பண்டைய இந்திய வரலாறு
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நடைபெற்ற நிகழ்வுகள், அவர்கள் பின்பற்றிய கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை, பேசிய மொழிகள் போன்ற அனைத்தையும் கால வரிசைப்படி நமக்கு எடுத்துரைப்பது வரலாறு ஆகும். இந்திய வரலாறு மற்றும் தமிழக வரலாறு உலக அளவில் மிகச் சிறப்பானதொரு இடத்தை பெற்றுள்ளன. உலக நாகரிகங்களில் மிக சிறந்த நாகரிகங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றி செழித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இந்திய வரலாற்றுக் காலங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்துக் கால வரிசைப்படி கூறுவது வரலாறு ஆகும். வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்று வரலாற்றினை இரு காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம். அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களும் கொண்ட காலத்தை வரலாற்றுக் காலம் ஆகும்.
- 1. பழைய கற்காலம் கி.மு.10,000 ஆண்டுகளுக்கு முன்
- 2. இடைக் கற்காலம் கி.மு. 10,000 – கி.மு. 6,000
- 3. புதிய கற்காலம் கி.மு. 6000 – கி.மு. 4,000
- 4. செம்புக் காலம் கி.மு. 3,000 – கி.மு. 1,500
- 5. இரும்புக் காலம் கி.மு. 1,500 – கி.மு. 600
பழைய கற்காலம்
- ஆதிமனிதன் சிக்கிமுக்கிக் கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.
- இடி, மின்னல் ஆகியவற்றை வணங்கினான்.
- வேட்டையில் ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர்.
- இந்தியாவில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கபெற்றுள்ள இடங்கள்:
- மத்திய பிரதேசம் பிம்பேட்கா, சோன் ஆற்றுப் படுகை
- கர்நாடகம் பாகல்கோட்
- ஆந்திரப் பிரதேசம் கர்னூல் குகைகள், ரேணிகுண்டா
- தமிழ்நாடு வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர்.
- ராஜஸ்தான் லூனி ஆற்றுச் சமவெளி
இடைக் கற்காலம்
- மைக்ரோலித்திக் காலம் என வழங்கப்படுகிறது.
- மீன் பிடிக்க கற்றிருந்தனர்
- நாய், மான், பன்றி, தீக்கோழி போன்ற விலங்குகள் பழக்கப்படுத்தப்பட்டிருந்தன.
- இந்தியாவில் இடைக் கற்காலக் கருவிகள் கிடைக்கபெற்றுள்ள இடங்கள்:
- மத்திய பிரதேசம் (ஆதம்கர்)
- குஜராத் (லாங்கஞ்ச்)
- ராஜஸ்தான்
- உத்திரப் பிரதேசம்
- பீகார்
புதிய கற்காலம்
- மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படிநிலையைப் புதிய கற்காலம் எனலாம்.
- மனிதன் தன் உணவைத் தானே உற்பத்தி செய்துள்ளான். இறந்தோரை புதைக்கும் வழக்கம் உருவானது. மனிதன் முதலில் பழக்கிய விலங்கு “நாய்”
- இக்காலத்தில்தான் சக்கரமும் உருவாக்கப்பட்டது. மேலும் முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு (தாமிரம்) புதிய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ள இடங்கள்:
- தமிழ்நாடு – திருநெல்வேலி, தான்றிக்குடி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை
- கர்நாடகம் – மைசூர், மாஸ்கி, பிரம்மகிரி, ஹல்லூர்
- ஆந்திரா – கடப்பா பெல்லாரி நெல்லூர், ஆனந்தபூர், தெலுங்கானா
- குஜராத் – கத்தியவார்
- பீகார் – சிராண்ட்
- உத்திரபிரதேசம் – பீலான் சமவெளி
- காஷ்மீர் – பள்ளத்தாக்கு
செம்புக் காலம்
- புதிய கற்கால முடிவில் செம்பு என்னும் உலோகத்தின் பயனை அறிந்தான்
- மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் மேல் வண்ண ஓவியங்கள் வரைந்தனர்
- இக்காலத்தில் செம்பு மற்றும் வெண்கலம் பயன்படுத்தப்பட்டன.
- மேலும் ஹரப்பா நகர நாகரிகம் இக்காலத்தைச் சேர்ந்தது.
இரும்பு காலம்
- இரும்பினால் கருவிகள் செய்த காலம் இரும்புகாலம் ஆகும்.
- உலோகத்தை உருக்கிக் கருவிகள் செய்ய அறிந்திருந்தினர்.
- வேதகால நாகரிகம் இரும்புக் காலத்தைச் சார்ந்தது.
- காளை என்பது வழிபாட்டு சின்னமாகத் திகழ்ந்தது.
பெருங்கற்காலம்
- வட இந்தியாவில் இரும்புக்காலம் நிலவியபோது தமிழகத்தில் பெருங்கற்காலம் நிலவியது.
- இறந்தவர்களை புதைத்த போது நடுகற்கள் (நீர்த்தார் நினைவுச் சின்னம்) நடும் பழக்கம் வழக்கத்திலிருந்தது.
- இது கொடுமணல் (அ) நொய்யல் நாகரிகம் (பதிற்றுப்பத்து நுர்லில் குறிப்பிட்டுள்ளபடி) என வழங்கப்படுகிறது.
- புலவர் இராசு மற்றும் செல்வி முத்தையா – பெருங்கற் புதைவுகளைப்பற்றி ஆய்வு செய்தவர்கள் • தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சானூர், அமிர்தமங்கலம் போன்ற இடங்களில் குகைவட்டம், குழிவட்டம் எனும் இரண்டு வகையான பெருங்கற் புதைவுகள் கண்டறிப்பட்டுள்ளன.
சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கிய நகரங்கள்:
- ஹரப்பா (ராவி நதி) – மேற்கு பஞ்சாப், மாண்ட் கோமாரி (பாகிஸ்தான்)
- மொகஞ்சதாரோ (சிந்து நதி) – சிந்து மாகாணம், லாகானா (பாகிஸ்தான்)
- காலிபங்கன் (காஹார் நதி) – ராஜஸ்தான்
- லோத்தல் (பொஹோவா நதி) – தொலவீரா, சூர்கோட்டா குஜராத்
- ஆம்கீர்பூர் – உத்திரப்பிரதேசம்
- பனவாலி – ஹரியானா
- ருபார் – பஞ்சாப்
ஹரப்பா
- ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் “புதையுண்ட நகரம்” என்பது பொருள்.இதைப் போன்ற நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சதாரோ (பாகிஸ்தான்) இசான்குதாரோ, கலிபங்கன்(இராஜஸ்தான்), லோத்தல்(குஜராத்) போன்ற இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டன.
- ரேடியோ கார்பன் முறையில் காலத்தை கணக்கெடுக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹரப்பாவில் 6 தானியக் களஞ்சியங்கள் காணப்பட்டன.
- பெருங்குளம் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. இது 39 அடி நீளமும்,23 அடி அகலமும், 8 அடி ஆழமும் கொண்டது.
சிந்து சமவெளி நாகரீகம் – பிற தகவல்கள் – தொழில்
- கட்டடத் தொழில், நிலம் தேறுதல், மனை அளவீடு, கால்கோளுதல்.
- பயிர்த்தொழிலாளர், கைத்தொழிலாளர், வணிகர்,மீன் பிடித்தல்இ நெசவாளர், மண்பாண்டம் செய்வோர் எனப் பலவகைப்பட்ட மக்கள் காணப்பட்டனர்.
- மண்பாண்டங்கள் பெரும்பாலும் “சாதாரணமாக(Pடயin) இருந்தன.
- ஒரு சில இடங்களில் “சிகப்பு மற்றும் கருப்பு” வண்ணம் பூசிய மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன.
- பருத்தி, கம்பளி, வேட்டி, சால்வை போன்ற ஆடைகள் அணிந்தனர்.
- தங்கம், வெள்ளி, தந்தம், விலையுர்ந்த கற்கள்.
- ஆண், பெண் இருபாலரும் பற்பல அணிகலன்களை அணிந்தனர்.
- வடிவக் கணித அமைப்புப் பற்றி அறிதல் முதலிய பயன்பாட்டு அறிவியல் தொழில் நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன.
- சிந்துவெளி மக்கள் “டெர்ராகோட்டா” எனப்படும் சுடுமண் பாண்டம் செய்வதில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்.
- வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச்சிலை மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- பசுபதி என்ற சிவனையும், பெண் கடவுளையும், லிங்கம், சூலம், மரம் முதலியவற்றையும் வணங்கினர்.
- இவர்களது முக்கிய பெண் கடவுள் “தாய்க் கடவுளாகும்”.
- இறந்தவர்களைப் புதைக்கும்போது உணவு, அணிகலன்களையும் சேர்த்துத் தாழிகளிலிட்டுப் புதைத்தனர்.
சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆராய்ந்தவர்கள்:
- சார்லஸ் மேசன் கி.பி. 1826
- டல்ஹவுசி பிரபு கி.பி. 1856
- ராபர்ட் புரூஸ்ட் கி.பி. 1863
- அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் கி.பி. 1872
- சர் ஜான் மார்சல்(ஹரப்பா) கி.பி. 1921
- ஆர்.டி. பானர்ஜி (மொகஞ்சதாரோ) கி.பி. 1922
ஆரிய நாகரீகம் (வேதகாலம்)
- ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் குடியேறியவர்கள்.
- இந்தியாவில் அவர்கள் குடியேறிய பகுதி “ஆரிய வர்த்தம்” எனப்பட்டது.முற்பட்ட வேதகாலம் (அல்லது) ரிக் வேதகாலம் (கி.மு. 1500 – கி.மு. 1000)
- இவர்கள் முதலில் பஞ்சாபில் இருந்து “சப்தசிந்து” எனப்பட்ட ஏழு நதிகள் பாயும் நிலம், பகுதியில் குடியேறினர்.
- ரிக்வேதத்தின் வாயிலாக வேதகால மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை அறிய முடிகின்றது.
ஆரியர்களின் சமூக, சமுதாய அமைப்பு
- குடும்பத்தின் தலைவர் “கிரஹபதி” என்றனர்.
- கிராமத்தின் தலைவர் கிராமணி, பலகிராமங்கள் இணைந்து விசு என்ற குழு உருவாக்கப்பட்டது.
- இதன் தலைவர் “விசுவபதி”, பெரிய ஆட்சி அமைப்பு ‘ஜனா’ இதன் தலைவர் ராஜன்.
- மகாஜனபதம் என்பது பல சிற்றரசுகள் இணைந்த பெரிய அரசு ஆகும்.
- சபா – முதியோர் அவை: சமிதி – ஊர்மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை.
- விஸ்வவாரா, அபலா, கோசா, லோபமுத்ரா போன்ற பெண் கவிஞர்களும் இருந்தனர்.
- நிஷ்கா என்ற தங்க அலகுகள் (தங்க நாணயம்) வாணிகத்தில் பயன்படுத்தப்பட்டன.
- இயற்கையையும், அதன் சக்திகளையும் வணங்கினர்.
- சூரியன், நெருப்பு, காற்று, வானம், மரங்கள் ஆகியவற்றை வழிபட்டனர்.
- இந்திரன், வருணன், அக்னி, எமன் ஆகிய கடவுள்களை வணங்கினர்.
- ஆதித்தி, உஷா போன்ற பெண் கடவுளரும் வழிபாடுகள் செய்தன.
பிற்பட்ட வேதகாலம் (கி.மு. 1000 – கி.மு. 600)
- சாம, யஜூர், அதர்வண வேதங்களின் காலத்தை பிற்பட்ட வேதகாலம் என்கிறோம்;
- கோசலம், விதேகம், குரு, மகதம், காசி, அவந்தி, பாஞ்சாலம் போன்ற அரசுகள் தோன்றின.
- நிஷ்கா, சுவர்ணா, சதமானா முதலான தங்க, வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.
- சாதி அமைப்புமுறை “வருண தர்மம்” என்று அழைக்கப்பட்டது.
- “கார்கி”, “மைத்ரேயி” போன்ற பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினர்.
- தனூர் வேதா இளவரசர்களுக்கு மட்டும் போர்கலை கற்பிக்கப்பட்டன.
- பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் (சிவன்) ஆகியோர் முக்கியத்துவம் பெற்றனர்.
சமணமும் பௌத்தமும்
- கி.மு 6 ஆம் நூற்றாண்டு உலகின் சிந்தனைப் புரட்சிக் காலமாகும்.
- இந்தியாவில் சமண மதமும் பௌத்த மதமும் தோன்றின.
சமணம்
- சமண சமயத்தை வர்த்தமான மகாவீரர் தோற்றுவித்தார்.
- சமண சமயத்தினரால் 24 தீர்த்தங்காரர்கள் வழிபடப்பட்டனர்.
- முதல் தீர்த்தங்காரர் ஆதிநாதர் எனப்படும் “ரிஷபதேவர்” ஆவார்.
- இறுதியாக 24 ஆவதாக வந்தவர் வர்த்தமான மகாவீரர். இவர் ஓர் உறுதியான அமைப்பைத் தந்தார். (22. அரிஸ்தநாமி 23.பார்சுவநாதன்)
வர்த்தமான மகாவீரர் (கி.மு. 534 முதல் கி.மு. 462 வரை)
- பீகார் மாநிலத்தில் வைசாலி நகருக்கு அருகிலுள்ள “ குந்தக்கிராமம்” என்னும் ஊரில் பிறந்தார்.
- தந்தை பெயர் சித்தார்த்;தர், தாயின் பெயர் திரிசலை.
- யசோதா என்ற மனைவியும், அனோஜா பிரியதர்சனா என்ற மகளும் இருந்தனர்.
- 30 ஆம் வயதில் துறவியானார், பிரச்சனைகளுக்கு விடைதேடி 12 ஆண்டுகள் கடுமையான தியானத்தில் ஆழ்ந்தார்.
- தனது 42-வது வயதில் “கைவல்ய” நிலையை அடைந்தார். 30 ஆண்டுகள் பிரச்சாரம் செய்தார்.
- வேற்றியாளர் என்பதைக் குறிக்கும் ஜீனர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டார். இவரின் கொள்கை, “கொல்லாமைக் கொள்கை” என்று அழைக்கப்பட்டது.
வர்த்தமானர் போதித்த மும்மணிகள்:
1.நல்லறிவு
2.நன்னம்பிக்கை
3.நன்னடத்தை
ஐந்து ஒழுக்கங்கள்
- 1.ஊறு செய்யாமை (உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமை)
- 2.பொய்யாமை (பொய் உரைக்காமை)
- 3.களவாமை (களவு செய்யாமை)
- 4.உடைமை மறுத்தல் (சொத்துகளை விடுத்தல்)
- 5.புலனடக்கம் (ஒழுக்கமற்ற வாழ்வை நடத்தாமலிருத்தல – மகாவீரரால் கூறப்பட்டது)
சமண சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள்
- சந்திரகுப்த மௌரியர்
- கலிங்கத்துக் காரவேலன்
- கூன் பாண்டியன்
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவர்
- கங்கர்கள்
- கடம்பர்கள்
- பல்லவர்
- சாளுக்கியர்கள்
சமண சமயத்தின் இரு பிரிவுகள்
1. ஸ்வேதாம்பர்கள (வெள்ளையுடை அணிந்தவர்கள்)
2. திகம்பரர்கள் (திசையயே ஆடையாகக் கொண்டவர்கள்)
சமணக் கட்டடக்கலை
1. ராஜஸ்தான் – மவுண்ட் அபு- தில்வாரா கோவில்
2. கஜீராஹோ, சித்தூர், ரனக்பூர் – சமணர் கோயில்கள்
சமணர்களின் தமிழ் இலக்கிய காப்பியங்கள்
- சிலப்பதிகாரம்
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- சூடாமணி
சிற்பங்கள்
- உதயகிரி, ஹதிகும்பா, கிர்னார், சிரவணபெலகொலா, கழுகு மலை.
- “கோமதீஸ்வரர்” சிற்பம் கர்நாடக மாநிலத்தில் சிரவணபெலகோலா
பௌத்த சமயம்
- பௌத்த சமயத்தைத் தோற்றுவித்தவர் சித்தார்த்தர் எனும் கௌதமபுத்தர்.
கௌதமபுத்தர் (கி.மு. 563 முதல் கி.மு. 483 வரை)
- நேபாள நாட்டில் உள்ள “கபிலவஸ்து” என்னும் ஊரில் பிறந்தார்.
- தந்தை சாக்கியக் குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர்.
- தாய் மாயாதேவி, சித்தார்த்தர் பிறந்த 7வது நாளில் அவரது தாய் இறந்துவிட்டார்.
- தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார், இராகுலன் என்ற ஆண் மகனைப் பெற்றார்.
- செல்வச் செழிப்பு, வறுமை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுமை, துறவி என்று அவர் கண்ட காட்சிகள் அவர் மனதில் பதிந்தன. அவர் “அறிவுணர்வு” பெற்ற இடம், கயாவில் உள்ள அரசமரத்தடியாகும்.
துன்பங்களைப்பற்றிப் புத்தர் கூறிய அறிவுரைகள் “நான்கு பேருண்மைகள்”
• உலகம் துன்பமயமானது
• துன்பத்திற்குக் காரணம் ஆசையே
• ஆசையை ஒழித்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்
• ஆசையை ஒழிக்க எட்டு நெறிகள்
ஆசையை ஒழிப்பதற்கான எட்டு நெறிகள்
1. நல்ல நம்பிக்கை 2. நல்ல முயற்சி 3. நல்ல பேச்சு 4. நல்ல நடத்தை
5. நல்ல வாழும்வழி 6. நல்ல செயல் 7. நல்ல சிந்தனை 8. நல்;ல தியானம்
• பௌத்தத் துறவிகளின் அமைப்பு “சங்கம்” எனப்பட்டது.
• பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்கள்:
• அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர்
• புத்த சமயம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஹீனயானம் – புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள், உருவ வழிபாடு செய்யாதவர்கள்.
மஹாயானம்; – புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள், உருவ வழிபாடு செய்பவர்கள்.
• நமது தேசியக் கொடியில் காணப்படும் 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம், அசோகரின் தூண்களில் காணப்படும் “தர்மசக்கரம்” எனப்படும்.
• புத்தரின் சிறப்பை அஜந்தா குகை ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும்(மகாரா~;டிரா மாநிலம்) விவரிக்கின்றன.
• பௌத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறைநூலுக்கு “திரிபீடகம்” என்று பெயர்.
• இது வினையபீடகம், சுத்தபீடகம், அபிதம்மபீடகம் என்ற மூன்று உட்பிரிவுகளை கொண்டது.
மணிமேகலையும், குண்டலகேசியும் பௌத்த நூல்கள்.
• சமணர்களின் புனித நூல்கள்: அங்கங்கள், பூர்வங்கள் என்பனவாகும்.
• புத்தசரிதம் – அஷ்வகோசர்
புத்த சமய மாநாடுகள
மாநாடு இடம் ஆண்டு தலைவர் அரசன்
முதல் மாநாடு . ராஜகிருகம் கி.மு.483 மகாகாஷியப்பா அஜாதசத்ரு
2 வது மாநாடு வைசாலி கி.மு.383 சபகாமி காலசோகர்
3 வது மாநாடு . பாடலிபுத்திரம் கி.மு.240 மெகாலிபுத்ததிசா அசோகர்
4 வது மாநாடு குந்தல்வனம் கி.மு.100 வசுமித்திரர் கனிஷ்கர் (காஷ்மீர்)
மகாஜனபதங்கள்
• பல ஜனபதங்களை உள்ளடக்கிய பெரிய அமைப்பாக “மகாஜனபதங்கள்” உருவாக்கப்பட்டன.
• புத்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியாவில் பதினாறு மகாஜனபதங்கள் மேல்நோக்கி இருந்தன.
• கோசலம், அவந்தி, வத்சம், மகதம், காசி, குரு போன்றவை மகாஜனபதங்களில் வலிமையானவை.
• மகதம் பிற மகாஜனபதங்களை வென்று பேரரசாக எழுச்சி பெற்றது.
16 – மகாஜனபதங்கள்:
1. அங்கம் 5. வஜ்ஜி 9. குரு 13.அஸமகம் 2. மகதம் 6. மல்லம் 10.பாஞ்சாலம் 14.அவந்தி 3. கோசலம் 7. சேதி 11.மதஸயம் 15.காந்தாரம் 4. காசி 8. வத்சம் 12.சூரசேணம் 16.காம்போஜம்
மகதப் பேரரசின் மூன்று வம்சங்கள்:
1. அரியங்க வம்சம்
2. சிசுநாகர் வம்சம்
3. நந்த வம்சம்
அரியங்க வம்சம்
• பீகார் மாநிலத்தின் பாட்னாவைச் சுற்றியுள்ள பகுதி மகதம் என்று அழைக்கப்பட்டது.
• முதலில் “சிராவஸ்தி” தலைநகராகவும் , பின்னர் “இராஜகிருகமும், இறுதியாகப் “பாடலிபுத்திரம்”; இருந்தன.
• அரியங்க வம்சத்தின் முதல் மன்னர் பிம்பிசாரர்.
• பிம்பிசாரர் மகன் அஜாதசத்ரு தனது தந்தையையே சிறையில் அடைத்து ஆட்சியைக் கைப்பற்றினார்
• பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தவரும் அஜாதசத்ருவே.
• லிச்சாவி நாட்டின் படையெடுப்பைத் தோற்கடித்தார்.
• பாடலிபுத்திர நகரை நிறுவியவர் அஜாதசத்ருவின் மகன் உதயன்.
சிசுநாக வம்சம்
• ஆரியங்க வம்சத்தை வீழ்த்தி, சிசுநாகர் ஆட்சியைப் பிடித்தார்.
• தலைநகரம் – சிரவஸ்தி
• சூத்திர குலத்தைச் சார்ந்தவர்கள்.
நந்த வம்சம்
• சிசுநாகருக்குப் பின் நந்தவம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.
• நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் மகாபத்ம நந்தர்.
• “மகாபத்ம நந்தன் தக்காணப் பகுதிகளை கைப்பற்றினார்.
• நந்தர் என்றால் அதர்மிகா,சமயசார்பற்றவர்கள் என்று பொருள்.
• இவர்; முதல் இந்தியப் பேரரசாக மகதத்தை உருவாக்கினார்.
• நந்தவம்சத்துப் பேரரசர்கள் சமணசமயத்தைப் போற்றுபவர்களாக இருந்தனர்.
• கடைசி அரசர் தனநந்தர்.
வெளிநாட்டுப் படையெடுப்பு
யவணர்கள்:
• புஷ்யமித்ர சுங்கரின் காலத்தில் முதல் அந்நிய படையெடுப்பு (யவனர்கள் – கிரேக்கர்கள்) நிகழ்ந்தது. இப்படையெடுப்பு பற்றி கூறும் நூல் காளிதாசரின் மாளவிகாகணிமித்ரம்.
• இந்தியாவில் அலெக்சாண்டர் தட்சசீலத்தை முதலில் கைப்பற்றினார்.
• கி.மு 326 இல் ஜீலம் நதிப்போரில் (ஹைடாஸ்பஸ் போர்) போரஸ் மன்னரைத் அலெக்சாண்டர் தோற்கடித்தார்.
• இந்தோ கிரேக்க அரசர்களில் மினாண்டர் தலைசிறந்தவர். தலைநகர் – சியால் கோட் (பாகிஸ்தான்). இவர் புத்த சமயத்துறவி நாகசேனரால் புத்தசமயத்திற்கு சமய மாற்றம் செய்யப்பட்டார்.
• மிலிந்தபன்னு – மினாண்டரின் கேள்விகளுக்கு நாகசேனர் பதில் அளிப்பது போல் அமையப் பெற்ற நூல்.
• இந்தோ – கிரேக்க ஆட்சியாளர்கள் முதன் முதலில் நாணயங்களில் அரசர்களின் படங்களைப் பொறித்தனர்.
பார்த்தீனியர்கள்:
• பகலவாக்கள் என்றழைக்கப்பட்டனர்.
• வோனோன்ஸ் இவ்வம்சத்தை நிறுவினார்.
சகா வம்சம் (சைத்தியர்கள்):
• இந்தோ கிரேக்கர்களைத் தோற்கடித்தனர்
• மத்திய ஆசியாவிலிருந்து வந்த நாடோடிகள்.
• ருத்ரதாமன் சிறந்த அரசர். இவரைப்பற்றி ஜூனாகர் கல்வெட்டு கூறுகிறது.
• சுதர்சன் ஏரி அணையை உருவாக்கினார். தலைநகர் – உஜ்ஜயினி
குஷாணப் பேரரசு
மௌரியரின் வீழ்ச்சிக்குப்பின் வலிமையான பேரரசு “குஷானப் பேரரசு” ஆகும்.
யூச்சி என்ற இனக்குழுவின் ஓர் உட்பிரிவினரே “குஷானர்கள்”.
குஷான அரசை முதலாம் காட்பிஸஸ் கி.பி. முதல் நூற்றாண்டில் நிறுவினார்.
முதலாம் காட்பீசஸ் தங்க நாணயங்களை வெளியிடவில்லை. ஆனால் வெண்கல நாணயங்களை வெளியிட்டார்.
கனிஷ்கர்: (கி.பி. 78-101)
இரண்டாம் காட்பிஸஸ்க்குப் பின் கனிஷ்கர் குஷான அரியணையைக் கைப்பற்றினார்.
சாகசத்திரபர்களை அடிபணிய வைத்தார். சீனாவின் மீது இருமுறை படையெடுத்தார்.
புருஷபுரம் என்ற பெஷாவரைப் புதுநகராக உருவாக்கித் தன் தலைநகராக ஆக்கினார்.
நான்காவது பௌத்த மாநாட்டைக் காஷ்மீரில் கூட்டினார்.
இம் மாநாட்டில்தான் மகாயான பௌத்த சமயப்பிரிவு தோன்றியது.
இவர் “இரண்டாம் அசோகர்” என்று அழைக்கப்பட்டார்.
கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டினை முதன்மையாக வைத்துச் “சக சகாப்தம்” என்னும் புதிய காலக்கணக்கீட்டு முறை உருவாயிற்று.
கி.பி.78 ஆம் ஆண்டு தொடங்கும் சாக சகாப்தத்தை அவர் நிறுவினார்.
கனிஷ்கரின் பேரரசு மிகவும் பரந்த ஒன்றாகும். மேற்கில் காந்தாரம் தொடங்கி கிழக்கே பனாரஸ் வரையிலும்இ வடக்கில் காஷ்மீர் தொடங்கி தெற்கே மாளவம் வரையும் அவரது பேரரசு பரவியிருந்தது.
தற்காலத்தில் பெஷாவர் என்றழைக்கப்படும் புருஷபுரம் என்பது தலைநகர்.
பண்டைய இந்தியாவின் புகழ்மிக்க மருத்துவரான “சரகர்” என்பவரையும் கனிஷ்கர் ஆதரித்தார்.
இந்தோ-கிரேக்கர்களின் ஆட்சிக் காலத்தில் காந்தாரக்கலை தோன்றியது என்றாலும், சாகர்களும் குஷானர்களும் காந்தாரக் கலையைப் போற்றி வளர்த்தனர்.
மௌரியப் பேரரசு
மௌரியப் பேரரசு நிறுவப்பட்டதிலிருந்து, இந்தியாவில் முதன்முறையாக அரசியல் ஒற்றுமை ஏற்பட்டது.
வடமொழி நூலான “அர்த்த சாஸ்திரத்தை” எழுதியவர் கௌடில்யர்.
அர்த்த சாஸ்திரம் 15 புத்தகங்களையும் 180 அத்தியாயங்களையும் கொண்டது.
