலைவர் – பிரமர்
• மாநில பேரிடர் மேலாண்மையின் தலைவர் – மாநில முதல்வர்
• மாவட்ட பேரிடர் மேலாண்மையின் தலைவர் – மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நீதிபதி
• கிராம பேரிடர் மேலாண்மை குழு -பஞ்சாயத்து ராஜ் குழு
வறட்சி:
• மழைப் பொழிவு பற்றாக்குறையின் காரணமாக நீண்ட காலமாக நிவவும் வறண்ட வானிலையே வறட்சி.
• வறட்சியின் வகைகள்
• வானிலையியல் வறட்சி – கால தாமதமாக பொழியும் மழையினால் ஏற்படும் நீர் பற்றாக்குறை
• நீர் சேமிப்பின்மையால் ஏற்படும் வறட்சி – நிலத்தடி நீர் குறைவு, அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் போன்றவற்றின் நீர் குறைவு
• வேளாண் வறட்சி – பயிர் வளர்ச்சிக்கு தேவையான நீரளவு குறைதல்
• மனதச் செயல்பாடுகளால் ஏற்படும் வறட்சி சமூகப் பொருளாதார வறட்சி ஆகும்.
- புவி அதிர்வு (நில நடுக்கம்) – புவியின் மேலோடு அசைவது அல்லது நகர்வது நில நடுக்கம் ஆகும்.
- எரிமலை வெடிப்பு மற்றும் நிலப்பலகை உராய்வினால் இயற்கையாக நில நடுக்கம் ஏற்படுகிறது,
- சுரங்கம், ஆழ்துளை கிணறுகள் மற்றும் அணைகள் ஆகியவற்றினால் செயற்கையாக நில நடுக்கம் ஏற்படுகறிது.
- நில நடுக்கத்தால் பனிப்பாறை வீழ்ச்சி, தீ, மண்ணின் மாறுபாடு மற்றும் சுனாமி போன்றவை ஏற்படுகிறது.
- சீஸ்மாலஜி என்பது நிலநடுக்கத்தைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு.
- புவி மையம் – புவி அதிர்வு தோன்றும் இடம்.
- வெளி மையம் – புவி மையத்திற்கு நேரே புவியின் மேற்பரப்பில் அமைந்த இடம்.
புவி அதிர்வலைகள வகைகள்:
1. முதன்மை அலைகள் (P) அலைகள் – இவ்வi;லகள் புவியின் உட்பகுதியில் தோன்றுகிறது. இவ்வலைகள் ஒலி அலைகளாகப் பயனிக்கின்றன. இவை திட, திரவ பொருட்களின் வழியே செல்கிறது.
2. இரண்டாம் நிலை அலைகள் – இவை மிக மெதுவாக நகர்கின்றன. திடப்பொருட்களின் ஊடே மட்டுமே பயனிக்கின்றன.
3. மேற்புற அலைகள் – முதன்மை அலைகள் உண்டான பிறகே இவை தோன்றுகின்றன. இவை அதிக ஆபத்தை உண்டாக்கக் கூடியவை.
- இந்தியா 4 புவி அதிர்வு மையங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- தமிழகம் மிதமான புவி அதிர்வு மையத்தில் அமைந்துள்ளது.
எ.கா: நீலகிரி, வேலூர், திருவள்ளுர், கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் திருநெல்வேலி. - மனிதரால் ஏற்படும் பேரிடர்கள் – தீ, தொழிற்சாலை விபத்து, தொழில் நுட்பம், போக்குவரத்து, அணுவினால் ஏற்படும் விபத்துகள். போர், தீவிரவாதம், குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு
சுற்றுச்சூழல் பாதிப்பு:
• காடுகள் அழிக்கப்படுவதால் வெப்பம் அதிகரித்தல், மண்ணரிப்பு, மழை பொழிவு குறைதல் போன்ற அபாயங்கள் ஏற்படுகிறது.
• காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணம் – கரியமில வாயுக்கள்.
• புவி வெப்பமயமாதல் – காற்றில் அளவுக்கு அதிகமான கரிய மில வாயு அதிகரிப்பதால் புவியின் இயல்பு வெப்பம் அதிகரித்தல். கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ புளுரோ கார்பன் போன்றன புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணிகள் ஆகும்.
• உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துபவை மாசுபடுத்திகள் ஆகும். மாசுபாடு மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
• 1. காற்று மாசுபாடு 2. நீர் மாசடைதல் 3. ஒலி மாசடைதல்
• காற்று மாசடைவதால் உலக வெப்ப மயமாதல், அமில மழை, ஓசோன் படல பாதிப்பு, புகை, மூடுபனி, சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
சில தகவல்கள்
• ஆசியாவின் டெட்ராய்ட் சென்னை ஆகும்.
• இந்தியாவின் அதிகப்படியான மக்கள் போக்குவரத்து இருப்புப்பாதை வழியாக நடைபெறுகிறது.
• இந்தியப் பரப்பளவில் காடுகளின் சதவிகிதம் 19.27மூ (ஆயரெயட சுநிழசவ) 21மூ
• இந்திய நிலப்பகுதியின் தென்பகுதி – குமரிமுனை
• இந்தியாவில் மாங்குரோவ் காடுகள் – அந்தமான் நிக்கோபார்,சுந்தரவனப்பகுதிஇகோதாவரி டெல்டா மகாநதி டெல்டா, கட்ச் மற்றும் காம்பே வளைகுடா
• தமிழ்நாட்டில் உள்ள பீடபூமி பாரமஹால் பீடபூமி.
• தமிழகத்தின் பெரிய மக்களவைத் தொகுதி தென்சென்னை ஆகும்.
• இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கக்கூடியது பாக்ஜலசந்தி ஆகும்.
• இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கக்கூடிய வளைகுடா மன்னார் வளைகுடா.
• தமிழ்நாட்டில் நெசவாளர்களின் வீடு கரூர்.
• தமிழக புனித பூமி இராமநாதபுரம்.
• தமிழகத்தின் கோட்டைகளின் நகரம் வேலூர்.
• தமிழ்நாட்டின் சமய நல்லினக்க பூமி நாகப்பட்டினம்.
• தமிழ்நாட்டின் இயற்கை பூமி தேனி மாவட்டம்.
• தமிழகத்தின் நுழைவாயில் – சென்னை
• தென்னிந்தியாவின் சரித்திரம் உறையும் பூமி – சிவகங்கை
• தமிழகத்தின் ஆலயங்களின் நகரம் – தஞ்சாவூர்
• தமிழகத்தின் ஏரி மாவட்டம் – காஞ்சிபுரம் (செங்கல்பட்டு)
• மஞ்சள் உற்பத்தியில் முன்னனியில் உள்ள மாவட்டம் – ஈரோடு
• முத்தெடுத்தல் நடைபெறும் இடம் – தூத்துக்குடி, இராமநாதபுரம்
• மத்திய கடல் உயிரி ஆய்வு மையம் – இராமநாதபுரம்.
• உலகின் தரம் வாய்ந்த கிராஃபைட் கிடைக்குமிடம் சிவகங்கை மாவட்டம்.
சூரிய குடும்பம்
• சூரிய குடும்பம் எவ்வாறு தோன்றியது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
• அவற்றுள் பெரு வெடிப்புக் கொள்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
• நோவா என்பது நட்சத்திர வெடிப்பு ஆகும்;.துருவ நட்சத்திரம்எப்போதும் வடக்கு திசையில் காணப்படும்.
• பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும்.ஆல்பா சென்ச்சூரி சூரிய குடும்பத்திற்கு மிக அருகில் உள்ள நட்சத்திரக்;கூட்டம் ஆகும்.
• சிரியஸ் மிக பிரகாசமான நட்சத்திரம் ஆகும்.
• ஒரு வருடத்தில் ஒளி பயணம் செய்யும் தூரம் ஒளியாண்டு எனப்படுகிறது.
சூரியன்
• சூரியனின் மேற்பரப்பு குரோமஸ்பியர் என அழைக்கப்படுகிறது, இதன் வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ் ஆகும்.
• சூரியனின் உட்பரப்பு போட்டோஸ்பியர் என அழைக்கப்படுகிறது, இதன் வெப்பநிலை 14 மில்லியன் டிகிரி செல்சியஸ் ஆகும்.
• சூரியனில் உள்ள முக்கிய தனிமங்கள் ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், மற்றும் பிற.
• இரு ஹைட்ரஜன் அணுக்கள் அணுக்கரு இணைவு தத்துவத்தில் இணைந்து ஹீலியம் அணுக்களை உருவாக்குவதனால் சூரியன் வெப்ப ஆற்றலை உருவாக்குகிறது.
கோள்கள்
• சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன.
• அவை முறையே – புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரெனஸ்,
நெப்டியூன்.
• வெள்ளி மற்றும் யுரேனஸ் தவிர அனைத்து கோள்களும் கிழக்கிலிருந்து மேற்காக(கடிகார திசையில்) சுழல்கின்றன.
1. புதன் – சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. துணைக்கோள்கள் இல்லை.
2. வெள்ளி – பூமிக்கு மிக அருகில் உள்ளது. புவியின் இரட்டை பிறவி என அழைக்கப்படுகிறது. மிகவும் வெப்பமான மற்றும் வட்ட வடிவமான ஒரே கோள் ஆகும். இது விடிவெள்ளி என அழைக்கப்படுகிறது. இது எதிர்கடிகார திசையில் சூரியனைச் சுற்றி வருகிறது.
3. செவ்வாய் – சிவப்பு கிரகம் என அழைக்கப்படுகிறது. போபாஸ்,டெய்மாஸ் என இரு துணைக்கோள்கள் உள்ளன.
செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய செயற்கைக்கோள் மங்கள்யான் ஆகும். ரஸ்யா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பிற நாடுகளும் செவ்வாய்கிரகத்திற்கு கோள்களை அனுப்பியுள்ளன.
ஆஸ்டிராய்டுகள் – செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் காணப்படும் உடைந்த விண்கற்களின் கூட்டம் ஆஸ்டிராய்டுகள் ஆகும். இவை நீள்வட்டப் பாதையில் சூரியனைச்சுற்றி வருகின்றன.
எரிகற்கள் சூரியனை ஒழுங்கற்ற முறையில் சுற்றி வரும் சிறிய அளவிலான கற்கள் ஆகும். அவை புவியின் வளிமண்டலத்தில் நுழையும் போது ஏற்படும் உராய்வினால் எரிந்து சாம்பலாகின்றன. இதனால் இவை எரி கற்கள் என அழைக்கப்படுகின்றன.
4. வியாழன் – சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகம் ஆகும். ஈரோப்பா, மெடிஸ், தேப், லோ உள்ப்பட 16 துணைக்கோள்கள் உள்ளன.
5. சனி – வட்ட வடிவிலான வண்ண வளையங்கள் காணப்படுகின்றன. டைட்டன், டெத்தீஸ், அட்லஸ், பண்டோரா உள்ப்பட அதிக துணைக்கோள்கள் கொண்ட ஒரே கிரகம் ஆகும். மொத்தம் 62 துணைக்கோள்கள் உள்ளன.
6. யுரேனஸ் – கடிகார திசைக்கு எதிராக சுழலும் கிரகம் ஆகும். இதைச் சுற்றி வட்ட வடிவிலான வளையங்கள் காணப்படுகின்றன. இதற்கு 15 துணைக்கோள்கள் உள்ளன.
7. நெப்டியூன் – இது பனிக்கட்டியால் ஆனது. டிரிட்டான் உள்ப்பட 8 துணைக்கோள்கள் உள்ளன.
பிற தகவல்கள்
• விண்வெளி பற்றிய பழமையான புத்தகம் ஆர்யபட்டம்.
• பிர்லா கோளரங்கம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
• இந்தியாவில் உதகமண்டலத்தில் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி அமைந்துள்ளது.
• இந்தியாவில் கொடைக்காணலில் முதன் முதலில் ரேடியோ தொலைநோக்கி அமைக்கப்பட்டது.
• உலகின் முதல் விண்வெளி வீரர் – யூரிககாரின் (ரஷ்யா – 1961)
• உலகின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை – வாலன்டினா தெரஸ்கோவா (ரஸ்யா 1963)
• விண்வெளியில் இரங்கி நடந்தவர் – அலெக்சி லியோனோவ் (1965)
• நிலவில் காலடி வைத்த முதல் மற்றும் இரண்டாவது விண்வெளி வீரர்கள் முறையே – நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின்.
• முதல் இந்திய விண்வெளி வீரர் – ராகேஸ் சர்மா
• முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கணை – கல்பனாச் சாவ்லா (ஹரியானா)
• கலிலியோ முதன் முதலில் தொலை நோக்கியை உருவாக்கி நிலவைக் கண்டறிந்தார்.
புவி
• நிலக்கோளம் நீர்க்கோளம் உயிர்க்கோளம் என அழைக்கப்படுகிறது. பூமியானது 23.5 டிகிரி அச்சில் சாய்ந்து தன்னைத்தானே சுற்றிக்கெண்டு சூரியனை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றி வருகிறது.
• அட்சரேகை என்பது புவியின் மேற்பரப்பில் கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பணைக்கோடு ஆகும்.
• இது ஒர் இடத்தின் தொலைவை அறியப் பயன்படுகிறது.
• இரண்டு அட்சரேகைகளுக்கு இடைப்பட்ட தொலைவு 69 மைல் அல்லது 111 கி.மீ.
• தீர்க்கரேகை என்பது புவியின் மேற்பரப்பில் வடக்கு தெற்காக வரையப்படும் கற்பணைக்கோடு ஆகும்.
• 0 டிகிரியில் கிரீன்விச் கோடு அமைந்துள்ளது.இதை அடிப்படையாகக் கொண்டு நாடுகளின் திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது.இரண்டு தீர்க்க ரேகைகளுக்கு இடைப்பட்ட கால அளவு 4 நிமிடங்கள் ஆகும்.
• இந்தியாவின் திட்ட நேரம் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகபாத்தின் (82.5 டிகிரி) வழியே செல்லும் தீர்க்க ரேகையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
• பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகும்.
• புவியின் வட அரைக்கோளத்தில் நீண்ட பகல் – ஜுன் 21.
• இது சம்மர் சால்ஸ்டைஸ் என அழைக்கப்படுகிறது.
• புவியில் வட அரைக்கோளத்தில் நீண்ட இரவு – டிசம்பர் 22.
• இது வின்டர் சால்ஸ்டைஸ் என அழைக்கப்படுகிறது.
• புவியில் குளிர்கால சம இரவு பகல் – செப்டம்பர் 23.
• இது வின்டர் ஈக்குவினாக்ஸ் என அழைக்கப்படுகிறது.
• புவியில் இலையுதிர்கால சம இரவு பகல் – மார்ச் 21.
• இது வெர்னல் ஈக்குவினாக்ஸ் என அழைக்கப்படுகிறது.
• ஒரே ஒரு துணைக்கோள் (நிலவு) உள்ளது.
• நிலவின் ஈர்ப்பு விசை புவியின் ஈர்ப்பு விசையில் 6 ல் 1 பங்கு ஆகும்.
• நிலவுக்கு இந்தியா அனுப்பிய செயற்கைக்கோள் சந்திராயன் ஆகும்.
• பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள ஒளி தூரம் அல்லது சூரியனின் ஒளி புவியை வந்தடைய ஆகும் நேரம் 8 நிமிடங்கள் 20 வினாடிகள் (500 வினாடிகள்) ஆகும்.
• பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் அமாவாசையன்று வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகின்றது.
• பகுதி சூரிய கிரகணம் அல்லது அன்னுலார் சூரிய கிரகணத்தில் சந்திரனால் சூரியன் பகுதியளவே மறைக்கப்படுகிறது.
• பூமிக்கும்; சந்திரனுக்கும் இடையில் சூரியன் பௌர்ணமியன்று வரும்போது சந்திர கிரகணம் வருகின்றது. புவி 29 மூ நிலத்தினாலும் 71 மூ நீரினாலும் சூழப்பட்டுள்ளது. மேலும் மூன்று அடுக்குகளால் ஆனது.
பாறைகளின் வகைகள் – உதாரணம் – பயன்கள்
- தீப்பாறைகள் – கிரானைட், பசால்ட் – கட்டிடம் கட்டுவதற்கு சாலைகள் அமைப்பதற்கு
- படிவுப்பாறைகள் – ஜிப்சம் – சுவர் பலகை, சிமெண்ட் மற்றும் பாரீஸ் பிலாஸ்டர் தயாரிக்கவும் கட்டுமானப் பொருள்.
சுண்ணாம்புக்கல் – கட்டுமானப் பொருள் உருக்காலைகளில் இரும்பை சுத்திகரிக்க - உருமாறிய பாறைகள் வைரம்
ஆபரணங்கள் செய்ய
பளிங்குக்கல் கட்டிடம் கட்டுவதற்கு, சிற்பங்கள் செதுக்கப் பயன்படுகிறது.
வளிமண்டலம்
• புவியைச்சுற்றி காற்றினால் ஆன அடுக்கு வளிமண்டலம் ஆகும். புவியீர்ப்பு விசையின் காரணமாக புவியுடன் இணைந்தே உள்ளது.
• வளிமண்டலத்தில் நைட்ரஜன் – 78, ஆக்ஸிஜன் – 21, ஆர்க்கான் – 0.93, கார்பண்டை ஆக்ஸைடு – 0.03 என்ற சதவீதத்தில் அமைந்துள்ளன.
வளிமண்டல அடுக்குகள்
• ட்ரோப்போஸ்பியர் – வானிலை மாற்றங்கள் அனைத்தும் இங்கே நிகழ்கின்றது, எனவே மாறும் வெப்பநிலை மண்டலம் எனப்படுகின்றது. துருவப்பகுதியில் 8 கி.மீ உயரமும் பூமத்திய ரேகைப்பகுதியில் 18 கி.மீ வரையும் பரவியுள்ளது.
• ஸ்ட்ரேட்டோஸ்பியர் – மாறா வெப்பநிலை மண்டலம் எனப்படுகிறது. 80 கி.மீ உயரம் வரை பரவியுள்ளது. விமானங்கள் இவ்வடுக்கின் வழியே பயனிக்கின்றன. ஓசோன் படலம் இவ்வடுக்கில் காணப்படுகின்றது.
• மீஸோஸ்பியர் – வளிமண்டலத்தின் இடையடுக்கு ஆகும். இங்கு எர்கற்கள் எரிந்து சாம்பாலகின்றன.
• அயனோஸ்பியர் – 500 கி.மீ உயரம் வரை பரவியுள்ளது. இவ்வடுக்கு ரேடியோ அலைகளை பூமிக்கு திருப்பி அனுப்பும் திறன் கொண்டது. இவ்வடுக்கில் வட துருவத்தில்; அரோரா போராலிஸ் மற்றும் தென்துருவத்தில் அரோரா ஆஸ்டிராலிஸிஸ் எனும் வண்ண ஒளிகள் தோன்றுகின்றன.
• வெளியடுக்கு – அண்ட வெளியுடன் இனைந்து காணப்படுகின்றது. இங்கிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரிக்கிறது.
புவியின் வெப்பமண்டலங்கள்
1. பூமத்திய ரேகை மண்டலம் – 100 – 100 வட, தென் அட்சரேகை வரை பரவியுள்ளது.
2. வெப்ப மண்டலம் – 100 – 300 வட, தென் அரைக்கோளங்களில் பரவியுள்ளது.
3. துணை வெப்ப மண்டலம் – 300 – 450 வட, தென் அரைக்கோளங்களில் பரவியுள்ளது.
4. துணை துருவமண்டலம் – 450 – 600 வட, தென் அரைக்கோளங்களில் பரவியுள்ளது.
5. துருவமண்டலம் – 600 – 900 வட, தென் அரைக்கோளங்களில் பரவியுள்ளது.
துணை வெப்ப மண்டலம், மற்றும் துருவ மண்டலங்கள் சேர்ந்த பகுதி மித வெப்ப மண்டலப்பகுதிகள் என அழைக்கப்படுகிறது.
காற்று
கோள்காற்று –
ஆண்டு முழுவதும் ஓரே திசையி;ல் வீசுகிறது. இது இரு வகைப்படும்.
1. கிழக்கு காற்று – பூமத்திய ரேகைப்பகுதியில் வீசுகிறது.
– வியாபாரக்காற்று என்றும் அழைக்கப்படுகிறது.
2. மேற்கு காற்று – 400 – 600 அட்சம் வரை பரவியுள்ளது.
– கடல் பகுதியில் மட்டுமே அதிக பலமுள்ள காற்றாக வீசுகின்றது.
பருவக்காற்றுகள் – ஓர் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட திசையில் வீசி மீண்டும் எதி;ர் திசையில் வீசும் காற்று. இது இரு வகைப்படும்.
1. தென்மேற்கு பருவக்காற்று – ஜீன் மாதத்தில் துவங்கி ஆகஸ்டு வரை இந்தியாவில்
வீசுகின்றது.
2. வடகிழக்கு பருவக்காற்று – அக்டோபர் – டிசம்பர் மாதம் வரை இந்தியாவில்
வீசுகின்றது.
கடல் காற்று –
கடலில் அதிக அழுத்தமுள்ள பகுதியிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள
பகுதிக்கு வீசுகின்றது.
நிலக்காற்று – நிலத்தில் அதிக அழுத்தமுள்ள பகுதியிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள
பகுதிக்கு வீசுகின்றது.
தலக்காற்று
– ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப்பரப்பில் வீசும் காற்று.
1. குளிர் காற்று
• மிஸ்ட்ரல் – பிரான்ஸ்
• போரா – இத்தாலி
2. வெப்பக்காற்று
• சிராக்கோ – ஆல்ப்ஸ் மலைத்தொடர் (சுவிட்சர்லாந்து)
• சினூக் – ராக்கி மலைத்தொடர் (வட அமெரிக்கா)
முக்கிய தலக்காற்றுகள்
• பிளிசார்ட் – துருவப்பகுதி
• யுர்மட்டான் – கினியா
• பாஃன் – சுவிட்சர்லாண்ட்
• வில்லி வில்லி – ஆஸ்திரேலியா
• லூ – வட இந்தியா
மேகங்கள் – பூரித நிலையை அடைந்த நீர் அல்லது பனித்துகள்களால் ஆனது. கண்ணுக்குப்புலப் படக்கூடிய, வளிமண்டலத்தில் மிதக்கக் கூடியவை மேகங்கள் எனப்படும். உயரத்தைப் பொறுத்து 4 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது
கீழ்மட்ட மேகங்கள்
• ஸ்டிரேடோ குமுலஸ் – கடினமான, உப்பிய மேகங்கள்
• ஸ்டிரேடஸ் – சாரல் மழை தரும் மேகங்கள்
• நிம்போ ஸ்டிரேடஸ் – பனி, மழை, தரும் மேகங்கள்
இடைமட்ட மேகங்கள்
• ஆல்ட்டோகுமுலஸ் – சாதகமான வானிலையின் அறிகுறி
• ஆல்ட்டோஸ்டிரேட்டஸ் – அடர்த்தியான சாம்பல் நிற மேகங்கள்
உயர் மட்ட மேகம்
• சிரஸ் – சாதகமான வானிலையின் அறிகுறி
• சிரோகுமுலஸ் – வெண்மையான உருண்டையான மேகங்களின் திறள்.
• சிரோஸ்டிரேட்டஸ் – மெல்லிய படலம் போன்றது.
செங்குத்து மேகங்கள்
• குமுலஸ் – வெப்பமண்டலப்பகுதிகளில் காணப்படும்
• குமுலோநிம்பஸ் – அதிக மழை தரும் மேகங்கள்.
சூறாவளி
• அதிகளவிலான காற்று குறைந்த அழுத்தம் கொண்ட மையப் பகுதியை மையமாகக் கொண்டு வேகமாகச் சுழலும் நிகழ்வு சூறாவளி எனப்படும்.
• வட அரைக்கோளத்தில் எதிர் கடிகாரதிசையிலும், தென் அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் சுழல்கிறது.
• இதன் மையப்பகுதி வெற்றிடமாகவும், அழுத்தம் குறைவாகவும் இருக்கும்.
• எதிர் சூறாவளி – வட அரைக்கோளத்தில் கடிகாரதிசையிலும், தென் அரைக்கோளத்தில் எதிர் கடிகார திசையிலும் சுழல்கிறது.
• இதன் மையப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
சூறாவளியின் வட்டாரப் பெயர்கள்
• மான்சூன் – இந்தியா
• டைபூன் – சீனா
• டைபூ – தைவான்இ ஜப்பான்
• டொர்னாடோ,யுரிக்கேன் – வட அமெரிக்கா
• பெர்க் வின்டு – ஆப்ரிக்கா
• பாம்பரோ – அர்ஜென்டினா
மலைகளின் வகைகள்
1. மடிப்புமலை – மடிப்புகளால் உண்டாகின்றது. உலகின் பெரும்பாலான மலைகள் மடிப்புகள் ஆகும். எ.கா.இமயமலை, ஆல்ப்ஸ்மலைத்தொடர்.
2. நீள் சதுக்க மலை – டென்சன் விசையால் உருவாகும் மலை, யுர்ஸ்ட் (அ) நீள் சதுக்க மலை எனப்படும். எ.கா நர்மதை மற்றும் தபதி பள்ளத்தாக்கு
3. வல்கனிக் மலை – எரிமலையால் உண்டாகும் மலைத்தொடர் ஆகும். எ.கா. பேரண் மலைத் தொடர் (இந்தியா)
4. குவி மாட மலைத்தொடர் – இது வட்டவடிவமானஇ குவிந்த மலைத்தொடர், எரிமலைகளால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
5. பீடபூமி மலைகள் – இவ்வகை மலைகள் எரிமலை பீடபூமிகளின் மீது ஏற்படுகிறது. பீடபூமிகளிலிருந்து எரிமலைக் குழம்பு வெளிவருவதால் இவ்வகை மலைகள் உருவாகின்றன.
6. எஞ்சிய மலைத்தொடர் – அரிப்பினால் சிதைவுற்ற மலைத்தொடர்கள். எ.கா ஆரவல்லி (இராஜஸ்தான்)
எரிமலைகள்:
• புவியின் உட்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே எரிமலை வெடிப்பு எனப்படுகிறது.
• புவியின் மேற்பரப்பில் வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு ‘லாவா’ எனப்படும்.
• புவித்தட்டுகள் நகர்வதாலும் எரிமலைகள் உருவாகின்றன.
எரிமலைகளில் காணப்படும் முக்கியக் கூறுகள்:
1. பாறைக்குழம்புத் தேக்கம் – இது புவிக்கு அடியில் பெரிய அளவில் காணப்படும் கற்குழம்புக் குளமாகும்.
2. துவாரங்கள் – எரிமலை வெடிப்பின் பொது வாயுக்கள், புகை, நெருப்பு மற்றும் பாறைக்குழம்பு வெளியேறுவதற்கான வழிகள் துவாரங்கள் எனப்படுகின்றன.
3. எரிமலைக் கூம்புகள் – துவாரங்கள் வழியாக வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு ஒரு கூம்பு வடிவ நிலத்தோற்றத்தை உருவாக்குகின்றது.
4. எரிமலை வாய் எரிமலை உச்சியில் காணப்படும் கிண்ணம் போன்ற வடிவமுடைய பள்ளமே ‘எரிமலை வாய்’ ஆகும்.
எரிமலைகள் மூன்று வகைப்படும்:
1. செயல்படும் எரிமலை: உ.தா: செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை – அமெரிக்க ஐக்கிய
நாடுகள்
2. உறங்கும் எரிமலை: உ.தா: ஃபியூஜி எரிமலை – ஜப்பான்
3. தணிந்த எரிமலை: உ.தா: கிளிமஞ்சாரோ எரிமலை – தான்சானியா.
• எரிமலைகளின் வடிவம் மற்றும் அதிலுள்ள கலவைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1) கூட்டு எரிமலை
2) கும்மட்ட எரிமலை
3) கேடய எரிமலை
1. கூட்டு எரிமலை:
• கூட்டு எரிமலை, அடுக்கு எரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
• எரிமலைச் செய்கையின் போது வெளிவந்த சாம்பல் கடினப் பாறைக்குழம்புகள் மற்றும் நுரைகற்களால் ஆன படிவுகள் அடுக்கடுக்காக அமைந்து காணப்படும்.
• இவை கூம்பு வடிவில் காணப்படுகின்றன.
உ.தா: ஃபிஜி எரிமலை – ஜப்பான்
2. குட்டமட்ட எரிமலை:
• சிலிகா அதிகமுள்ள எரிமலைக் குழம்பு அதிகப் பிசுபிசுப்புடன் வெளியேறுவதால் நீண்ட தூரத்திற்கு பரவ முடியாமல் எரிமலை வாய்க்கு அருகிலேயே வட்ட வடிவத்தில் படிந்து சிறு குன்று போலக் காணப்படும்.
உ.தா: பாரிக்கியூட்டின் எரிமலை – மெக்சிகோ.
3. கேடய எரிமலை:
• அதிக பிசுபிசுப்புடன் கூடிய பாறைக்குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தோடி கேடயம் போன்ற வடிவத்தில் மென்சரிவுடன் காணப்படும்.
உ.தா: மௌனலோவா எரிமலை – ஹவாய்;த் தீவு.
எரிமலைகள் மற்றும் புவி அதிர்ச்சிப் பகுதிகளின் பரவல்கள்:
• புவித்தட்டுகளின் விளிம்புகளில் நிகழ்கின்றன.
• பசிபிக் பெருங்கடல் பகுதியில் பசிபிக் தட்டுடன் மற்ற கண்டத்தட்டுகள் இணையும் எல்லைகளில் எரிமலை வெடிப்பு அதிகமாக நிகழ்வதால் இப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது.
• மத்திய கடலடி மலைத்தொடர் குன்றுப்பகுதிகள் மற்றும் மத்தியக் கண்டத்தட்டு மண்டலங்களில் அதிகமான புவி அதிர்வுகளும், எரிமலை வெடிப்புகளும் ஏற்படுகின்றன.
எரிமலையின் நன்மைகள்:
• எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மண்ணை வளமிக்கதாக்குகிறது. அதனால் வேணாண் தொழில் மேம்படுகிறது.
• எரிமலைகள் உள்ள பகுதிகள் புவி வெப்ப சக்தியை பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.
• உறங்கும் எரிமலையும், செயல்படும் எரிமலையும் உலகின் சிறந்த சுற்றுலாத் தளங்களாக உள்ளன.
• எரிமலைகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் கட்டிடத்தொழிலுக்குப் பயன்படுகிறது.
உலகின் முக்கிய எரிமலைத்தொடர்கள்
• மௌண்ட் விசுவியஸ் – இத்தாலி
• கரகட்டா – இந்தோனேசியா
• மௌண்ட்ஃபீலி – மேற்கிந்திய தீவுகள்
• ஃபுஜி – ஜப்பான்
• மௌனலோவா – யுவாய்
• பரிக்குடின் – மெக்ஸிகோ
• கிளிமாஞ்சாரோ – ஆப்ரிக்கா
• ஸ்ட்ராம்போலி – மத்தியதரைக்கடல்
• பேரன் ஐலண்ட் – அந்தமான் நிக்கோபர் தீவுகள்
பீடபூமிகள்
• ஒருநிலப்பரப்பு அதனைச் சுற்றியுள்ள நிலப்பகுதியைவிட உயரமாகவும் தட்டையாகவும் காணப்படும் பகுதி பீடபூமி ஆகும்.