அசோகரின் பெரிய பாறைக் கல்வெட்டுகள மொத்தம் பதiனான்கு உள்ளன.
அசோகரின் கலிங்கப்போரைப் பற்றிக் குறிப்பிடுகிறதுஇ பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டு. மேலும் இவரின் பேரரசில் தர்மத்தை பரப்புவதற்காக அசோகர் மேற்கொண்ட முயற்சிகளை ஏழாவது தூண் விவரிக்கிறது.
சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 320-298)
நந்தமன்னர் தனநந்தனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து மகதப்பேரரசை மௌரியவம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்தர் கைப்பற்றி ஆண்டார்.
செலூகஸ் நிகேடரின் தூதுவரான “மெகஸ்தனிஸ்” என்ற கிரேக்க அறிஞர், “இண்டிகா” என்னும் நூலை எழுதினார். சந்திரகுப்த மௌரியர் சமண சமயத்தைத் தழுவித் துறவியானார்.
சந்திரகுப்த மௌரியருக்குபின், பிந்துசாரர் ஆட்சி செய்தார்.
பின்பு அசோகர் மௌரியப் பேரரசரானார்.
இவருக்கு கௌடில்யர் உறுதுணையாக இருந்தார். கௌடில்யரை சாணக்கியர் என்றும்இ விஷ்ணுகுப்தர் என்றும் அழைப்பர்.
அசோகர் (கி.மு. 273-236)
இவர் கடும் போருக்குப் பின் கலிங்கத்தை மீண்டும் மௌரியப் பேரரசுடன் இணைத்தார்.
• படையெடுத்துப் போர் செய்து, வெற்றிபெறுவது “திக்விஜயம்” எனப்படும்.மக்களிடம் தர்மத்தை வளர்க்கப்படுவது “தர்மவிஜயம்” எனப்படும். உயிர்பலியிடும் யாகச் சடங்குகள் தடை செய்யப்பட்டன. இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கியவர் அசோகரே ஆவார்.இவரது ஆட்சியில் கி.மு.261-ம் ஆண்டு அவர் கலிங்கப்போரில் பெற்ற வெற்றியாகும்.
• பௌத்த சமயத்தை அசோகர் தழுவினார்.
• இவர் பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த மாநாட்டை கூட்டினார். இலங்கையில் பௌத்த சமயத்தைப் பரப்ப தன்மகன் மகேந்திரனை அனுப்பினார். அசோகரது முயற்சியால் பௌத்த சமயம் ஓர் உலக சமயமாக மலர்ந்தது. பெரும்பாலான கல்வெட்டுகள் “பிராகிருத” மொழியில் எழுதப்பட்டவை.
• “எட்டு ஆண்டுகள் போரிட்டேன். கலிங்கத்தை வென்றேன். அதில் ஒரு இலட்சம்பேர் மாண்டனர். போரைவிடத் தர்மத்தைப் பின்பற்றுவதே சிறந்தது என்பதை ஏற்றுக் கொண்டேன்”-அசோகர்.
மௌரியரின் ஆட்சி முறை:
வடக்குப் பகுதிக்குத் தட்சசீலமும், மேற்குப் பகுதிக்கு உஜ்ஜயினியும், தெற்குப் பகுதிக்குச் சுவர்ணகிரியும், கிழக்குப் பகுதிக்குத் தோசாலியும் தலைநகரங்களாக இருந்தன.
பேரரசின் மையமான மகதத்தைப் பேரரசரே பாடலிபுத்திரத்திலிருந்து ஆட்சி புரிந்தார்.
மௌரியரது வலிமையான படை, “காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை,
கப்பல் படை” போன்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தவறாமல் பின்பற்றப்பட்டது.
டெல்லி, அகமதாபாத், ரும்மிந்தை, சாஞ்சி, சாரநாத் போன்ற இடங்களில் பொறிப்புகழுடன் கூடிய அசோகர் தூண்கள் கண்டெடுக்கப்பட்டன.
தூண்களின் உச்சியில் சிங்கம், யானை, எருது போன்ற விலங்குகளின் உருவங்கள்
செதுக்கப்பட்டுள்ளன.
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் “பிருகத்திரன்”.
சுங்கர்கள்
புஷ்யமித்ரசுங்கர் சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்திரர் இந்து சமயத்தை பின்பற்றினார். வேத சமயத்தை திரும்பவும் கொண்டு வர முயன்றரர்.
சமஸ்கிருத மொழி இலக்கண வல்லுனர் “பதஞ்சலி” புஷ்யமித்தி;ரர்; காலத்தைச் சேர்ந்தவர்.
தேவபூதி என்ற கடைசி அரசனை அவருடைய மந்திரி வாசுதேவ கன்வா கொன்றார். மகதத்தில் கன்வர்களின் ஆட்சி தொடங்கியது.
கான்வர்கள்
வாசுதேவ கான்வா, கான்வ வம்சத்தை நிறுவினார். சூசர்மன் அவ்வம்சத்தின் கடைசி மன்னராக ஆட்சி புரிந்தார். கிமு.27-இல் ஆந்திரர்களால் கான்வர் வம்சம் முடிவுக்கு வந்தது. கான்வர்களின் வீழ்ச்சியிலிருந்து குப்தப் பேரரசு நிறுவப்படும் காலம் வரை மகதத்தின் வரலாறு வெற்றிடமாகவே இருந்தது.
சாதவாகனர்கள்
மௌரியர்களின வீழ்ச்சிக்குப்பிறகு, தக்காணத்தில் சாதவாகனர்கள் சுதந்திர அரசை நிறுவினார்கள். “ஆந்திரர்கள்” என்றும் அவர்கள் அழைக்கப்பட்டனர். சாதவாகன வம்சத்தை நிறுவியவர் சிமுகர், அவரைத் தொடர்ந்து கிருஷ்ணர் ஆட்சிக்கு வந்தார். மேற்கில் நாசிக் வரை அவர் பேரரசை விரிவுபடுத்தினார்.
சாதவாகன மரபின் கடைசி அரசன் நான்காம் புலமாயி என்பவன் ஆவான்.
குப்தப் பேரரசு
குஷானப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மகதத்தில் பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு உருவான பேரரசு குப்தப் பேரரசு ஆகும். குப்த மரபை தோற்றுவித்தவர்- “ஸ்ரீகுப்தர்”
சமுத்திர குப்தரின் ஆட்சியைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் முக்கிய சான்றாக விளங்குவது அலகாபாத் கற்றூண் கல்வெட்டு. அலகாபாத் கல்வெட்டைப் பொரித்தவர் இவரது அமைச்சர் “அரிசேனர்”ஆவார்.
“ஸ்ரீகுப்தர் – கடோத்கஜர்” இவர்கள் இருவரும் “மகாராஐh” என்று அழைக்கப்பட்டனர்.
குப்தவம்சத்தின் முதல் சுதந்தர மன்னராக முதலாம் சந்திரகுப்தர் விளங்கினார்.
முதலாம் சந்திரகுப்தருக்குப்பின், சமுத்திர குப்தரது (கி.பி. 335-375) படையெடுப்பு,
வெற்றிகளைப்பற்றி அலகாபாத் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சமுத்திரகுப்தருக்குப் பின்வந்த இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. 380-414) புகழ் பெற்ற அரசராகப் போற்றப்படுகிறார்.
இராமாயணம், மகாபாரதம் போன்றவையும், 18 புராணங்களும் தொகுக்கப்பட்டன.
காளிதாசர், பாசர், விசாகதத்தர் போன்ற புகழ்பெற்ற வடமொழிப் புலவர்கள் பலர் குப்தர்களால் போற்றப்பட்டனர். சமஸ்கிருத மொழி ஆட்சி மொழி ஆகும்.
அஜந்தாவிலுள்ள சில பௌத்த குகைச்சிற்பங்களும், பாக் குகைகளில் உள்ள
ஓவியங்களும் குப்தர் காலத்தவை. ஆரியபட்டர், வராகமிகிரர் போன்ற புகழ்பெற்ற கணித, வானியல் அறிஞர்களும், இருந்தனர்.
குமாரகுப்தர் காலத்தில், பௌத்தர்களது புகழ்பெற்ற “நாளந்தா பல்கலைக்கழகம்”
உருவாக்கப்பட்டது.
குப்தர்களின் காலம் பொற்காலம் எனக் கருதப்பட்டது.
சாரனாத்தில் புத்தருக்கு அழகிய சிலை நிறுவப்பட்டது.
நிலவரி, வணிகவரி வசூல் செய்யப்பட்டது.
முதலாம் சந்திரகுப்தர் (கி.பி. 319-335)
மகாராஐhதிராஐh அல்லது அரசர்களுக்கு அரசன் என்று முதலில் அழைக்கப்பட்டவர்.
மெஹ்ருளி இரும்புத்தூண் கல்வெட்டு அவரது பரவலான போர் வெற்றிகள் பற்றி
குறிப்பிடுகிறது.
சமுத்திர குப்தர்
தென்னிந்தியப் படையெடுப்பின் போது பன்னிரண்டு ஆட்சியாளர்களை முறியடித்ததாக அலகாபாத் கல்தூண் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தனது இராணுவ சாதனைக்காக இவர் “இந்திய நெப்போலியன்” என்று அழைக்கப்படுகிறார். பாடல்களை இயற்றும திறனைப் பெற்றிருந்த அவரை “கவிராஐன்” என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இரண்டாம் சந்திர குப்தர்
இவர் குப்தப்பேரரசை மேலும் விரிவுபடுத்தினார்இ “சாகர்களை அழித்தவர்” என்று பொருள் கொண்ட “சாகரி” என்ற விருது பெயரையும் சூட்டிக்கெண்டார். தம்மை “விக்கிரமாதித்தன்” என்று புகழ்படக் கூறிக்கொண்டார்.
குப்தர்கால அறிஞர்கள் மற்றும் நூல்கள்:
- காளிதாசர் – ரிது சம்காரம், மேகதூதம் (கவிதைகள்)
இரகுவம்சம், குமார சம்பவம் (காப்பியங்கள்)
சாகுந்தலம், மாளவிகாக்கனிமித்ரம், விக்ரம ஊர்வசியம் (நாடகம்) - ஆர்யபட்டர் பூஜ்ஜியத்திற்கு மதிப்பு உண்டு என கூறியவர். நூல் – ஆர்யட்டயம்
- விசாகதத்தர் – முதரா ரடட்சசம், தேவி சந்திரகுப்தம் (நாடக நூல்)
- வராகபட்டர் – வானியலாளர், கணிதவியல்அறிஞர், புவியின் வடிவம், கிரகணம் பற்றி ஆய்ந்தார்.
- வராகமிகிரர் – வானியல்அறிஞர், நூல் – பிருகத் சம்கிதம், பஞ்சசித்தாந்திகம்
- பிரம்மகுப்தர் – பிரம்ம சித்தாந்தம் (முற்கால நியூட்டன்)
- தன்வந்திரி – ஆயுர் வேதம்
ஹர்ஷப் பேரரசு: (கி.பி. 606-647)
அரசர்கள் காலவரிசைப்படி:
புஷ்யபூதி – பிரபாகர வர்த்தனர் – இராஜ்யவர்த்தனர் -ஹர்ஸவாத்தனர் – இராஜ்யஸ்ரீ – கிரகவர்மன் – தேவகுப்தன் – சசாங்கன்
தானேஸ்வரத்தின் அரசர் ஹர்ஷவர்த்தனர் (சிலாதித்யா எனவும் வழங்கப்பட்டார்)
கன்னோசியே ஹர்ஷரது தலைநகராக விளங்கியது.
ஆனாலும் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி இவரைத் தோற்கடித்தார்.
நாளந்தா பல்கலைக்கழகம், ஹர்ஷரது ஆதரவால் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்றது. நாளந்தா என்ற சொல்லுக்கு “அறிவை அளிப்பவர்” என்று பொருள்.
ஹர்;ஷரது காலத்தைப் பற்றியும் அவரது வரலாற்றையும் அறிந்து கொள்ள உதவும் முக்கிய சான்றுகள் பாணர் எழுதிய “ஹர்ஷசரிதம்”, “காதம்பரியும்” மற்றும் “பார்வதி பரிநயமும், யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பான சீயூகி உதவுகிறது.
மேலும் ஹர்;ஷர் எழுதியுள்ள “ரத்னாவளி”, நாகநத்தம், பிரிய தர்ஷிகா என்ற நாடகங்களும் நமக்கு அறிய உதவுகிறது.
தனது முதலாவது படையெடுப்பில், ஹர்ஷர் சசாங்கனை கனோஜிலிருந்து விரட்டியடித்தார். கனோஜ் நகரை தனது புதிய தலைநகராக அறிவித்தார்.ஆனால் இரண்டாம் புலிகேசியின் ஜஹோலே கல்வெடடுப்படி ஹர்ஷரை புலிகேசி முறியடித்தார். இந்த வெற்றிக்குப் பிறகு புலிகேசி “பரமெஸ்வரன்” என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டான. தொடக்கத்தில் சிறந்த சிவபக்தராக விளங்கிய ஹர்;ஷர், பின்னர் ஹீனயான புத்த சமயத்தை பின்பற்றத் தொடங்கினார். யுவான் சுவாங் அவரை மகாயான புத்த சமயத்திற்கு மாற்றினார்.
இடைக்கால இந்தியா
• கி.பி 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 18ஆம் நூற்றாண்டு வரையிலான காலமே இடைக்காலம்
• கி.பி 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை முந்தைய இடைக்காலம் எனவும்
• கி.பி. 13ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 18ஆம் நூற்றாண்டு வரை பிந்தைய இடைக்காலம் என வகைப்படுத்தியுள்ளனர்
வட இந்திய இராஜபுத்திரர்கள்(கி.பி 8 – கி.பி 13 நூற்றாண்டு வரை) :
• வட இந்தியப் பகுதியை 36 வகையான இராஜபுத்திர மரபுகள் ஆண்டனர். வலிமை வாய்ந்த இராஜபுத்திர மரபுகள்
ஆட்சிப் பகுதி மரபுகள் ஆட்சிப் பகுதி மரபுகள்
அவந்தி பிரதிகாரர்கள் வங்காளம் பாலர்கள்
ஆஜ்மீர் சௌகான்கள் டெல்லி தோமர்கள்
கன்னோஜ் ரத்தோர்கள் மேவார் சிசோத்தியர்கள்
பந்தல்கண்ட் சந்தேலர்கள் மாளவம் பராமரர்கள்
குஜராத் சோலங்கிகள் வங்காளம் சேனர்கள்
பிரததிகாரர்கள்:
• கூர்ஜர மரபைச் சேர்ந்தவர்கள். வட மற்றும் மேற்கு இந்தியப்பகுதியை ஆட்சி செய்தனர்
• முதல்அரசர் – நாகபட்டர். தலைநகர் – கனோஜ்
• முகமது கஜினி மற்றும் சிந்துவின் ஜூனட் முஸ்லிம்களின் படையெடுப்பிலிருந்து இந்தியாவை பாதுகாத்தனர். வலிமை மிக்க அரசர் – மகேந்திர பாலர். கடைசி அரசர் – இராஜ்ஜிய பாலர்
பாலர்கள்:
• பாலர் மரபைத் துவக்கியவர் – கோபாலர். வட மற்றும் கிழக்கு இந்தியப்பகுதியை ஆண்டனர்
• தரும பாலர் – புத்த சமய ஆர்வலர். புத்த மடங்களை நிறுவினார். விக்கிரம சீலா பல்கலைக் கழகத்தை நிறுவினார். நாளந்தா பல்கலைக் கழகத்தை புதுப்பித்தார்.
• கடைசி அரசர் – கோவிந்த பாலர்.
பிற இராஜபுத்திரர்கள்:
• தோமர்கள் – டெல்லி நகரை கி.பி.736 இல் நிறுவினர்.
• சௌகான்களின் முக்கிய அரசர் – பிருத்திவிராஜ் சௌகான்
• ரத்தோர் அரசர்களில் சிறந்தவர் – ஜெயச்சந்திரன். கி.பி.1194 இல் சந்தவார் போரில் முகமது கோரியால் கொல்லப்பட்டார்.
• சந்தேலர்கள் – கஜூராகோவில் கோவில்களை நிறுவினர். கந்தர்ய மகா தேவர் ஆலயம் சிறப்பு பெற்றது.
• சிசோத்தியர் மரபு இராணி பத்மினி ஜவ்கர்(சதி) வழக்கத்தின்படி தீயில் குதித்து உயிர் நீர்த்தார்.
• பராமர மரபின் சிறந்த அரசர் – இராஜா போஜ். தலைநகர் தாராவில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவினார்.
• இராஜபுத்திரர்கள் இந்து சமயத்தை வளர்த்தனர். சமண புத்த சமயங்களை ஆதரித்தனர். பக்தி இயக்கம் மலரத் துவங்கியது.
• நிலமான்ய முறையை பின்பற்றியதுடன், நாட்டினை ஜாகிர்களாகப் பிரித்து ஜாகிர்தார்களை அதிகாரிகளாக நியமித்தனர்.
• மராத்தி, குஜராத்தி மற்றும் வங்க மொழிகள் சிறப்பாக வளர்ச்சியுற்றது.
அறிஞர்கள் நூல்கள்
கல்ஹாணர் இராஜதரங்கினி
ஜெயதேவர் கீத கோவிந்தம்
சோமதேவர் கதா சரித சாகரம்
சந்த்பரிதை பிருதிவிராஜ்ரசோ
பாஸ்கராச்சாரியார் சித்தாந்தசிரோன்மணி (வானியல் நூல்)
இராஜசேகரன் பால இராமாயணம், கற்பூரமஞ்சரி
தக்காண அரசுகள்:
சாளுக்கியர்கள்: கி.பி.543-755
சுமார் இரண்டு நூற்றாண்டுகள் தட்சிணபதம் அல்லது தக்காணத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தவர்கள் சாளுக்கியர்கள்
மேலைச் சாளுக்கியரின் வழிவந்தவர்கள் வெங்கியின் கீழைச் சாளுக்கியர்கள் மற்றும் கல்யானிச் சாளுக்கியர்கள். மேலைச்சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தவர் “முதலாம் புலிகேசி”.
ஜஹோலே கல்வெட்டு, ‘இரண்டாம் புலிகேசி’யின் ஆட்சிகாலத்தைப் பற்றிய விவரங்களைக் கூறுகிறது. இரண்டாம் புலிகேசியின் ஆட்சிகாலத்தில் சீனப்பயணி “யுவான்சுவாங்”அவரது நாட்டிற்கும் வருகை புரிந்தார். சாளுக்கிய மரபின் கடைசி அரசர் இரண்டாம் கீர்த்திவர்மன்.
இராஷ்டிரகூடர்கள்: கி.பி.755-975
• கன்னட இனத்தைச் சேர்ந்த இராஷ்டிரகூடர்களின் தாய்மொழி கன்னட மொழியாகும்.
• இராஷ்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் “தண்டி துர்க்கர்”
• “முதலாம் கிருஷ்ணர்” எல்லோராவில் பெரிய பாறையைக் குடைந்து ஒரே கல்லாலான “கைலாசர் ஆலயத்தை” அவர் அமைத்தார்.
• மூன்றாம் கிருஷ்ணர்” – இராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார்.
• சைவமும், வைணவமும் பிரதான சமயமாக விளங்கியது
• பார்சுவ உதயம், ஆதிபுராணம் – போன்ற நூல்களை ஜீனசேனர் என்ற சமண குரு இயற்றினார்.
• முதலாம் அமோகவர்சன் – கவிராஜமார்க்கம் (கன்னட முதல் கவிதை நூல்)
• பம்பர், பொன்னர்,இரன்னர் – கன்னட முப்பெரும் கவிஞர்கள்
ஹொய்சாளர்கள்:
• முதல் மன்னர் – முதலாம் வினையாதித்தன். தலைசிறந்த மன்னர் – விஷ்ணுவர்த்தன்
• தலைநகர் – துவார சமுத்திரம். கடைசி அரசர் – பல்லாளா
• கன்னட இலக்கிய வளர்ச்சிக்கு பங்காற்றினர். நியச்சந்திரா, ராகவங்கர், கண்டி, நேமிச்சந்திரன் – கன்னட அறிஞர்கள்.
காகத்தியர்கள்:
• முதல் அரசர் – இரண்டாம் புரோலா. தலைநகர் – அனுமகொண்டா, வாரங்கல்
• கடைசி அரசர் – வினயகதேவன்
யாதவர்கள் (செவுனர்கள்):
• முதல் அரசர் – ஐந்தாம் பில்லாமா. தலைநகர் – தேவகிரி. தேவகிரி கோட்டை இவர்களால் கட்டப்பட்டது.
அரேபியர்கள் படையெடுப்பு
• நபிகள் நாயகம் இஸ்லாம் சமயத்தை மெக்காவில் நிறுவினார்.
• அரேபியர்கள் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றினர்.
• முகமது பின் காசிம் சிந்து பகுதியை முதன் முதலில் கைப்பற்றினார்.
• மூல்த்தான் நகரைக் கைப்பற்றி தங்க நகரம் எனப் பெயரிட்டனர்.
• இந்துக்கள் மீது விதிக்கப்பட்ட ஜிசியா வரி அறிமுகம் செய்யப்பட்டது.
துருக்கியர் படையெடுப்பு
• முதல் மன்னர் – முகமது கஜினி
• பிர்தௌசி, அல்பெரூனி – சிறந்த அறிஞர்கள்
முகம்மது கஜினி
கஜினி முகம்மது தனது அரசை பேரரசாக மாற்ற விரும்பினார். எனவே இந்தியாவை வெற்றிகொள்ள எண்ணி 17 முறை படையெடுத்தார். இவரின் முதல் படையெடுப்பு கி.பி 1000-ல் நடைபெற்றது.
பிர்தௌசி – ஷா நாமா என்னும் புகழ்பெற்ற பாரசீகக் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் முகம்மது கஜினியின் வரலாற்றை விளக்குகிறது.
1018- ஆம் ஆண்டு முகமது மதுரா நகரைச் சூறையாடினார்.
கஜினிப்பேரரசு பாரசீகம்இ டிரான்சாக்சியானாஇ ஆப்கானிஸ்தான்இ பஞ்சாப் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. முகமதுவை இஸ்லாமின் நாயகன் என்று இடைக்கால வரலாற்றாசிரியர்கள் போற்றியுள்ளனர்.
முகம்மது கோரி கி.பி. 1173 – கி.பி. 1206)
கஐpனி அரசுக்கு கீழ்ப்படிந்திருந்த கோரிகள்இ கஐpனி முகமதுவின் மறைவுக்குப் பிறகு சுதந்திரமடைந்தனர்.
கஐpனிப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின்இ முகமது கோரி என்று அழைக்கப்பட்ட “மொய்சுதீன் முகமது” கஐpனியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
முகம்மது கோரியின் முக்கிய நோக்கம், இந்தியாவில் இஸ்லாமிய அரசை அமைப்பதாகும்.
முகமது கோரியின் படையெடுப்புகள்:
கி.பி. 1185 சியால்கோட் (பஞ்சாப்) கைப்பற்றினார்
கி.பி. 1186 லாகூர் கைப்பற்றப்பட்டது.
கி.பி. 1191 முதல் தரெய்ன் போர் (முகமது கோரி – பிருத்திவிராஜ் சௌகான்)
கி.பி. 1192 முதல் தரெய்ன் போர் (முகமது கோரி – பிருத்திவிராஜ் சௌகான்)
கி.பி. 1194 சந்தவார் போர் (முகமது கோரி – ஜெயச்சந்திரன்)
முதல் தரெய்ன் போர்: முகம்மது கோரி எள பிருதிவிராஜ் சௌகான், பிருதிவிராஜ் வெற்றி பெற்றார். ஆனால் இரண்டாம் தரெயின் போரில் கி.பி. 1192-ல் மீண்டும் பிருதிவிராஜனை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றார் கோரி.
இவ்வாறாக இந்தியாவின் முதல் முஸ்லீம் அரசு அஜ்மீரில் நிறுவப்பட்டது.
டெல்லியைத் தலைநகராக்கி ஆட்சி செய்தார். முகம்மது கோரியின் மறைவிற்குப் பின் கி.பி. 1206-ல் குத்புதீன் ஜபக் டெல்லியின் சுல்தானாகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.
இந்தியாவில் அடிமை வம்சத்தை தோற்றுவித்தவரும் இவரே ஆவார்.
டெல்லி சுல்தானியம்
கி.பி.1206 முதல் 1526- ஆம் ஆண்டு வரை டெல்லி சுல்தானியம் நிறுவப்பட்டது.
ஐந்து வம்சங்கள்:
1.அடிமை வம்சம் : கி.பி.1206-கி.பி.1296
2.கில்ஐp வம்சம் : கி.பி.1290-கி.பி.1320
3.துக்ளக் வம்சம் : கி.பி.1320-கி.பி.1413
4.சையது வம்சம் : கி.பி.1414-கி.பி.1451
5.லோடி வம்சம் : கி.பி.1451-கி.பி.1526
அடிமை வம்சம்
அடிமை வம்சம் மாம்லுக் வம்சம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வம்சத்தில் மூன்று மரபுகள் ஏற்படுத்தப்பட்டன:
குத்புதீன் ஜபக் நிறுவிய குத்பி மரபு
இல்டுமிஷ் நிறுவிய முதல் இல்பாரி மரபு
பால்பன் நிறுவிய இரண்டாவது இல்பாரி மரபு
அடிமை வம்சத்தின் அரசர்கள்:
1. குத்புதீன் ஜபக் (1206-1210),
2. இல்டுமஷ் (1211- 1235),
3. ரசியா பேகம் (1236-1240),
4. அலாவுதீன் (1241-46),
5. நாசர் உத்தீன் முகம்மது (1246-66),
6. கியாசுதீன் பால்பன் (1266-1287)
குத்புதீன் ஐபக் – கி.பி.1206-1211
முகம்மது கோரியின் அடிமையாக குத்புதீன் ஜபக் இருந்தமையால் இவரது வம்சம் அடிமை வம்சம் என அழைக்கப்பட்டது.
1206-ஆம் ஆண்டு கோரி இறந்தவுடன்இ ஐபக் தனது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டார். அடிமை வம்சத்திற்கும் டெல்லி சுல்தானியத்திந்கும் ஐபக் அடிகோலினார். சுல்தான் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்ட அவர் லாகூரை தலைநகராக்கினார். ஐபக்கை ‘லாக் பக்ஷ்’ என அழைத்தனர்.
குவாத்-உல்-இஸ்லாம் என்ற மசூதியைக் கட்டினார்.
இவர் குதிப்மினாரை கட்டத் தொடங்கினார் பின்னர் அது இல்துமிஷ் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. 1210-ஆண்டு குதிரை போலோ விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஐபக் தவறி விழுந்து இறந்தார்.
இல்டுமிஷ்
இல்பாரி குலத்தைச் சேர்ந்தவர் இல்துமிஷ். எனவே அவரது அரசு குலம் இல்பாரி குலம் எனப்பட்டது. லாகூரிலிருந்த தலைநகரை அவர் டெல்லிக்கு மாற்றினார். 1229- ஆம் ஆண்டு காலிப்பிடம் இருந்து அனுமதிப்பத்திரத்தைப் பெற்று அவர் இந்திலாவின் சட்ட முறைலான ஆட்சியாளரானார்.
இல்டுமி~; குத்புதீன் ஜபக்கின் அடிமையாவார். எனவே, அடிமையின் அடிமை என்றழைக்கப்பட்டார்.
இந்தியாவில் அராபிய நாணய முறையை அறிமுகப்படுத்தியவர் இல்துமிஷ். இடைக்கால இந்தியா முழுவதும் அடிப்படை என்று கூறலாம்.