• இந்தியாவில் காணப்படும் பீடபூமிகள் மாளவப்பீடபூமி, தக்காணபீடபூமி, சோட்டாநாக்பூர் பீடபூமி.
• மேலும் தாது வளங்கள் நிறைந்தஇ சுரங்கங்கள் நிறைந்த பகுதிகள் ஆகும். இங்கு இரும்புஇ செம்புஇ தங்கம்இ வைரம்இ மாங்கனீசுஇ நிலக்கரி போன்றவை உலகளவில் அதிகம் வெட்டி எடுக்கப்படுகிறது.
சமவெளிகள்
• பரந்த தாழ்ந்த சமமான நிலப்பரப்பு சமவெளி ஆகும்.
• இது மூன்று வகைகளாகப்பிரிக்கப்படுகின்றது.
1. ஆற்றுச்சமவெளி – ஆறுகளின் படிவுகளால் உண்டாகும் சமவெளிகள் ஆகும்.
எ.கா காவிரி, கங்கை, பிரம்மபுத்திரா காவிரி சமவெளிகள்
2. கடற்கரைச்சமவெளி – கடல் கொண்டுவரும் படிவுகளால் உருவாகின்றது.
எ.கா கிழக்கு கடற்கரைச்சமவெளிஇ மேற்குக் கடற்கரைச்சமவெளி
3. காற்றடி வண்டல் – காற்று கொண்டுவரும் படிவுகளினால் உண்டாகும் சமவெளிகள்
ஆகும்.
எ.கா மஞ்சள் ஆற்றின் சமவெளி (சீனா)
பெருங்கடல்கள்
• மிகப்பெரிய பரந்த நீர்பரப்பு பெருங்கடல்கள்இ கடல்கள் என அழைக்கப்படுகிறது.
• உலகில ஐந்து பெருங்கடல்கள் உள்ளன.
1. பசுபிக் பெருங்கடல் 2. அட்லாண்டிக் பெருங்கடல் 3. இந்தியப் பெருங்கடல்
4. ஆர்டிக்; பெருங்கடல் 5. அண்டார்டிக்; பெருங்கடல்
உலகின் மிகப்கெரிய பெருங்கடல் பசுபிக்; பெருங்கடல் ஆகும்.
கடல் அலைகள்
• அலைகள் காற்றினால் ஏற்படுகிறது.
• கடல்நீரின் மீது காற்று வீசும் போது ஏற்படும் உராய்வினால் கடல் அலைகள் ஏற்படுகிறது.
• மேலும் சூரியன்இ சந்திரன்இ புவியின் சுழற்சி காரணமாகவும் ஏற்படுகிறது.
கடல் அலைகளின் வகைகள்
கேப்பில்லரி அலைகள்: காற்றினால் ஏற்படுகிறது
செய்ச்சி அலைகள்: புயல்,வளிமண்டல அழுத்த வேறுபாட்டினால் ஏற்படுகிறது
சுனாமி அலைகள்: கடலின் அடியில் ஏற்படும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு,
நிலச்சரிவினால் ஏற்படுகிறது. துறைமுக அலைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
ஓதங்கள்
• சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்புவிசை மற்றும் புவியின் சுழற்சியின் காரணமாகவும்
ஓதங்கள் உண்டாகின்றன.
• அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் அலைகளின் அளவு அதிகமாக
இருக்கும்.
• கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றமே ஓதம் என அழைக்கப்படுகிறது.
ஓதங்களின் வகைகள்
1. உயர் ஓதம் – சந்திரனின் ஈர்ப்புவிசையினால் ஏற்படுகின்றது.
2. தாழ் ஓதம் – இரு உயர் ஓதங்களுக்கு இடைப்பட்ட ஓதம்.
3. அதி ஓதம் – சூரியன் சந்திரன் மற்றும் புவி ஆகியவை அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஒரே நேர்கோட்டில் வரும்போது நிகழும். இரு ஓதங்களுக்கு இடைப்பட்ட வித்தியாசம் அதிகம்.
4. மித ஓதம் – சந்திரன் மற்றும் சூரியன், புவிக்கு செங்குத்து திசையில் அமையும் போது ஏற்படுகின்றது. இங்கு இரு ஓதங்களுக்கு இடைப்பட்ட உயர வித்தியாசம் மிகவும் குறைவு.
• ஓதங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும்.
• இந்தியாவில் கட்ச் வளைகுடா, காம்பட் வளைகுடா, சுந்தரவனக்காடு போன்ற குதிகளிலிருந்து ஓதங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும்.
• குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியில் முதன்முதலில் வுனையட அமைய உள்ளது.உயர் ஓதத்தின் போது கப்பல்கள் துறைமுகங்களுக்குள் வந்து செல்ல ஏதுவாக அமைகின்றது.
கடல் நீரோட்டங்கள்
• கடலில் உயர் அழுத்தப்பகுதியில் இருந்து தாழ் அழுத்தப்பகுதிக்கு நீரானது பாயும்
நிகழ்வு கடல் நீரோட்டம் எனப்படும்.
• இது வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது.
வெப்ப நீரோட்டம்
1. கல்ஃப் நீரோட்டம் – மெக்ஸிகோ வளைகுடா
2. வட அட்லாண்டிக் நீரோட்டம் – அட்லாண்டிக் பெருங்கடல்
3. குரோசியோ நீரோட்டம் – ஜப்பான் (பசுபிக் பெருங்கடல்)
4. மொசாம்பிக் நீரோட்டம் – தென் ஆப்பிரிக்கா(இந்தியப் பெருங்கடல்)
5. தென் இந்தியப்பெருங்கடல் நீரோட்டம்
குளிர் நீரோட்டம்
1. லேப்ரடார் நீரோட்டம் – கனடா
2. கேனரீஸ் நீரோட்டம் – வட ஆப்ரிக்காவின் மேற்குப்பகுதி
3. பென்கோலா நீரோட்டம் – தென் ஆப்ரிக்காவின் மேற்குப்பகுதி
4. ஒயாசியோ நீரோட்டம் – ஜப்பான்
5. கலிபோர்னிய நீரோட்டம் – வட அமெரிக்கா
6. ஹம்போல்ட் (அ) பெருவியன் நீரோட்டம் – தென் அமெரிக்கா
7. வெஸ்ட் விண்டு டிரிப்ட் – அண்டார்டிக்கா
8. கிரீன்லாந்து நீரோட்டம் – கிரீன்லாந்து
கடலடி நிலத்தோற்றங்கள்
1. கண்டதிட்டு – சூரிய ஒளிபுகக்கூடிய ஆழம் குறைந்த சரிவான பகுதி ஆகும்.மீன்பிடி தளம் அமைக்க ஏற்ற பகுதி ஆகும்.
2. கண்டச்சரிவு
3. ஆழ்கடல் பகுதி – அபிசால் சமவெளிப் பகுதி என அழைக்கப்படுகிறது. இதில் பீடபூமிகள் குன்றுகள் தீவுகள் போன்றவை உள்ளன. கடலின் பெரும் பகுதி அபிசால் சமவெளியால் ஆனது.
4. டிரன்ச் பகுதி – கடலின் அடியில் காணப்படும் பிளவான பகுதி. மரியான டிரன்ச் உலகின் மிக ஆழமான பகுதி, பசுபிக் பெருங்கடலில் காணப்படுகின்றது.
பவளப்பாறைகள்
பவளங்கள் விலங்குகள் வகையைச் சாhந்தவை ஆகும். இவை கால்சியத்தை உற்பத்தி செய்து பவளப் பாறைகளை உருவாக்குகின்றன.
இவை கூட்டமாக (காலனி) வாழும். இவற்றின் மீது ஆல்காக்கள் தொற்றி வாழ்கிறது. ஆல்காக்கள் பவளத்திற்கு நிறத்தை அளிக்கின்றன. இயற்கையாக பவளங்கள் வெண்மை நிறமானவை.
புவி வெப்பமயமாதல் பவளங்களின் அழிவுக்கு முக்கிய காரணங்களாகின்றது.
• 200 செல்சியஸ் வெப்ப நிலை உள்ள பகுதியில் வாழ்கின்றன.
• இந்தியாவில் பவளப்பாறையினால் உருவான தீவு லட்சத்தீவு ஆகும், இது அட்டோல் என அழைக்கப்படுகிறது.
• ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் பவளப்பாறைத் தொடர் – ஆஸ்திரேலியா
• இந்தியாவில் மன்னர் வளைகுடா, அந்தமான் நிக்கோபா தீவுகளில் பவளத்தொடர்கள் காணப்படுகின்றன.
பவளப்பாறை வகைகள்:
1. ஃபிரிஞ்சிங் பவளப்பாறை
2. பாரியர் பவளப்பாறை
3. அடோல் பவளப்பாறை
உலகப் புல்வெளிகள் – வெப்பநிலையைப் பொறுத்து பின்வருமாறு பிரிக்கலாம்
வெப்பமண்டல புல்வெளிகள்
1. சவானா – ஆப்ரிக்கா
2. செல்வாஸ் – பிரேசில்
3. லானோஸ் – வெனிசுலா
மிதவெப்பமண்டல புல்வெளிகள்
1. பிரெய்ரி – அமெரிக்கா
2. ஸ்டெப்பி – ஐரொப்பா
3. புஸ்டாஸ் – யுங்கேரி
4. மஞ்சூரியா – சீனா
5. பாம்பாஸ் – அர்ஜென்டினா
6. வெல்ட் – ஆப்ரிக்கா
7. டவுன்ஸ் – ஆஸ்திரேலியா 8. காண்டர்பெர்ரி – நியூஸிலாந்து பாலைவனங்கள்
• பாலைவனம் என்பது முற்றிலும் மணற்பாங்கானஇ தாவரங்கள் மிகக்குறைவாகவுள்ள பரந்து விரிந்த நிலப்பரப்பு ஆகும். புவியில் ஐந்தில் ஒரு பங்கு நிலம் பாலைவனத்தால் ஆனது.
• மேலும் பாறைகளாலோ, கற்கள் நிறைந்ததாகவோ அல்லது மணல் பாங்கான வகையைச் சார்ந்ததாகவோ இருக்கலாம்.
வெப்பப் பாலைவனங்கள்
1. சயுhரா – உலகின் மிகப்பெரிய பாலைவனம்
2. அரேபியா, கலயுhரி, நமீபியா, மோNயுhவ், அட்டகாமா(உலகின் வறண்ட பாலைவனம்), விக்டோரியா
பாலைவனங்கள்
குளிர் பாலைவனங்கள்
1. கோபி (மஞ்சூரியா) – சீனா
2. படகோனியா – அர்ஜென்டினா
• புழுதிப்புயல், ஒட்டகம் மற்றும் ஒயாசிஸ் (பாலைவனச்சோலை) போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும். உலகின் மிகப்பெரிய பாலைவனச்சோலை மொராக்கோ (ஆப்ரிக்கா) நாட்டில் உள்ளது.
விவசாயம்
• இடமாற்று விவசாயம் (அ) சிஃ;ப்டிங் கல்டிவேசன் – பழங்குடியின மக்களால் வெப்ப மண்டலப்பகுதிகளில் பின்பறப்படும் விவசாய முறை ஆகும்.
இடமாற்று விவசாயத்தின் பல்வேறு பெயர்கள்:
ஜீம் – இந்தியா
லடாங் – மலேசியா
டௌங்கியா – மியான்மர்
தமாரா – தாய்லாந்து
கெய்கின் – பிலிப்பைன்ஸ்
யு{மா – ஜாவா
மில்பா – வட அமெரிக்கா, ஆப்ரிக்கா
சேனா – இலங்கை
தோட்டப்பயிர்கள்
– வெப்ப மண்டலப்பகுதிகள் காலணி நாடுகளாக இருந்ததனால் இப்பயிர்கள்
பயிரிடப்பட்டன. எ.கா. டீ, காஃபி
வெப்ப நீர் ஊற்றுகள் – நீரூற்றுகளின் வெப்பநிலை மற்ற நீரூற்றுகளின் வெப்பநிலையை விட மிகுதியான வெப்பத்துடன் காணப்படும்.
இந்தியா – ஹீமாயூன் மலைகள், நந்த தேவி மற்றும் மகாராஸ்ட்ரா பகுதிகளில் வெப்ப
நீரூற்றுகள் உள்ளன.
ஆர்டீசியன் கிணறு – அதிக அழுத்தத்தின் காரணமாக நீர் இயற்கையாக புவியில் இருந்து
பீய்ச்சியடிக்கும் நிகழ்வு.
– தமிழகத்தில் நெய்வேலிப்பகுதியில் ஆர்டீசியன் கிணறு உள்ளது.
பனியாறு – மலைச்சிகரங்களில் உள்ள உறைந்த பனிப்பாலங்கள் நகருதலே பனியாறு
என்றழைக்கப்படுகின்றது. இந்தியாவில் சியாச்சின், கங்கோத்திரி, யமுனோத்திரி
போன்ற முக்கிய பனியாறுகள் காணப்படுகின்றன.
• புவியின் அக மற்றும் புறச்செயல்முறைகளால் புவி பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகிறது.
• இவ்விரு தொடர்ச்சியான செயல்பாடுகள், புவியின் நிலத்தோற்றத்தை வடிவமைக்கின்றன.
• புறச்செயல்முறைகள் சூரிய சக்தி மற்றும் புவியீர்ப்பு விசையாலும் அகச் செயல்முறைகள் புவியின் உட்புற வெப்பத்தாலும் இயக்கப்படுகின்றன.
• வானிலைச் சிதைவின் தன்மை மற்றும் சிதைவின் அளவு, இடத்திற்கு இடம், பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடும்.
• வெப்பம், பாறையின் அமைப்பு, நிலச்சரிவு மற்றும் தாவரங்கள் போன்றவை பாறைகள் சிதைவடைவதைக் கட்டுப்படுத்தும் காரணிகளாகும்.
வானிலைச் சிதைவின் வகைகள்:
1. இயற்பியல் சிதைவு
2. இரசாயனச் சிதைவு
3. உயிரினச் சிதைவு
1. இயற்பியல் சிதைவு:
• பகல் நேரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக பாறைகள் விரிவடைகின்றன.
• இரவு நேரத்தில் அதிகக் குளிரின் காரணமாக அவை சுருங்குகினறன.
• இத்தொடர்ச்சியான நிகழ்வின் காரணமாக பாறைகளில் விரிசல் ஏற்பட்டு அவை உடைந்து சிதறுகின்றன.
• பாறை உரிதல், பாறைப் பிரிந்துடைதல் மற்றும் சிறுத்துகள்களாக சிதைவுறுதல் ஆகியன இயற்பியல் சிதைவின் வகைகளாகும்.
2. இரசாயனச் சிதைவு:
• பாறைகளில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உடைந்து சிதைவுறுகின்றன. இச்சிதைவுறுதலே இரசாயனச் சிதைவு எனப்படுகிறது.
• அதிக வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட நிலநடுக்கோட்டுப் பகுதிகள், வெப்பமண்டலப் பகுதிகள் மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் இரசாயனச் சிதைவுறுதல் அதிகமாக நடைபெறுகிறது.
• ஆக்ஸிகரணம், கார்பனாக்கம் கரைதல், நீர்க்கொள்ளல் ஆகிய செயல்பாடுகளினால் இரசாயன சிதைவு ஏற்படுகிறது.
• ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் இரசாயனச் சிதைவுறுதலின் முக்கியக் காரணிகளாக அமைகின்றன.
3. உயிரினச்சிதைவு:
• தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது.
• மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும் மற்றும் மனிதச் செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவுறுதலே உயிரினச் சிதைவுறுதலே உயிரினச் சிதைவு எனப்படும்.
நிலத்தோற்ற வாட்டம் அமைக்கும் செயல்முறைகள்:
• இயற்கை காரணிகளான ஆறுகள், நிலத்தடி நீர், காற்று, பனியாறுகள் மற்றும் கடலலைகள் புவியின் மேற்பரப்பை சமன்படுத்துகின்றன.
• இச்செயலே சமன்படுத்துதல் செயல்முறை எனப்படும்.
• நிலத்தின் மேற்பரப்பை தேய்வுறச் செய்தலே அரிப்பினால் சமப்படுத்துதல் எனப்படும். இயற்கைக் காரணிகளால் நிலத்தோற்றங்களை உருவாக்குதலே படிவுகளினால் நிரப்பப்படுதல் எனப்படும்.
• ஆறுகளே மிக அதிக அளவில் சமன்படுத்துதல் அமைக்கும் செயல்முறைகளை
ஏற்படுத்தும் முக்கியக் காரணியாகும்.
• பெரும்பாலும் ஆறுகள் உயரமான மலைகள், குன்றுகள் அல்லது பீடபூமிகளிலிருந்து
உருவாகின்றன.
• ஆறுகளின் ஆதாரமாக மழைநீர், பனியாறுகள், நீரூற்றுகள் மற்றும் ஏரிகள்
விளங்குகின்றன.
• ஆறுகள் தோன்றும் இடம் ஆற்றின் பிறப்பிடம் எனவும், கடலுடன் கலக்குமிடம்
‘முகத்துவாரம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
• அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் ஆற்றின் முதன்மைச் செயல்களாகும்.
• ஆற்றின் செயல்பாடுகள் நீரின் அளவு, நீரோட்ட்தின் வேகம், நிலத்தின் சரிவு,
பாறைகளின் அமைப்பு மற்றும் கடத்திவரப்பட்ட பொருட்களின் சுமை ஆகிய
காரணிகளைச் சார்ந்தே அமையும்.
• ஆறுகள் மலைகளில் தோன்றி கடலிலோ அல்லது ஏரியிலோ கலக்கின்றன.
• ஆறு பாய்ந்து செல்லும் அதன் பாதை, ஆற்றின் போக்கு என அழைக்கப்படுகிறது.
ஆற்றின் போக்கு மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.
1. இளநிலை
2. முதிர்நிலை
3. மூப்பு நிலை
1. இளநிலை
• ஆற்றின் இளநிலையில் ‘அரித்தலே’ முதன்மையானச் செயலாக உள்ளது. இந்நிலையில் ஆறுகள் செங்குத்தான மலைச்சரிவுகளில் உருண்டோடுகின்றன.
• இச்சரிவுகளில் ஆற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அவை பாய்ந்தோடும் போது பள்ளத்தாக்கை அகலமாகவும், ஆழமாகவும் அரித்துச் செல்கின்றன.
• நிலத்தோற்றங்கள்: ‘ஏ’ வடிவபளளத்தாக்குகள், மலையிடுக்குகள், குறுகிய பள்ளத்தாக்குகள், இணைந்த கிளைக்குன்றுகள், துள்ளல் குடக்குழிகள், மற்றும் நீர்வீழ்ச்சிகள்.
2. முதிர் நிலை:
• முதிர்நிலையில் ஆறுகள் சமவெளியை அடைகின்றன. ஆற்றின் வேகம் திடீரென குறையும் இடங்களில் படியவைத்தலும் நிகழ்கிறது.
• நிலத்தோற்றங்கள்: வண்டல் விசிறிகள், வெள்ளச் சமவெளிகள், ஆற்று வளைவுகள், குருட்டு ஆறுகள்.
3. மூப்பு நிலை:
• இளநிலை மற்றும் முதிர் நிலையில் அரித்து கடத்தி வரப்பட்ட பொருட்ள் தாழ்நில சமவெளிகளில் படிய வைக்கப்படுகின்றன.
• தாழ்நில சமவெளிகள் படிவுகளால் நிரப்பப்படுவதால் முதன்மை ஆறு பல கிளை ஆறுகளாகப் பிரிகின்றன. ‘படியவைத்தல்’ இந்நிலையின் முதன்மையானச் செயலாகும்.
• இந்நிலையில் டெல்டாக்கள், ஓத பொங்கு முகங்கள் போன்ற நிலத்தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.
• துணை ஆறு – முதன்மை ஆற்றுடன் இணையும் அனைத்து சிற்றாறுகளும் துணை
ஆறுகள் ஆகும். உ.தா: பவானி ஆறு
• கிளை ஆறு – முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஆறுகள்.
உ.தா: கொள்ளிடம் ஆறு
• உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா). இதன் உயரம் 979 மீட்டர்.
• ஆசியாவில் உள்ள மிகப்பெரிய நன்னீர் குருட்டு ஆறு பிஹாரிலுள்ள கன்வர் ஏரி ஆகும்.
• அமெரிக்காவில் அர்க்கன்சாஸ் பகுதியில் உள்ள சிக்காட் ஏரி உலகிலேயே பெரிய குருட்டு ஆறு ஆகும்.
• டெல்டா என்ற கிரேக்க எழுத்து (Δ) போன்று, நைல்நதியின் முகத்துவாரததில் காணப்படும் படிவுகள் இருப்பதால், இவ்வகை படிவுகளுக்கு ‘டெல்டா’ என்ற பெயர் வழக்கத்தில் வந்தது.
• கங்கை, பிரம்மபுத்திரா டெல்டா உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும்.
நிலத்தடி நீர்:
• புவியின் மேற்பரப்பில் உள்ள பாறைகளின் துவாரங்கள் மற்றும் விரிசல்கள் வழியாக நீர் உட்புகுந்து நிலத்தடியில் சேகரிக்கப்படுகிறது.
• நிலத்தடி நீர், ஊற்று, கொதிநீர் ஊற்று, வெப்ப நீரூற்று, கிணறு, குளம், ஆர்டீசியன் கிணறு போன்றவற்றின் மூலம் புவியின் மேற்பரப்பை மீண்டும் வந்தடைகிறது.
• அமெரிக்காவில் உள்ள வியாமிங்கின் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் காணப்படும். ஓல்டு பெய்த்புல் வெப்ப நீரூற்று உலகின் சிறந்த வெப்ப நீருற்றாகும்.
சுண்ணாம்புப் பிரதேச நிலத்தோற்றங்கள்:
• நீரில் எளிதில் கரையும் தன்மையுடைய சுண்ணாம்புக்கல், டாலமைட், ஜிப்சம் போன்றவை பாறை பிரதேசங்களில் காணப்படுகின்றன.
• இந்நிலத்தோற்றம் ஸ்லாவிக் மொழியில் ‘கார்ஸ்ட்’ என அழைக்கப்படுகிறது.
• கிரேட் ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் அமைந்துள்ள ‘நல்லர்பார்’ உலகின் மிகப்பெரிய சுண்ணாம்புப் பிரதேச நிலத்தோற்றமாகும்.
உலகில் சுண்ணாம்பு நிலப்பிரதேசங்கள் காணப்படும் இடங்கள்:
• தெற்கு பிரான்சு, ஸ்பெயின், மெக்சிகோ, ஜமைக்கா, மேற்கு கியூபா, மத்திய
நியூகினியா, இலங்கை மற்றும் மியான்மர்.
இந்தியாவில் உள்ள சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள்:
1. மேற்கு பீஹார் – குப்ததாம் குகைகள்
2. உத்தரகாண்ட் – ராபர்ட் குகை மற்றும் தப்கேஷ்வர் கோவில்
3. மத்தியப்பிரதேசம் – பச்மாரி மலைகள் பாண்டவர் குகைகள்
4. சத்தீஸ்கர் (பஸ்தர்) – குடும்சர் குகைகள்
5. ஆந்திர பிரதேசம் – போரா குகைகள் (விசாகப்பட்டினம்)
• சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் கார்பன்-டை ஆக்சைடு கலந்த மழை நீர் விழும்
போது அப்பிரதேசங்களிலுள்ள சுண்ணாம்புடன் வேதிவினைபுரிந்து அதனை கரைத்து,
சிதைத்து விடுகிறது.
• இதன் விளைவாக, டெர்ரா ரோஸா (செம்மண்), லேப்பீஸ் (கரடு முரடான பகுதி), உறிஞ்சித்துளை, மழைநீரால் கரைந்து உண்டான குடைவு, டோலின், யுவாலா, போல்ஜே, குகைகள் மற்றும் நிலத்தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.
• சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் உள்ள குகை மற்றும் அடி நிலக்குகைகளின் மேல் தளம், தரை மற்றும் பக்கச்சுவர்களில் படிவுகள் படிய வைக்கப்படுவதால் நிலத்தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.
எ.கா: கல்விழுது, கல்முளை மற்றும் செங்குத்துக் கல்தூண்
பனியாறு:
• பனிக்குவியல் மண்டல்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே பனியாறு எனப்படுகிறது.
பனியாறுகள் நகர்வுகள்:
• பெரும் பரப்பளவில் உள்ள பனிக்கட்டிகள் அதன் அடிப்பாகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வெப்பம் உருவாகி பனிக்கட்டியின் அடியில் உருகி மெல்ல நகரத் தொடங்குகிறது.
• இதன் நகர்வின் வேகம் ஒரு நாளில் சில சென்டிமீட்டர் முதல் பல நூறு மீட்டர் வரை வேறுபடும்.
• ஆறுகளைப் போன்றே பனியாறுகளும் அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் போன்ற செயல்களைச் செய்கின்றன.
பனியாறுகளின் வகைகள்:
• பனியாறுகள் அவை உற்பத்தியாகும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு கண்டப்பனியாறு மற்றும் பள்ளத்தாக்குப் பனியாறு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
• பனியாறுகள் ஒரு சிறந்த அரித்தல் காரணியாகும்.
• அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் சர்க்கு, அரெட்டு, மேட்டாஹார்ன், ‘ரு’ வடிவப் பள்ளத்தாக்கு, தொங்குப் பள்ளத்தாக்கு, பனியாறுகுடா போன்றவையாகும்.
பனியாறு படியவைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள்:
• பனியாறுகளால் அடித்துக் கொண்டு வரப்பட்ட நுண்ணியப்படிவுகள், பாறைத்துகள்கள், கூழாங்கற்கள் போன்ற கலவையால் ஆன படிவுகளே பனியாற்றுப் படிவுகள் எனப்படுகின்றன.
• இப்படிவுகள் தாழ்நிலப்பகுதிகளில் படியவைக்கப்படுவதால் மொரைன்கள், டிரம்ளின்கள், எஸ்கர்கள், கேம்ஸ் மற்றும் பனியாற்று வண்டல் சமவெளிகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
காற்று:
• பூமியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுவே காற்று எனப்படுகிறது.
• புவி மேற்பரப்பில் வறண்ட பிரதேசங்களில் காற்றின் செயல்பாடு அதிகமாகக் காணப்படும்.
• அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் காற்றின் முக்கியச் செயல்களாகும்.
• காற்றின் இச்செயல் ஏயோலியன் செயல்பாடு எனவும் அழைக்கப்படுகிறது.
காற்று அரித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள்:
• காளான் பாறை, இன்சல்பர்க் மற்றும் யார்டங்
காளான் பாறை:
• காற்றினால் அரிக்கப்பட்டு உருவான பாறைகள் காளான் பாறைகள் அல்லது பீடப்பாறைகள் எனப்படுகின்றன.
• இராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் காணப்படுகின்றன.
இன்சல்பர்க்:
• தீவுமலைஇ வறண்ட பிரதேசங்களில் காணப்படும் தீப்பாறைகள் (கடினப்பாறை) காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றமே இன்சல்பர்கக்குகள் ஆகும்.
• உ.தா: ஆஸ்திரேலியாவில் உள்ள உலுரு அல்லது எய்ர்ஸ் பாறை.
யார்டங்:
• வறண்ட பிரதேசங்களில் செங்குத்தாக அமைந்திருக்கும் சிலபாறைகள் கடின மற்றும் மென் பாறை என மாறி, மாறி அமைந்திருக்கும்.
• இந்த வரிசையில் மென் பாறைகள் காற்றினால் எளிதில் அரிக்கப்பட்டு விடும்.
• காற்றினால் அரிக்கப்படாத கடினப்பாறைகள் ஒழுங்கற்ற முகடுகள் போன்று காட்சியளிக்கும்.
• இவ்வகை நிலத்தோற்றங்களே யார்டங்குகள் எனப்படுகின்றன.
காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள்:
• புதர்கள், காடுகள் மற்றும் பாறைகள் காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்து அதன் வேகத்தை தடை செய்கிறது.
• இத்தடைகள் காற்றினால் கடத்தப்பட்ட படிவுகளை காற்று வீசும் பக்கத்திலும், அதன் மறுபக்கத்திலும் படியவைக்கிறது.
எ.கா: மணல் குன்று, பர்கான் மற்றும் காற்றடி வண்டல்.
மணல் மேடு:
• பாலைவனங்களில் வீசும் மணல்புயல் மிக மிக அதிக அளவில் மணலைக் கடத்துகின்றன.
• காற்றின் வேகம் குறையும் போது கடத்தப்பட்ட படிவுகள் மிக அதிக அளவில் குன்று போல் படிய வைக்கப்படுகின்றது.
• இவ்வாறு குன்று அல்லது மேடாகக் காணப்படும் நிலத்தோற்றம் மணல்மேடு எனப்படுகிறது.
மணல்மேட்டின் வகைகள்:
1. பர்கான்
2. குறுக்கு மணல்மேடு
3. நீண்ட மணல் மேடுகள்
காற்றடி வண்டல்:
• பரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான மற்றும் நுண்ணியப் படிவுகளே காற்றடி வண்டல் எனப்படும்.
• எ.கா: வடக்கு மற்றும் மேற்கு சீனா, அர்ஜென்டைனாவின் பாம்பாஸ், உக்ரைன் மற்றும் வட அமெரிக்காவில் மிசிசிபி பள்ளத்தாக்கு.
• சீனாவில் உள்ள காற்றடி வண்டல் பீடபூமிதான் மிக கனமான காற்றடி வண்டல் படிவாகும். உயரம் சுமார் 335 மீட்டர் ஆகும்.
அலைகள்:
• கடல் நீர் மேலெழும்பி சரிவதே கடலலை எனப்படுகிறது.
• அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் கடல் அலைகளின் முக்கியச் செயலாகும்.
• கடல் ஓங்கல், அலை அரிமேடை, கடல் குகை, கடல் வளைவு, கடல் தூண், கடற்கரை மணல் திட்டு மற்றும் நீண்ட மணல் திட்டு போன்றவை கடல் அலை அரித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஆகும்.
கடற்கரை:
• கடல் அலைகளால் அரிக்கப்பட்ட மணல் மற்றும் சரளைக்கற்கள் கடலோரத்தில் படியவைக்கப்படுவதே கடற்கரையாகும். எ.கா: சென்னை மெரினா கடற்கரை
முக்கிய நிலத்தோற்றங்கள்:
• முதல் நிலை நிலத்தோற்றம் கண்டங்களும், கடல்களும்.
• இரண்டாம் நிலை நிலத்தோற்றம்
– கண்டங்களிலும், கடல்களிலும் காணப்படும் மலைகள், பீடபூமிகள்,
சமவெளிகள்.
– குறு நிலத்தோற்றங்கள்
• மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள்
– டெல்டா, பனியாறு குடாக்கள், மணல்மேடுகள், கடற்கரை, பள்ளத்தாக்கு, சர்க்,
காளான் பாறை, சுண்ணாம்புப்பாறை, குகை போன்றவை.
• கடற்கரையில் மணற் படிவுகளால் ஆன நீண்ட நிலத்தோற்றமே மணல் திட்டு
எனப்படும்.