வலிமை வாய்ந்த நாற்பது படைத் தலைவர்கள்கொண்ட நாற்பதின்மர்குழு ஒன்றையும இல்துமிஷ் உருவாக்கினார். இல்டுமஷ் காலத்தில் “தங்கா” எனப்படும் வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன.
இரசியா சுல்தானா
டெல்லியை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண் சுல்தான் இரசியா ஆவார்.
இரசியா பேகம் ஆட்சி செய்த போது ஆண் உடையணிந்து அரசுப் பணிகளை மேற்கொண்டார்.
கியாசுதீன் பால்பன்
நாற்பதின்மர் குழு முறையை ஒழித்தவர், இந்துஸ்தானத்தின் பறவை என்று புகழப்பட்ட பாரசீகக் கவி அமீர்குஸ்ரு பால்பனால் ஆதரிக்கப்பட்டார். சில்லி இல்லா என்ற பட்டத்தைக் கொண்டிருந்தார்.
கில்ஐp வம்சம்
இந்தியாவில் முஸ்லீம் பேரரசு அதன் உச்சகட்டத்தை தொட்டது கில்ஐpயின் ஆட்சிக் காலத்தில் தான்.
ஜலாலுதீன் கில்ஜி
கில்ஜி வம்சத்தைத் தோற்றுவித்தவர் “ஜலாலுதீன் கில்ஜி” ஆவார். இவர் 1290 முதல் 1296 வரை ஆட்சி புரிந்தார்.
அரசன் இறைவனது நிழல் போன்றவன்”, இறைவனால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எனவே, பால்பன தீவிரமான அரசவை நடைமுறைகளை அறிமுகப்படுத்தினார்.
அலாவுதீன் கில்ஜி: (1296-1316)
கில்ஜி வம்சத்தின் மிகச்சிறந்த அரசராகக் கருதப்படுபவர் அலாவுதீன் கில்ஜி.
தென்னிந்தியாவின் கோடிவரை பரவியிருந்த நிலப்பகுதிகளை ஆண்ட முதல் முஸ்லீம் மன்னன் அலாவுதீன் கில்ஜியே ஆவார்.
குதிரைகளுக்கு “தாக்” எனப்படும் சூடு போடும் முறையையும் இவர் அறிமுகப்படுத்தினார்.
ஹீலியா என்ற படைவீரர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டது. அங்காடி சீர்திருத்தங்களை அலாவுதீன் கில்ஐp மேற்கொண்டார்.
நில அளவைக்கு ஏற்பாடு செய்த முதலாவது டெல்லி சுல்தான் அவரே. புதிய தலைநகர் “சீரி” மற்றும் புகழ்வாய்ந்த நுழைவாயிலான “அலை தர்வாசா” என்ற கட்டிடத்தையும் அவர் கட்டினார்.
மது அருந்துதல், மது விற்பனை மற்றும் சூதாடுதல் போன்நவற்றை தடை செய்தார்.
சஹாண-இ-மண்டி என்ற வணிககர்கள் பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்தார்.
அங்காடி சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தினார். நியாய விலைக் கடையின் முன்னோடி என்றழைக்கப்படுகிறார்.
உலமாக்கள் எனும் சமயத் தலைவர்களை அரசியிலிருந்து நீக்கினார்.
அலைதார்வாசா – துருக்கிய கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இவரது படைத் தளபதி மாலிக்கபூர்.
கடைசி அரசர் – நசிருதீன் குஸ்ரு ஷா.
துக்ளக் வம்சம்:
கியாசுதீன் துக்ளக்: (1320-1325)
துக்ளக் வம்சத்தை ஏற்படுத்தியவர் கியாசுதீன் துக்ளக் ஆவார். இவரின் இயற்பெயர் “காஸிமாலிக்” ஆகும். டெல்லிக்கு அருகில் துக்ளகாபாத் என்னும் புதிய நகரத்தை நிர்மாணிக்க உத்தரவிட்டார்.
முகம்மது பின் துக்ளக் (1325-1351)
இயற்பெயர் ஜீனகான் ஆகும். ஊற்பத்தியைப் பெருக்க, “திவானி கோஹி” என்ற புதிய விவசாயத் துறையை ஏற்படுத்தினார்.
தமது தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு (தேவகிரி)1327-ல் மாற்றம் செய்தார். நாணய முறையைச் சீர்திருத்தினார்.
துக்ளக் வெள்ளி தங்க நாணயங்களுக்கு பதில் செப்பு நாணயங்களை வெளியிட்டார்.
சிறந்த இலக்கியஇ சமய மற்றும் தத்துவக்கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றிருந்த ஒரே டெல்லி சுல்தான் முகமது பின் துக்ளக்.
தேவகிரியை தனது இரண்டாவது தலைநகராக்க விரும்பினார். மேலும் தேவகிரிக்குஇ தௌலதாபாத் என்றும் பெயரிடப்பட்டது. தோ ஆப் பகுதி குடியானவர்களின் நிலவரியை உயர்த்தினார். தோ ஆப் என்பது கங்கை-யமுனை சதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியாகும்.
பிரோஸ் துக்ளக் (1351-1388)
ஜாகீர் முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்கு திவானி இஸ்திஹாக் என்ற துறையை ஏற்படுத்தினார்.
தக்காவி என்றழைக்கப்பட்ட விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தார்.
மக்களிடம் நான்கு வகையான வரிகள் வசூல் செய்யப்பட்டன
- கரோஜ் – 1/10 பங்கு நிலவரி
- கம்ஸ் – போர்களில் கைப்பற்றிய பொருட்களில் 1ஃ5 பங்கு
- ஜிசியா – முஸ்லீம் அல்லாதோர் மீது திணிக்கப்பட்ட வரி
- ஜகத் – இஸ்லாமிய சமய சடங்கு வரி
திவானி பந்தகானி – அடிமைகளுக்கான துறை. திவானி கைரத் – விதவைப் பெண்களுக்கான துறை. திவானி கிரமத் – திருமண உதவித்தொகை.
மிக நீளமான கால்வாய் சட்லெஜ் முதல் ஹான்சி வரை அமைக்கப்பட்டது.
இவர் பற்றிய சுயசரிதை நூல் – பதூஹத் – இ – பிரோஷஹி, இயற்பியல் நூல் – குதுப் பெரோஸ் ஷாஹி.
இவரது நாணயங்களில் எகிப்து காலிப்பின் உருவம் பொறிக்கப்பட்டது. முஸ்லீம் அல்லாதவர்கள் மீது ஜிசியா வரி கட்டாயம் விதிக்கப்பட்டது. நீர்ப்பாசன வரி விதித்த முதல் சுல்தான் ஆவார்.
கடைசி அரசர் – நசிருதீன் முகமது துக்ளக். தைமுரின் படையெடுப்பால் 1413-ல் துக்ளக் வம்சம் முடிவுக்கு வந்தது.
சையதுகள்: 1414 – 1451
தைமூர் இந்தியாவை விட்டுச்செல்லு முன்பு கிசிர்கான் என்பவரை முல்தானின் ஆளுநராக நியமித்திருந்தார்.
1414 -ல் கிசிர்கான் டெல்லியைக் கைப்பற்றி சையது மரபைத் தோற்றுவித்தார்.ஆனால் இவரின் வம்சவளிகள் அவர்களுக்கெதிரான சதிகளை முறியடிப்பதிலேயே காலம் கழித்தனர்.
லோடி வம்சம்: (கி.பி. 1451 – 1526)
சையதுகளை அடுத்து ஆட்சிக்கு வந்த லோடிகள் ஆப்கானியர்கள் ஆகும.; டெல்லியின் முதல் ஆப்கானிய ஆட்சியாளர் பஹ்லுல் லோடி. அவருக்கு முன்பு செய்த அனைவரும் துருக்கியர்கள்.
1489 – இல் அவர் மறைந்த பின் அவரது மகன் சிக்கந்தர் லோடி ஆட்சிக்கு வந்தார்.
சிக்கந்தர் லோடி: 1489 முதல் 1517 வரை
சிக்கந்தர் லோடி தன் தலைநகரை டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றினார். இவர் தீவிர சமயக் கொள்கை உடையவர்.
எனவேதான் சிக்கந்தர் லோடி சமயக் கொள்கையில் ஒளரங்கசிப்பின் முன்னோடி எனக் கருதப்படுகிறார்.
சிக்கந்தர் பின் அவரது மகன் இப்ராஹிம் லோடி அரியணையேறினார். பஞ்சாப் முதல் பீகார் வரை முழுவதையும் அவர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
இவரது ஆட்சியில் நீர்பாசன வசதிகள் மேம்படுத்தப்பட்டன. பஞ்சாபின் ஆளுநராக தௌலத்கான் லோடி இப்ராஹிம் லோடி (சிக்கந்தர் லோடி மகன்)யால் அவமதிக்கப்பட்டார்.
மனம் வெறுத்த தௌலத்கான் லோடி இந்தியா மீது படையெடுத்து வரும்படி பாபருக்கு அழைப்பு விடுத்தார். 1526-ல் பானிப்பட் போரில் பாபருடன் போரிட்டு தோற்றதன் விளைவாக இப்ராஹிம் லோடியுடன் லோடி வம்சம் முடிவடைந்தது.
டெல்லி சுல்தானின் ஆட்சி முறை :
• டெல்லி சுல்தானியம் நிறுவப்பட்டுஇ நன்கு விரிவடைந்த போது வலிமையும், திறமையுமிக்க ஆட்சி முறையும் வளரத தொடங்கியது.
• டெல்லி சுல்தானியம் அதன் உச்ச கட்டத்தில் இருந்த போது அதன் ஆதிக்கம் தெற்கே மதுரை வரை இருந்தது.
• இஸ்லாமிய சமயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய அரசாக டெல்லி சுல்தானியம் விளங்கியது. மாகாணங்கள் இக்தாக்கள் எனப்பட்டன. தொடக்கத்தில் nவை உயர்குடியினரின் கட்டுப்பாட்டில் இருந்தன.
• முகமது பின் துக்ளக், திவானி கோஹி என்று தனியாக ஒரு வேளாண் துறையை ஏற்படுத்தினார்.
இந்தியாவில் அராபியரும்இ துருக்கியரும் பர்தா முறையை அறிமுகப்படுத்தினர்.
அமைச்சர்கள்:
1. வசீர் – பிரதம மற்றும் நிதி அமைச்சர்
2. திவானி ரிஸாலத் – வெறியுறவுத் துறை
3. சுதர்-உஸ்-சாதர் – இஸ்லாமிய சட்ட அமைச்சர்
4. திவானி இன்ஷா – அஞ்சல் துறை
5. திவானி அர்ஸ் – பாதுகாப்பு, படைத்துறை அமைச்சர்
6. காஸி-உல்-கஸாத் – நீதித்துறை அமைச்சர்
மூன்று வகை கட்டடக் கலை முறைகள்:
1. நகரக் கலைபாணி
2. டெல்லி பேரரசு கலைபாணி
3. இந்துக்கள் கலைபாணி
- அடிமை வம்சத்தினரால் கட்டப்பட்டவை – குதுப்மினார், குவாத் உத் இஸ்லாம் மசூதி, நாசிர் உத் தீன் முகமது கல்லறை.
- கில்ஜி வம்சத்தினரால் கட்டப்பட்டவை – அலாய் தார்வாசா, ஹரத்நிஜாமுதீன் அலுயா தர்கா, சீரி நகரம்.
- துக்ளக் வம்சத்தினரால் கட்டப்பட்டவை – ஜஹான்பாக், துக்ளக்காபாத், அதலாபாத் கோட்டை, கியாசுதீன் கல்லறை.
- லோடி வம்சத்தினரால் கட்டப்பட்டவை – டெல்லியில் உள்ள லோடி பூங்கா, மோதி மசூதி, சிக்கந்தர் லோடி கல்லறை.
பிற்காலச் சோழர்கள்
• பேரரசுச் சோழ மரபைத் தோற்றுவித்தவர் “விஜயாலய சோழன்”
• பிற்காலச் சோழர்கள் கி.பி 850 முதல் கி.பி 1279 வரை ஆட்சி செய்தனர்.
• பிற்கால சோழ மரபின் முதல் அரசர் விஜயாலய சோழன் ஆவார். அவர் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டிருந்தார்.
• சோழ அரசர்கள் வெள்ளி, செப்புக் காசுகளை அதிகமாகவும், பொற்காசுகளை குறைவாகவும் வெளியிட்டனர். இந்நாணயங்களில் புலி சின்னம் காணப்படுகிறது.
முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907)
விஜயாலயனின் மகனான முதலாம் ஆதித்தன், அபராஜித பல்லவனை முறியடித்து பல்லவர் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு தொண்டை மண்டலத்தையும் சோழப் பேரரசோடு இணைத்துக் கொண்டார்.
முதலாம் பராந்தகன் (கி.பி. 907-950)
சோழர்களில் முதல் பராந்தக சோழன் “பரகேசரி” என்ற சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்.
இவரை பொன்வேய்ந்த சோழன், மதுரை கொண்டான் என்ற பெயரும் முதலாம் பராந்தனுக்கு உண்டு.
முதலாம் இராஜராஜன் (கி.பி. 985-1012)
சேர, பாண்டிய, இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றார்
அருண்மொழி, இராஜகேசரி, சிவபாதசேகரன், ஜெயங்கொண்டான் ஆகிய பட்டங்கள் முதலாம் இராஜபஜனுக்கு உண்டு.
தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டியவர் முதலாம் இராஜராஜன் ஆவார்.
முதலாம் இராஜேந்திரன் (கி.பி. 1012-1044)
கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கப்பட்டார்..
கடாரம் கொண்டான், முடிகொண்டான், பண்டிதசோழன், உத்தம சோழன் ஆகிய பட்டங்களும் வழங்கப்பட்டன. இவர் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்.
முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070-1120)
சங்கம் தவிர்த்த சோழன் என்று சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது
72 வணிகர்கள் அடங்கிய தூதுக்குழுவை சீனாவிற்கு அனுப்பிவைத்தார்.
விக்கிரம சோழன் (கி.பி. 1120 முதல் கி.பி. 1132 வரை)
இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி 1133 முதல் கி.பி 1150 வரை)
இரண்டாம் இராஜராஜன் (கி.பி. 1150 முதல் கி.பி. 1163 வரை)
மூன்றாம் இராஜாதிராஜன் (கி.பி. 1163 முதல் கி.பி. 1179 வரை)
மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1179 முதல் கி.பி. 1216 வரை)
மூன்றாம் இராஜராஜன் (கி.பி 1216 முதல் கி.பி. 1245 வரை)
மூன்றாம் இராஜேந்திர சோழன் (கி.பி 1246 முதல் கி.பி. 1279 வரை)
கடைசி சோழ அரசன் மூன்றாம் இராஜேந்திரனை இரண்டாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் முறியடித்ததன் வாயிலாக சோழநாடு பாண்டியப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
விஐயநகர் மற்றும் பாமினி அரசுகள்
சங்கம மரிபச் சேர்ற்த ஹரிஹரரும், புக்கரும் 1336- ஆம் ஆண்டு விஐய நகரத்தை நிறுவினார்.
தங்களது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்ட அவர்கள் துங்கபத்திரை நதியின் தென்கரையில் ஒரு புதிய நகரத்தை நிறுவனர். “வெற்றி நகரம்” என்ற பொருள் கொண்ட “விஐயநகரம்” என்று வழங்கப்பட்டது.
விஐயறகரப் பேரரசு ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதையும் மற்றும் கேரளத்தையும் உள்ளடக்கியதாக விரிவடைந்தது.
வீர நரசிம்மா : கி.பி. 1503 – 1509இ இவரால் துளுவ மரபு தோற்றுவிக்கப்பட்டது.
விஜயநகரப் பேரரசு: 1336-1580
“ஹரிஹரன்”, “புக்கர்” என்ற இரு சங்கம் சகோதரர்களால் “துங்கபத்திரை” ஆற்றின் தென்கரையில் விஜயநகரப் பேரரசு நிர்மாணிக்கப்பட்டது.(1336)
ஆமுக்த மால்யதம் கங்காதேவி எழுதிய, மதுரா விஜயம், மனுசரிதம் போன்றவை விஜயநகர சமகால நூல்கள்.
1. சங்கம வம்சம் – கி.பி 1336 – 1485 (தோற்றுவித்தவர் – முதலாம் ஹரிஹரன்)
2. சாளுவ வம்சம் – கி.பி 1485 – 1505 (தோற்றுவித்தவர் – நரசிம்மர்)
3. துளுவ வம்சம் – கி.பி 1505 – 1570 (தோற்றுவித்தவர் – வீர நரசிம்மர்)
4. அரவீடு வம்சம் – கி.பி 1570 – 1646 (தோற்றுவித்தவர் – திருமலா)
கிருஷ்ணதேவராயர்: 1509-1529
கிருஷ்ணதேவராயர் துளுவ வம்சத்தின் சிறந்த அரசரும், விஜயநகரத்தின் பெருமை மிக்க அரசருமாவார்.
போர்ச்சுக்கீசிய ஆளுநர் அல்புகர்க்குடன் 1570-ல் ஓர் உடன்படிக்கை செய்து குதிரைகளைப் பெற்றார்.
தட்சிண சமுத்தீஸ்வரன் என்ற சிறப்புப் பெயர் உண்டு மற்றும் ஆந்திரபோஜர் என்று அவர் அழைக்கப்பட்டார்.
கலை, இலக்கியப் புலவராகவும் அவர் திகழ்ந்தார். எனவே ஆந்திர போஜர் என்று அவர் அழைக்கப்பட்டார்.
“அல்லசானி பெத்தண்ணா” (அவையை அலங்கரித்தவர்) அந்திரகவிதாபிதாமகர் என்றும் அவர் புகழப்பட்டார். அவரது முக்கிய படைப்புகள் “மனுசரிதம்” மற்றும் “ஹரிகதாசாரம்” என்பதாகும்.
பிங்கலி சூரண்ணாஇ தெனாலி ராமகிருஷ்ணா இருவரும் சிறந்த அறிஞர்களாகத் திகழ்ந்தனர். 1565-ல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசு முற்றிலும் அழிந்தது எனலாம்.
விஜயநகர ஆட்சி முறை, நிர்வாகம்:
விஜயநகர கிராம நிர்வாகத்தின் முக்கிய அமைப்பு ஆயக்காரர் முறையாகும்.
விஜயநகரின் முக்கிய தங்க நாணயம் “வராகன்” என்பதாகும்.
முக்கிய துறைமுகம், “கண்ணனூர்” துறைமுகம். விஐய நகர ஆட்சியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியில் முழு அதிகாரங்களை வழங்கியிருந்தனர்.
விஐய நகர ராணுவம் திறமையான முறையில் சீரமைக்கப்பட்டிருந்தது. குதிரைப்படை, காலாட் படை, பீரங்கிப்படை, யானைப் படை என நான்கு முக்கிய பிரிவுகளை அது கொண்டிருந்தது.
பாமினி அரசு: 1347-1526
• அலாவுதீன் பாமன் ஷா – பாமினி அரசைத் தோற்றுவித்தார்.
• முக்கிய பாமினி அரச பிரிவுகள்:
1. பிஜபூர்
2. அகமது நகர்
3. பிராடர்
4. பிடார்
5. கோல்கொண்டா
• தலைநகரம் குல்பர்கா, ஆஷனாபாத் என பெயர் மாற்றப்பட்டது.
முதலாம் முகமது ஷா (1358 – 1377)
இரண்டாம் முகமது ஷா (1378 – 1397)
பெரோஷா பாமினி (1397 – 1422)
அலாவுதீன் ஹாசன் பாமினி அரசைத் தோற்றுவித்தார். இவர் ஹாசன் கங்கு என்று அழைக்கப்பட்டார். மேலும், “பாமன்ஷா” என்ற பெயரை தமக்கு சூட்டிக்கொண்டார்.
பாமினி அரசை மொத்தம் 14 சுல்தான்கள் ஆட்சி புரிந்தனர்.
அலாவுதீன் பாமன் ஷா – தலை சிறந்த அரசர்.
அகமதுஷா பாமினி அரசின் தலைநகரை குல்பர்க்காவிலிருந்து பீடாருக்கு மாற்றினார்.
இவரது ஆட்சியில அராபியக்கடல் தொடங்கி வங்காள விரிகுடா வரை பாமினி அரசு விரிவடைந்தது. மேற்கில கோவா முதல் பம்பாய் வரை நீண்டிருந்தது. கிழக்கில் காக்கிநாடா முதல் கிருஷ்ணா நதியின் முத்துவாரம் வரை பரவியிருந்தது.
கட்டடக் கலை – குல்பர்கா மசூதி, ஜிம்மா மசூதி, கோல்கொண்டா கோட்டை, கோல்கும்பாஸ் கட்டடம் (முணுமுனுக்கும் அரங்கம்)
கடைசி அரசர் – மூன்றாம் முகமதுஷா. பாதுகாவலன் – முகமது கவான்
முகமது காவன்
இவர் ஒரு பாரசீக வணிகர், இவரின் வழிகாட்டுதலால் பாமினி அரசு அதன் புகழின் உச்சியை எட்டியது. “வணிகர்களின தலைவன்” என்ற பட்டத்தை சுல்தான் வழங்கினார்.
முகலாயப் பேரரசு:1526-17
இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர்இ அவரது இயற்பெயர் சாகிருதீன் முகமது.
1527 – ஆம் ஆண்டு ஆக்ராவிற்கு அருகில் நடைபெற்ற காணுவாப் போரில் அவரை முறியடித்தார். இந்த வெற்றிக்குப் பிறகு பாபர் “காஸி” என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.
கோக்ரா போரில் ஆப்கன்களை முறியடித்ததின் மூலம் பாபர் இந்தியாவில் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்தினார்.
பாபரின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஒட்டாமனின் (ருனிக்) போரிடும் முறையாகும். இவர் இந்தியாவில் மூன்று மசூதிகளை கட்டியுள்ளார்;.
1. பானிபட் 2. சம்பல்பூர் 3. அயோத்தி
பாபர்: 1526-1530
• பாபர் என்ற சொல்லுக்கு புலி என்று பொருள். இயற்பெயர் ஜாகிருதீன் முகம்மது பாபர்.
• முதல் பானிபட் போர்: 1526. டெல்லிக்கு அருகில் உள்ள பானிப்பட் என்ற இடத்தில்
நடைபெற்றது. பாபர் மற்றும் இப்ராகீம் லோடிக்கு இடையே நடைபெற்றது. பாபர் வெற்றி பெற்றார், இந்தியாவில் முதன் முதலில் பீரங்கியை பாபர் பயன்படுத்தினார்.
• பாபர் டெல்லியையும், ஆக்ராவையும் கைப்பற்றி 1526-ல் முகலாயப் பேரரசை இந்தியாவில் நிறுவினர்.
கான்வா போர்: 1527
• பாபர் எள ரானா சங்கா. இராணா சங்கா படுகாயமடைந்து தோற்கடிக்கப்பட்டார். மேவார் பாபரால் கைப்பற்றப்பட்டது.
சந்தேரிப் போர்:1528
• பாபர் மற்றும் மேதினி ராய்க்கு இடையே நடைபெற்றது. பாபர் வெற்றிபெற்று மாளவத்தை கைப்பற்றினார்.
கோக்ரா போர்: 1529
• நுஸ்ரத்ஷா ூ முகமது லோடி மற்றும் பாபர்
நுஸ்ரத்தையும் லோடியையும் பாபர் தோற்கடித்தார்.
பாபர்; தன் சுயசரிதை “பாபரின் நினைவுகள்” அல்லது பாபர் நாமா
ஹ{மாயுன்: 1530-40, 1555-56
ஹ{மாயுன் என்றால் அதிர்ஷ்டசாலி என்று பொருள்
தாரியா போர்: 1532
• ஹ{மாயுன் மற்றும் முகம்மது லோடிக்கு இடையே நடைபெற்றது. ஹ{மாயுன் லோடியை தோற்கடித்து வெற்றி கண்டார்.
• 1539-ல் சௌசா போரிலும் 1540-ல் கன்னோசி அல்லது பில்கிராம் போரிலும், ஹ{மாயுன்- n~ர்கானிடம் தோல்வி கண்டார்.
ஷெர்ஷா: 1540-45
சூர் மரபை தோற்றுவித்தவர் ஷெர்ஷா, இயற்பெயர் பரீத். பஞ்சாப, மாவளம், சிந்து, மூல்தான, பண்டேல்கண்ட் போன்றவை அவரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அடங்கும். ஷெர்ஷாவின் பேரரசு நாற்பத்தியேழு சர்க்கார்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
பேரரசில் “இக்தா” என்றழைக்கப்பட்ட நிர்வாகப்பிரிவுகளும் இருந்தன. ஷெர்கான் என்ற சிறப்புப் பெயரை இவருக்கு ஜான்பூர் ஆளுநர் வழங்கினார்.
தாம் என்ற புதிய வெள்ளி நாணயத்தை அறிமுகப்படுத்தினார்.
நான்கு முக்கிய பெருவழிச் சாலைகளை அமைத்தவர் ஷெர்ஷா
அவையாவன:
1) சோனார்கான் முதல் சிந்து வரை
2) ஆக்ரா முதல் புர்ஹாம்பூர் வரை
3) ஜோத்பூர் முதல் சித்தூர் வரை
ஷெர்ஷா “அக்பரின் முன்னோடி” என அழைக்கப்பட்டார். (இவரின் நில சீர்திருத்தத்தை அக்பர் பின்பற்றினார்) நவீன நாணய முறையின் தந்தை என
அழைக்கப்படுகிறார்.
ஹேமச்சந்திரா
ஹெமு விக்ரமாதித்யா என்பவர் இடைக்கால இந்திய வரலாற்றில் 16- ம் நூற்றாண்டில் இந்தியாவின் இந்து பேரரசாக பதவி வகித்தார். ஹெமு மேற்கொண்ட 22 போர்களிலும் வெற்றிவாகை சூடினார்.
ஹெமு அக்டோபர்7, கி.பி.1556 -ல் டெல்லியில் “விக்ரமாதித்யா” என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார்.
அக்பர்: 1556-1605
தனது பதினான்காவது வயதில் கி.பி. 1556-ம் ஆண்டு பேரரசராக முடிசூட்டப்பட்டார்.
பைராம்கான் அக்பரின் பாதுகாப்பாளராக உமாயூனால் நியமிக்கப்பட்டார்.
இரண்டாம் பானிப்பட் போர்: 1556
ஹெமு மற்றும் அக்பர் இடையே நடைபெற்றது.
இப்போரில் ஹெமு அக்பரால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இவ்வெற்றியின் மூலம் முகலாயரின் ஆட்சி டெல்லி மற்றும் ஆக்ராவில் மீண்டும் நிலை நாட்டப்பட்டது.
1579- ல் அக்பர “தவறுபடா ஆணையை” வெளியிட்டு தமது அதிகாரங்களை உறுதிப்படுத்தினார்.
நிலங்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன: 1. போலஐ; 2.பரௌதி 3.சச்சார் 4.பஞ்சார்
அக்பரின் பேரரசு மேற்கே வங்காளம் வரையிலும் வடக்கே இமயம் முதல் தெற்கே கோல்கொண்டா வரையிலும் பரவியிருந்தது.
“ஜிசியா” மற்றும் “புனிதப் பயண” வரியினை ரத்து செய்தார்.
அபுல்பாசல் “அயினி அக்பரி” மற்றும் “அக்பர் நாமா” என்ற வரலாற்று புகழ்மிக்க நூல்களை எழுதினார். அபுல்பைசி இதிகாச நூல்களாகிய இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
சமயக் கொள்கை (தீன்-இலாஹி)
“தவறுபடா ஆணையினை” பிரகடனப்படுத்தினார். இதன்படி அக்பர் தன்னை சமயத் தலைவராகவும், அரசராகவும் அறிவித்துக் கொண்டார்.