• இம்மணல் திட்டு பெரும்பாலும் கடற்கரைக்கு இணையாகக் காணப்படும.;
வானிலை மாற்றம் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்:
• நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
• கடல் மட்டத்திலிருந்து உயரம்
• கடலிலிருந்து தூரம்
• வீசும் காற்றின் தன்மை
• மலைகளின் இடையூறு
• மேக மூட்டம்இ கடல் நீரோட்டங்கள்இ இயற்கைத் தாவரங்கள்
• வீசும் காற்றின் எதிர் திசையிலுள்ள மலைப் பகுதியை, ‘காற்று மோதும் பக்கம்’ என்று அழைக்கின்றோம்.
• இங்கு அதிக மழைப்பொழிவு கிடைக்கின்றது.
• காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ள பகுதியை ‘காற்று மோதாபக்கம்’ என்று அழைக்கின்றோம்.
• இங்கு மிகவும் குறைவான மழை கிடைக்கிறது.
வானிலை மற்றும் காலநிலைக்கூறுகள்:
1. வெப்பநிலை 2. வளிமண்டல அழுத்தம் 3. காற்று 4. மேகம்
5. மழைப்பொழிவு 6. ஈரப்பதம்
ஒரு பொருளைச் சுடாக்கும் ஆற்றலே வெப்ப ஆற்றல் எனப்படுகிறது. அப்பொருள் எந்த அளவிற்கு சூடாகியுள்ளது என்பதை அளவிடுவதே ‘வெப்பநிலை’ ஆகும்.
தகவல் பேழை:
• சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பம் குறுகிய அலைகளாக புவியைவந்தடைகிறது. இதனை வெயிற்காய்வு அல்லது சூரியக்கதிர்வீச்சு என்கிறோம்.
• சூரியக்கதிர் வீச்சால் பெறப்பட்ட வெப்பம் பிரதிபலிக்கப்பட்டு நீண்ட அலைகளாக விண்வெளியைத் திரும்பச் சென்றடைகிறது. இவ்வாறு புவியிலிருந்து திரும்பச் செல்லும் கதிர்வீச்சினை ‘புவிக்கதிர்வீச்சு’ அல்லது ‘மறுகதிர்வீச்சு’ என்று அழைக்கப்படுகிறது.
• சூரியக்கதிர்வீச்சு புவியை வெப்பமடையச் செய்யாமல் உடனே திரும்ப பிரதிபலிக்கப்பட்டால் அதனை ‘அல்பிடோ’ என்றும் எதிரொளித்திறன் என்றும் அழைக்கப்படுகிறது.
• சூரியக்கதிர்வீச்சுக்கும் புவிக்கதிர்வீச்சுக்கும் இடையில் நிலவும் சமநிலைத்தன்மையை ‘புவியின்வெப்பத்திட்டம்’ என்று அழைக்கிறோம்.
சமவெப்பக்கோடு:
• சமவெப்பநிலை உள்ள இடங்களை இணைக்க வரைபடத்தில் வரையப்படும் கற்பனைக் கோடு சமவெப்பக்கோடு ஆகும்.
• வெப்பநிலை பருவத்திற்கு பருவம், இடத்திற்கு இடம், கண்டத்திற்கு கண்டம் வேறுபடும்.
• புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 13டிகிரி செல்சியஸ் ஆகும்.
• வெப்பக்கடத்தல் என்பது வெப்பம் மிகுதியான பொருளிலிருந்து வெப்பம் குறைவானப் பொருளுக்கு வெப்பம் கடத்தப்படுவது.
• வெப்பச்சலனம் என்பது காற்றுத் தொகுதியின் சுழற்சியின் காரணமாக வெப்பம் கடத்தப்படுவது.
• வெப்பக்கிடையசைவு என்பது காற்றின் கிடையான நகர்வினால் வெப்பம் கடத்தப்படுவது.
வெப்பமண்டலங்கள்:
• சூரியனிடமிருந்து கிடைக்கும் வெப்பத்தின் அளவைப் பொறுத்து புவி மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றது.
• வெப்பமண்டலம், மிதவெப்பமண்டலம், மற்றும் குளிர் மண்டலம்.
வெப்பமண்டலம்:
• புவியின் மேற்பரப்பில் 50 விழுக்காடு வெப்ப மண்டலப் பகுதிகளாக காணப்படுகிறது.
• இது 23 ½ டிகிரி வடக்கு அட்சத்திலிருந்து (கடகரேகை) 23 ½ டிகிரி தென் அட்சம் (மகர ரேகை) வரை பரவிக் காணப்படுகிறது.
• இம்மண்டலத்தில்தான் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன.
• ஆகையால் இப்பகுதி வருடம் முழுவதும் வெப்பமாகக் காணப்படுகிறது.
மிதவெப்பமண்டலங்கள்:
• வட அரைக்கோளத்தில் 23 ½ டிகிரி வட அட்சம் முதல் 66 ½ டிகிரி வட அட்சம் (ஆர்டிக் வட்டம்) வரை பரவியுள்ளது.
• தென் அரைக்கோளத்தில் 23 ½ டிகிரி தென் அட்சத்திலிருந்து 66 ½ டிகிரி தென் அட்சம் (அண்டார்க்டிக் வட்டம்) வரை பரவியுள்ளது.
• இங்கு சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுகின்றன.
உறைபனி மண்டலங்கள்:
• குளிர்மண்டலம் வட அரைக்கோளத்தில் 66 ½ டிகிரி வடக்கு அட்சத்திலிருந்து 90 டிகிரி (வடதுருவம்) வரை பரவியுள்ளது.
• தென்அரைக்கோளத்தில் 66 ½ டிகிரி தென் அட்சத்திலிருந்து 90 டிகிரி தென் அட்சம் (தென்துருவம்) வரை பரவியுள்ளது.
• இங்கு சூரியனின் கதிர்கள் மிகச் சாய்வாக விழுவதால் உலகின் மிக குளிர்ச்சியான மண்டலங்களாக விளங்குகின்றன.
• இம்மண்டலங்கள் நிரந்தரமாக பனி உறைந்தேக் காணப்படுகின்றன.
வளிமண்டல அழுத்தம்:
• குறிப்பிட்ட பரப்பளவில் வாயுக்களின் எடை ஏற்படுத்தும் தாக்கமே வளிமண்டல அழுத்தம் எனப்படும்.
• இது பாதரச காற்றழுத்தமானியினால் அளக்கப்படுகிறது. அலகு ‘மில்லிபார்’
• நில வரைபட்த்தில் சமகாற்றழுத்தம் கொண்ட இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடுகளே ‘சமஅழுத்தக் கோடுகள்’ என்று அழைக்கப்படுகிறது.
• உயரே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் குறைகிறது.
• வளிமண்டலத்தில் காணப்படும் காற்றழுத்தத்தின் கிடைமட்டப்பரவல் புவியின் மேற்பரப்பில் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக காணப்படுவதில்லை.
• இது நேரத்திற்குநேரம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.
• காரணிகள் காற்றின் வெப்பநிலை புவியின் சுழற்சி மற்றும் வளிமண்டல்தில் உள்ள நீராவியின் அளவு
அட்சங்களின் அடிப்படையில் அழுத்த மண்டலங்கள், உயர் அழுத்த மண்டலங்கள் மற்றும் தாழ்வழுத்த மண்டலங்கள் என இரு வகைப்படுத்தலாம்.
• நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
• துணை வெப்ப உயர் அழுதத மண்டலம்
• துணை துரவ தாழ்வழுத்த மண்டலம்
• துரவ உயர் அழுத்த மண்டலம்
• நிலநடுக்கோட்டிலிருந்து 5டிகிரி வட தென் அட்சங்களுக்கு இடையே காணப்படும் பகுதியே நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலமாகும்.
டால்ட்ரம்
• ஐவுஊணு என்பது துணை வெப்ப உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து குவியும் காற்றுப்பகுதியானது வெப்பமண்டல நிலநடுக்கோட்டுப்பகுதியிலிருந்து மேலெழும்பும் காற்றுகள் காணப்படும் பகுதியாகும்.
• டால்ட்ரம்ஸ் என்பது அமைதி, எதிர்பாராத காற்றுகள் மற்றும் திடீர் சூறாவளிகள் ஏற்படும் நிலநடுக்கோட்டுப் பகுதி ‘அமைதிமண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது.
• வெப்ப மண்டலத்திலிருந்து 35 டிகிரி வடக்கு மற்றும் தெற்கு அட்சம் வரை காணப்படும் மண்டலம் நிலநடுக்கோட்டுப் பகுதியின் அதிக வெப்பத்தின் காரணமாக மேலெழுகின்ற காற்றானது இங்கு கீழிறங்குகின்றது.
• எனவே, இம்மண்டலத்தில் உயர் அழுத்தம் உருவாகின்றது.
• இம்மண்டலம் ‘குதிரை அட்சங்கள்’ என்றும் அழைக்கப்படுகிறது.
• 45 டிகிரி வட அட்சம் முதல் 66 ½ டிகிரி ஆர்க்டிக் வட்டம் வரையிலும், 45 டிகிரி தென் அட்சம் முதல் 66 ½ டிகிரி அண்டார்டிக் வட்டம் வரையிலும் காணப்படும் மண்டலம் தாழ்வழுத்த துணை துருவமண்டலம் என அழைக்கப்படுகிறது.
• சூரியனின் கதிர்கள் மிகவும் சாய்வான கோணத்தில் விழுவதால் இங்கு வெப்பம் மிகக்குறைவாகக் காணப்படுகிறது.
காற்று:
• புவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுக்களே ‘காற்று’ எனப்படும்.
• வளிமண்டலத்தில் காற்று செங்குத்தாக அசையும் நிகழ்வே காற்றோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
• காற்று எப்பொழுதும் உயர் அழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வழுத்தப் பகுதியை நோக்கி வீசும்.
• காற்றின் வேகத்தை அளக்க காற்று வேகமானியும் காற்றின் திசையை அறிய காற்றுதிசை காட்டியும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
• காற்றினை அளக்க பயன்படுத்தும் அலகு கிலோ மீட்டர்ஃமணி அல்லது கடல்மைல் ஆகும்.
காற்று நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
1) கோள் காற்றுகள்
2) காலமுறைக் காற்றுகள்
3) மாறுதலுக்குட்பட்ட காற்றுகள்
4) தலக்காற்றுகள்
கோள்காற்றுகள்:
• வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுக் கோள்காற்று எனப்படும்.
• இவை ‘நிலவும்காற்று’ எனவும் அழைக்கப்படுகிறது.
• ‘வியாபாரக்காற்றுகள்’ ‘மேலைக்காற்றுகள்’ மற்றும் ‘துருவகீழைக்காற்றுகள்’ ‘கோள் காற்றுகள்’ இதன் வகைகளாகும்.
மாறுதலுக்குட்பட்டக் காற்றுகள்:
• உள்ளுர் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் இடையூறுகளினால், அப்பகுதியில் நிலவும் நிலையான காற்றில் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன.
• மாறுதலுக்குட்பட்ட காற்றுகள் மேலும் வலு பெறுவதால் சூறாவளிகளாகவும், எதிர் சூறாவளிகளாகவும், பெரும் புயல்களாகவும் உருவாகின்றன.
சூறாவளியின் வகைகள்:
1) வெப்பச்சூறாவளிகள்
2) மிதவெப்பச்சூறாவளிகள்
3) கூடுதல்வெப்பச்சூறாவளிகள்
சூப்பர் சைக்ளோன்:
• 1999ம் வருடம் அக்டோபர் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளை பெரும் சூறாவளி தாக்கியது.
மிதவெப்பச்சூறாவளிகள்:
• 35டிகிரி முதல் 65 டிகிரி வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிர்காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உருவாகின்றன.
• வளிமுகம் என்பது வெப்பக்காற்றுத் திரளையும், குளிர்காற்றுத் திரளையும் பிரிக்கும் எல்லையாகும். இக்காற்றுத் திரள்கள் ஒன்றுக்கு ஒன்று அடர்த்தியிலும், வெப்பத்திலும் ஈரப்பதத்திலும் வேறுபட்டுக் காணப்படும்.
• இவ்வாறு காற்று சந்திக்கும் பகுதிகளில் அக்காற்றின் தன்மையைப் பொறுத்து மழைப்பொழிவு, பனிப்பொழிவு, மிகவும் குளிர்ச்சியான, வெப்பமான நாட்கள் மற்றும் காற்று மிகுந்த நாட்கள் உருவாகும்.
எ.கா: ‘மேற்கத்திய இடையூறு காற்று’
கூடுதல் வெப்பச் சூறாவளிகள்:
• 30 டிகிரி முதல் 60 டிகிரி வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப்பகுதிகளில் வீசுகின்றன. இது ‘மைய அட்ச சூறாவளிகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
• சாரல்மழை, ஆலங்கட்டி மழைப்பொழிவு, இடியுடன் கூடிய மழை, பனிப்பொழிவு மற்றும் சுழல் காற்றுகளை அளிக்கிறது.
• இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்று பொ.ஆ. 2000 ஆண்டு ஆலோசனை கூட்டம் நடத்தின.
• பின்னர் 2004ஆம் ஆண்டு ஒவ்வொரு நாடும் சூறாவளிக்கு பெயர்ப்பட்டியலை கொடுத்தன.
• இதனடிப்படையில், ஒவ்வொருமுறை சூறாவளி உருவாகும் போதும் இப்பட்டியலில் உள்ள பெயர்களை வரிசையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டைத்தாக்கிய சூறாவளிகள்:
2010 – ஜல் – சென்னை
2011 – தானே – கடலூர்
2012 – நீலம் – மகாபலிபுரம் மற்றும் சென்னை
2013 – மாதி – சென்னை
2016 – ரேனு – நாகப்பட்டினம் மற்றும் சென்னை
2016 – கியாந்த் – சென்னை
2016 – நாடா – சென்னை
2016 – வர்தா – சென்னை
2017 – ஒகி – கன்னியாகுமரி 2018 – டிட்லி, கஜா.
நன்னீர்:
• நன்னீரின் பெரும் பகுதி உறைந்த நிலையில் பனிக்கவிகைகளாகவும், பனியாறுகளாகவும் காணப்படுகிறது.
• சுமார் 1 சதவீதம் அளவு நீரானது ஆறுகள், நீரோடைகள், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர்ம நிலையில் காணப்படுகிறது.
• நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல்மட்ட நிலையே நிலத்தடி நீர்மட்டம் என்கிறோம்.
• நீர், நீர்க்கொள்பாறைகளின் வழியாக ஊடுருவிச் சென்று, நீர் உட்புகாப் பாறையின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் நீரை நீர்க்கொள்படுகை என்கிறோம்.
பெருங்கடல்கள்:
• கண்டங்கள் மற்றும் கடல்கள் வட மற்றும் தென் அரைக்கோளங்களில் ஒரே சீராகப் பரவியிருக்கவில்லை.
• வட அரைக்கோளம் 61 சதவீதம் நிலப்பரப்பையும் தென் அரைகோளம் 81 சதவீதம் நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது.
• நிலம் மற்றும் நீர்ப்பரவலின் அடிப்படையில் வட அரைக்கோளம் நிலஅரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம், நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
பெருங்கடல்கள் ஆழமான பகுதி
பசிபிக் பெருங்கடல் மரியானா அகழியில் உள்ள சேலஞ்சர் பள்ளம்
அட்லாண்டிக் பெருங்கடல் பியூரிட்டோ ரிகோ அகழி
இந்தியப் பெருங்கடல் ஜாவா அகழியில் உள்ள சுண்டா பள்ளம்
தென் பெருங்கடல் தென் சான்ட்விச் அகழி
ஆர்டிக் பெருங்கடல் பிரேம் கொப்பரை
கடலடி நிலத்தோற்றங்கள்:
• கடலடிப்பகுதியானது உயர்ந்த மலைகள், ஆழமான அகழி மற்றும் மிகப்பரந்த தட்டையான சமவெளிகளைக் கொண்டுள்ளது.