கி.பி. 1582-ல் அக்பர் “தீன்-இலாஹி” அல்லது தெய்வீக மதத்தினை வெளியிட்டார். தீன்-இலாஹி அக்பருடைய மதசகிப்புத் தன்மையின் வெளிப்பாடு.
நிலவரி சீர்திருத்தம்:
அக்பர் ஷெர்ஷாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றினார். நிலம் முறையாக அளவீடு செய்யப்பட்டு விளைச்சலில் 1ஃ3 பகுதி வாரியாக வசூலிக்கப்பட்டது.
மன்சப்தாரி முறை
மன்சப்தாரி முறை முகலாயரின் இராணுவம் மற்றும் பொது நிர்வாக முறைக்கு அடிப்படையாக அமைந்தது. மன்சப் என்றால் “தரம்” அல்லது “தகுதி” என்று பொருள்படும்.
இம்முறையின் கீழ் ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு தகுதிநிலை வழங்கப்பட்டது. மன்சபட தகுதிநிலைகள் “சத்” மற்றும் “சாவர்” என இரு வகைப்படும்.
மன்சப் தகுதி நிலைக்கு வாரிசுரிமை கிடையாது. நியமனங்கள், பதவி உயர்வுகள், பதவி நீக்கங்கள் அனைத்தும் நேரடியாக அரசரால் மேற்கொள்ளப்பட்டன.
அக்பரின் அவையில் நவரத்தினங்கள் (9 அணிகலன்கள்) என்று அழைக்கக்கூடிய ஒன்பது தலைசிறந்த அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர். அக்பர் கி.பி 1605ஆம் ஆண்டு தனது 63-வது வயதில் மறைந்தார்.
ஜஹாங்கீர் : 1605-1627
ஜஹாங்கீர் அல்லது “உலகினை வெல்பவர்” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
ஜஹாங்கீர் ஆட்சியின் போது இங்கிலாந்து வணிகக் குழு சார்பாக தளபதி “வில்லியம் ஹாக்கின்ஸ்” மற்றும் “சர் தாமஸ் ரோ” ஆகியோர்கள் முகலாய அரசவைக்கு வருகை புரிந்தார்.
1615 ஆம் ஆண்டு சூரத் நகரில் வணிகம் செய்ய சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றார்.
ஜஹாங்கீர் தலைசிறந்த அறிஞர் ஆவார். தன்னுடைய சுய சரிதையை “துசுக்-இ-ஜஹாங்கிரி” என்ற பெயரில் எழுதியுள்ளார்.
“நீதிச்சங்கிலி மணி” என்ற ஒரு புதிய நீதி வழங்கும் முறையினை அறிமுகப்படுத்தினார்.
நீதி வேண்டுபவர்கள் அந்த நீதி மணியினை ஒலிக்கச் செய்வதின் மூலம் அரசரின் கவனத்தை ஈர்த்து நீதியை பெற்றனர்.
நூர்ஜஹான்
மெகருன்னி~h “நூர் மஹால்” (அரண்மனையின் ஒளி) என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றார்.
1611 முதல் 1626 வரையிலான காலத்தினை முகலாய வரலாற்றில் “நூர்ஜஹானின் காலம்” என்றழைக்கப்பட்டது.
ஷாஜஹான்: 1628-1658
• ஜஹாங்கீரின் மகனான குர்ரம் வரலாற்றில் ஷாஜஹான் என்று அழைக்கப்பட்டார்.
• குர்ரம் “உலகின் அரசன்” – “~hஜஹான்” என அழைக்கப்பட்டார்.
• ஷாஜஹான் போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக போரிட்டார். இவரது ஆட்சிக் காலம் “மொகலாயர்களின் பொற்காலம்” என்றழைக்கப்படுகிறது.
கட்டடக்கலையின் இளவரசர்
ஷாஜஹான் கட்டடக்கலையின் “இளவரசர்” என்றும் “பொறியாளர் பேரரசர்” என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறார்.
“ஷாஜஹானாபாத்” என்ற புதிய அழகிய தலைநகரை உருவாக்கினார்.
டில்லியில் செங்கோட்டையை உருவாக்கினார். “ஜிம்மா மசூதியை” வெள்ளை பளிங்கு கற்களால் கட்டினார்.
தாஜ்மஹால்
“உஸ்தாத் இஷா” என்ற தலைமை சிற்பியின் மேற்பார்வையில் இம்மாளிகை கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
22 ஆண்டுகளின் கடின உழைப்பில் மாளிகை கட்டப்பட்டுள்ளது.
“மயிலாசனத்தை” உருவாக்கினார். புகழ் பெற்ற “கோஹனூர் வைரத்தை”அதில் பதிக்கச் செய்தார்.
இம்மயிலாசனம் முகலாயர்களின் கலைநுணுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஒளரங்கசீப்: 1658-1707
ஆலம்கீர் என்ற சிறப்பு பட்டத்தினைச் சூட்டிக் கொண்டார்.
ஆலம்கீர் அல்லது உலகை வெல்பவர் என்று பொருள்.
ஒளரங்கசீப் சமயப் பற்றுமிக்க ஒரு பேரரசராவார். இவர் “சன்னி” முஸ்லீம் பிரிவைச் சார்ந்தவர்.
முஸ்லீம் அல்லாதவர்கள் மீது “ஜெசியா” மற்றும் “புனிதப் பயண” வரியினை மீண்டும் விதித்தார்.
தொடக்கத்தில் ஒளரங்கசிப் புதிதாக இந்துக் கோயில்கள் கட்டுவதையும் பழைய கோயில்கள் புதுப்பிக்கப்படுவதையும் தடை செய்தார்.
பின்னர் இந்து கோயில்களை அழிக்கவும் முற்பட்டார். மதுரா, பெனாரஸ் போன்ற இடங்களிலிருந்து புகழ்பெற்ற கோயில்கள் சிதைக்கப்பட்டன.
மதுராவிலிருந்த ஜாத்துகளும், மெவாரிலிருந்த சத்நாமியர்களும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். எனவே, முகலாயப் பேரரசின வீழ்ச்சிக்கும் ஒளவுரங்கசீப் காரணமானர்.
ஒளவுரங்கசீப் – 1. மோதி மசூதி (டெல்லி), 2.பாதுஷா மசூதி (லாகூர்)
ஒளரங்கசீப்பும் சீக்கியர்களும்
ஓன்பதாவது சீக்கிய கருவான “தேஜ்பகதூரை” டெல்லிக்கு அழைத்து வந்து மத மாற்றம் செய்ய முனைந்தார். அவர் அதற்கு உடன்படாததால் கொல்லப்பட்டார்.
10வது சீக்கிய குருவாக பொறுப்பேற்ற “குரு கோவிந்த் சிங்” சீக்கியர்களை முகமதிய எதிர்ப்பு சமூகமாக மாற்றினார். தக்காண புற்றுநோய் ஒளரங்கசீப்பை அழித்தது.
மொகலாயர்களின் ஆட்சி முறை
• மொகலாயர்களின் ஆட்சி முறை இராணுவம் சார்ந்த வல்லாட்சியாகும்.
• நிர்வாகம் வசதியைக் கருதி பேரரசு பல்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவற்றை “சபா” என்று அழைத்தனர். அக்பரின் காலத்தில் பேரரசு 15 சபாக்களாக பிரிக்கப்பட்டு இருந்தது.
• அக்பர் “ஜப்தி” முறையை அறிமுகப்படுத்தினார். மொகலாயப் பேரரசினை முற்றிலுமாக அழிவுறச் செய்தது நாதிர்~h மற்றும் அப்தாலியின் படையெடுப்புகளாகும்.
மராத்தியர்கள்
தக்காணம் மற்றும் மஹாராஷ்டிரா மலைப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் “மராத்தியர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.
“கொரில்லா” என்ற போர் முறையை மராத்தியர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
“கொரில்லா” போர் முறை என்பது ‘முறைசாரா போர்முறை’ ஆகும்.
மராத்தியர்கள் மலைகளுக்கிடையே ஒளிந்து கொண்டு திடீரென்று எதிரிகளை தாக்கும் முறையாகும்.
சிவாஜி: 1627-1680
சிவாஜி, முஸ்லீம்களின் கீழ் பணியாற்ற வெறுப்பு கொண்டார். 1665-ல் புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது. ஒளரங்கசீப் சிவாஜியை, ‘மலை எலி’ என்றும் ‘தக்காண புற்றுநோய்’ என்றும் அழைத்தார்.
1674-ஆம் ஆண்டு ரெய்கார் கோட்டையில் சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்றது.
சிவாஜி “சத்ரபதி” என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்.
இந்த முடிசூட்டு விழாவின் மூலம் புதிய பேரரசு (மராத்திய பேரரசு) தோன்றியது.
நிர்வாகம்
சிவாஜி ஜமின்தாரி முறையை ஒழித்தார். விளைச்சலில் (2ஃ5) ஐந்தில் இரண்டு பகுதி அரசன் பங்காக நிர்ணயிக்கப்பட்டது.
“சுவுத்”, “சர்தே~;முகி” என்ற இரண்டு முக்கிய வரிகள் வசூலிக்கப்பட்டன.
கிராமங்களில் வழக்குகளை கிராமப் பஞ்சாயத்து சபை தீர்த்து வைத்தது.
இவரது படையில் “கப்பற்படை” இடம் பெற்றிருந்தன.
பேஷ்வாக்கள்
மராத்திய பேரரசில் “பிரதம அமைச்சர்கள்” “பீஷ்வாக்கள்” என்றழைக்கப்பட்டனர்.
பாலாஜி விஸ்வநாத்: 1713-1720
மராத்திய மன்னர் ~hகுவின் ஆட்சிக்குபின் முதல் பீஷ்வாக பாலாஜி விஸ்வநாத் பொறுப்பேற்றார்.
பாஜிராவ்: 1720-1740
பாலாஜி விஸ்வநாத்தின் மகன் பீஷ்வா பாஜிராவ்.
மராத்திய பேரரசை வடக்கு பகுதியில் விரிவுபடுத்த விரும்பினார்.
‘முற்போக்கு கொள்கையை’ கடைபிடித்தார்.
பாலாஜி பாஜிராவ்
இவர் மூன்றாவது பீஷ்வா ஆவார். கி.பி. 1758-ல் மராத்திய பேரரசின் பெருமையையும், புகழையும் உச்சநிலைக்கு கொண்டு சென்றார்.
நாதிர்ஷா:
• பாரசீக மன்னரான இவர் 1739 இல் ;இந்தியாவின் மீது படையெடுத்தார்
• மொகலாயர்களை கர்னூல் போரில் தோற்கடித்தார்.
• கோகினூர் வைரம் மற்றும் மயிலாசனத்தை கைப்பற்றி சென்றார்.
அகமது ஷா அப்தாலி (1748-1767)
• மூன்றாம் பானிபட் போர் (மராத்தியர்கள் – அகமது ஷா அப்தாலி)
• 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியப் படையெடுப்பின் போது தோல்வியைத் தழுவினார்.
முக்கிய ஆண்டுகள் (மராத்தியர்கள்)
• 1627 – சிவாஜி பிறப்பு (சிவனேரிக் கோட்டை)
• 1646 – புரந்தர், ரெய்கார், தோர்னா, கல்யாண் கோட்டைகளை பிஜபூர்
சுல்தான்களிடமிருந்து கைப்பற்றினார்.
• 3665 – புரந்தர் உடன்படிக்கை (சிவாஜி-ராஜா ஜெய்சிங்)
• 1674 – ரெய்கார் கோட்டையில் சத்ரபதியாக முடி சூட்டிக் கொண்டார்.
• 1680 – சிவாஜி மரணம் 1713 – பீஷ்வா ஆட்சி
• 1707 – ஒளரங்கசீப் 1739 – நாதிர்ஷா படையெடுப்பு
மூன்றாவது பானிப்பட் போர்: 1761
அகமதுஷா அப்தாலி, ரோஹில்கண்டு அரசர் நாஜிப்-உத்-தௌலா மற்றும் அயோத்தி நவாப்சிராஜ் உத்தௌலா ஆகியோரின் உதவியோடு, படையெடுப்பை மேற்கொண்டார்.
சதாசிவராவ் தலைமையிலான மராத்தியப் படைகளை சந்தித்தார்.
இது வரலாற்றில் மூன்றாம் பானிப்பட் போர் என்று அழைக்கப்படுகிறது.
இப்போரின் முடிவு ஆங்கிலேயர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது.
மராத்தியர்களின் ஆக்கிரமிப்புக் கொள்கை மற்றும் கொள்ளையடித்தல் கொள்கை தோல்விக்கு வழிவகுத்தது. நாதிர்ஷாவின் படையெடுப்பு, இந்தியாவை “இரத்த பூமியாக” மாற்றியது.
தென்னிந்திய அரசுகள்
பண்டைய தமிழகமானது, சேர, சோழ, பாண்டியநாடு என்ற முப்பெரும்; அரசியல் பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது.
களப்பிரர்கள் கி.பி. 300 முதல் 600 ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டார்.
அதன் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்த, பிற்கால பல்லவப் பேரரசு, சோழ, பாண்டியப் பேரரசு ஆகும்.
பல்லவப் பேரரசு
பல்லவ மரபை, முற்காலப் பல்லவர், பிற்காலப் பல்லவர் என பிரித்து வகுக்கப்படும்.
சிம்மவிஷ்ணுவின் தலைமையில் பல்லவர்கள், களப்பிரர்களை தோற்கடித்து வடதமிழ் நாடாகிய தொண்டை மண்டலத்தில் தமது ஆட்சியை நிறுவினர்.
பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும்.
பிற்காலப் பல்லவர்கள்: கி.பி. 1570-903
பிற்காலப் பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்ம வி~;ணு.
வடக்கில் ஆந்திரப் பகுதியான வி~;ணுகுண்டின் முதல், தெற்கில் காவிரி ஆறு வரையில் பேரரசை நிறுவினார். இவர் “அவனிசிம்மன்” அதாவது “உலகின் சிங்கம்” எனப் புகழப்பட்டார்.
முதலாம் மகேந்திரவர்மன்: கி.பி. 600-630
சிம்மவிஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவார்.
சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி, பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தார்.
மகேந்திரவர்மனைத் தோற்கடித்து பல்லவநாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றினார்.
மகேந்திரவர்மன் தமது ஆட்சியின் தொடக்கத்தில் சமண சமயத்தைப் பின்பற்றினார்.
பின்னர் சைவக்குரவர் அப்பர் என்பவரால் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டார்.
முதலாம் நரசிம்மவர்மன்: கி.பி 630-668
இவரை “மாமல்லன்” என்றும் அழைப்பர், மற்போரில் சிறந்தவன் என்பது இதன் பொருளாகும்.
சாளுக்கியர் தலைநகரான வாதாபிக்குப் படையெடுத்துச் சென்று வென்றதால் இவர், ‘வாதாபி கொண்டான்’ எனவும் புகழப்பட்டார்.
இவரின் ஆட்சியின் போதுதான் சீனப்பயணி “யுவான்சுவாங்” தலைநகர் காஞ்சிக்கு வருகை புரிந்தார். மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் ரதங்கள் இவரது கட்டிடக்கலைக்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.
இரண்டாம் நரசிம்மவர்மன்: 691-728
காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில், பனைமலையில் தாளகிரீஸ்வரர் கோயில் உட்பட பல ஆலயங்களை கட்டினார்.
தண்டி என்ற வடமொழி அறிஞர், “தண்டி அலங்காரம்” என்னும் இலக்கண நூலை எழுதினார். நரசிம்மவர்மன் ஆட்சியில் சீனாவுடன் வணிக உறவு ஏற்பட்டது.
பல்லவர்களின் நிர்வாகம்
பல்லவர்கள் சிறந்ததொரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்.
பல்லவநாடு “ராஷ்டிரம்” எனக்கூடிய பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.
மண்டலங்கள் பல வி~யங்களாகவும் (கோட்டங்களாகவும்), வி~யங்கள் பல நாடுகளாகவும், நாடுகள் பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டன.
நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமம் ஆகும். கிராமத்தை நிர்வாகிக்க “ஊர் அவை” இருந்தது.
பல்லவர்களின் பங்களிப்பு
முதலாம் மகேந்திரவர்மன் “மத்தவிலாச பிரகாசனம்”, “பகவத்வியூகம்” ஆகிய நூல்களை எழுதினார். பாரவி “கீதார்ஜீனியம்” என்ற நூலை எழுதினார்.
பாண்டியப் பேரரசு
பாண்டியப் பேரரசானது இன்றைய மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களும், திருச்சியில் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும். பாண்டியர்களின் வரலாற்றை, முற்காலப்பாண்டியர்கள் முதலாம் பாண்டியப்பேரரசு மற்றும் இரண்டாம் பாண்டியப்பேரரசு என மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்தப்படுகிறது.
முற்காலப் பாண்டியர்கள்
தமிழை வளர்க்க தமிழ்ச்சங்கங்கள் அமைத்த பெருமை பெற்றவர்கள்.
பாண்டியர்களின் தலைநகரம் மதுரை ஆகும். அவர்களது இலச்சினை மீன் உருவமாகும்.
தமிழகத்தை களப்பிரர்கள் கைப்பற்றியபோது முற்காலப் பாண்டியர் ஆட்சியானது முடிவுக்கு வந்நது.
முதலாம் பாண்டியப் பேரரசு
கி.பி. 550-950 முதலாம் பாண்டியப் பேரரசுகாலம் என்பர். இவர்கள் பாண்டிய பேரரசை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் விரிவுபடுத்தினார்கள்.
இரண்டாம் பாண்டியப் பேரரசு
கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் மெல்ல, சோழரின் தலைமயிலிருந்து விடுபட்டு தங்களது தனியரசை நிறுவினர்.
முதலாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன் : 1216-1238
தான் வென்ற சோழ நாட்டை குலோத்துங்கனிடமே கொடுத்தார்.
இதனால் “சோனாடு வழங்கியருளிய சுந்தரப் பாண்டியன்” என்று புகழப்பட்டார்.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்: 1253-1268
இரண்டாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியனை அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றார்.
“எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரப் பாண்டியன்” மகாராஜாதிராஜா, ஸ்ரீபரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள் என்றெல்லாம் சிறப்பிக்கப்பட்டார்.
பாண்டியர்களின் நிர்வாகம்
வேளாண்தொழில் செய்வோர் “பூமி புத்திரர்கள்” எனப்பட்டனர்.
பாண்டிய நாடு முத்துக்குளிக்கும் தொழிலில் சிறந்து விளங்கியது.
கொற்கை, தொண்டி ஆகியன சிறந்த துறைமுகங்களாக விளங்கின.
பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களை உருவாக்குவதிலும் இவர்கள் முத்திரைப் பதித்துள்ளனர். எ.கா: திருப்பரங்குன்றம், ஆனைமலை, கழுகுமலை, திருச்சி, குன்றக்குடி, சித்தன்னவாசல் ஆகியவற்றைக் கூறலாம்.
பாண்டியர்களின் வீழ்ச்சி
சுந்தரபாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும், ஏற்பட்ட அரசுரிமைப் போரில் பாண்டிய நாடு பிளவுபட்டது. மதுரை சுல்தான்களின் எழுச்சியினால் முழுமையாக பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தது.
பக்தி இயக்கங்கள்
• தென் இந்தியாவில் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் துவங்கி கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை தோன்றி வளர்ந்தது.
• உருவ வழிபாடு மற்றும் பிராமண கொள்கைகளுக்கு எதிராக பக்தி இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டது.
இராமனுஜர்:
• ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார் (தமிழ்நாடு). விஷ்னுவையும் லக்ஷ்மி தேவியையும் வழிபட்டனர்.
• பக்தி இயக்கங்களின் முன்னோடி
• அன்புக்கடல், அடகின் இருப்பிடம் என்று கடவுளை கருதினார்.
• கீதை, உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு போதித்தார்
• சீடர் – இராமானந்தர்
இராமனந்தர்:
• இந்தி மொழியில் போதித்த முதல் சீர்திருத்தவாதி
• மனிதரிடையே உயர்வு தாழ்வு கிடையாது என்று கருதினார்.
• 12 பேர் வெவ்வேறு சமூக பின்னனிகள் கொண்டவர்கள் இவரின் சீடர்கள்
• கபீர் மற்றும் பத்மாவதி – முக்கிய சீடர்கள்
கபீர்:
• இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரே கடவுளின் குழந்தைகள் எனப் போதித்தார்.
• அல்லா,ஈஸ்வரன்,ராமனும் ரஹீமும் ஒருவரே எனப் போதித்தார்.
நாமதேவர் :
• சலவைத் தொழிலாளியின் மகன். இவருடைய பாடல்கள் குரு கிரந்த சாகிப் என்னும் புனித நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
குரு நானக்:
• சீக்கிய சமயத்தை நிறுவினார். கடவுள் ஒருவரே என போதித்தார். உருவ வழிபாட்டை எதிர்த்தார்.
• லாங்கர் எனப்படும் சமபந்தி முறையை அறிமுகம் செய்தார். போதனைகள் பாடல் வடிவில் அமைந்திருந்தது. அவை ஆதிகிரந்தம் என்னும் நூலில் குர்முகி எழுத்து முறையில் எழுதப்பட்டது.
சீக்கிய சமயம் :
- குருநானக் (கி.பி. 1469 – 1539) இவர் சீக்கிய மதத்தை நிறுவினார். பத்து சீக்கிய குருக்களில் முதன்மையானவர்.
- குரு அங்கத் : 1504 – 1552 குருமுகி எழுத்து வடிவத்தை மேம்படுத்தினார்.
- குரு அமர்தாஸ் : 1479 – 1574 சீக்கியர்கள் ஆண்டுக்கு மூன்று முறை கொண்டாடும் விழாக்களை உருவாக்கினார். கோவிந்தவால் சாகிப் என்ற புனித தலத்தை நிறுவினார்.
- குரு ராமதாஸ் : 1534 – 1581 சீக்கிய மதத்தின் புனிதத் தலமான அமிர்தசரஸை நிறுவினார். இவரது வழத் தோன்றல்கள் பொற்கோயிலைச் சுற்றி புனித ஏரியை வெட்டினார். இவர் பதினொரு திருமண சடங்குகளைத் தொகுத்தார்
- குரு அர்ஜீன் தேவ் : 1595 – 1644 சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பை உருவாக்கினார். மேலும் இவர் பொற்கோயிலைக் கட்டினார்.
- குரு ஹரி கோவிந்த் : 1595 – 1644 இவர் தன்னை இராணுவத் தலைவராகவும், சமயத் தலைவராகவும் அறிவித்துக் கொண்டார்.
- குரு ஹரி ராய் : 1630 – 1661 இவர் குரு ஹரி கோவிந்த் – தின் பேரானவர்.
- குரு ஹரிகிருஷ்ணன் : 1656 – 1664 தாடியில்லாமல இருந்த ஒரே சீக்கிய குரு இவரே யாவர்.
- குரு தேஜ் பகதூர்: 1621 – 1675 இவர் தனது சீக்கிய தலத்தை அனந்தபூரில் நிறுவினார்.
- குரு கோவிந்த் சிங் : 1666 – 1708 குரு நானக்கை அடுத்து இரண்டாவது முக்கிய குருவாகத் திகழ்ந்தார். முகலாயர்களின் எதிர்ப்பை தொடர்ந்து சீக்கிய கால்சா படையை உருவாக்கினார். ஏராளமான பாடல்களைத் தொகுத்தார், சீக்கியர்களின் புனித நூலே இறுதியானது என்பதை முன் வைத்தார்;;.
சைதன்யர்:
• வங்களாத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ண பக்தர். இவரை இவர்தம் சீடர்கள் மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதினார்.
• சங்கீர்த்தனம் மூலமாக கடவுளின் புகழ் பாடினார்.
துளசிதாசர்:
• இவர் இராம பக்த்தர். இராமசரிதமனாஸ் என்ற புத்தகத்தை ஹிந்தியில் எழுதினார்.
• இராம வழிபாட்டு முறையைப் பரப்பினார்.
ஐரோப்பியர்கள் வருகை
கி.பி 1453 இல் துருக்கியர்க்ள கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றியதால் இந்தியாவிற்கான கடல் வழி கண்டறிவது அவசியமாயிற்று.
இந்தியாவில் புதிய கடல் வழி கண்டுபடிக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள் ஆவர்.
போர்ச்சுகீய மன்னரான இளவரசர் ஹென்றி, “மாலுமி ஹென்றி” என்று போற்றப்பட்டார்.
1. போர்ச்சுக்கீசியர்கள்
2. டச்சுக்காரர்கள்
3. ஆங்கிலேயர்கள்
4. டேனியர்கள்
5. பிரெஞ்சுக்காரர்கள்
பார்த்தலோமியா டயஸ்
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பார்த்தலோமியோ டயஸ் என்பவர் கி.பி.1487-ம் ஆண்டு முதன்முதலில் கடல் பயணத்தினை மேற்கொண்டார்.
ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு “புயல் முனை” என்று பெயரிட்டார்.
புயல் முனை, “நன்னம்பிக்கை முனை” என அழைக்கப்பட்டது.
வாஸ்கோடகாமா
மே-27, 1498-ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரை அமைந்துள்ள கோழிக்கோடு (கள்ளிக்கோட்டை) வந்தடைந்தார்.
கள்ளிக்கோட்டை மன்னர் சாமொரின் அவரை வரவேற்று உபசரித்தார்.
கள்ளிக்கோட்டை, கொச்சின், கண்ணணூர் ஆகிய இடங்களில் வாணிபத்தளங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
பிரான்சிஸ் கோ-டீ-அல்மெய்டா
போர்ச்சுகீசியர்களின் வாணிபத்தை கவனிக்க பிரான்சிஸ்கோ-டீ-அல்மெய்டா என்பவர் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இவரது கொள்கை, “நீலநீர்க் கொள்கை” ஆகும். இதன் மூலம் குடியேற்றப் பகுதிகளை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
அல்போன்ஸோ-டி-அல்புகர்க்
இரண்டாவது ஆளுநராக அல்புகர்க் பதவியேற்றார்.
பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கி.பி. 1510 ஆம் ஆண்டு கோவாவைக் கைப்பற்றி அதனை தலைநகரமாக மாற்றினார். இந்தியாவில் போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.
ஐரோப்பிய – இந்திய திருமண உறவுகளை ஆதரித்தார்.
சதியை ஒழிக்க முற்பட்டதால் இவர் வில்லியம் பெண்டிங் பிரவுவின் முன்னோடி எனப்படுகிறார்.
போர்ச்சுக்கீசியர்களின் வணிகத்தலங்கள்:
1. பம்பாய், டாமன், சால்செட் – அரபிக்கடல் பகுதி
2. ஹ_க்ளி (வங்காளம்), சாந்தோம் (சென்னை) – வங்காள விரிகுடா கடல் பகுதி.
• தலைக்கோட்டை போர் (கி.பி 1565) முகலாய ஆட்சியாளர்கள் மற்றும் டச்சுக்காரர்களின் வருகை போன்றன இவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் ஆகும்.
• இந்தியாவிற்கு முதன் முதலில் வாணிபத்திற்கு வந்து இந்தியாவை விட்டு கடைசியாக வெளியே சென்றவர்கள் – போர்ச்சுக்கீசியர்கள்.
டச்சுக்காரர்கள்
கி.பி. 1602-ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டைச் சார்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனத்தை தோற்றுவித்தனர்.
புலிகாட், ஆக்ரா, சூரத், காம்பே, அகமதாபாத், பாட்னா, சின்சுரா, நாகப்பட்டினம், சூரத் மற்றும் மசூலிப்பட்டினத்தில் தங்கள் வாணிப மையங்களை நிறுவினர்.