• இந்நிலத்தோற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு, எரிமலை வெடிப்பு, ஆறுகளின் படிய வைத்தல் செயல்பாடுகளால் உருவாகின்றன.
• கண்டத்திட்டு
• கண்டச்சரிவு
• கண்ட உயர்ச்சி
• கடலடி சமவெளகள் அல்லது அபிசல்
• சமவெளி
• கடல் பள்ளம் அல்லது அகழிகள்
• கடலடி மலைத்தொடர்கள்
கண்டத்திட்டு
• நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் மூழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படுகிறது.
எ.கா: நியூபவுண்ட்லாந்தில் உள்ள ‘கிராண்ட் பாங்க்’
• உயரவிளக்கப்படம் என்பது நிலப்பகுதியிலோ அல்லது நீர்ப்பகுதியிலோ காணப்படும் நிலத்தோற்றங்களின் உயரத்தை வரைந்து காட்டும் கோட்டுப்படமாகும்.
• கடலடிப் பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுகிறது. சூரிய ஒளி மிகக் குறைந்த அளவே ஊடுருவிச் செல்வதால் வெப்பநிலை மிகக்குறைவாகவே உள்ளது.
கண்ட உயர்ச்சி:
• கண்டச் சரிவிற்கும் கடலடிச் சமவெளிக்கும் இடையில் காணப்படும் இந்நிலத்தோற்றமே கண்ட உயர்ச்சி ஆகும்.
ஆழ்கடல் சமவெளி:
• ஆழ்கடல் சமவெளி அல்லது அபிசெல் சமவெளி என்பது ஆழ்கடலில் காணப்படும்.
• அபிசல் குன்றுகள், கடல் குன்றுகள், கடல்மட்ட குன்றுகள், பவளப்பாறைகள் மற்றும் வட்டப்பவளத்திட்டுகள் ஆகியன இச்சமவெளியின் நிலத்தோற்றங்களாகும்.
கடலடிப் பள்ளம் / அகழிகள்
• பெருங்கடலின் மிக ஆழமானப் பகுதி அகழி ஆகும்.
• பெரும்பாலும் வலிமையான நில அதிர்வுகளின், நிலநடுக்க மேல்மையப்புள்ளி இங்குக் காணப்படுகின்றது.
• ‘பாத்தோம்கள்’ கடலின் ஆழத்தை அளவிடக் கூடிய ஓர் அலகு.
• ‘சம ஆழக்கோடு’ ஒரே அளவிலான ஆழம் கொண்ட இடங்களை வரைபடத்தில்; இணைக்கும் கற்பனைக் கோடு.
• ‘சம உவர்ப்புக்கோடு’ ஒரே அளவிலான உப்புத்தன்மை கொண்ட பகுதிகளை வரைபட்தில் இணைக்கும் கற்பனைக் கோடு.
கடலடி மலைத் தொடர்கள்:
• கடலடியில் காணப்படும் தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கடலடி மலைத் தொடர்கள் எனப்படுகின்றன.
எ.கா: மத்திய அட்லாண்டிக் மலைத் தொடர் , கிழக்கு பசிபிக் மலைத் தொடர்.
பெருங்கடல் நீரின் இயக்கங்கள்:
• கடல் நீரானது இயங்கிக் கொண்டே இருக்கிறது. வெப்பநிலை, உவர்ப்பியம், அடர்த்தி, சூரியன் மற்றும் நிலவின் ஈர்ப்பு சக்தி மற்றும் காற்று போன்றவை இவ்வியக்கங்கள் தொடர்ந்து கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் நடைபெறக் காரணமாக இருக்கின்றன.
அலைகள்:
• கடல் நீர் இயக்கங்களில் அலைகளே மிகவும் வலிமை வாய்ந்தவையாகும்.
• காற்று கடலின் மேற்பரப்பில் வீசும்போது சிற்றலைகளை உருவாக்குகின்றன.
• ஆழ்கடலில் ஏற்படும் நில அதிர்வுகளினாலும் அலைகள் உருவாகின்றன.
• இவ்வகை அலைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் ஆழிப்பேரலைகளாகும்.
• அலை நீர் வீழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது.
• இந்தியாவில் கேரளக் கடற்கரையில் உள்ள விழிஞ்சியம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அலையாற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஓதங்கள்:
சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல்நீர் உயர்ந்து தாழ்வது ஓதங்கள் எனப்படுகின்றன. இவை,
1. உயர் ஓதங்கள் 2. தாழ் ஓதங்கள்
உயர் ஓதங்கள்:
• புவி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்பொழுது, ஏற்படுகிறது. அமாவாசை மற்றும் முழு நிலவு தினங்களில் ஏற்படுகின்றன.
தாழ் ஓதங்கள்:
• புவி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்துக் கோணத்தில் வரும்போது இவற்றின் ஈர்ப்பு விசையானது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதினால் உயரம் குறைவான அலைகள் உருவாகின்றன.
• இரண்டு உயர் ஓதங்களுக்கு இடையே தாழ் ஓதங்கள் ஏற்படுகின்றன.
• மாதத்தில் இரண்டு முறை இவ்வோதங்கள் ஏற்படுகின்றன.
• இந்தியாவில் காம்பே வளைகுடா, கட்ச் வளைகுடா மற்றும் சுந்தரவன சதுப்பு நிலப் பகுதிகள் ஓதசக்தி உற்பத்தி செய்ய சாத்தியக் கூறுகள் நிறைந்த மண்டலங்களாக அறியப்பட்டுள்ளன.
கடல் நீரோட்டங்கள்:
• பெருங்கடல்களின் மேற்பரப்பிலும் அதன் அடி ஆழத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை நீரோட்டம் என்று அழைக்கின்றோம்.
• வட் அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் தென் அரைக்கோளத்தில் எதிர்க் கடிகார திசையிலும் நகருகின்றன.
கடல் நீரோட்டங்களை உருவாக்கும் காரணிகள்:
• புவியின் சுழற்சி
• வீசும் காற்று
கடல் நீரின் வெப்பம் மற்றும் உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாடு
• கடல் நீரோட்டங்கள் வெப்பத்தின் அடிப்படையில் வெப்ப நீரோட்டம் மற்றும் குளிர் நீரோட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
• தேசிய கடல் சார் நிறுவனம் 01.01.1996 இல் நிறுவப்பட்டது.
• இதன் தலைமையகம் கோவாவில் உள்ள ‘டோனா போலா’ ஆகும்.
கடல் வளங்கள்:
• கடல்நீர் மற்றும் கடலில் அடிப்பகுதியில் காணப்படக்கூடிய உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள் கடல்வளங்கள் ஆகும்.
கடல்வளம்:
• எண்ணெய் வளங்கள் பெருங்கடல்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.
• பெருங்கடல்கள் முக்கிய மீன்பிடித்தளமாகத் திகழ்வதுடன், மரபுசாரா எரிசக்தியை உற்பத்தி செய்யவும் சிறிய மற்றும் பெரிய துறைமுகங்களின் வர்த்தக மேம்பாட்டிற்கும் பெருமளவில் உதவுகின்றன.
• கங்கை வாழ் ஓங்கில் (டால்பின்), இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினமாக 1010-ல் அறிவிக்கப்பட்டது. இஃது ஓர் அழிந்து வரும் உயிரினமாகும்.
• உலகின் மிக நீளமான பவளப்பாறைத் திட்டு ‘தி கிரேட் பேரியர் ரீப்’ (ஆஸ்திரேலியா)
உயிர்க்கோளம்
• உயிர்க்கோளம் புவியின் நான்காவது கோளம். புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றது.
• பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிக்கோளத்தை உள்ளடக்கியது.
• தாவர இனங்களும் விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.
• கடல் மட்டத்திலிருந்து வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு வரை சுமார் 20 கி.மீ உயரம் வரை உயிர்க்கோளம் பரவியுள்ளது.
• உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலம் மற்றும் பல்லுயிர்த்தொகுதி அமைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலை மண்டலம்:
• சூழ்நிலை மண்டலம் என்பது பல்வேறு உயிரினங்களின் தொகுதி ஆகும்.
• இச்சூழ்நிலை மண்டல அமைப்பில் வாழ்கின்ற உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, பிற உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளான நிலம், மண், காற்று, நீர் போன்றவற்றோடு தொடர்பு கொள்கின்றன.
எ.கா: மரப்பட்டை – மிகச் சிறிய சூழ்நிலை மண்டலம்
• சூழ்நிலை மண்டலத்தைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு சூழலியல்
• சூழலியல் பற்றிப் படிப்பவர் சூழலியலாளர்
சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள்:
அ. உயிரற்ற கூறுகள்
ஆ. உயிருள்ள கூறுகள்
இ. ஆற்றல் கூறுகள்
அ. உயிரற்ற கூறுகள்:
• சுற்றுச் சூழலில் உள்ள உயிரற்ற, கரிம, இயற்பியல் மற்றும் இரசாயன காரணிகளை உள்ளடக்கியதாகும். எ.கா: காற்று, நீர், சுண்ணாம்பு, இரும்பு
ஆ. உயிருள்ள கூறுகள்:
• தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியதாகும்.
உற்பத்தியாளர்கள்:
• தற்சார்பு ஊட்டஉயிரி. எ.கா: தாவரங்கள், பாசி, பாக்டீரியா
நுகர்வோர்கள்:
• பிறச்சார்பு ஊட்டஉயிரி
சிதைப்போர்கள்:
• தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாதவை.
• இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்கூடியவை. அவை சாறுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
உ.தா: பூஞ்சைகள், காளான்கள்.
இ. ஆற்றல் கூறுகள்:
• உயிர்க்கோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும், ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
• உயிர்க்கோளம் முழுமைக்கும் சூரியனே ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது.
சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள்:
• சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள் ஆற்றல் ஓட்டத்தின் அமைப்பைச் சார்ந்துள்ளன.
• ஆற்றல் ஓட்டம் சூழ்நிலை மண்டலத்திலுள்ள கரிமமற்ற மற்றும் கரிமப் பொருட்களின் பரவலுக்கும், சூழற்சிக்கும் உதவி செய்கிறது.
• உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாகத் தொடர்ச்சியாக நடைபெறுவதே உணவுச் சங்கிலி.
• உணவுச் சங்கிலிகள் ஒன்றினையொன்று பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை எனப்படுகிறது.
உயிரினப்பன்மை:
• ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பதாகும். (தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற நுண்ணுயிரிகள்)
• காலநிலை, நிலத்தோற்றம் மற்றும் மனிதச் செயல்பாடுகளின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன.
உயிரினப்பன்மையின் இழப்பு:
• மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு உயிரினப்பன்மையின் இழப்பு.
• காடுகளை அழித்தல், மக்கள் தொகைப் பெருக்கம், மாசுபடுதல் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் ஏற்படும் வாழ்விட அழிவே உயிரினப்பன்மை இழப்பிற்கு காரணமாக உள்ளது.
• ஒரு சூழலியல் பிரதேசத்தில் 70 சதவீதத்திற்கும் மேலாக ஓரினம் சுயமான வாழ்விடத்தை இழந்துவிடுமேயானால் அவ்விடம் (கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய) வளமையங்களாகக் கருதப்படுகிறது.
• இந்தியாவின் இமயமலைகள், மேற்கு தொடர்ச்சி மலைகள், இந்தோ பர்மா பிரதேசம், சுந்தா நிலப்பகுதி போன்றவை வளமையங்களாகும்.
பல்லுயிர்த் தொகுதிகள்:
• புவியின் சூழல் மண்டலத்தில் பல்வேறு வகையான தாவரங்களும், விலங்கினங்களும் இணைந்து வாழும் மிகப் பரந்த சூழ்நிலையியல் அமைப்பாகும்.
• பல்லுயிர்த் தொகுதியை நிலத்தோற்றம், காலநிலை மற்றும் தாவரங்கள் போன்ற காரணிகள் தீர்மானிக்கின்றன.
• நிலவாழ் பல்லுயிர்த் தொகுதி மற்றும் நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி ஆகியனவாகும்.
புற்றுநோயைக் குணப்படுத்தப்பயன்படுத்தப்புடும் தாவரம் லப்பாசோ.
• பாலைவனச் சோலை என்பது பாலைவனங்கள் மற்றும் அரை வறண்டப் பாலைவனப் பிரதேசங்களில் காணப்படும் வளமான நன்னீர்ப் பகுதியாகும்.
• பாலைவனச் சோலைகள் நீரூற்றிலிருந்து நீரைப் பெறுகின்றன.
• பேரீச்சை, அத்தி, சிட்ரஸ் பழங்கள் மக்காச்சோளம் போன்றவை பாலைவனச் சோலைப் பகுதியில் விளைவிக்கப்படுகின்றன.
பாதுகாத்தல்:
• பல்லுயிர்த் தொகுதி ஆழ்கடல் அகழி முதல் பசுமைமாறாக் காடுகள் வரை பரவிக்காணப்படுகிறது.
• உயிர்க்கோள காப்பகங்கள் ஒரு சிறப்பு சுற்றுச்சூழ்நிலை மண்டலம் அல்லது தாவரங்கள் மற்றும் விலங்குகளை உள்ளடக்கிய தனித்துவமான பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.
• இந்தியாவில் பதினெட்டு முக்கியமான உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
வளங்கள்
• காலம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் பொருட்களை வளங்களாக மாற்றுகிறது, மேலும் வளங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. இயற்கை வளம்:
இயற்கையாக கிடைக்கும் வளங்கள். இதை எந்தவித மாறுபாடுகளுக்கும் உட்படுத்தாமல் பயன்படுத்தலாம்.
மேலும் இயற்கை வளங்களை புதுப்பிக்கத் தக்க வளங்கள் (சூரிய ஒளிஇ காற்று)இ புதுப்பிக்க இயலாத வளங்கள் (நிலக்கரிஇ பெட்ரோலியம்) என இரு வகைப்படுத்தலாம்.
2. மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள்:
தொழில்நுட்பம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வளம் ஆகும். இரும்பு போன்ற இயற்கை வளங்களை நேரடியாகப் பயன்படுத்த இயலாது.
மனித தொழில் நுட்பத்தின் மூலம் அவற்றை கருவிகளாகவோஇ கட்டுமானம், வாகனங்கள் போன்ற பிற பயன்பாடுகளுக்காக மாற்றிக் கொள்ள இயலும்.
3. மனித வளம்:
• மனித வளம் என்பது மனிதர்களின் எண்ணிக்கையையும் அவர் தம் ஆற்றலையும் பற்றி குறிக்கிறது.
இந்தியாவின் எல்லைகள்:
இந்தியா ஒரு பரந்து விரிந்த நாடு. புவியின் வட அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு ஆகும்.
இந்தியாவின் மொத்த பரப்பளவு – 32,87,263 ச.கி.மீ அதாவது உலகின் மொத்த பரப்பில் 2.4 சதவீதம். (உலகில் 7 வது மிகப்பெரிய நாடு) இந்திய நிலப்பரப்பின் மொத்த சுற்றளவு 15இ200 மஅஇ கடல்பரப்பின் சுற்றளவு 7,516 கி.மீ
அட்சரேகை – 8ᴼ 4’ வடக்கு முதல் 37ᴼ 6’ வடக்கு வரை
தீர்க்கரேகை – 68ᴼ 7’ கிழக்கு முதல் 97ᴼ 25’ கிழக்கு வரை
வடக்கு தெற்கு தூரம் – 3214 கி.மீ – கிழக்கு மேற்கு தூரம் – 2933 கி.மீ
பரப்பளவில் பெரிய,சிறிய மாநிலங்கள் முறையே – ராஜஸ்தான், கோவா
அதிக மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலம் – உத்திரப்பிரதேசம்.
இந்தியாவின் எல்லைகளாக
வடக்கில் – சீனா,நேபாளம்,பூடான்.
கிழக்கில் – பர்மா,வங்கதேசம்.
வடமேற்கில் – ஆப்காணிஸ்தான்,பாகிஸ்தான் உள்ளன.
இந்தியா பாகிஸ்தான் இடையேயுள்ள எல்லைக்கோடு – ரேட்கிளிப் எல்லைக்கோடு
இந்தியா சீனா – மக்மோகன் எல்லைக்கோடு
இந்தியா ஆப்கானிஸ்தான் – டூரண்ட் எல்லைக்கோடு
இந்தியாவின் தென் கோடி முனை இந்திரா முனை அல்லது பிக்மால்யன் முனை என அழைக்கப்படுகிறது.
வங்காளவிரிகுடாவில் கிரேட் நிக்கோபர் தீவில் அமைந்துள்ளது. மேலும் 2004ல் ஏற்பட்ட சுனாமியில் இப்பகுதி கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டது.
இந்தியாவின் இயற்கைப்பிரிவுகள்
• இந்தியாவின் இயற்கை அமைப்பு பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.அவை முறையே
1. இமய மலைத்தொடர் 2. வட இந்தியச் சமவெளி
3. தீபகற்ப பீடபூமி 4. இந்தியப் பாலைவனம்
5. கடற்கரைச் சமவெளி 6. தீவுகள்.
1. இமய மலைத்தொடர்:
• மேற்கே காஷ்மிர் முதல் கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை பரவியுள்ளது.
• இது இளம் மடிப்புமலை வகையைச் சார்ந்தது.
• 2,400 கி.மீ நீளமுள்ளது.
• படிவுப்பாறைகளால் ஆன மடிப்பு மலையாகும்.
• இமயமலை, காஷ்மீரில் வடமேற்கு-தென் கிழக்கு திசையிலும், மத்தியப் பகுதியில் மேற்கு-கிழக்காகவும், அருணாச்சலபிரதேசத்தில் தென்மேற்கு-வட கிழக்கு திசையிலும், மணிப்பூர், நாகலாந்து பகுதியில் வடக்கு-தெற்காகவும் அமைந்துள்ளது.
முக்கிய மலைத்தொடர்கள்
1. காரகோரம்
2. லடாக்
3. இமாத்திரி – ஜஸ்கர் மலைத்தொடர்
4 .பீர்பாஞ்சல் – மத்திய இமயமலைத்தொடர்
5. சிவாலிக் – உப்பு மலைத்தொடர்
முக்கிய கனவாய்கள்
கைபா, போலன் – சுலைமான் மலைத்தொடர் ( பாகிஸ்தான்)
சிப்கிலா – ஹிமாச்சலபிரதேசம்
நிடி, லிப்பு – உத்தரகாண்ட்
நாதுலா,ஜெலப்லா – சிக்கிம்
போம்டிலா – அருணாச்சலப்பிரதேசம்
2. வட இந்தியச் சமவெளி
சிந்து,கங்கை மற்றும் பிரம்மபுத்திரா சமவெளிகள் வட இந்திய சமவெளி என அழைக்கப்படுகின்றது.கங்கை டெல்டா உலகின் மிகப்பெரிய முக்கோண வடிவ டெல்டா மற்றும் மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட பகுதி ஆகும்.
வட இந்திய சமவெளியையும் தக்காணபீடபூமியையும் பிரிப்பது ஆரவல்லி மலைத்தொடர்.
3. தீபகற்ப பீடபூமி
• இப்பீடபூமி தீப்பாறை மற்றும் உருமாறிய பாறைகளால் ஆனது.
• மேலும் மிகப்பழமையான பீடபூமி வகையைச் சார்ந்தது.
• இது இரண்டு பதுதிகளைக் கொண்டது, மத்திய உயர்நிலங்கள் மற்றும் தக்கானப்பீடபூமி.
• வடமேற்கில் ஆரவல்லி மலைத்தொடர் அமைந்துள்ளது.
• இப்பீடபூமி மேற்கில் அகன்றும், கிழக்கில் குறுகியும் காணப்படுகிறது.
• தக்காண பீடபூமிக்கு வடக்கில் சாத்புரா மலைத்தொடர், கிழக்கில் கிழக்கு குன்றுகள், மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் எல்லைகளாக அமைந்துள்ளது.
• இது மேற்கிலிருந்து கிழக்காகச் சரிந்துள்ளது.
• தக்காணபீடபூமியின் தொடர்ச்சியே வடகிழக்கு பீடபூமி ஆகும்.
• இவ்விரு பீடபூமிகளையும் மால்டா பிளவு (வங்காளம்) பிரிக்கிறது.
4. இந்தியப் பாலைவனம்
• ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்காக அமைந்துள்ளது. மணற்குன்றுகள் நிறைந்த மணற்பாலைவனம் ஆகும்.
• இங்கு ஆண்டிற்கு 15 செ.மீக்கும் குறைவாக மழை பொழிகிறது.
• இப்பகுதியில் காணப்படும் மிகப்பெரிய நதி லூனி ஆகும்.
• பிறை வடிவிலான மணற்குண்டு பார்ச்சன்ஸ் என அழைக்கப்படுகிறது.
• சாம்பார் உப்புநீர் ஏரி இங்கு காணப்படுகிறது.
5. கடற்கரைச் சமவெளி:
இந்தியா மூன்று கடல்களால் சூழப்பட்டுள்ளது.
மேற்கே அரபிக்கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கே இந்திய பெருங்கடலும் அமைந்துள்ளன.
இதில் மேற்குக் கடற்கரைச் சமவெளி மேற்குத் தொடர்ச்சி மலைக்கும், அரபிக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளது.
இது மிகவும் குறுகலான கடற்கரைச் சமவெளி ஆகும்.
கிழக்குக் கடற்கரைச் சமவெளி அகன்ற கடற்கரைச் சமவெளி ஆகும்.
இக்கடற்கரைச் சமவெளியில் சிலிக்கா (ஒடிசா), கொல்லேறு (ஆந்திரபிரதேசம்) போன்ற ஏரிகள் அமைந்துள்ளன.
மேற்கு கடற்கரை சமவெளி – மலபார் மற்றும் கொங்கனக்கடற்கரை என இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. தென்பகுதி குறுகியும் வடபகுதி அகன்றும் உள்ளது.
கிழக்கு கடற்கரை சமவெளி – சோழமண்டலம் (தென்) மற்றும் வடசர்க்கர் (வட) என இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
6. தீவுகள்
இந்தியாவில் லட்சத்தீவுகள் (மினிகாய், அமின்திவி மற்றும் லக்கடீவ்) மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் அமைந்துள்ளன.
லட்சத்தீவுகள் அரபிக்கடலில் அமைந்துள்ளது.
இது பவளப்பாறைகளால் ஆனது.
இதன் தலைநகரம் கவரட்டி.
அந்தமான் நிக்கோபர் தீவுகள் வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது.
இதன் தலைநகரம் போர்ட் பிளேயர். இவ்விரண்டும் யூனியன் பிரதேசங்கள் ஆகும்.
மேற்கு தொடர்ச்சி மலை
மேற்கு தொடர்ச்சி மலைகள் – மகாராஷ்ட்ரா முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை, ஷியாத்ரி மலை எனவும் அழைக்கப்படுகிறது. இது எக்கலாஜிக்கல் ஹாட் ஸ்பாட் என அழைக்கப்படுகிறது.
வடக்கிலிருந்து தெற்;காக இதன் உயரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம் – ஆனைமுடி
தமிழகத்தின் உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா
சில முக்கிய தகவல்கள்
இந்தியா மக்கள் தொகையில் 2 வது பெரிய நாடு.
பெரிய கடற்கரையைக் கொண்ட மாநிலங்கள் – குஜராத்,ஆந்திரபிரதேசம்,தமிழ்நாடு
இரதஜஸ்தான் குஜராத் மத்தியபிரதேசம் சட்டீஸ்கர் ஜார்கண்ட் மேற்குவங்கம் திரிபுரா மிசோரம் ஆகிய 8 மாநிலங்கள் வழியே கடகரேகை செல்கிறது.
இந்தியாவையும்(மன்னர் வளைகுடா) இலங்கையையும் (வங்காள விரிகுடா) பாக்சலசந்தி பிரிக்கிறது.
ஆதாம் பாலம் தலைமன்னார் மற்றும் தனு~;கோடியை இணைக்கிறது.
அருணாச்சலபிரதேச மாநிலம் – இந்தியாவில் சூரியன் உதிக்கும் முதல் மாநிலம் ஆகும்.
ம2 – இந்தியாவின் உயரமான சிகரம் (காரகோரம் மலைத்தொடரில் உள்ளது)
எவரெஸ்ட் – உலகின் மிகப்பெரியஇ உயரமான சிகரம் (ஹிமாத்திரி மலைத்தொடர் – நேபாளம்)
ஆறுகள்
சிறு நீரோட்டங்கள் ஒன்றாக இணைந்து ஆறுகளை உருவாக்குகிறன.
ஆறுகள் உற்பத்தியாகும் இடங்களில் மிக வேகமாகவும்,கடற்கரையை அடையும் போது மெதுவாகவும் பாய்கின்றன.
மேலும் நீர்வீழ்ச்சி,கார்ஜ்கள்,குதிரைக்குழம்பு ஏரிகள்,வண்டல்மண் சமவெளி,டெல்டா போன்ற இயற்கைத் தோற்றங்களை உருவாக்குகிறது.
இந்திய ஆறுகள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
1. இமயமலை ஆறுகள்
– இமயமலை ஆறுகள் அனைத்தும் வற்றாத நதிகளாகும்.
சிந்து – திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா பாகிஸ்தான் வழியாக பயனித்து அரபிகடலில் கலக்கிறது.
ஜீலம்,சேனாப்,ராவி,சட்லஜ்,பீஸ் – நதிகள் சிந்து நதியின் துணை நதிகள் ஆகும்.இவ் ஐந்து நதிகள் பாயும் நிலப்பரப்பு பஞ்சாப் என அழைக்கப்படுகிறது.
பாகிரதி,ஆலக்நந்தா (கங்கோத்திரி பனியாறு) என்ற இரு நதிகள் தேவப்பிரயாக் எனும் இடத்தில் ஒன்றாக இணைந்து கங்கை நதியை உருவாக்குகிறது.
கங்கை நதி ஹரித்துவார் எனும் இடத்தில் சமவெளியை அடைகிறது.
2500 கி.மீ பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது.
இப்பகுதியில் காணப்படும் காடுகள் சுந்தரவனக்காடுகள் ஆகும்.
இங்கு இந்தியாவின் தேசிய விலங்கான வங்கப்புலி அதிகளவில் காணப்படுகிறது.
கோசி – பீகாரின் துயரம் என அழைக்கப்படுகிறது.
2. தீபகற்ப ஆறுகள்
நர்மதை,தபதி – விந்திய – சாத்புரா மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கிறது.
மகாநதி – உலகின் மிகப்பெரிய அணை இவ்வாற்றின் மீது அமைந்துள்ளது.
கோதாவரி – தென்இந்தியாவின் மிகநீளமான நதி ஆகும். தக்சின கங்கா என அழைக்கப்படுகிறது.
கிருஷ்ணா
காவிரி – குடகுமலையில் (கர்நாடகா) உற்பத்தியாகிறது.
மேற்கு நோக்கி பாயும் நதிகள்
நர்மதைஇ தபதிஇ சபர்மதிஇ அமராவதிஇ லூனி,பம்பை,பெரியாறு
நர்மதை,தபதி – அரபிக்கடலில் கலக்கும் மிகப்பெரிய ஆறுகள்
கிழக்கு நோக்கி பாயும் நதிகள்
மகாநதிஇ கோதாவரிஇ கிருஷ்ணாஇ பாலாறுஇ வைகைஇ தாமிரபரணிஇ துங்கபத்ராஇ காவேரிஇ வடபெண்ணைஇ தென்பெண்ணை காவிரியாற்றின் துணை நதிகள்.
பவானிஇ நொய்யல், அமராவதிஇ மணிமுத்தாறு
காவிரி – திருச்சியில் கொள்ளிடம் மற்றும் காவிரி என இரண்டாக பிரிகிறது. கல்லனை கரிகாற்சோழனால் கட்டப்பட்டது.
காவிரியாறு – பூம்புகாரில் வங்கக்கடலுடன் கலக்கிறது. காவிரியாற்றில்; அமைந்துள்ள நதித்தீவு – திருவரங்கம்
பல்நோக்கு திட்டங்கள்
பகராநங்கள் அணை – பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான். (உலகின் மிக உயரமான அணை ஆகும்)
தாமோதர் நதி பள்ளத்தாக்கு – மேற்குவங்கம் மற்றும் பீகார்
கோவிந்த் வல்லபந்த் சாகர் நதி – மனிதனால் கட்டப்பட்ட செயற்கை ஏரி ஆகும்
சம்பல் நதி – ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசம்
காங்க்டாக் நதி – பீகார், உத்திரபிரதேசம்
கோசி நதி – பீகார்
நாகர்சுனா நதி – ஆந்திரபிரதேசம்
துங்கபத்ரா நதி – ஆந்திரபிரதேசம்இ கர்நாடகா
பீஸ் நதி திட்டம் – பஞ்சாபஇ; ஹரியானாஇ ராஜஸ்தான்இ இமாச்சலபிரதேசம்
கொய்னா நதி – மகாரா~;டிரம் (நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட திட்டம்)
பாரக் நதி திட்டம் – வங்காளத்தில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டது.
இந்திய மண்வகைகள்
வண்டல்மண் – ஆறுகளினால் படியவைக்கப்படுகிறது.
பழையவண்டல் பாங்கர் எனவும், புதியவண்டல் காதர் எனவும் அழைக்கப்படுகிறது.
கோதுமை நெல் கரும்பு போன்ற பயிர்கள் விளைகிறது.சிந்து கங்கை பிரம்மபுத்திரா சமவெளிகளில் இவ்வகை மண் காணப்படுகிறது.
கரிசல்மண் – கருப்புமண்,ரிகர்மண்,செரனோசெம் என அழைக்கப்படுகிறது.
பருத்தி,புகையிழை,எண்ணெய் வித்துக்கள் விளைய ஏற்றமண்.
மகாராஷ்ட்ரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
செம்மண் – பழைய படிவுப்பாறைகள் சிதைவடைவதால் உண்டாகிறது.
கேரளாஇ தமிழ்நாடுஇ ஆந்திரபிரதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.
சரளை மண் – அயன மண்டல பிரதேசங்களில் காணப்படுகிறது.
தென்னை சவுக்கு விளைய ஏற்றமண்.
மலைமண் – மலைப்பிரதேசங்களில் காணப்படுகிறது.
தேயிலைஇ காஃபிஇ ரப்பர் விளைய ஏற்றமண்
பாலைமண் – இராஜஸ்தான், தெற்கு பஞ்சாப் பகுதிகளில் உள்ள பாலைவனப்பகுதியில் காணப்படுகிறது.
மண் அரிப்பைத் தடுக்கும் முறைகள்
வெள்ளப்பெருக்கைத் தடுத்தல்
காடுகளை வளர்த்தல்
பாதுகாப்பு மரங்களை வளர்த்தல்
மேலும் கீழுமாக சரிவாக நிலத்தை உழுவதற்கு பதிலாக, குறுக்கே உழுதல்
அறுபட்ட ஓடைகளை மூடுதல்
மேய்ச்சல் நிலங்களை ஒழுங்குபடுத்துதல்
மட்டப்பரப்பு அமைத்தும் மற்றும் அடுக்கு நிலச்சாகுபடி செய்வதன் மூலமும் மண் அரிப்பைத் தடுக்கலாம்.