கி.பி 1610-ஆம் ஆண்டு “புலிகட்” என அழைக்கப்படும் பழவேற்காட்டில் தங்கள் வாணிப தலத்தை நிறுவினார். அங்கு கோட்டை ஒன்றை கட்டினார். இது டச்சுகாரர்களின் தலைமை இடமாகத் திகழ்ந்தது.
அம்பாயினா படுகொலை – இந்தோனேசியா (1623) – டச்சுக்காரர்களால் ஆங்கிலேய வணிகர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு.
ஆங்கிலேயர்கள்
கி.பி 1588-ஆம் ஆண்டு உலகின் மிகப் பெரிய போர்க்கப்பலான “ஸ்பானிய ஆர்மடா” என்ற கப்பலை ஆங்கிலேயர்கள் தோற்கடித்து வலிமை பெற்ற நாடாக இங்கிலாந்து விளங்கியது.
இக்கம்பெனிக்கு டிசம்பர்-31, 1660-ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத், வியாபாரம் செய்வதற்கான அனுமதியை வழங்கினார்.
வில்லியம் ஹாக்கின்ஸ் என்பவர் முதலில் இந்தியாவில் வாணிகம் செய்ய முகலாய அரசர் ஜஹாங்கீரிடம் அனுமதி கோரி மறுக்கப்பட்டது. பின்னர் சர் தாமஸ் ரோ என்பவர் கி.பி 1615 இல் ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்று முதல் வணிகத் தலம் சூரத் நகரில் அமைக்கப்பட்டது.
1639-ஆம் ஆண்டு “பிரான்ஸிஸ் டே” என்ற ஆங்கில அதிகாரி சந்திரகிரி அரசரிடமிருந்து ஒரு நிலப்பகுதியை விலைக்கு வாங்கி தற்கால சென்னை நகரை நிறுவினார்.
இங்கு 1640-ல் “புனித ஜார்ஜ்கோட்டை” கட்டப்பட்டது.
இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ் போர்ச்சுக்கல் நாட்டு இளவரசி காத்ரினை திருமணம் செய்து பம்பாய் பகுதியை 10 பவுண்டுக்கு குத்தகைக்கு பெற்றனர்.
கி.பி 1696 இல் கொல்கத்தாவில் புனித வில்லியம் கோட்டையைக் கட்டினர்.
ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் 1947 வரை நீடித்தது.
டேனியர்கள்
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மக்கள் டேனியர்கள் என்றழைக்கப்பட்டனர்.
1620-ஆம் ஆண்டு தரங்கம்பாடியிலும், 1676-ல் வங்காளத்திலுள்ள சீராம்பூர் என்ற இடத்திலும் வாணிப மையங்களை ஏற்படுத்தினர். கி.பி 1854 இல் இருந்து வெளியேறினர்.
பிரெஞ்சுக்காரர்கள்
கால்பர்ட் என்பவரின் முயற்சியால், பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கி.பி. 1664-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
கி.பி 1742 -ஆம் ஆண்டு டியூப்ளெ பிரெஞ்சு கவர்னராகப் பொறுப்பேற்றார்.
நிறுவப்பட்ட ஆண்டு வாணிபத்தலங்கள்
கி.பி 1668 சூரத்
கி.பி 1669 மசூலிப்பட்டினம்
கி.பி. 1674 பாண்டிச்சேரி
கி.பி. 1690 சந்திர நாகூர்
கி.பி 1725 மாஹி
கி.பி 1739 காரைக்கால்
கர்நாடகப் போர்கள்
கி.பி 1740-1763 இடைப்பட்ட காலங்களில் ஆங்கிலேய பிரெஞ்சுக்காரர்களிடையே ஏற்பட்;ட ஆதிக்கப் போட்டியால் ஏற்பட்ட மூன்று போர்கள் கர்நாடகப் போர்கள் என அழைக்கப்பட்டன. ஆற்காடு கர்நாடகத்தின் தலைநகர் ஆகும்.
முதல் கர்நாடகப் போர்: 1746-1748
இது ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் பிரதிபலிப்பாகும்.
பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கவர்னராக இருந்த டியூப்ளே இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.
முதல் கர்நாடகப் போர் அய்லா ஷபேல் உடன்படிக்கையின் படி முடிவடைந்தது (1748)
இதன்படி ஆங்கிலேயர்களுக்கு மீண்டும் சென்னை கிடைத்தது.
இரண்டாவது கர்நாடகப் போர்: 1748-1754
ஹைதராபாத்திலும், கர்நாடகத்திலும் ஏற்பட்ட வாரிசுரிமைப் போர் இரண்டாவது கர்நாடகப் போராக உருவெடுத்தது.
நாசிர் ஜங் எள முஷாபர் ஜங் (ஹைதராபாத் நிஜாம் போட்டி)
அன்வாருதினுக்கும் எள சந்தாசாகிப்பிற்கும் (கர்நாடக நவாப்)
முஷாபர்ஜங் ூ சந்தா சாகிப்பை ஸ்ரீ பிரெஞ்சுக்காரர்கள் ஆதரித்தனர்.
நாசிர்ஜங் ூ அன்வாருதின் ஸ்ரீ ஆங்கிலேயர் ஆதரித்தனர்.
முஷாபர்ஜங் ூ சந்தாசாஹிப் ஸ்ரீ 1749-ல் ஆம்பூரில் நடைபெற்ற போரில் அன்வாருதீனை தோற்கடித்துக் கொன்றனர்.
சந்தாசாகிப் கர்நாடக நவாப்பானார்.
அவர் சந்தா சாகிப்பை தோற்கடித்து, முகமது அலியை ஆற்காட்டின் நவாப்பாக்கினார். எனவே ராபர்ட் கிளைவ் “ஆற்காட்டு வீரர்” என்று அழைக்கப்பட்டார்.
1754-ல் டியூப்ளே பிரான்ஸிற்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
இரண்டாவது கர்நாடகப் போர் ஆங்கிலேயர்களுக்கு பெரும் வெற்றியையும் பிரஞ்சுக்காரர்களுக்கு சரிவையும் ஏற்படுத்தியது.
இது 1755-ல் பாண்டிச்சோரி உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது.
இதன்படி இந்திய சுதேசி சாம்ராஜ்யங்களின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றும், போரின் போது இரு நாடுகளும் கைப்பற்றிய நிலப்பகுதிகளை திரும்ப அந்தந்த நாடுகளுக்கு அளித்துவிடுவது என்றும் ஒப்புக்கொண்டனர்.
“முகமது அலியை” ஆற்காட்டின் நவாப்பாக ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் அங்கீகரித்தனர்.
மூன்றாவது கர்நாடகப் போர்: 1756-1763
1756-ல் ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டுப் போரின் எதிரொலியாக இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப் போர் நடைபெற்றது.
ஆங்கில தளபதி சர் அயர்கூட் பிரெஞ்சுப் படையை கி.பி. 1760-ல் வந்தவாசி போர்களத்தில் தோற்கடித்தார்.
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் சரிவடைந்தது. ஆங்கிலேயர்கள் உயர்வடைந்தனர்.
1763-ல் பாரிஸ் சமாதான உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது.
ஆங்கிலேயரின் கடற்படை வலிமை, அவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
1757-ல் ஆங்கிலேயர்களுக்கும், சிராஜ்-உத்-தௌலாவிற்கும் ஏற்பட்ட மனவேறுபாடு பிளாசிப் போரில் முடிந்தது.
பிளாசிப் போர்
வங்காள நவாப் சிராஜ்-உத் தௌலா ஐரோப்பிய நாடுகள் தனது அனுமதியின்றிக் கோட்டைகளைக் கட்டுவதோ, புதுப்பிப்பதோ கூடாது என்று கூறினார்.
பிரான்ஸ் ஏற்றுக் கொண்டது, இங்கிலாந்து ஏற்க மறுத்தது.
சிராஜ்-உத்-தௌலா பெரும்படையுடன் சென்று கல்கத்தாவை கைப்பற்றி ஆங்கிலேய போர் வீரர்கள் 146 பேர்களை போர்க் கைதிகளாகப் பிடித்து சிறையில் அடைத்துவிட்டார்.
அடுத்த நாள் அவர்களில் 23 பேர் உயிருடன் இருந்தனர்,மீதமுள்ளவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இந்நிகழ்வு வரலாற்றில், “கல்கத்தா இருட்டறை துயரச் சம்பவ நிகழ்ச்சி” என அழைக்கப்படுகிறது.
1757-ல் ஜீன் 23 ஆம் நாள் சிராஜ்-உத்-தௌலா, இராபர்ட் கிளைவ் ஆகியோரின் படைகள் கல்கத்தாவிற்கு அருகே உள்ள பிளாசி என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.
இப்போரில் சிராஜ்-உத்-தௌலா தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
மீர்ஜாபரை வங்காளத்தின் நிர்வாகியாக ஆங்கிலேயர்கள் நியமித்தனர்.
பிறகு, ஆங்கில நிர்வாகம் மீர்ஜாபரை நீக்கி, அவரின் மருமகன் மீர்காசிம் என்பவரை வங்காளத்தின் நவாப்பாக அறிவித்தது.
பக்ஸார் போர்: 1764
மீர்காசிம் சுங்க வரியை ரத்து செய்தார், இது ஆங்கிலேயர்களுக்கு வெறுப்பினை உருவாக்கியது.
இரண்டாம்ஷா ஆலம், ஷீஜா உத் தௌலா மற்றும் மீர்காசிம் ஆகிய மூன்று மன்னர்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிடத் தயாரானார்கள்.
1764-ல் அக்டோபர் 22-ஆம் நாள் பக்ஸார் என்ற இடத்தில் ஆங்கிலேயப் படையை எதிர்கொண்டன.
ஆங்கிலேயர் பக்ஸார் போரில் வெற்றி பெற்றனர்.
1765-ல் அலகாபாத் உடன்படிக்கைபடி பக்ஸார் போர் முடிவுக்கு வந்தது.
1) ஷீஜா உத்தௌலா போர் இழப்பீட்டுத் தொகையாக 50 இலட்சம் ஆங்கிலேயர்களுக்கு வழங்கவும்.
2) முகலாயப் பேரரசருக்கு ஆண்டுதோறும் 26 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஆங்கில அரசாங்கம் ஒத்துக்கொண்டது.
3) மாநிலங்களில் வரிவசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு வழங்கினர்.
பக்ஸார் போர் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தை உயர் அதிகாரம் படைத்த ஒரு நிறுவனமாக உயர்த்தியது.
பக்ஸார் போருக்கு பிறகு இராபர்ட் கிளைவ் வங்காள கவர்னராக 1765-ல் நியமிக்கப்பட்டார்.
மைசூர் போர்கள்
முதலாவது ஆங்கில-மைசூர் போர்: 1767-1769
ஹைதர் அலி வலிமை மிகுந்த ஒரு பேரரசை உருவாக்கி இருந்தார்.
பிரான்ஸ் நாட்டோடு அவர் கொண்டிருந்த நல்லுறவு, இது ஆங்கிலேயர்க்கு உறுத்தச்செய்தன.
இதுவே முதலாவது ஆங்கில-மைசூர் போருக்கு வழி வகுத்தது.
1767-ல் ஹைதர் அலி மற்றும் நிஜாமை ஆங்கிலேயர்கள் செங்கம் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
கேப்டன் புரூக் என்பவர் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டார்.
1769-ல் ஹைதர் அலியோடு மதராஸ் அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.
இதன்படி இரு நாடுகளும் தாங்கள் கைப்பற்றிய இடங்களை திரும்ப அளிக்க ஒத்துக் கொண்டன.
இரண்டாம் ஆங்கில-மைசூர் போர்
இப்போர் 1780 முதல் 1784 வரை நடைபெற்றது.
1780-ல் மராத்தியர்கள் மைசூரை தாக்கினர். ஆங்கிலேயர்கள் சென்னை உடன்படிக்கைப்படி ஹைதர் அலிக்கு உதவவில்லை.
இதனால் ஆங்கிலேயர் மீது போர் அறிவித்தார் ஹைதர் அலி.
1782-ல் டிசம்பர் 26-ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார்.
1784 மங்களுர் உடன்படிக்கை மூலம் இப்போர் முடிவுக்கு வந்தது.
உடன்பக்கையின்படி திப்புவும் ஆங்கிலேயரும் அவரவர் கைப்பற்றிய பகுதிகளை திரும்ப பெற்றனர்.
ஐ ரூ ஐஐ மைசூர் போர்கள் வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நடைபெற்றன.
மூன்றாம் மைசூர் போர்: 1790-1792
ஜெனரல் காரன்வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானார்.
ஆங்கிலேய தளபதி “மன்றோ” இது குறித்து, 30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்த கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்து தரிசிக்கந்தான் முடிந்தது என்றார்.
போரின் இறுதிக் கட்டத்தில் மராட்டியர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைத்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
1792-ல் ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை மூலம் மூன்றாம் மைசூர் போர் முடிவுக்கு வந்தது.
நான்காம் மைசூர் போர்: 1796-1799
வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த “சர் ஜான் ஷோர்” தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியதால் திப்புவுக்கு பிரச்சனை எழவில்லை.
1796-ல் கவர்னர் ஜெனரலாக பதவியேற்ற வெல்லஸ்லி, துணைப்படைத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
திப்பு அந்த திட்டத்தை ஏற்கவில்லை, இதனால் நான்காம் மைசூர் போர் தொடங்கியது.
1799ம் ஆண்டு மானவள்ளி போரில் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார். அதே ஆண்டு மே- 4ம் நாள் திப்பு கொல்லப்பட்டார். போரும் முடிவுக்கு வந்தது.
திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப்போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும், என்று தனது “யங் இந்தியா” பத்திரிகையில் எழுதினார் காந்தியடிகள்.
ஆங்கிலோ மராத்தியப் போர்கள்
முதல் ஆங்கிலோ மராத்திய போர்
இது கி.பி. 1775-1782 வரை நடைப்பெற்றது.
மராத்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு போர்களில் மராத்திய மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
கி.பி 1782-ல் சல்பை உடன்படிக்கைப்படி முதல் ஆங்கிலோ மராத்திய போர் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் ஆங்கிலோ மராத்தியப் போர்
இப்போர் 1803 முதல் 1806 வரை நடைபெற்றது.
1802-ல் கையெழுத்தான பேசன் உடன்படிக்கையே இரண்டாம் ஆங்கிலோ மராத்தியப் போருக்கு காரணம்.
மூன்றாவது ஆங்கிலோ மராத்தியப் போர்
1817 முதல் 1819 வரை நடைபெற்ற மூன்றாவது ஆங்கிலோ மராத்தியப் போரில் மராத்திய கூட்டமைப்பு முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டது.
சீக்கியப் போர்கள்: 1845-49
முதல் சீக்கியப் போர்: கி.பி. 1845-46
இரண்டாவது சீக்கியப் போர்: கி.பி 1848-49
டல்ஹெளசி கி.பி.1849ல் பஞ்சாபை கிழக்கு இந்தியைக் கம்பெனியோடு இணைத்துக்கொண்டார்.
சீக்கிய அரசர்கள்:
ரஞ்சித் சிங்:
• தனது நாட்டினை 12 மிசில்களாகப் பிரித்தார். இதன் தலைவர் மிசில்தார்.
• பஞ்சாப்பின் சிங்கம் என அழைக்கப்பட்டார்.
• அமிர்தசரஸ் உடன்படிக்கை (கி.பி 1809) இன்படி சட்லஜ் நதி ஆங்கில – சீக்கியர் எல்லையாக நிருணயிக்கப்பட்டது.
• வில்லியம் பெண்டிங் பிரபு உடன் நட்புறவு கொண்டிருந்தார்.
இதர தகவல்கள்:
• சீக்கியர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே கி.பி 1846 இல் நடைபெற்ற அலிவால் போர் துப்பாக்கிப் போர் என அழைக்கப்படுகிறது. லாகூர் உடன்படிக்கையின்படி இப்போர் முடிவுக்கு வந்தது.
கூர்க்கா போர் (கி.பி 1814 – 1818)
நேபாளத்தின் அமர்சிங் மற்றும் ஆங்கிலேயருக்கு இடையே நடைபெற்றது.
சிகௌலி உடன்படிக்கையின்படி இ;ப்போர் முடிவுக்கு வந்தது.
பிண்டாரி போர் :
மத்திய இந்தியாவில் வாழ்ந்த கொள்ளையர்கள்.
வாரன்ஹேஸ்டிங்ஸ் பிண்டாரிகளை ஒடுக்கினார்.
ஆங்கிலேயப் பிரபுக்கள்
இராபர்ட் கிளைவ் (கி.பி 1765-1772)
வரலாற்றில் புகழ்பெற்ற “இரட்டை ஆட்சி” முறையைப் புகுத்தினார்.
கிளைவ், “அயல்நாட்டுக் கொள்கை” வட்ட வேலி அடைப்புக்கொள்கை பின்பற்றியவர்.
ஆகஸ்ட் 16, 1765-ல் அலகாபாத் உடன்படிக்கை மேற்கொண்டார்.
இந்த உடன்படிக்கையின் படி அயோத்தியை ஒரு இடைப்படு நாடாக அமைத்துக் கொண்டார்.
மீர்ஜாபரால் கிளைவுக்குக் கொடுக்கப்பட்ட ஐந்து லட்சம் ரூபாளை “கிளைவ் நிதி” என்று உதவி தொகை அளிக்கப்பட்டது.
வாரன் ஹேஸ்டிங்ஸ்: (கி.பி 1772-1785)
1773-ல் இயற்றப்பட்ட ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, இவர் வில்லியம் கோட்டையின் கவர்னர் ஜெனரலானார்.
1765-ல் கிளைவால் வங்காளத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த இரட்டை ஆட்சிமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வங்காளத்தில் திவானி வேலையைச் செய்வதற்காக “வருவாய் வாரியம்” ஒன்றை ஏற்படுத்தியது.
1772-ல் ஐந்தாண்டு கால நிலவரித்திட்டத்தை ஆரம்பித்தார்.
1783-ல் “வங்காள ஆசியக் கழகம்” ஒன்றை நிறுவினார்.
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்.
கல்கத்தாவில் இரண்டு நீதிமன்றங்களை அமைத்தார்.
1. சதார் திவானி அதாலத் – சிவில் நீதிமன்றம்
2. சதார் நிஸாமி அதாலத் – குற்றவியல் நீதிமன்றம்
வருவாய்த்துறை கழகம் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது, மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களை நியமித்தார்.
ரோஹில்லாக்களை (ஆப்கானியர்கள்) தோற்கடித்தார்.
காரன்வாலிஸ்: 1786-1793
இவரது “நிரந்திர நிலவரித்திட்டம்” (கி.பி 1793) மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
பதிவுசார் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மாவட்ட ரூ மாநில நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
தலையிடாக் கொள்கையை பின்பற்றினார். (சுதேச அரசு இறையாண்மையில் தலையிடாமை)
கல்கத்தாவில் காவல்துறை ஏற்படுத்தப்பட்டு தரோகோ எனும் அதிகாரி மூலம் காவல்துறை நிருவகிக்க்பட்டது. இந்தியக் குடிமைப் பணிகளை வரையறை செய்தார்.
டாக்கா, பாட்னா, கொல்கத்தா மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் மாகாண நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
வருவாய் துறையிலிருந்து நீதித்துறை அதிகாரம் பிரிக்கப்பட்டது. சட்டத்தின் முன் அனைவரும் சமம், இந்துக்களுக்கு இந்து சட்டங்களும், முஸ்லீம்களுக்கு முஸ்லீம் சட்டங்களும் பின்பற்றப்பட வேண்டும்.
“இந்திய ஆட்சிப் பணித்துறையின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார் (ஊiஎடை ளுநசஎiஉந).
சர் ஜான் ஷோர் (கி.பி 1793-1798)
நிரந்தர நிலவரித்திட்டம் (ஜமீன்தாரி முறை) அறிமுகம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்தார்.
தலையிடாக் கொள்கையைப் பின்பற்றினார்.
வெல்லஸ்லி பிரபு: (கி.பி 1798-1805)
“துணைப்படைத் திட்டம்” வெல்லஸ்லி பிரபுவால் ஏற்படுத்தப்பட்டது.
இந்த திட்டமே, இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு என்று இருந்ததை “பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு” என்று மாற்றியது.
தலையிடாக் கொள்கையையும், சக்தி சமநிலைக் கொள்கையையும் நீக்கிவிட்டு, இந்தியாவில் ஆங்கிலேயரின் பேராதிக்கத்தை நிலை நாட்ட “தலையிடும் கொள்கை” ஏற்படுத்தினார்.
துணைப்படத்திட்டம்
இந்திய சிற்றரசர்களின் நாடுகளைக் கைப்பற்றுவதற்கு ஒரு சிறந்த முறையே அவரது ‘துணைப்படைத் திட்டமாகும்”
இத்திட்டத்தில் கையொப்பமிடும் இந்திய அரசர்கள் தங்கள் நாட்டில் சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்டவும், ஒரு ஆங்கிலத் தளபதியின் கீழ் ஆங்கிலப்படை ஒன்றை தம் நாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சர் ஜார்ஜ் பார்லோ (கி.பி 1805-1807)
இராணுவச் செலவுகளைக் குறைத்தார். இவரது ஆட்சிக் காலத்தில் வேலூர் புரட்சி ஏற்பட்டது.
முதலாம் மிண்டோ பிரபு (கி.பி 1807-1813) – மெட்ராஸ் கலகத்தை கட்டுப்படுத்தினார்.
ஹேஸ்டிங்ஸ் பிரபு: (கி.பி 1813-1823)
பிண்டாரிகளின் தொல்லைகளை இந்தியாவிலிருந்து ஒழித்துக்கட்டிய பெருமை ஹெஸ்டிங்ஸ் பிரபுவையே சாரும்.
வருங்காலத்தில் உழவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக “குத்தகைச்சட்டம்” ஒன்றை 1822ல் பிறப்பித்தார்.
மேல்நாட்டுக் கல்வி முறையை இந்தியாவில் ஆரம்பித்தார்.
தாய்மொழிப் பத்திரிக்கைகளுக்கு வெல்லஸ்லி விதித்திருந்த தணிக்கை முறையினை நீக்கினார்.
முதன் முதலாக 1818-ல் சமாச்சர் தர்பன் என்ற வங்காள வார இதழ் ஆரம்பிக்கப்பட்டது.
வில்லியம் பெண்டிங் பிரபு: 1828-1835
1833-ம் ஆண்டு இயற்றப்பட்ட பட்டயச் சட்டத்தின்படி “வில்லியம் கோட்டையின் கவர்னர் ஜெனரல்” என்ற பதவி “இந்தியாவின் கவர்னர் ஜெனரல்” என்று மாற்றப்பட்டது.
இதன்படி “இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனார் வில்லியம் பெண்டிங் பிரபு
கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு “புசயனெ வுசரமெ சுழயன” என்ற பெருவழிச்சாலை ஒன்றை அமைத்தார்.
1835 மார்ச் 7-ம் தேதி ஒரு அரசு தீர்மானத்தின்படி “ஆங்கிலமொழி இந்தியாவின் பயிற்சி மொழியாகவும் ஆட்சிமொழியாகவும்” ஆக்கப்பட்டது.
உடன்கட்டை ஏறுதலை ஒழித்தவர்
தலையிடா கொள்கையைப் பின்பற்றினார் மற்றும் வெளிஉறவுக் கொள்கையைப் பின்பற்றினார்.
இந்தியர்கள் உதவி மாஜிஸ்ட்ரேட்களாகவும், கீழ்நிலை நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டனர்.
தக்கர்கள் (வழிப்பறி கொள்ளையர்கள்) ஒழிக்கப்பட்டனர்.
ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகம் செய்தார்.
ஆக்லண்டு பிரபு: (கி.பி 1836 – 1842) – இவரது காலத்தில் முதல் ஆப்கானியப் போர் நடைபெற்றது.
எல்லன்பரோ பிரபு: (கி.பி 1842-1844) – சிந்து பகுதியை கைப்பற்றினார். அடிமை முறை மற்றும் லாட்டரி சீட்டு முறையை ஒழித்தார்.
ஹார்டிஞ்ச் பிரபு: (கி.பி 1844-1848) – முதல் சீக்கியப் போர் நடைபெற்றது. கோண்ட இன மக்கள் (ஒடிசா) மனித உயிர்களைப் பலியிடும் முறையைத் தடைசெய்தார்.
டல்ஹெளசி பிரபு: 1848-1856
இந்தியாவின் கவர்னர் ஜெனரல்களில் மிகவும் வயதில் குறைந்தவர் இவரே ஆவார்.
சட்டரீதியாக எத்தனை நாடுகளைச் சேர்க்க முடியுமோ அத்தனை நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் ஆட்சி புரிந்தார்.
போர்கள் மூலம் நாடுகளை இணைத்தல்:
1) இரண்டாம் சீக்கியப் போர் மூலம் பஞ்சாப் இணைத்தல்.
2) இரண்டாம் பர்மியப் போர், பெரு அல்லது கீழ்பர்மா இணைக்கப்பட்டது
3) போர் குற்றம் சாட்டி சிக்கிம் பகுதிகளையும் இணைத்தார்.
அவகாசியிலிக் கொள்கை மூலம் நாடுகளைச் சேர்த்தல்:
1) அவகாசியிலிக் கொள்கை அல்லது நாடிழக்கும் கொள்கை என்று அழைக்கப்படும்
2) சுதேச அரசர் ஒருவர் செய்து கொண்ட புத்திர சுவிகாரத்திற்கு கவர்னர் ஜெனரல் அனுமதி மறுத்தால், அந்த சுதேச அரசு ஆங்கில அரசுடன் சேர்க்கப்படும். இதுவே நாடிழக்கும் கொள்கை
3) அவகாசியிலிக் கொள்கைப்படி முதல்முதலில் இணைக்கப்பட்ட நாடு “சதாரா” ஆகும். பின்பு சாம்பல்பூர், ஜான்சி, நாக்பூர் மற்றும் உதய்பூர்.
4) நல்லாட்சியற்ற நாடென்று சொல்லி அயோத்தி இணைக்கப்பட்டது.
5) புதிதாகக் கம்பனியின் ஆதிக்கத்திற்குள் வந்த நாடுகளை நிர்வகிக்க ‘ழேn – சுநபரடயவழைn ளலளவநஅ’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தினார்.
6) இவரை இந்தியாவின் “தொழில்நுட்பக் கல்வி முறையின் தந்தை” என்றும் அழைக்கப்பட்டார்.
7) “இந்திய இருப்புப்பாதைத் திட்டத்தின் தந்தை” என்றும் கூறலாம். 1853-ல் பம்பாய்க்கும் தானாவுக்குமிடையே ஆரம்பிக்கப்பட்டது.
8) 1856-ல் சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு இடையே மூன்றாவது இருப்புப்பாதை ஆரம்பிக்கப்பட்டது.
9) பெஷாவர் – கல்கத்தா இடையே இரயில்பாதையை அமைத்தார்.
10) 1854- கொல்கத்தா இராணிகஞ்ச் இடையே இரண்டாவது இரயில் பாதையை அமைத்தார்.
11) தற்காலத்தில் இருக்கும் தபால் முறை டல்ஹெளசி காலத்தில்தான் ஏற்பட்டது. 1854-ல் தபால் நிலையச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.
12) அஞ்சல் கட்டணத்தைப் பணமாகக் கொடுப்பதற்குப் பதிலாக அஞ்சல் தலைகளை ஒட்டும் முறையை நடைமுறைக்கு முதன் முதலாகக் கொண்டு வந்தவர் டல்ஹெளசி ஆவார்.
13) இந்தியாவில் இப்போதுள்ள “மின்சாரத் தந்தி முறையின் தந்தை” டல்ஹெளசி பிரபுவே ஆவார்.
14) இவர் நவீன இந்தியாவை உருவாக்கியவர்.
15) நாடு முழுவதும் தடையில்லா வாணிபத்தை அறிமுகப்படுத்தினார்.
16) கி.பி.1856 இல் விதவை மறுமணச் சட்டம் இவரின் காலத்தில் கொண்டுவரப்பட்டது.
17) இந்தியாவில் பொதுப்பணித்துறை டல்ஹெளஸியால் கொண்டுவரப்பட்டது.
18) இவரின் காலத்தில்தான் கல்விக்கான சார்லஸ்உட் அறிக்கை வெளியானது.
19) சிம்லாவை கோடை காலத் தலைநகராகவும், கல்கத்தாவை குளிர்காலத் தலைநகரமாகவும் மாற்றினார்.
20) இராணுவ தலைமையிடத்தை கல்கத்தாவிலிருந்து சிம்லாவிற்கு மாற்றினார்.
கானிங் பிரபு (கி.பி 1856 – 1862)
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாகவும் (1856-58) முதல் வைசிராயாகவும் (1858-62) பணியாற்றினார் கானிங்பிரபு.
1856-ம் வருட பொதுச் சட்டம்:
“இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் போய் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர்” என்று அறிவிக்கப்பட்டது.
1856 ஜீலை 26-ல் இந்து விதவைகள் மறுமணம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டது.
1861ல் இந்திய கவுன்சில் சட்டமும், இந்திய அரசு பணிச்சட்டமும், இந்திய உயர்நீதிமன்றங்களின் சட்டமும் இயற்றப்பட்டது.
முதன் முதலாக வருமான வரி விதிக்கப்பட்டது.
காகித நாணயம் வெளியிடப்பட்டது.
1861-ல் இலாக்காக்கள் பிரித்துக் கொடுக்கும் முறையை நடைமுறைப்படுத்தினார்.
முதலாம் எல்ஜின் பிரபு (கி.பி 1862 – 1863)
• இந்தியாவில் மூன்று உயர்நீதிமன்றங்கனை நிறுவினார்.
• சென்னை உயர் நீதிமன்றம் – ஜீன் 26
• கொல்கத்தா உயர் நீதிமன்றம் – ஜீலை 02
• மும்பை உயர் நீதிமன்றம் – ஆகஸ்ட் 14
லாரன்ஸ் பிரபு (கி.பி 1864- 1869) – ஒரிசா மற்றும் பந்தல் கண்ட்டில் நிலவிய பஞ்சம் தொடர்பாக விசாரனை நடத்த பஞ்சக் கமிசனை நிறுவினார்.
மேயோ பிரபு (கி.பி 1869 – 1872)
• கி.பி 1872 இல் வங்காளத்தில் மட்டும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தினார்.
• இந்தியா மற்றும் லண்டனை இணைக்கும் மின்சார தந்தி இணைப்பு ஏற்படுத்தினார்.
• மாநிலங்களில் இரயில்வே துறையை ஏற்படுத்தினார்
நாத் புருக் பிரபு (கி.பி 1872-1876)
• இவரது காலத்தில் இங்கிலாந்து இளவரசல் முதலாம் வேல்ஸ் (கி.பி 1875) இல் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். வருமான வரி முறையை நீக்கம் செய்தார்.
லிட்டன் பிரபு: 1876-1880
பஞ்ச நிவாரணத் திட்டங்கள், அரசுரிமைப் பட்டயச் சட்டம், இந்திய மொழி அச்சகச் சட்டம், ஆயுதக் கட்டுப்பாட்டு சட்டம், நிரந்தர நிர்வாக அலுவலர் சட்டம்.
அரசுரிமைப் பட்டயச் சட்டம்
விக்டோரியா மகாராணிக்கு ‘இந்தியாவின் பேரரசி’ என்று பொருள்படியான ர்யiஉநச – 1 ர்iனெ என்ற பட்டத்தைச் சூட்டியது.
இந்திய மொழி அச்சகச் சட்டம்:
பத்திரிக்கைகளை தணிக்கை செய்து கட்டுப்படுத்த நினைத்தார். எனவே உறுதிக் காப்பீட்டுத் தொகையும் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்தச் சட்டம் “கழுத்தை இறுக்கும் சட்டம்” எனக் கூறப்பட்டது.
ஆயுதக் கட்டுப்பாட்டு சட்டம்:
அரசாங்கத்தின் அதிகாரம் பெறாமல் ஆயுதங்களை வைத்திருப்பதும், பிரயாணத்தின் போது கொண்டு செல்வதும் சட்ட விரோதம் என்று அறிவித்தது.
நிரந்திர நிர்வாக அலுவலர் சட்;டம்
1853-ம் வருடப் பட்டயச் சட்டத்தின்படி, லண்டனில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே உயர் பதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்றாயிற்று.
அதன்படி அந்தத் தேர்வில் முதன் முதல் 1864-ல் வெற்றி பெற்றவர் “சக்தியேந்திராநாத்தாகூர்” என்பவர் ஆவார்.
வெள்ளி நாணய மதிப்பீட்டிற்குப் பதிலாக தங்க நாணய அடிப்படை மதிப்பீட்டைக் கொண்டு வந்தவர் லிட்டன் பிரபுவே ஆவார்.
ரிப்பன் பிரபு: 1880-84
“ஸ்தல சுயாட்சி முறையின் தந்தை” என்று அழைக்கப்பட்டார்.
ரிப்பன் பிரபு 1882-ம் ஆண்டு ஸ்தலசுயாட்சிச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
நகராட்சி மன்றங்களையும், தாலுகா ஆட்சிமன்றங்களையும் அமைத்தார்.
மாவட்ட வாரியங்கள், வட்டார வாரியங்கள் நிறுவப்பட்டன.
கி.பி 1881 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடைமுறைப்படுத்தினார்.
1881-ல் முதன் முதலாக தொழிற்சாலை சட்டம் ஒன்றை இயற்றினார் ரிப்பன்.
தொழிலாளர்களின் வேலை நேரம் வரையறுக்கப்பட்டது.
ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கக்கூடாது.
ஏழுவயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த தொழிற்சாலைகளிலும் வேலைக்கு வைத்துக்
கொள்ளக்கூடாது.
கி.பி 1882 இல் ஹண்டர் தலைமையில் கல்விக்குழுவை நியமனம் செய்தார்.
கி.பி 1883 இல் ஓய்வு பெற்ற நீதிபதி பரிந்துரைகளின் அடிப்படையில் இல்பர்ட் மசோதாவை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்திய நீதிபதிகள் ஆங்கிலேய குற்றவாளிகளை விசாரிப்பது இம்மசோதாவின் சிறப்பம்சம். இம்மசோதா தோழ்வியடைந்ததால் ரிப்பன் பிரபு பதவியை இராஜினாமா செய்தார்.
இல்பர்ட் மசோதா பிரச்சனை: 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றியது ரிப்பன் கடைப்பிடித்த கொள்கையின் முதற்பயனே என்று கூறலாம்.
டஃப்ரின் பிரபு: (கி.பி 1884-1888)
• இந்திய தேசிய காங்கிரஸை தோற்றுவிக்கக் காரணமாக இருந்தார்.
• இவரது ஆட்சியில் விக்டோரியா மகாராணி ஆட்சியின் பொன்விழா (கி.பி 1887) கொண்டாடப்பட்டது.
லென்ஸ்டவுன் பிரபு: (கி.பி 1884 – 1893)
• பேரரசுப்பணி, மாகாணப் பணி மற்றும் கீழ்நிலைப் பணி போன்ற மூன்று பணிநிலைகளை உருவாக்கினார்
• 12 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்யத் தடைவிதிக்கும் ஒப்புதல் வயதுச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
• கி.பி 1893 இல் மார்டிமர் டூரண்ட் தலைமையில் இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே டூரண்ட எல்லைக்கோடு வரையப்பட்டது.
கர்சன் பிரபு: 1899-1905
பஞ்ச நிவாரண கொள்கை: குயஅiநெ Pழடiஉல
1901-ல் அறிக்கை சமர்பித்தார். விவசாயிகளுக்கு வங்கிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் விவசாயக் கடன் சங்கங்களை நிறுவுதல், நீர்ப்பாசன வசதிகளை விரிவுபடுத்துதல் ஆகிய பரிந்துரைகளைச் செய்தார்.
1904-ல் “இந்திய பல்கலைக் கழகங்களின் சட்டம்” இயற்றப்பட்டது.
“பண்டைய சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம்” 1904-ஆம் ஆண்டு இயற்றினார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் குற்றவியல் புலனாய்வு விசாரணை அமைக்கப்பட்டது.
உயர் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கென “ஐஅpநசயைட உயனநஉவ உழசிள” என்ற பிரிவு நடைமுறைப்படுத்தினார்.
1900-ல் “பஞ்சாப் நில ஆர்ஜித சட்டம்” இயற்றப்பட்டது.
1904-ஆம் ஆண்டு “கூட்டுறவு கடன் சங்கங்களின் சட்டம்” ஒன்று இயற்றப்பட்டு விவசாயிகளுக்கு கடனுதவி செய்து கொடுக்கப்பட்டது.
வங்காளப் பிரிவினை: (கி.பி 1905 அக்.16)
• மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் என்று இரு மாநிலங்களாகப் பிரித்தார்.
ஆட்சிபுரிவதற்கு வசதிக்காகப் பிரிக்கப்பட்டது என்றார்.
• இதன் முக்கிய நோக்கம் மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியர்களிடம் வேற்றுமைகளை ஏற்படுத்துவதற்காகவேயாகும்.
• இதன் விளைவாக சுதேசி இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. திலகரால் பூனாவில் நெசவுக் கம்பெனியும், வங்காளத்தில் அரவிந்தரால் இந்துக் கல்லூரியும், பி.சி ராய் அவர்களால் இரசாயனத் தொழிற்சாலையும், தமிழகத்தில் வ.உ.சி -யால் சுதேசி கப்பல் குழுமமும் துவங்கப்பட்டது.
• வங்கப் பிரிவினையின் நினைவாக இரபீந்திரநாத் தாகூர் அவர்களால் அமர் சோனா பங்களா எனும் பாடல் இயற்றப்பட்டது. இது தற்போது வங்கதேச நாட்டின் தேசிய கீதமாக உள்ளது.
• சகோதரத்துவத்தை மேம்படுத்த ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது.
இரண்டாம் மிண்டோ பிரபு (கி.பி. 1905 -1910)
• கி.பி 1909 மிண்டோ-மார்pலி சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்தார்.
• இச்சட்டத்தில் முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு வழங்கினார்.
• இவ் இட ஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தது.
• மேலும், கி.பி 1910 இல் பத்திரிக்கைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
இரண்டாம் ஹார்டிஞ்ச் பிரபு (கி.பி 1910 -1916)
• கி.பி 1911 இல் டெல்லி தர்பாரைக் கூட்டினார். மேலும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் நினைவாக இந்தியாவின் நுழைவாயில் கட்டப்பட்டது.
• வங்காளம் (கி.பி 1911) ஒன்றாக இணைக்கப்பட்டது.
• முதல் உலகப் போர் ஏற்பட்டது (கி.பி 1914)
செம்ஸ்போர்டு பிரபு (கி.பி 1916-1921)
• இந்திய அரசு சட்டம் கொண்டு வரப்பட்டது (கி.பி 1919)
• இச்சட்டத்தி;ன் அடிப்படையில் மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவை ஒதுக்கப்பட்ட துறைகள் (சுநளநசஎநன டுளைவ) மற்றும் மாற்றப்பட்ட துறைகள் (வுசயளெகநசநன டுளைவ) என இரண்டாகப்பிரிக்கப்பட்டது.
• ஆளுநர் மாநிலங்களின் நிருவாக அதிகாரியாகவும் ஒதுக்கப்பட்ட துறைகளான (சுநளநசஎநன டுளைவ) சட்டம் ஒழுங்கு, நிதி, நில வருவாய் மற்றும் நீர்பாசனம் போன்ற துறைகள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தன.
• மாற்றப்பட்ட துறைகளான (வுசயளெகநசநன டுளைவ) கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள், விவசாயம் மற்றும் கலால் போன்ற துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தன.
• தேர்தலில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
• பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
• ஆளுநருக்கு அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது.
ரீடிங் பிரபு (கி.பி 1921-1926)
• கேரளாவி;ல் ஏற்பட்ட மப்ளா கலகத்தை ஒடுக்கினார்
• இரட்டை ஆட்சிமுறையினை ஆய்வு செய்ய சைமன் குழு அமைக்கப்பட்டது.
இர்வின் பிரபு (கி.பி 1926 – 1931)
• இவரது காலத்தில் கி.பி 1927 இல் சைமன் குழு இந்தியா வந்தது.
• கி.பி 1930 இல் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கம் இவரது காலத்தில் நடைபெற்றது.
• கி.பி 1930 இல் நடைபெற்ற இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் காங்கிரஸ் கலந்து கொள்ள முக்கிய காரணமாக இருந்தார்.
• கி.பி 1929 இல் சாரதா சட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி ஆண்களுக்கு குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், பெண்களுக்கு 14 எனவும் நிருணயம் செய்யப்பட்டது.
• ராயல் கமிஷன் (கி.பி 1926) – இந்திய விவசாயிகளின் நிலையை அறிய அமைக்கப்பட்டது.
• இவர் கிறிஸ்டியன் வைசிராய் என அழைக்கப்பட்டார்.
வெலிங்டன் பிரபு (கி.பி 1931-1936)
• இவரது ஆட்சிக் காலத்தில் சாதி வழி தனித் தொகுதி சட்டம் (கி.பி 1932) இயற்றப்பட்டது. அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் இராம்சே மெக்டொனால்டு ஆவார்.
• காந்தியடிகள் மற்றும் அம்பேத்கருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் கி.பி 1932 இல் நடைபெற்றது.
• இந்திய அரசு சட்டம் கி.பி 1935 இல் இயற்றப்பட்டது.
• மேட்டூர் அணை கி.பி 1934 இல் கட்டப்பட்டது.
• பைகாரா நீர்மின் சக்தி திட்டம் கி.பி 1933
லின் லித்கோ பிரபு (கி.பி 1936-1944)
• இந்திய அரசுச் சட்டம் கி.பி 1937 இல் நடைமுறைப்படுத்தப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.
• பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை கவிஞர். இக்பால் அவர்களால் முதன் முதலில் முன் வைக்கப்பட்டது.
வேவல் பிரபு (கி.பி 1944-1947)
• இவரது ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே கி.பி. 1945 ஆம் ஆண்டு சிம்லா மாநாடு நடைபெற்றது.
• கி.பி 1946 ஆம் ஆண்டு கேபினர் அமைச்சரவை தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்தது.
• இடைக்கால அரசு நேரு தலைமையில் நிறுவப்பட்டது. (கி.பி 1946)
மௌண்ட் பேட்டன் பிரபு (கி.பி 1947 -1948)
• இந்தியாவின் கடைசி ஆங்கில வைசிராய்.
• இந்தியா, பாகிஸ்தான இரு நாடு கொள்கையான மௌண்ட பேட்டன் திட்டம் (ஜூன் 3) வெளியிடப்பட்டது.
சீர்திருத்த சட்டங்கள்
ஒழுங்குபடுத்தும் சட்டம்: 1773
இச்சட்டம் இந்திய ஆட்சி முறையின் வளர்ச்சியின் முதல் படியாகும். இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சிக்கான அடிக்கல் ஆகும்.
வங்காளத்தின் கவர்னர் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி “வில்லியம் கோட்டையின் கவர்னர் ஜெனரல்” என்று அழைக்கப்பட்டார்.
இச்சட்டத்தின்படி கவர்னர் ஜெனரலாக “வாரன் ஹேஸ்டிங்ஸ்” பணிபுரிந்தார்.
ஒரு தலைமை நீதிபதியும், மூன்று நீதிபதிகளும் அடங்கிய ஒரு தலைமை நீதிமன்றம் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது.
கவர்னர் ஜெனரலின் நியமனம் இந்தியாவில் மைய ஆட்சிமுறை ஏற்பட முதல்படியாக அமைந்தது.
இந்திய ஆட்சி படிப்படியாக சீர்த்திருத்தப்பட இச்சட்டம் வழிவகுத்தது. ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்பட்டன.
பிட் இந்தியச் சட்டம்: 1784
ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் குறைபாடுகள் நீக்க இந்த சட்டம் இயற்றப்பட்டது.
வில்லியம் பிட் என்பவர் இங்கிலாந்தின் பிரதமரானார்.
அரசியல் நிர்வாக காரியங்களைக் கவனிப்பதற்கு புதிய சபை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு “கட்டுபாட்டு வாரியம்” என்று பெயர்.
கட்டுப்பாட்டு வாரியமே இந்தியாவிற்கான ஆங்கிலக் கொள்கையை வகுக்கும் அதிகாரம் கொண்டது.
பிட் இந்திய சட்டப்படிதான் முதன்முதலாக இந்தியாவில் இருந்த கம்பெனியின் நிலப்பகுதிகள் “இந்தியாவிலுள்ள பிரிட்டி~;” பகுதிகள் என்று அழைக்கப்பட்டது.
1793 ஆம் வருட பட்டயச்சட்டம்
கம்பெனிக்கு மேலும் இருபது ஆண்டுகள் உரிமை அளிக்கும் 1793 வருட பட்டயச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
இச்சட்டப்படி கவர்னர் ஜெனரலுக்கு மாநிலங்களில் “அமைதிகான் நீதிபதி” (துரளவiஉநள ழக pநயஉந) நியமிக்க உரிமை கொடுக்கப்பட்டது.
1800-ல் இயற்றப்பட்ட ஒரு சட்டப்படி சென்னையில் தலைமை நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட அதிகாரம் வழங்கப்பட்டது.
1813-ம் வருட பட்டயச் சட்டம்
கம்பெனிக்கு இந்திய வாணிபத்தில் இருந்த முற்றுரிமையை நீக்கிவிட்டது.
பொறுக்கு குழுவை அமைத்து சமர்பித்த அறிக்கையின் அடிப்படையில் 1813-ம் வருட பட்டயச் சட்டம் இயற்றப்பட்டது.
முதன்முதலாக இந்தியக் கல்வி வளர்ச்சிக்கான பொறுப்பை கம்பெனி ஏற்கும்படி நேர்ந்தது.
தடையில்லா வாணிபக் கொள்கை, இந்திய வியாபாரம் பொதுவாக்கப்பட்டது.
1833-ம் வருட பட்டயச் சட்டம்
இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் “வில்லியம் பெண்டிங் பிரபு” ஆவார்.
இச்சட்டப்படி “வில்லியம் கோட்டையின் கவர்னர் ஜெனரல்” என்பது இனிமேல் “இந்தியாவின் கவர்னர் ஜெனரல்” என்று அழைக்கப்பட்டது.
இந்தியா முழுமைக்குமான “ஒரே வரவு செலவு திட்டம்” தயாரிக்கப்பட வேண்டும் என்று இச்சட்டம் கூறியது.
“எந்த இந்தியனும் சமயம், சாதி, நிற வேறுபாட்டால் வேலை பெறும் வாய்ப்பை இழக்கக்கூடாது” என்று இச்சட்டம் கூறியது.
இதனால் இந்தியர் கம்பெனியின் குடிமக்கள் என்ற உரிமை முதன்முதலாக ஏட்டளவிலாவது ஒப்புக்கொள்ளப்பட்டது.
கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் இனி “இந்தியாவிற்கான அமைச்சர்” (ஆinளைவநச கழச ஐனெயைn யுககயசைள) என்று அழைக்கப்படுவார்.
புல சமுதாயச் சீர்திருத்தங்களை இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டன. அதில் முக்கியமானது “சதி” சட்டப்படி ஒழிக்கப்பட்டதேயாகும்.
இந்திய சட்டசபை தோன்ற இச்சட்டம் அடிகோலியது.
வாணிகக் கம்பெனி என்ற நிலையிலிருந்து மாறி “ஒரு ஆட்சி செய்யும் அமைப்பு” என்ற நிலையடைந்தது
1853-ம் வருட பட்டய சட்டம்
பாராளுமன்றம் விரும்பும் வரை இங்கிலாந்து அரசின் சார்பாக இந்தியாவிலுள்ள பிரிட்டி~; பகுதிகளை கம்பெனி ஆட்சி செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
“மைய சட்ட சபையின்” தொடக்கம் இந்திய அரசியலமைப்பில் முதன் முதலாக புகுத்தப்பட்டது.
இதில் மறுப்பானை அதிகாரம் (ஏநவழ Pழறநச) கவர்னர் ஜெனரலுக்கு கொடுக்கப்பட்டது.
புதிய மாநிலங்களை உருவாக்கும் அதிகாரம் கவர்னர் ஜெனரலுக்க வழங்கப்பட்டது.
இதுவரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலே வங்காளத்தின் கவர்னருமாக செயல்பட்டு வந்தார். இச்சட்டப்படி வங்காளத்திற்கு தனியாக ஒரு கவர்னர் நியமிக்கப்பட்டார்.
மைய சட்டசபை இந்தியாவில் ஒரு மினி பாராளுமன்றமாகவே செயல்பட ஆரம்பித்தது.
1858-ம் வருட சட்டம்
1857-ம் வருடம் இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட சிப்பாய் கலகத்தின் விளைவாகவே 1858-ம் வருடச்சட்டம் இயற்றப்பட்டது.
கம்பெனி ஆட்சி ஒழிக்கப்பட்டு, அரசியாரின் நேரடி ஆட்சி ஏற்பட்டது.
கவர்னர் ஜெனரல், “இங்கிலாந்து அரசு பிரதிநிதி” (ஏiஉநசழசல) என்று அழைக்கப்பட்டார்.
இச்சட்டப்படி இங்கிலாந்து அரசியே வைசிராய், மாநில கவர்னர்கள் ஆகியோரை நியமிப்பார்.
கட்டுப்பாட்டு வாரியமும், இயக்குநர்கள் குழுவும் ஒழிக்கப்பட்டது.
“இனி ஆக்கிரமிப்பு செய்வதில்லை” என்று உறுதி கூறப்பட்டதால், டல்ஹெளசி பிரபுவின் நாடுபிடிக்கும் கொள்கை கைவிடப்பட்டதால், இந்திய அரசியலமைப்பு வளர்ச்சியில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
இந்திய தேசிய இயக்கம்
19 மற்றும் 20ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
பகுத்தறிதல், சமத்துவம், சுதந்திரம் மற்றும் மனிதாபிமானம் போன்ற மேற்கத்திய கருத்துக்களால் இந்திய மக்கள் கவரப்பட்டனர்.
இந்தியப் பண்பாட்டில் இருந்த குறைகளைக் களைத்து, இந்தியாவின் பழம்பெரும் கலாச்சார புகழை மீண்டும் கொண்டுவர விரும்பினர்.
இத்தகைய சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டன.
பிரம்ம சமாஜம் (கி.பி 1828):
இந்திய சமூக, சமய சீர்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தார் இராஜாராம் மோகன்ராய்
இவர் வங்காளத்தில் உள்ள ஹீக்ளி மாவட்டத்தில் மே22, 1772ல் பிறந்தார்.
“இயேசு கிறிஸ்துவின் கட்டளைகள்”, “அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி” போன்ற குறிப்பிடத்தக்க நூல்களை எழுதினார்.
ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1805 முதல் 1814 வரை பணியில் சேர்ந்து பணியாற்றினார்.
இவர் “சம்பத் காமோடி” என்ற வங்காள இதழையும் “மீரட்டல் அக்பர்” என்ற பாரசீக இதழையும் நடத்தினார்.
டேவிட் ஹேர் என்பவருடன் இணைந்து கல்கத்தா இந்து கல்லூரியையும், அலெக்சாண்டர் டஃப் என்பவருடன் இணைந்து ஜெனரல் அசெம்பிளிஸ் இன்ஸ்டிட்டியூசனையும் தொடங்கினார்.
இந்து ூ கிறிஸ்து; கிறிஸ்துவத்தில் உள்ள உயர்ந்த நெறி சார்ந்த அம்சங்களை இந்து மதத்தோடு இணைக்க வேண்டும் என்றார்.
உருவ வழிபாட்டுக்கு இவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இவரது சீரிய முயற்சியினால் 1829ஆம் ஆண்டு ஆங்கில ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு “சதி” தடை சட்டத்தை கொண்டுவந்தார்.
இதன்படி சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது.
இவர் “நவீன இந்தியாவின் விடிவெள்ளி” என்றும், “வங்காள மறுமலர்ச்சியின் தந்தை” என்றும் அழைக்கப்படுகிறார்.
இவருக்கு “இராஜா” என்ற பட்டம் இரண்டாம் அக்பரால் வழங்கப்பட்டது.
பிரம்மசமாஜ்
1815 ஆண்டு ஆத்மீக சபாவை ராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்தார். இதுவே பின்னர், 1828ம் ஆண்டு முதல் பிரம்ம சமாஜமாக வளர்ந்தது.
“ஒரே கடவுள்” என்ற கொள்கையின் அடிப்படையில் “பொது சமயத்தில்” நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக பிரம்ம சமாஜம் இருந்தது.
பிரம்ம சமாஜ உறுப்பினர்கள் பிரம்மோக்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் உருமற்ற பரம்பொருளை வழிபட்டனர்.
வங்காளத்தில் படித்த மத்தியத்தர மக்களின் ஆதரவை மட்டுமே பிரம்ம சமாஜம் பெறமுடிந்தது.
பிரம்ம சமாஜத்திற்கு எதிராக “தர்ம சபா” என்ற அமைப்பு வைதீக இந்துக்களால் வங்காளத்தில் ஏற்படுத்தப்பட்டது.
ஆதிபிரம்ம சமாஜம் (தத்துவ போதினி)
1833ல் ராஜாராம் மோகன்ராயின் மறைவிற்குப் பின் நலிவடையத் தொடங்கிய பிரம்ம சமாஜத்திற்கு புத்துயிரூட்டியவர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தையான “தேவேந்திரநாத் ஆவார்”
தேவேந்திரநாத் தாகூர் பிரம்ம சமாஜத்தை தான் தோற்றுவித்த “தத்துவபோதினி” சபாவோடு இணைத்து செயல்படுத்தினார்.
தேவேந்திரநாத் தாகூர் சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் காட்டாததால் கேசவ சந்திரசென் 1872ஆம் ஆண்டு முற்போக்கு பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தார்.
கேசவ் சந்திரசென்னின் பிரம்ம சமாஜப் பிரிவு “இந்திய பிரம்ம சமாஜம்” என்றும், தேவேந்திரநாத் தாகூரின் பிரம்ம சமாஜப் பிரிவு “ஆதி பிரம்ம சமாஜம்” என்றும் அழைக்கப்பட்டது.
கேசவ் சந்திரசென் முயற்சியால் 1872ஆம் ஆண்டு, பலதார மணமுறை மற்றும் குழந்தைகள் திருமணம் போன்றவற்றை தடைசெய்யும் சட்டம் இயற்றப்பட்டது.
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்: 1865
சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம், வள்ளலார் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரால் நிறுவப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டம், மருதூர் கிராமத்தில் 5.10.1823ல் வள்ளலார் பிறந்தார்.
வள்ளலார், இச்சங்கத்தை வடலூரில் 1865ல் நிறுவினார்.
பின்னர் 1872ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்தார்.
1867ல் வடலூரில் தர்ம சாலையை (அன்னதானம்) நிறுவினார்.
முதல் திருக்குறள் வகுப்பு, முதல் முதியோர் கல்வி, முதல் மும்மொழிப் பாடசாலை, முதல் ஆன்மிகக் கொடி, முதல் ஜோதி வழிபாடு ஆகியவற்றை செய்தவர் ராமலிங்க அடிகளே என்பர்.