விவசாயத்திற்கான இயற்கை காரணிகள் – காலநிலை, மண், இடத்தின் தன்மை
விவசாயத்திற்கான பொருளாதார காரணிகள் – மூலதனம், உழைப்பு, போக்குவரத்து,
சந்தை
பருவப்பயிர்கள்
கோடை காலப்பயிர் (அ) நஞ்சை சாகுபடி (காரிஃப்) – தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் விளைவிக்கப்படுகிறது. நெல்இ கம்புஇ பருத்தி போன்றன விளைவிக்கப்படுகிறது,
குளிர் காலப்பயிர் (அ) புஞ்சை (ராபி) – அக்டோபர் முதல் டிசம்பர் வரை கோதுமை பார்லி போன்றன விளைவிக்கப்படுகிறது,
ஜயித் (நீர்பாசனப்பயிர்) – காய்கறிகள்இ வெள்ளரிஇ தர்பூசணி போன்றவை.
முதல் பருத்திஆலை – கொல்கத்தா (1818)
முதல் காகித தொழிற்சாலை – மேற்குவங்கம் (செராம்பூர் – 1832)
முதல் சணல் தொழிற்சாலை – மேற்குவங்கம் (ரிஸரா – 1855)
முதல் சர்கரைத் தொழிற்சாலை – பிகாh
காடுகள்
இந்திய காடுகள் கொள்கையின்படி 33.3 சதவீதம் காடுகள் இருக்கவேண்டும்.தற்போது 24 சதவீதம் காடுகள் உள்ளது.
காடுகள் அதிகம் உள்ள மாநிலம் – மத்தியபிரதேசம்
காடுகள் குறைவாக உள்ள மாநிலம் – ஹரியானா
லட்சத்;தீவுகளில் காடுகள் இல்லை.
தேசிய காடுகள் கொள்கை கொண்டுவரப்பெற்ற ஆண்டு – 1988
பொட்டாநிக்கல் சர்வே ஆஃப் இந்தியா உள்ள இடம் – கொல்கத்தா (1890)
ஜூவாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா உள்ள இடம் – கொல்கத்தா (1916)
ஜியாலஜிக்கள் சர்வே ஆஃப் இந்தியா – கொல்கத்தா
பாரஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா உள்ள இடம் – டேராடூன் (1981)
பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டியூட் – டேராடூன்
சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் – கேயமுத்தூர்
காடுகளின் வகைகள்
1. வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்:
200 செ.மீ க்கு மேல் மழைபொழியும் பகுதிகளில் இவ்வகைக்காடுகள் காணப்படுகின்றன.
எபோனி,மககோனி,ரோஸ்வுட்,ரப்பர்,சின்கோனா போன்ற மரவகைகள் இங்கு காணப்படுகிறது.
2. வெப்பமண்டல இலையுதிர் காடுகள்:
இவ்வகைக் காடுகள் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.
70 – 200 செ.மீ மழைபொழியும் பகுதிகளில் இவ்வகைக்காடுகள் காணப்படுகின்றன.
தேக்;கு,சால்,அரசு,வேம்பு போன்ற மரவகைகள் இங்கு காணப்படுகிறது.
3. முள்புதர் காடுகள்:
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இவ்வகைக்காடுகள் காணப்படுகின்றன.
70 செ.மீ க்கும் குறைவான மழைபொழியும் பகுதிகளில் இவ்வகைக்காடுகள் காணப்படுகின்றன.
அக்கேசியா,பனை போன்ற மரவகைகள் இங்கு காணப்படுகிறது.
4.மலைக்காடுகள்:
மலைப்பாங்கான பகுதிகளில் காணப்படுகிறது.
இமயமலையின் தெற்கு பகுதி,வடகிழக்கு மாநிலங்கள், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
சில்வர்பிர், ஜுனிப்பர், பைன், பிர்ச்சஸ் போன்ற மரவகைகள் இங்கு காணப்படுகிறது.
5.மாங்ரூவ்காடுகள்:
கங்கை,மகாநதி,கோதாவரி,கிரு~;ணா,காவேரி,பிரம்மபுத்திரா நதிகளின் கழிமுகப்பகுதிகளில் காணப்படுகின்றன.
மாங்குரோவ் காடுகள் பல்வேறு உயிரினங்களின் வாழிவிடமாகவும், சுனாமி,புயல் போன்ற பேரிடர்களிலிருந்து மனிதர்களை பாதுகாக்கும் அரணாகவும் அமைந்துள்ளது.
பல்லுயிர்க்கோளம்
1. நீலகிரி – இந்தியாவின் முதல் பயோஸ்பியர் ரிசர்வ்
2. நந்ததேவி – உத்ரகாண்ட்
3. நாக்ரெக் – மேகாலயா
4. கிரேட் நிக்கோபர் – அந்தமான் நிக்கோபர்
5. மன்னர் வளைகுடா – தமிழ்நாடு
6. மானாஸ் – அஸ்ஸாம்
7. சுந்தரவனம் – மேற்குவங்கம்
8. சிம்லிபால் – ஒரிஸா
9. திப்ரு – அஸ்ஸாம்
10. திகாங் – திபாங் – அருணாச்சலபிரதேசம்
11. பஞ்ச்மாரி – மத்தியபிரதேசம்
12. அகஸ்திய மலை – தமிழ்நாடு
13. சிலிக்கா ஏரி – ஒரிஸா
சில முக்கிய தகவல்கள்
பால் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
இந்திய வெண்மைப்புரட்சியின் தந்தை – வர்கீஸ் குரியன் (கேரளா). முதல் வெண்மைப்புரட்சி நடைபெற்ற ஆண்டு -1970-81
பசுமை புரட்சி தந்தை எம்.எஸ் சுவாமிநாதன் (1967-68)
பிரவுன் புரட்சி – கோதுமை உற்பத்தி
நீலப்புரட்சி – மீன் உற்பத்தி
கருப்புத்தங்கம் – நிலக்கரி. முதல் நிலக்கரி சுரங்கம் – ராணிகஞ்ச் (ஜார்கண்ட்)
முதல் கப்பல் கட்டும் தளம் – விசாகப்பட்டினம் – ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் (இந்தியாவில் மிகப்பெரியது)
முதல் இரும்பு எஃகு தொழிற்சாலை – கொல்கத்தா(1874)
டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை – ஜாம்செட்பூர் (1907)
ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலை – ஒரிஸா. ஜெர்மனி அரசின் உதவியுடன் நிறுவப்பட்டது,
விஸ்வேஸ்வரய்யா இரும்பு எஃகு தொழிற்சாலை – 1923 கர்நாடகா
பிலாய் இரும்பு எஃகு தொழிற்சாலை – சட்டீஸ்கர் – ர~;ய அரசின் உதவியுடன் நிறுவப்பட்டது,
துர்காப்பூர் – மேற்குவங்கம் – இங்கிலாந்து நாட்டின் உதவியுடன் நிறுவப்பட்டது,
பொகாரோ – பீகார் – ர~;ய அரசின் உதவியுடன் நிறுவப்பட்டது,
எலக்ட்ரானிக் சிட்டி – பெங்களுரு
நீளமான சாலைகள் கொண்ட மாநிலங்களில் மகாரா~;ட்ரா முதலிடம் தமிழ்நாடு 2ம் இடம்.
தேசிய நெடுஞ்சாலைகள்
• இந்தியாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
• இந்தியாவில் மொத்தம் 2280தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.
• 28, ஏப்ரல் 2010 முதல் தேசிய நெடுஞ்சாலைகளின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன.
• இதில் வடக்கு தெற்காக அமைந்த நெடுஞ்சாலைகளுக்கு இரைட்டைப்படை எண்களும் (எ.கா Nர்.2), கிழக்கு மேற்காக அமைந்த சாலைகளுக்கு ஒற்றைப்படை எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
• முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளது.
• முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளின் கிளை சாலைகளுக்கு மூன்று இலக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
தலக்காற்றுகள்:
• ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று தலக்காற்று எனப்படும்.
• இவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் வீசுகின்றன.
பொழிவு:
சுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வே பொழிவு எனப்படுகிறது.
பொழிவினை நிர்ணயிக்கும் காரணிகள்:
1. வெப்பநிலை 2. உயரம்
3. மேகத்தின் வகை 4. வளிமண்டல நிலைபாடுகள்
5. பொழிவு செயல்முறை
சாரல்:
• 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும்பொழுது அதனை சாரல் என்றழைக்கிறோம்.
மழை:
• உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழைப் பொழிகிறது. புவியின் மிக அதிகமான இடங்களில் மழிப்பொழிவு கிடைக்கிறது.
ஆலங்கட்டி மழை:
• முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டையுடன் கூடிய மழைப்பொழிவே ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.
பனி:
உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது. பனிப்;படிகங்கள் ஒன்றோடொன்று மோதிப் பனிச்சீவல்களாக உருப்பெருகின்றன.
கல்மாரி மழை:
இடியுடன் கூடிய புயல் மற்றும் மழையுடன் கூடிய புயலின்போது 2 செ. மீட்டருக்கு மேல் விட்டம் உள்ள பனிக்கட்டிகளே கல்மாரி மழை என்று அழைக்கப்படுகிறது.
மழைப்பொழிவு:
பொழிவின் மிக முக்கிய வகை மழைப் பொழிவாகும்.
1. வெப்பச் சலன மழைப்பொழிவு
2. சூறாவளி மழைப்பொழிவு
3. மலைத்தடுப்பு மழைப் பொழிவு
ஆகியன மழைப்பொழிவின் பல்வேறு வகைகள்.
• இந்தியாவில் அதிக மழையைப் பெறும் இடம் மௌசின்ராம்.
• இது பூர்வாஞ்சல் மலையின் காற்று மோதும் பக்கம் அமைந்துள்ளது.
• ஆனால் இம்மலையின் காற்று மோதா பக்கம் அமைந்துள்ள ‘ஷில்லாங்’ மிக குறைந்த அளவே மழையைப் பெறுகிறது.
• இதைப் போன்றே மும்பையும், பூனாவும் அமைந்துள்ளன.
ஈரப்பதம்:
• வளிமண்டலத்தில் வானிலையையும் காலநிலையையும் பாதிக்கும் ஒரு முக்கியமான காரணியாக ஈரப்பதம் உள்ளது.
• வளிமண்டலத்தில் உள்ள நீராவியின் அளவே ‘ஈரப்பதம்’ ஆகும்.
• வளிமண்டலத்தில் உள்ள மொத்த நீராவியின் அளவு ‘முழுமையான ஈரப்பதம்’ எனப்படும்.
• வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் அளவிற்கும் அதன் மொத்தக் கொள்ளளவிற்கும் உள்ள விகிதாச்சாரமே ‘ஒப்பு ஈரப்பதம்’ எனப்படும்.
• காற்றின் ஒப்பு ஈரப்பதம் நூறு சதவிகிதமாக இருக்கும்போது காற்று பூரித நிலையை அடைகிறது. இந்நிலையில் காற்று நீராவியை உறிஞ்சாது.
• இந்தப் பூரிதநிலையை ‘பனிவிழுநிலை’ எனப்படுகிறது.
• ஈரப்பதத்தை அளப்பதற்கு ஈரப்பதமானி அல்லது ஈர உலர்க்குமிழ் வெப்பமானி பயன்படுத்தப்படுகிறது.
நீர்க்கோளம்
• புவியின் நீர்சூழ் பகுதி நீர்க்கோளமாகும்.
• பாறைக்கோளம், வாயுக்கோளம், நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளம் ஆகிய நான்கையும் உள்ளடக்கியதே புவிக்கோளம்.
நீர்க்கோளம்:
• புவியின் மேற்பரப்பில் 97 சதவிகித நீரானது கடல்களுக்கு உட்பட்டதாகவும் 3 சதவீதத்திற்கும் குறைவான நீரானது பனிப்பாறைகளாகவும், பணி முகடுகளாகவும் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களாகவும், நிலத்தடி நீராகவும், ஒரு சிறு பகுதி காற்றில் நீராவியாகவும் காணப்படுகிறது.
நீர்ச் சுழற்சி:
• ஆவியாதல், நீர்சுருங்குதல் மற்றும் மழைப்பொழிவு ஆகிய இம்மூன்றும் நீர்ச்சுழற்சியின் முக்கிய செயல்பாடுகளாகும். எ.கா: பனிக்கட்டி, நீர், நீராவி

TNSCERT Books - Free Download
6th Standard
- Tamil I
- Tamil II
- Tamil III
- Science I (Tamil)
- Science I (English)
- Science II (Tamil)
- Science II (English)
- Science III (Tamil)
- Science III (English)
- Social Science I(Tamil)
- Social Science I(English)
- Social Science II(Tamil)
- Social Science II(English)
- Social Science III(Tamil)
- Social Science III(English)
7th Standard
- Tamil I
- Tamil II
- Tamil III
- English I
- English II
- English III
- Science I (Tamil)
- Science I (English)
- Science II (Tamil)
- Science II (English)
- Science III (Tamil)
- Science III (English)
- Social Science I (Tamil)
- Social Science I(English)
- Social Science II (Tamil)
- Social Science II(English)
- Social Science III (Tamil)
- Social Science III(English)
8th Standard
- Tamil Part I
- Tamil Part II
- Tamil Part III
- English Part I
- English Part II
- English Part III
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Maths Part III (Tamil)
- Science Part I (Tamil)
- Science Part II (Tamil)
- Science Part III (Tamil)
- Social Science Part I (Tamil)
- Social Science Part II (Tamil)
- Social Science Part III (Tamil)
- Maths Part I (English)
- Maths Part II (English)
- Maths Part III (English)
- Science Part I (English)
- Science Part II (English)
- Science Part III (English)
- Social Science Part I (English)
- Social Science Part II (English)
- Social Science Part III (English)
9th Standard
- Tamil Part I
- Tamil Part II
- Tamil Part III
- English Part I
- English Part II
- English Part III
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Maths Part III (Tamil)
- Science Part I (Tamil)
- Science Part II (Tamil)
- Science Part III (Tamil)
- Social Science Part I (Tamil)
- Social Science Part II (Tamil)
- Social Science Part III (Tamil)
- Maths Part I (English)
- Maths Part II (English)
- Maths Part III (English)
- Science Part I (English)
- Science Part II (English)
- Science Part III (English)
- Social Science Part I (English)
- Social Science Part II (English)
- Social Science Part III (English)
10th Standard
11th Standard
- Tamil
- English
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Physics Part I (Tamil)
- Physics Part II (Tamil)
- Chemistry Part I (Tamil)
- Chemistry Part II (Tamil)
- Botony Part I (Tamil)
- Botony Part II (Tamil)
- Zoology Part I (Tamil)
- Zoology Part II (Tamil)
- History Part I (Tamil)
- History Part II (Tamil)
- Geography(Tamil)
- Political Science Part I (Tamil)
- Political Science Part II (Tamil)
- Economics (Tamil)
- Ethics Science Part I & II (Tamil)
- History Part I (English)
- History Part II (English)
- Botony Part II (English)
- Zoology Part I (English)
- Geography (English)
- Economics (English)
- English
- Political Science Part I (English)
- Political Science Part II (English)
12th Standard
- History Part I (Tamil)
- History Part II (Tamil)
- Chemistry Part I (Tamil)
- Chemistry Part II (Tamil)
- Geography
- Accountancy
- Political Science Part I (Tamil)
- Political Science Part II (Tamil)
- Economics
- Ethics
- Bio Botany (Tamil)
- Economics (English)
- Political Science (English)
- History (English)
- Geography (English)