“அருட்பெருஞ்சோதி தனிப்பெருன் கருணை” என்ற முழக்கத்தின் மூலம் உருவ வழிபாட்டை மறுத்து ஜோதி வடிவில் இறைவனை வழிபட வழிகாட்டினார்.
“பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்றும், “உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் தம் உறவு களவாமை வேண்டும்” என்று போதித்தார்.
“மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி” என்பது வள்ளலாரின் போதனைகளில் மிக முக்கியமானதாகும்.
ஜீவகாருண்யம் என்னும் உயிர் இரக்கத்தை வலியுறுத்தினார்.
இவர் ‘போதித்த சமரச சுத்த சன்மார்க்க நெறி’ “பொய்மை இல்லா பொதுமை நெறி” என்று போற்றப்படுகிறது.
இவர் எழுதிய பாடல்கள் “திருவருட்பா” என்ற பெயரில் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.இவர் “அருட்பா” என்னும் நூலை எழுதியுள்ளார்.
பிராத்தனா சமாஜம்: 1867
டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் என்பவரால், 1867 ஆம் ஆண்டு மும்பையில் தோற்றுவிக்கப்பட்டது.
மகாதேவ் கோவிந்தரானடே, இச்சபையின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்.
ஆரிய சமாஜம்: 1875
சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் ஆரிய சமாஜம் 1875ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
இவர் குஜராத் மாநிலத்தில் கத்தியவார் மகாணத்தில் “மூர்வி” என்னும் இடத்தில் பிறந்தார்.
இவரது இயற்பெயர் “மூல் சங்கர்” என்பதாகும்.
இந்து சமூகத்தைச் சீர்திருத்த எண்ணினார். “வேதங்களை நோக்கிச் செல்” என்பதே இவரின் குறிக்கோளாகும்.
மதம்மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்ப்பதற்காக “சுத்தி இயக்கம்” என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
குழந்தை மணம், பலதார மணமுறை, பர்தா அணியும் முறை மற்றும் உடன்கட்டை ஏறும் வழக்கம் போன்றவற்றை எதிர்த்தார்.
வேதம் மற்றும் ஆங்கில வழி கல்வியை பயிற்றுவிப்பதற்காக தயானந்தா ஆங்கிலோ வேதிக் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவினார்.
பாலகங்காதர திலகர் மற்றும் கோபால கிரு~;ண கோகலே போன்றோர் ஆரிய சமாஜத்தின் தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.
“சுதேசி” மற்றும் “இந்திய இந்தியருக்கே” போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கியவர் சுமாமி தயானந்தா ஆவார்.
இவர் இந்து சமயத்தின் “மார்ட்டின் லூதர்” என அழைக்கப்பட்டார்.
பிரம்மஞான சபை: 1875
ரஷ்ய பெண்மணி மேடம் பிளாவட்ஸ்தி மற்றும் அமெரிக்காவின் ஹென்றி எச் ஆல்காட் ஆகியோரால் 1875ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவை பெறுவதற்காக “பிரம்மஞான சபை” நிறுவப்பட்டது.
1882ல் இச்சபையின் சர்வதேச தலைமையிடம் சென்னையில் உள்ள அடையார் பகுதிக்கு மாற்றப்பட்டது.
திருமதி. அன்னிபெசன்ட் 1893ஆம் ஆண்டு இச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்று, இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவும் இந்தியக் கல்விக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
இவரால் பனாரசில் (காசி) தோற்றுவிக்கப்பட்ட மத்திய இந்து கல்லூரி பின்னாளில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்தது.
மெய்ஞான சபையின் நோக்கங்களை பரப்புவதற்காக அன்னிபெசன்ட், “நியூ இந்தியா” என்ற செய்தித்தாளை நடத்தி வந்தார்.
அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இந்தியர்கள் சுயாட்சி பெறுவதற்காக தன்னாட்சி இயக்கத்தை உருவாக்கினார்.
ஆன்னிபெசன்ட் தன்னை “இந்திய டமாரம்” என்று வர்ணித்தார்.
ராமகிருஷ்ண இயக்கம்:
ராமகிருஷ்;ண பரமஹம்சரின் பெயரை அடிப்படையாகக் கொண்டு சுவாமி விவேகானந்தரால் 1897ஆம் ஆண்டு மே 1ம் நாள் துவங்கப்பட்டது.
ராமகிருஷ்ண மடம் 1897ல் கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள மேலூரில் சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது.
மனிதனுக்கு செய்யும் பணி கடவுளுக்குச் செய்யும் பணியாகக் கருதப்படும் என்று உறுதியாக நம்பினார். இவர் 1886ஆம் ஆண்டு காலமானார்.
1893ஆம் ஆண்டு சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்துகொண்டு, “என் சகோதரிகளே” என்று இந்தியப் பண்பாட்டின் சிறப்பையும் இந்து சமயத்தின் மேன்மையையும் உலகறியச் செய்தார். (விவேகானந்தர்)
“துறத்தல் மற்றும் சேவை” இரண்டுமே நவீன இந்தியாவின் இரு கொள்கைகளாக இருக்க வேண்டும் எனக் கூறி, அதன் அடிப்படையிலேயே உழைத்தார். (விவேகானந்தர்)
“எது உங்களை உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ ஆன்மிக ரீதியாகவோ பலவீனப்படுத்துகிறதோ அதை நஞ்சு எனக் கருதி விலக்குங்கள்” என்றார் (விவேகானந்தர்)
“விழிமின் எழுமின் எண்ணிய எண்ணியாங்கெய்த அயராது உழைமின்” என்னும் கதா உபநிடத வாக்கியத்தை விவேகானந்தர் பிரபலப்படுத்தினார்.
“ஜீவனே (உயிர்) சிவா” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் “மக்கள் பணியே கடவுள் பணி” என்று கூறி தொண்டாற்றினார் விவேகானந்தர்.
சுந்தரவனப்பகுதியில் (மேற்கு வங்காளத்தில்) சூரிய ஒளியைப்பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தோன்றுவதற்கு முக்கியப்பங்கு வகித்தது இராமகிரு~;ண இயக்கம் ஆகும்.
அலிகார் இயக்கம்
அலிகார் இயக்கம் சையது அகமது கான் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.
1875ஆம் ஆண்டு அலிகாரில் இவரால் தோற்றுவிக்கப்பட்ட முகமதியன் ஆங்கிலோ ஒரியண்டல் கல்லூரி இவரது சிறந்த சாதனையாகத் திகழ்கின்றது.
சர் சையது அகமதுகான் தொடங்கிய சீர்திருத்த இயக்கம், அலிகார் இயக்கம் என அழைக்கப்பட்டது.
“தாசில் உத் அஃலக்” என்னும் தினசரி பத்திரிகையை நடத்தினார்.
சுயமரியாதை இயக்கம்
1925ல் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
குடியரசு, புரட்சி, விடுதலை போன்ற தமிழ் இதழ்களின் மூலம் தமது கருத்துகளை பரப்பினார்.
ஜோதிபாபூலே
ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆதரவற்றோர் இல்லத்தை நிறுவிய முதல் இந்து இவர் தான் என உறுதியாகக் கூறலாம்.
ஜோதிபாபூலேவும் அவரது மனைவி சாவித்ரிபாயும் இணைந்து பூனாவில் முதலாவது பெண்கள் பள்ளியை 1851ல் நிறுவினார்.
1873ஆம் ஆண்டு “சத்திய சோதக் சமாஜ்” (உண்மை தேடுவோர் சங்கம்) என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
மகாத்மா ஜோதிபாபூலே எழுதிய “குலம்கிரி” என்ற நூல் பிரபலமானது.
ஈஸ்வர சந்திர வித்யா சாகர்
இவருக்கு வித்யாசாகர் என்ற பட்டம் உண்டு. மக்களிடையே கல்வியை பரப்புவதன் மூலமாகவே சீர்திருத்தங்கள் கொண்டுவர முடியும் என்று பெண்களுக்காக பல பள்ளிகளை நிறுவினார்.
ஸ்ரீ நாராயண குரு
ஈழவ மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட கேரள மக்கள் முன்னேற்றத்திற்காகவும், 1903ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குரு தர்ம பரிபாலன் யோகம் (ளுNனுPலு) என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
அம்பேத்கார்
1924ஆம் ஆண்டு ஜீலை மாதம் சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நலச் சங்கம் (பாசிகிருத்கித்காரணி சபா) என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
தீண்டத்தகாத மக்களுக்கு மனுஸ்மிருதி என்ற பொதுக்குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையைப் பெறுவதற்காக, 1927ஆம் ஆண்டு மும்பையில் “மகத் மார்ச்” என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தினார்.
தியோபாண்ட் பிரிவு
முகமது உல் ஹாசன் என்பவர் இந்தப் பிரிவின் சமயக் கருத்துகளில் அரசியல் மற்றும் அறிவார்ந்த சிந்தனைகளை புகுத்தினார்.
முஸ்லீம் உலோமாக்களின் வைதீகப்பிரிவை சேர்ந்தவர்கள் தோற்றுவித்த மறுமலர்ச்சி இயக்கம் ஆகும்.
19-20 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் தோன்றிய சமூக, சமய இயக்கங்கள்
இயக்கங்கள் தோற்றுவித்தவர்கள்
- பிரம்ம சமாஜம் (1828) – ராஜாராம் மோகன் ராய்
- பிரார்த்தன சமாஜம் (1867) – ஆத்மாராம் பாண்டுரங்
- சத்யசோதக் சமாஜம் (1873) – ஜோதிபாய் பூலே
- ஆரிய சமாஜம் (1875) – சுவாமி தயானந்த சரஸ்வதி
- ராமகிருஷ்;ணா மிஷன் (1897) – சுவாமி விவேனானந்தர்.
- தியசாபிகல் சொசைட்டி (1875) – ஜெனரல் ஆல்காட், மேடம் பிளாவெட்ஸ்கி
- தியசாபிகல் சொசைட்டி (1882) – அடையாறுக்கு மாற்றப்படல்
- இந்திய சேவா சங்கம் (1905) (Servants of India Society) – கோபால கிருஷ்ண கோகலே
- பூனா சேவாசதன் (1909) – பண்டித ரமாபாய்
- சேவா சமிதி (1914) – ஹிருதயநாத் குன்ஸ்ரூ
- ஒளவை இல்லம் – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
பிற சமூக சீர்திருத்த இயக்கங்கள்:
சீர்திருத்த இயக்கங்கள்- நிறுவியவர்கள்
- வேத சமாஜம் – ஸ்ரீதாலு நாயுடு (1864)
- பிராத்தன சமாஜ் – ஆத்மாராம் பாண்டுரங் (1867)
- சாதாரன பிரம்ம சமாஜம் – ஆனந்த் மோகன் போஸ் (1878)
- இந்திய ஊழியர் சங்கம் (சர்வன்ட்ஸ் ஆப் இந்தியன் சொசைட்டி) – கோபால கிருஷ்ண கோகலே (1915)
- நாம்தாரி இயக்கம் – பாய் பாலக் சிங் (சீக்கிய இயக்கம்)
- நிரங்காரி இயக்கம் – பாபா தயாள் தாசு
- தத்துவ போதினி சபா – தேவேந்திர நாத் தாகூர்
- குதய் கிட் மத்கார் – கான் அப்துர் காபர் கான்
- விதவை மறுமண இயக்கம் – எம்.ஜி ராணடே
- தர்ம பரிபாலன இயக்கம் – நாராயண குரு
- மெட்ராஸ் இந்து அசோசியேசன் – அன்னிபெசன்ட் அம்மையார்
- சௌத் இந்தியன் லிபரல் பெடரேசன் – டி.எம்.நாயர், தியாகராஜ செட்டியார். (கி.பி 1920 இல் நீதிக்கட்சியாகவும், கி.பி 1944 இல் திராவிடர் கழகமாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது)
1857-ம் ஆண்டிற்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற புரட்சிகள்:
சன்யாசி கலகம் (கி.பி 1770 – 1820)
• வங்காளத்தில் கி.பி 1770 இல் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இந்து, நாகா மற்றும்
கிரி சன்யாசிகள் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக கலகம் செய்தனர்.
• இக்கலகத்தில் கேப்டன் தாமஸை கொலை செய்தனர்.
பாகல் பந்தி (கி.பி 1813 – 1833) – வங்காளத்தில் ஜமீன்தாரி முறைக்கு எதிராக இந்து, முஸ்லீம் மக்கள் மேற்கொண்ட புரட்சி
பராய்ஸி இயக்கம் (கி.பி 1804-1857) – இஸ்லாமிய மதத்திலுள்ள மூட நம்பிக்கைகளை களைய ஷரியத் உல்லா என்பவரால் இவ்வியக்கம் தோற்றுவிக்கப்பட்டது. ஜமீன்தாரி முறைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
குக்கா இயக்கம் (கி.பி 1860 – 1870) – சீக்கிய சமயத்திலுள்ள மூட நம்பிக்கைகளை ஒழித்து சீர்;திருத்தம் மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். சதி ஒழிப்பு, கலப்பு திருமணம், பெண் சுதந்திரம் மற்றும் மது பழக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
தென்னிந்திய புரட்சிகள் (கி.ப 1801):
• வீரபாண்டியக் கட்டபொம்முவின் மரணத்திற்கு பிறகு தென்னிந்திய புரட்சி வெடித்தது.
மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக போராட அழைப்பு விடுத்து திருச்சி
கோட்டையிலும், ஸ்ரீரங்கம் கோவிலிலும் அச்சுப் பிரசுரங்களை ஒட்டினார்.
• புரட்சி தோல்வியடைந்த பின்னர் மருதுபாண்டியர்கள் சிங்கப்புனரி காட்டில் ஒழிந்து பின்னர்
புதுக்கோட்டை மன்னரால் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயர்களால் 24.10.1801 இல்
தூக்கிலிடப்பட்டனர்.
• புரட்சியை ஒடுக்கிய ஆங்கிலத் தளபதி – அக்னிவ்
வேலூர் புரட்சி (கி.பி 1806):
• இப்புரட்சியின் போது சென்னை ஆளுநராக வில்லியம் பெண்டிங் பிரகு இருந்தார். தளபதி
கிராடக் ஆவார்.
• 10.07.1806 அன்று வேலூர் புரட்சியின் போது வேலூர் கோட்டை கைப்பற்றப்பட்டது.
• இப்புரட்சி 1857 சிப்பாய்க் கலகத்திற்கு முன்னோடியாக இருந்தது.
கி.பி 1857 மாபெரும் புரட்சி
இப்புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் “படைவீரர்கள் கிளர்ச்சி” என்றும் “இந்திய
சுதந்திரப்போர்” என்றும் வர்ணிக்கின்றனர்.
கிளர்ச்சியின் போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர் கானிங் பிரபு.
அரசியல் காரணங்கள்
ஆங்கிலேயர்களின் நாடு இணைப்புக் கொள்கை மற்றும் பெண்டிங் பிரபு காலத்தில்
கொண்டுவரப்பட்ட வங்காள நில குத்தகை சட்டம், இவை அந்நிய ஆட்சி மீது ஏற்பட்ட
அதிருப்தியை வெளிப்படுத்தின.
நிர்வாகக் காரணங்கள்
நீதிமன்றங்களில் பாரசீக மொழிக்குப் பதிலாக ஆங்கில மொழியைப் புகுத்தியதை
மக்கள் விரும்பவில்லை.
இந்தியர்களுக்கு அரசியலிலும், இராணுவத்திலும் உயர் பதவிகள் மறுக்கப்பட்டன.
சமூக மற்றும் சமயக் காரணங்கள்
இந்துக்களின் சொத்துரிமைச் சட்டம் மாற்றப்பட்டு கிறிஸ்துவர்களாக மாறியவர்களுக்கும்
தங்களின் முன்னோர்களின் சொத்துகளில் பங்குபெறும் உரிமை வழங்கப்பட்டது.
கோவில் மசூதிகளில் மீதும் அதிகமான வரி விதித்தனர்.
ராணுவக் காரணங்கள்
இந்திய சிப்பாய்கள் தலைப்பாகை அணிதல், திலகமிடல், தாடிவளர்த்தல் ஆகியவற்றை
செய்யத் தடை இருந்தது.
1856ஆம் ஆண்டு கானிங்பிரபு பொதுப்பணிப் படைச்சட்டத்தைக் கொண்டுவந்தார்.
இச்சட்டம் தேவை ஏற்பட்டால் இந்தியச் சிப்பாய்கள் கடல் கடந்து சென்றும் போரில்
ஈடுபடவேண்டும் என்று கூறியது.
உடனடிக் காரணம்
இந்திய ராணுவத்தில் ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய “என்பீல்டு ரக துப்பாக்கிகளில்” பயன்படுத்திய கொழுப்புத் தடவிய தோட்டாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது புரட்சிக்கு உடனடிக்காரணமாக அமைந்தது.
1857ஆம் ஆண்டு மார்ச் 29ம் நாள் கல்கத்தாவிற்கு அருகிலுள்ள பராபக்பூரில் வங்காள படைப்பிரிவைச் சார்ந்த மங்கள்பாண்டே என்ற இந்தியப் பிராமணப் படைவீரர் கொழுப்புத் தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்தார்.
மங்கள் பாண்டே கட்டாயப்படுத்தப்படவே, வேறுவழியின்றி தனது மேலதிகாரியைச் சுட்டுக்கொன்று, தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அவரை சிறைபிடிக்க இந்திய சுபேதார் மறுத்ததால் இருவரும் உடனே தூக்கிலிடப்பட்டனர். பராக்பூர் சம்பவம் காட்டுத்தீ போல பரவியது.
புரட்சி பரவுதல் மற்றும் அடக்கப்படுதல்
1857-ம் ஆண்டு மே மாதம் மீரட்டிலிருந்த படைப்பிரிவினர் வெளிப்படையாகப் புரட்சியில் ஈடுபட்டனர்.
புரட்சியாளர்கள் டெல்லியை கைப்பற்றி இரண்டாம் பகதூர்ஷாவைப் பேரரசர் என்று பிரகடனப்படுத்தி அரியணையில் அமர்த்தினர்.
லக்னோ, பரேலி, கான்பூர், பண்டேல்கண்டு, ஜான்சி போன்ற பகுதிகளிலும் புரட்சி பரவியது.
இப்புரட்சியில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களாக ஜான்சிராணி லட்சுமிபாய், நானாசிகிப், தாந்தியோதோப், பேகம் ஹஸ்ரத் மஹால், கன்வர்சிங் ஆகியோர் திகழ்ந்தனர்.
கான்பூர்
பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்துப்புதல்வரான நானாசாகிப் கான்பூரில் புரட்சியாளர்களுடன் இணைந்து, புரட்சிக்கு தலைமை தாங்கித் தன்னை பேஷ்வா என அறிவித்துக்கொண்டார்.
நானாசாகிப்பின் படைக்கு தாந்தியாதோப் என்ற விசுவாசமும் வீரமும் பொருந்திய படைத்தளபதி தலைமை பொறுப்பேற்றார்.
சர் காலின் காம்ப்பெல் தலைமையில், 1857ல் நவம்பரில் கான்பூர், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது.
டெல்லி
புரட்சியாளர்கள் வசம் இருந்த டெல்லியை சர் ஆர்ச்டேல் வில்சன், நிக்கல்சன் மற்றும்
சர் ஜான் லாரன்ஸ் ஆகிய இராணுவ அதிகாரிகள் மீட்டனர்.
இரண்டாம் பகதூர்~h சிறைப்பிடிக்கப்பட்டு, ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு தனது
87வது வயதில் இறந்தார்.
லக்னோ
அயோத்தி நவாப்பின் மனைவியான பேகம் ஹஸ்ரத் மஹால் ஆங்கிலேயருக்கு எதிராக
கலகக்காரர்களுடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டார்.
சர்காலின் கேம்ப்பெல் என்பவரால் லக்னோ 1858 மார்ச் மாதம் மீட்கப்பட்டது.
மத்திய இந்தியா
மத்திய இந்தியாவில் நடைபெற்ற புரட்சிக்கு ஜான்சிராணி இலட்சுமிபாய், கான்பூரிலிருந்து
வந்த தாந்தியாதோப் ஆகியோர் தலைமை தாங்கினார்.
ஆணுடை தரித்து ராணுவத் தந்திரத்துடன் ராணி லட்சுமிபாய் உண்மையான ஒரு
வீரனைப்போல் வீரப்போர் புரிந்து குவாலியரை கைப்பற்றினார்.
ஜான்சிராணி லட்சுமிபாய் 1858ம் ஆண்டு ஜீன் மாதம் நடைபெற்ற போரில் கொல்லப்பட்டார்.
தப்பிச்சென்ற தாந்தியாதோப்பும் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
ஜான்சி ராணியை வெற்றி கண்ட பிரிட்டி~; தளபதி ஹீரோஸ் ஜான்சி ராணியை
“புரட்சியாளர்களில் ஒரே ஆண்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பீகார்
பீகாரில் உள்ள ஆராவில், ஜகதீ~பூரின் நிலப்பிரபுவும், 80 வயது நிரம்பியவருமான கன்வர்சிங் புரட்சிக்குத் தலைமைதாங்கினார்.
இவர் மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதியாகத் திகழ்ந்தார்.
அவருடைய சகோதரர் அமர்சிங் புரட்சிக்குத் தலைமை தாங்கினார். ஆனால் புரட்சி விரைவில் முறியடிக்கப்பட்டது.
புரட்சியின் தோல்விக்கான காரணங்கள்
புரட்சியாளர்களை வழிநடத்திச் செல்ல பொதுத்தலைமையும் பொதுவான திட்டமும்
உருவாக்கப்படவில்லை.
புரட்சியாளர்களிடையே ஒருமித்த குறிக்கோள் இல்லை.
ராணுவத் திறமையிலும், ஒழுங்கிலும் ஆங்கிலேயப்படை சிறந்ததாக இருந்தது.
ஒரே சமயத்தில் புரட்சி வெடிக்காமல் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழ்ந்ததால்
ஆங்கிலேயருக்கு புரட்சியை ஒடுக்குவது எளிதாயிற்று.
புரட்சியின் விளைவுகள்
1857 முதலாம் இந்திய சுதந்திரப் போர், இந்திய ஆட்சியில் மாற்றங்களை கொண்டு
வந்தது. ஆங்கில வணிகக் குழுவின் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்திய தலைமை ஆளுநர், இந்திய வைசிராய் என்று அழைக்கப்பட்டார். வைசிராய்
என்பதற்கு அரசப்பிரதிநிதி என்று பொருள்.
இந்தியாவின் ஆங்கில அரசின் நேரடி ஆட்சி, நடைமுறைக்கு வந்தது. 1858ல் ஒரு
சிறப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி கட்டுப்பாட்டுக் குழு மற்றும்
இயக்குநர் குழு கலைக்கப்பட்டன.
புரட்சிக்கு தலைமை வகித்தவர்கள்
இடம் தலைமை
டெல்லி இரண்டாம் பகதூர்ஷா
மத்திய இந்தியா ஜான்சிராணி இலட்சுமிபாய
லக்னோ பேகம் ஹஸ்ரத் மஹால்
கான்பூர் நானாசாகிப்,தாந்தியாதோப்
பீகார் குன்வர்சிங்
பரேலி கான் பகதூர் கான்.
விக்டோரியா மகாராணி பேரறிக்கை
“1858ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி” நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் “விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை” இந்தியாவின் கடைசி தலைமை
ஆளுநரும் முதலாம் வைசிராயும் ஆன கானிங்பிரபு “அலகாபாத்தில்” வெளியிட்டார்.
விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை இந்திய மக்களின் மகாசாசனம் (ஆயபயெ
உயசவய ழக ஐனெயை) என்று கருதப்பட்டது.
இந்தியாவின் பழமையான பண்பாடு, பழக்க வழக்கங்கள் மதிக்கப்படும் எனவும், இந்திய
குடிமைப் பணியில் இந்தியர்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்பு அளிக்கப்படும் எனவும்
அறிவிக்கப்பட்டது.
நாடு இணைப்பு கொள்கை முழுவதுமாக கைவிடப்பட்டது.
புரட்சியின் போது ஆங்கிலேயரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் தவிர
அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரசுக்கு முந்தைய அரசியல் இயக்கங்கள்:
- லேண்ட லார்டு சொசைட்டி – வங்காளம் (1836) – துவாரக நாத் தாகூர்
- பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேசன் – இங்கிலாந்து (1843) – வில்லியம் ஆடம்
- ஈஸ்ட் இன்டியன் அசோசியேசன் – லண்டன் (1867) – தாதாபாய் நௌரோஜி
- இந்தியன் லீக் – வங்காளம் (1875) – சிசிர் குமார் கோஷ்
- இந்தியன் நேசனல் அசோசியேசன் – வங்காளம் (1876) – சுரேந்திர நாத் பானர்ஜி, ஆனந்த மோகன் போஸ்
- பம்பாய் நேட்டிவ் சேசியேசன் – மும்பை (1852) – ஜோகன்தர் சங்கர் சேத்
- பூனா சர்வஜனிக் சபா – மும்பை (1870) – எம்.ஜி. ராணடே
- பம்பாய் பிரசிடென்சி அசோசியேசன் – மும்பை (1885) – பத்ருதீன் தயாப்ஜி, கே.டி தெலங்
- மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன் – மெட்ராஸ் (1852)
- மெட்ராஸ் மகாஜன சபா – மெட்ராஸ் (1884) – வீரராகவாச் சாரியார்,சுப்பிரமணிய அய்யர், ஆனந்த சாருலு
இந்திய தேசிய காங்கிரஸ்
னு1885ஆம் ஆண்டு ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரது ஆலோசனையின் பேரில்
இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
உமேஷ் சந்திரபானர்ஜி, ஆலன் ஆக்டேவியன் ஹியூமை “காங்கிரசின் தந்தை” என்று
வர்ணித்துள்ளார்.
இந்திய தேசிய யூனியன் என்று இருந்த பெயர் தாதாபாய் நௌரோஜி அவர்களின்
யோசனைப்படி “இந்திய தேசிய காங்கிரஸ்” என்று மாற்றப்பட்டது.
முதல் காங்கிரஸ் கூட்டத்தில் 72 பேர் கலந்துகொண்டனர்.
இவர்கள் “பிரேவ் 72” (BRAVE 72) என்று அழைப்பர்.
முதல் காங்கிரஸ் மாநாட்டின்போது, வைசிராய் டப்ரின் பிரபு இருந்தார்.
1886ஆம் ஆண்டு சுரேந்திரநாத் பானர்ஜியின் தலைமையில் செயல்பட்ட இந்தியக்கழகம்
காங்கிரசோடு இணைந்தது.
இந்திய தேசிய காங்கிரசை எந்த இந்தியரும் தொடங்கியிருக்க முடியாது, என்று
“கோபால கிருஷ்ண கோகலே” 1913ல் கூறினார்.
மிதவாதிகள்
இந்திய தேசிய காங்கிரசின் ஆரம்ப காலத்தில் படித்த, நடுத்தர வர்க்கத்தைச்
சேர்ந்தவர்களே காங்கிரஸ் தலைவர்களாக இருந்தனர்.
ஆங்கிலேயரின் நேர்மையான அணுகுமுறையில் நம்பிக்கை கொண்டு, தங்களது
கோரிக்கைகளையும் வாதங்களையும் அமைதியான முறையில் கோரிக்கை மனுக்கள்
மூலம் நிறைவேற்ற விரும்பிய இவர்கள் மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டனர்.
1.சுரேந்திரநாத் பானர்ஜி 2. தாதாபாய் நௌரோஜி 3. பெரோஷா மேத்தா
4. கோபாலகிருஷ்ண கோகலே 5. ஏம்.ஜி ரானடே போன்றோர் மிதவாத காங்கிரஸ்
தலைவர்கள் ஆவர்.
கோரிக்கை மனுக்கள் அனுப்புவதையும் (Petition) மனுவில் கோரிய சலுகைகளுக்காக
பிரிட்டிஷ் அரசிடம் மன்றாடுவதையும் (prayer) அரசாங்க நடவடிக்கைகளை
கருத்துரீதியாக எதிர்ப்பதையும் விமர்சிப்பதையும் (protest) ஆக மொத்தம் PPP என்ற
இந்த மூன்று பணிகளை மிதவாத தலைவர்கள் செய்து வந்ததாக தீவிரவாத தலைவர்கள்
குற்றம் காட்டினர்.
தீவிரவாதிகள்
மிதவாதிகளின் அணுகுமுறையில் நம்பிக்கை இழந்த, சுதந்திரத்திற்காக அரசின்
கருணையைச் சார்ந்திருக்காத காங்கிரசின் ஒரு பிரிவினர் தீவிரவாதிகள் எனப்பட்டனர்.
லாலாலஜபதிராய் (Lal), பாலகங்காதர திலகர் (Bal), பிபின் சந்திரபால் (Pal), அரவிந்த
கோஷ் ஆகியோர் தீவிரவாத காங்கிரசின் தலைவர்கள்.
லோக்மான்ய திலகர், மராத்தியில் “கேசரி” என்ற பத்திரிகை மூலம் பிரிட்டி~hரின்
கொள்கைகளைச் சாட்டினார்.
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என்று முழங்கினார்.
விநாயகர் சதுர்த்தி மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வைத் தூண்டினார்.
காங்கிரஸ் இயக்கத்தின் பிளவும் இணைவும்
1907-ல் சூரத் காங்கிரஸில் பிளவுபட்டது. மிதவாவதி, தீவிரவாதி என்று.
பாலகங்காதர திலகர் தீவிரவாதிகளின் தலைவராகவும், கோபாலகிரு~;ண கோகலே
மிதவாதிகளின் தலைவராகவும் திகழ்ந்தனர்.
1916-ல் லக்னோ ஒப்பந்தத்தின் படி மீண்டும் இணைந்தார்.
சென்னையில் நடைபெற்ற மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் “பத்ரூதீன்
தியாப்ஜி” இவர் காங்கிரஸ் மாநாட்டின் முதல் முஸ்லீம் தலைவர் என்ற சிறப்பை
பெற்றார்.
1988ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற நான்காவது காங்கிரஸ் மாநாட்டில் தலைமை
வகித்தவர், ஆங்கிலேயரான “ஜார்ஜ் யூல்”. இவர் காங்கிரஸ் மாநாட்டில் தலைவராக
பணியாற்றிய முதல் வெளிநாட்டவர் ஆவார்.
1898ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சமூக சீர்திருத்தம்
காங்கிரஸின் முக்கிய குறிக்கோள் என்று அறிவிக்கப்பட்டது.
1908ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சிக்கென ஒரு நிர்வாகச் சட்டம்
உருவாக்கப்பட்டது.
1916ல் லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், முஸ்லீம் லீக்கும் காங்கிரசும்
லக்னோ ஒப்பந்தத்தின்படி ஆங்கில ஆட்சிக்கு எதிராக இணைந்து போராட
ஒப்புக்கொண்டனர்.
இந்த மாநாட்டில் தான் காந்தியை நேரு முதல் முதலாக சந்தித்தார்.
1917ஆம் ஆண்டு காங்கிரஸ் முதல் பெண் தலைவராக பதவியேற்றார்.
1922ல் காங்கிரஸ் மாநாட்டில் “சுயராஜ்ய கட்சி” உருவானது.
1924ல் நடைபெற்ற மாநாட்டில் காந்தி தலைமை வகித்தார். மகாத்மா காந்தி தலைமை
வகித்த ஒரே காங்கிரஸ் மாநாடு ஆகும்.
1925 காங்கிரஸ் மாநாட்டில், “சரோஜினி நாயுடு” காங்கிரசின் முதல் இந்திய பெண்
தலைவர் என்ற சிறப்பைப் பெறுகிறார்.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடங்கள் மற்றும் அதன் தலைவர்கள்
1885 பம்பாய் – W.C பானர்ஜி
1886 கல்கத்தா – தாதாபாய் நௌரோஜி
1887 மெட்ராஸ் – பத்ருதீன் தயாப்ஜி
1888 அலகாபாத் – ஜார்ஜ் யூல்
1889 பம்பாய் – சர் வில்லியம் வாடர்பர்ன்
1905 வாரணாசி – கோபால கிருஷ்ண கோகலே
1907 சூரத் – ராஸ் பிஹாரி கோஷ்
1916 லக்னோ – அம்பிகா சரண் மஜும்தார்
1917 கல்கத்தா – அன்னிபெசன்ட்
1924 பெல்ஹாம் – மகாத்;மா காந்தி
1925 கான்பூர் – சரோஜினி நாயுடு
1929 லாகூர் – ஜவஹர்லால் நேரு
1930 மாநாடு இல்லை (சட்டமறுப்பு இயக்கம்)
1948 ஜெய்பூர் – பட்டாபி சீதாராமய்யா
தேசியத் தலைவர்கள்
மகாத்மா காந்தி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அக்டோபர் 2, 1869ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில்
போர்பந்தரில் பிறந்தார்.
தன்னுடைய 24ஆம் வயதில் தென்னாப்பிரிக்கா சென்று அங்கு 21 ஆண்டுகள் (1893-1914)
வாழ்ந்தார்.
1915 ஜனவரி 9 ஆம் நாள் காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா
திரும்பினார். அத்தினமே தற்போது வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக
கடைப்பிடிக்கப்படுகிறது.
கோபால கிரு~;ண கோகலேவின் மிதவாத கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய
காங்கிரஸில் சேர்ந்தார்.
1917ல் இந்தியாவில் தனது முதல் சத்தியா கிரக போராட்டமான “சம்பாரான் சத்தியாகிரகத்தை” பீகாரில் தொடங்கினார்.
1918ல் குஜராத்தில் கேதா ஆர்ப்பாட்டம் காந்தியடிகள் தலைமையில் நடைபெற்றது.
1919ம் ஆண்டு தனது முதல் “அகில இந்தியப் போராட்டமான ரௌலட் சத்தியாகிரகப்” போராட்டத்தை நடத்தினார்.
தனது “கெய்சர்-ஜ-ஹிந்த்” என்ற பட்டத்தை 1920-ல் நடைபெற்ற ஒத்துழையாமை
இயக்கத்தின் போது காந்தியடிகள் துறந்தார்.
1930 மார்ச் மாதத்தில் உப்பு சத்தியாகிரகம் காந்தியடிகள் தலைமையில் நடைபெற்றது. அகமதாபாத் முதல் தண்டி வரை, 12 மார்ச் முதல் 6 ஏப்ரல் வரை பாதயாத்திரையாக நடந்து வந்தார்.
1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது செய் அல்லது
செத்து மடி (னுழ ழச னுநை) என்ற முழக்கத்தை வழங்கினார்.
காந்தியடிகள தாழ்த்தப்பட்டவர்களை “ஹரிஜன்” கடவுளின் குழந்தைகள் என
அழைத்தார்.
ஜனவரி 30ஆம் நாள் இந்தியாவில் “தியாகிகள் தினமாகக்” கடைபிடிக்கப்படுகிறது.
ஆக்டோபர் 2ம் தேதி சர்வதேச அகிம்சை தினமாகக் ஐ.நா. அறிவித்துள்ளது.
காந்திஜி “யங் இந்தியா” என்ற ஆங்கில இதழை இந்தியாவில் நடத்தினார்.
காந்தியடிகள் நடத்திய ஆங்கில இதழின் பெயர், “இந்தியன் ஒப்பீனியன்”
காந்திஜியை முதன்முதலாக மகாத்மா என்றவர் ரவீந்தரநாத் தாகூர்.
காந்திஜியை முதன்முதலாக “தேச பிதா” என்று அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர
போஸ்.
ஜவஹர்லால் நேரு
நவீன இந்தியாவின் சிற்பி, 1947ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை இந்தியப்
பிரதமராகப் பணியாற்றியவர்.
1920ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இரண்டு முறை
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்துஸ்தான் சேவாதளம் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பை நேரு 1923ல்
ஏற்படுத்தினார்.
1927ல் நடந்த சென்னை காங்கிரஸ் மாநாட்டில், பூரண சுயராஜ்யத் தீர்மானத்தை நேரு
முன்மொழிந்தார்.
1920ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்திற்கு
நேரு தலைமை தாங்கினார்.
1936-37 ஆண்டுகளில் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாகப் பணியாற்றினர்.
1930ல் நேரு உத்திரப்பிரதேசத்தில் ‘வரிகொடா’ இயக்கத்தைத் துவக்கினார்.
இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரசியலமைப்புச் சட்டமன்றத்தில்
ஒரு தீர்மானம் கொண்டுவந்து இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்
கட்டமைப்பை வடிவமைத்தல் மற்றும்இந்திய வெளியுறவுக் கொள்கையின் கூறுகளை
வரையறுத்தார்.
இந்தியாவில் “திட்டக் குழு”வை உருவாக்கினார்.
நேரு கலப்பு பொருளாதார முறையைக் கொண்டு வந்தார். மேலும் கூட்டு சேராக்
கொள்கையைப் பின்பற்றினார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
23 ஜனவரி 1897ல் கட்டாக்கில் பிறந்தார்.
ஐஊளு எழுதி, அதில் நான்காவதாக வந்தார். போஸ் ஆங்கிலேயரின் கீழ் வேலை
செய்ய விரும்பவில்லை. வேலையை ராஜினாமா செய்தார்.
“சுவராஜ்” என்னும் செய்திதாளைத் தொடங்கினார். “சித்தரஞ்சன் தால்” அவர்களை
வழிகாட்டியாகக் கொண்டார்.
1924 மற்றும் 30ஆம் ஆண்டுகளில் கல்கத்தாவின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1939ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சந்திர போஸ் 1939ஆம் ஆண்டு “ஃபார்வர்டு பிளாக்” அமைப்பை 22 ஜீனில்
தொடங்கினார். வங்காளத்தில் அவருக்கு ஆதரவு கிடைத்தது.
இந்திய தேசிய ராணுவம் சிங்கப்பூரில் செப்டம்பர் 1, 1924ஆம் ஆண்டு ‘ஜெனரல்
மேகன் சிங்’ அவர்களால் தொடங்கப்பட்டது.
போஸ் புதிய ராணுவப் படையைப் புத்தெழுச்சியுடன் உருவாக்கினார்.
இதில் பெண்கள் பிரிவு இருந்தது. “ஜான்சி ராணி ரெஜிமெண்ட்” என அழைக்கப்பட்டதன்
தலைமைப்
பொறுப்பை கேப்டன் “லட்சுமி சுவாமிநாதன்” ஏற்றுக் கொண்டார்.
1944ஆம் ஆண்டு பர்மாவில் நடைபெற்ற இந்திய ராணுவப் பேரணியில் “இரத்தத்தைக்
கொடுங்கள். சுதந்திரத்தைத் தருகிறேன்” என்று கூறினார்.
தாதாபாய் நௌரோஜி
தேச பக்தியின் சின்னம் என்று பாராட்டப்பட்டவர் நௌரோஜி.
இந்தியாவிலேயே முதன் முதலாக பெண்பள்ளி ஒன்றை நிறுவினார். எனவே இவரை
“பெண் கல்வியின் தந்தை” என்று மக்கள் பாராட்டினர்.
1852ல் ‘பம்பாய் சங்கம்’ ஒன்றை அமைத்தார்.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் தாதாபாய் நௌரோஜி ஆவார்.
இவரது மிதவாதக் கோட்பாடு காங்கிரஸ் கட்சியை வலுவடைய செய்தது.
1866ல் கிழக்கிந்திய சங்கம் ஒன்றை நிறுவினார். “இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என
அழைக்கப்பட்டார்.
இந்தியாவின் முதலாவது பொருளாதார சிந்தனையாளரும் அவரே.
இவர் எழுதிய “இந்திய வறுமையும், பிரிட்டிஷ_க்கு ஒவ்வாத ஆட்சியும்” (Pழஎநசவல ரூ
ருnடிசவைiளா சரடந in ஐனெயை) என்ற புத்தகம் புகழ் பெற்றது.
இந்தியாவின் தேசிய வருமானத்தை முதன் முதலாக கணக்கிட்டவர்.
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
சுரேந்திரநாத் பானர்ஜி
ஐஊளு தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதலாவது இந்தியர் சுரேந்திரநாத் பானர்ஜி ஆவார்.
1876ல் கல்கத்தாவில் “இந்திய சங்கம்” ஒன்றை நிறுவினார்.
“ராஷ்டிர குரு” என்று அழைக்கப்பட்டார்.
இந்திய தேசிய காங்கிரஸின் 1898, 1902ஆம் வருட கூட்டங்களில் சுரேந்திரநாத்
பாணர்ஜி தலைமை தாங்கினார்.
‘தேசிய லிபரல் கூட்டமைப்பு’ ஒன்றை அமைத்தார். இரட்டை ஆட்சியின்படி வங்காளத்தில் மந்திரி பதவி ஏற்றார்.
ஆங்கிலேயர்கள் “சுரேந்தர் ழேவ” பானர்ஜி என்று அன்புடன் அழைத்து மகிழ்ந்தனர்.
கோபால கிருஷ்ண கோகலே
நீதிபதி ரானடேயின் கருத்துகளைப் பின்பற்றிய கோகலே அவரை தனது ஆன்மீக,
அரசியல் குருவாகக் கருதினார்.
விடுதலை இயக்கத்தில் இவரது கருத்துக்கள் மிதவாதக் கருத்துக்களாகும்.
“பேரரசுக்குட்டபட்ட தன்னாட்சியே இந்திய தேசியக் காங்கிரசின் குறிக்கோள்” என்று
பேசினார்.
1905ல் இந்திய தொண்டர் சங்கத்தைத் (ளுநசஎயவெள ழக ஐனெயை ளுழஉநைவல) துவக்கினார்.
காந்தி இவரிடம் ‘இந்தியாவிற்கு வந்து இந்திய மக்களுக்கு சேவை புரியுமாறு’
கேட்டுக்கொண்டார்.
“காந்தி” கோகலேயை தனது அரசியல் “குருவாக” ஏற்றுக் கொண்டார்.
பால கங்காதார திலகர்:
‘இந்திய தேசிய எழுச்சியின் தந்தை” என்று போற்றப்படுபவர்.
‘நியு இங்கிலீஸ் ஸ்கூல்’ என்ற ஆங்கிலப் பள்ளியை 1880ல் பூனாவில் தொடங்கினார். இது
பின்பு “பர்குசன் கல்லூரி” என்று மாறியது.
1870ல் ‘பூனலாவஜனக் சபா’ என்ற தொண்டு நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.
‘கேசரி’ என்ற பத்திரிக்கையும், ஆங்கிலத்தில் ‘மராட்டா’ என்ற பத்திரிக்கையும் 1881ல்
ஆரம்பித்தார்.
‘ஒரியன்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். ‘வலிமையின் மூலம் இந்தியாவைப் பிடித்த
ஆங்கிலேயர்களை வலிமையின் மூலமே இந்தியாவிலிருந்து விரட்ட முடியும்’ என்றார்.
அரசியலில் திலகர் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டிருந்தார்.
சுயராஜ்யம், சுதேசி இயக்கம், அந்நியப் பொருள் புறக்கணிப்பு என்ற திரிசூலத்
தாக்குதளை அரசின் மீது தொடுத்தார்.
லாலா லஜபதிராய்
“பஞ்சாபின் சிங்கம்” என்று அழைக்கப்படும் லாலா லஜபதிராய் ரஞ்சித் சிங்கிற்குப் பிறகு
பஞ்சாப் உருவாக்கிய மாபெரும் தலைவர் ஆவார்.
1988ல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார்.
காங்கிரஸில் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்ட தலைவர்களின் ஒருவரானார்
லஜபதிராய்.
இங்கிலாந்தில் இருந்த போது லஜபதிராய் “யங் இந்தியா”, “நுபெடயனெ’ள னநடிவ வழ ஐனெயை”
என்ற இரண்டு புத்தகங்களை எழுதினார்.
“பஞ்சாபி”, “வந்தே மாதரம்”, “வுhந Pநழிடந” ஆகிய மூன்று பத்திரிகைகளை ஆரம்பித்தார்.
சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தில் ஆங்கிலேயரின் தடியடியால் 1928
நவம்பர் 17ல் மரணமடைந்தார்.
“தன் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் ஆங்கில ஏகாதிபத்திய சவப்பெட்டிக்கு அடிக்கும்
ஒவ்வொரு ஆணியாகும்” என்று முழங்கினார்.
அன்னிபெசன்ட்
சுதந்திர சிந்தனையாளர் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்.
1887ல் ‘எட்டுமணி நேரம் வேலை’ என்ற கிளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1914ல் காமன்வீல் என்ற வார இதழையும், சில மாதங்களுக்குப் பிறகு “நியூ இந்தியா”
என்ற தினசரியையும் வெளியிட்டார்.
திலகரின் தலைமையில் செயல்பட்ட தீவிரவாத காங்கிரசையும், கோகலே தலைமையில் செயல்பட்ட மிதவாத காங்கிரசையும், ஒன்றாக இணைத்த பெருமை
இவருக்கே உண்டு.
1893 முதல் இந்திய பிரஜையாகவே வாழ்ந்தார். 1918ல் பெசன்ட் அம்மையார் இந்திய
சாரண சங்கத்தை ஏற்படுத்தினார். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக “லோட்டஸ்
சர்கிள்”, ரவுண்ட் டேபிள்” போன்ற நிறுவனங்களை உண்டாக்கினார்.
பெனாரசில் மத்திய இந்துக் கல்லூரியை நிறுவினார்.
“அடக்குமுறை அதிகரிப்பு, உரிமை ஒடுக்கப்படுதல், மாணவர்கள் துன்புறுத்தப்படுதல்
புரட்சி அபாயம்” ஆகியவை தாம் தம்மை தவிர அரசியலில் ஈடுபடச் செய்வதாக அவர்
கூறினார்.
“தான் ஒரு இந்திய டமாரம்” என்றும் குறிப்பிட்டார்.
“இந்து மதம் இன்றேல் இந்தியா இல்லை” என்று நம்பினார்.
தன்னாட்சி சங்கத்தைத் தோற்றுவித்து, சுதேசி இயக்கத்தை ஊக்குவித்தார்;.
மோதிலால் நேரு
அரசியலில் மோதிலால் நேரு மிதவாதியாகவே இருந்தார். ஆனால் ஆங்கிலேயரின்,
ஜாலியன் வாலாபாக் படுகொலை, அடக்குமுறை ஆகியவற்றால் தீவிரவாத காங்கிரஸ்
தொண்டர் ஆனார்.
சித்தரஞ்சன் தாஸ் (அ) சி.ஆர். தாஸ் தனது தலைவர் பதவியை உதறிவிட்டு மோதிலால்
நேருவுடன் சேர்ந்து காங்கிரசுக்குள்ளே புதிய கட்சியை துவங்கினார். அது
“சுயராயஜ்யக்கட்சி” (1923) ஆகும்.
இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்தைப் பரிந்துரைத்த அறிக்கை, “நேரு அறிக்கை”,
இது மோதிலால் நேருவால் உருவானது. ஆனால் இதை ஜவஹர்லால் நேரு எதிர்த்தார்.
முகமது அலிஜின்னா
• இவர் முஸ்லீம் மக்களால் ‘பெருந்தலைவர்’ என்று போற்றபட்டார்.
இவரது அரசியல் வாழ்க்கை 1905ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபோது ஆரம்பமானது.
1906ஆம் வருடம் “முஸ்லீம் லீக்” என்ற அமைப்பு தோன்றுவதற்கு இவரும் காரணமாவார்.
பின்பு 1919ல் முஸ்லீம் லீக்கின் தலைவரானார்.
லக்னோ உடன்படிக்கையில் முஸ்லீம்களுக்கு தனித்தொகுதி, பரிந்துரையை காங்கிரஸ்
ஏற்றுக் கொண்டது.
இவர் “இந்து முஸ்லீம் ஒற்றுமையின் சிற்பி” என்று புகழ்ந்தார் சரோஜினி நாயுடு.
ஜின்னாவின் 14 அம்சத் திட்டம்: 1929
நேரு அறிக்கையை நிராகரித்த ஜின்னா 1929ல் கூடிய முஸ்லீம் லீக் மாநாட்டின் தனது 14
அம்ச திட்டத்தை வெளியிட்டார்.
“வெள்ளையனே பிரித்து விட்டு வெளியேறு” என்றார் ஜின்னா.
1946 ஆகஸ்ட் 16ல் “நேரடி நடவடிக்கை” மேற்கொண்டார்.
மாநிலத் தலைவர்கள்
வ.உ. சிதம்பரம் பிள்ளை
செக்கிழுத்த செம்மல் என்றும் கப்பலோட்டிய தமிழன் என்றும் அழைக்கப்பட்டார்.
சுதேசி தர்ம சங்க நெசவாளிகள் சங்கம் மற்றும் சுதேசி கூட்டுறவு அங்காடிகளை
தூத்துக்குடியில் தோற்றுவித்தார்.
தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பல் போக்குவரத்தைத் துவங்கினார்.
தந்தை பெரியார்
1919ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
1921ஆம் ஆண்டு பெரியார், சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1924, 14ஏப்ரல், கேராளாவிலுள்ள வைக்கம் என்னும் இடத்திற்குச் சென்று தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதால், “வைக்கம்
வீரர்” என்று அழைக்கப்பட்டார்.
1925ல், “குடியரசு” என்னும் தமிழ் வார இதழைத் தொடங்கினார். 1928ஆம் ஆண்டு “ரிவோல்ட்” எனப்படும் ஆங்கில இதழைத் தொடங்கினார்.
1929ல் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மகாண மாநாட்டில் தன் சாதி
அடையாளத்தை நீக்கினார்.
1944ல் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக இருந்தார்.
அதே ஆண்டில், இனிமேல் “நீதிக்கட்சி” “திராவிடர் கழகம்” என்று அழைக்கப்படும் என
அறிவித்தார்.
யுனஸ்கோ பெரியாரைப் பற்றி “நவீன காலத்தின் தீர்க்கதரிசி” தென்கிழக்கு ஆசிய நாட்டின்
சாக்ரடீஸ் என்று கூறுகின்றனர்.
சுப்பிரமணிய பாரதியார்
1907ஆம் ஆண்டு நடைபெற்ற சூரத் மாநாட்டில் கலந்துகொண்டார்.
திலகர் மற்றும் அரவிந்த கோ~{டன் சேர்ந்து சுயராஜ்ஜியத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார்.
1908ஆம் ஆண்டு சென்னையில் மாபெரும் கூட்டத்தை நடத்தி, சுயராஜ்ஜிய நாளாக
கொண்டாடினார்.
எஸ். சத்தியமூர்த்தி
காமராஜரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும்
நாட்டுப்பற்றாளர்.
1930ல் ராஜகோபாலச் சாரியார் தனக்குப் பின் சத்தியமூர்த்தியை அகில இந்தியக்
காங்கிரஸ் தமிழ்நாட்டுப் பிரிவின் தலைவர் ஆக்கினார்.
1939ஆம் ஆண்டு சென்னை மேயராக இருந்தார்.
சி. ராசகோபாலச்சாரி
1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும், 1907ஆம் ஆண்டு
சூரத் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
1930ல் வேதாரண்யம் சத்தியாகிரகத்தைத் தலைமையேற்று நடத்தினார். தமது தலைமையில் திருச்சியிலிருந்து வேதாரண்யம் சென்று உப்பு காய்ச்சி உப்புச்சட்டங்களை
மீறினார்.
1937ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண
முதலமைச்சரானார். மதுவிலக்கை அமுல்படுத்தினார்.
இந்தி மொழியை கட்டாயப் பாடமாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தினார்.
1939ல் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார். மீண்டும்
தமிழக முதலமைச்சராக 1952ல் பதவி ஏற்றார்.
குலக்கல்வித் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். எதிர்ப்பு கிளம்பவே,
1954ஆம் ஆண்டு மீண்டும் இராஜினாமா செய்து காங்கிரசிலிருந்து வெளியேறினார்.
சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்து, “இளம் இந்தியா” என்ற பத்திரிக்கையை நடத்தினார்.
1954ஆம் ஆண்டு இவருக்கு “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது.
காமராஜர்
1924ஆம் ஆண்டு வைக்கம் சத்தியா கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் சுதந்திரப்
போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1930ல் வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகத்தை ராஜாஜியுடன் சேர்த்து மேற்கொண்டார்.
அதனால் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு
“அலிப்பூர்” சிறையில் அடைக்கப்பட்டார்.
இருப்பினும் காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்படி விடுவிக்கப்பட்டார்.
1940ஆம் ஆண்டு தனது சத்தியாகிரகப் போராட்டத் திட்டங்களுக்கு காந்தியிடம்
அனுமதி பெற வார்தா பயணமானார், ஆனால் அவரை “வேலூர்” சிறையில் அடைத்தனர்.
1942ல் நடந்த “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் ஈடுபட்டு, மீண்டும் கைது
செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் அமராவதிசிறையில் அடைக்கப்பட்டார்.
காமராஜர் தமிழக முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார். “மத்திய உணவுத்திட்டம், புதிய பள்ளிகளை திறந்து, இலவச கல்வி வழங்குதல் போன்ற
நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அரசரை உருவாக்குபவர் எனப் போற்றப்பட்டார், காமராஜர் (கே திட்டம்) என்ற
திட்டத்தின்படி கட்சிப் பணிக்காக தனது பதவியை இராஜினாமா செய்தார்.
விடுதலைப்போரில் தமிழகத்துப் பெண்கள்
மூவலூர் இராமாமிர்தம்
தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று அழைக்கப்பட்டவர்.
1925ல் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். இந்தி எதிர்ப்புப்
போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றார்.
1936ல் வெளியான “தாசிகளின் மோசவலை” எனும் இவரது நூல் தேவதாசிகளின்
அவலநிலையை எடுத்துக்கூறியது.
“கதர் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்” என்று அவரின் வீட்டின் முன்பாக
எழுதியிருந்தது.
1989ம் ஆண்டு முதல் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண
உதவித்திட்டம்” என்ற பெயரில் தமிழக அரசு ஏழைப் பெண்களுக்கு உதவித் திட்டத்தை
வழங்குகிறது.
வேலு நாச்சியார்
வேலு நாச்சியார் 1730ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் பிறந்தார்.
1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.
வேலு நாச்சியார் மன்னர் ஜதர் அலியுடன் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தார்.
கடலூர் அஞ்சலையம்மாள்
அஞ்சலையம்மாள் கடலூரில் 1890ஆம் ஆண்டு பிறந்தார்.
தென்னாட்டின் ஜான்சிராணி என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்.
அம்புஜத்தம்மாள்
• காந்தியடிகளால் தத்து எடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
• ‘நான் கண்ட பாரதம்’ என்ற நூலை எழுதியுள்ளார்.
• மத்திய அரசு 1964ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
தில்லையாடி வள்ளியம்மை
தென்னாப்பிரிக்கா ஜோகன்ஸ்பர்க் நகரில் 1898ஆம் ஆண்டு பிறந்தார்.
“தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்” என்னும் நூலில் நம்பிக்கைதான் வள்ளியம்மையின்
ஆயுதம் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விடுதலைப் போரின் போராட்டங்கள்
இந்திய விடுதலைப் போராட்டத்தை மிதவாதிகள் காலம் (1885முதல் 1905 வரை),
தீவிரவாதிகள் காலம் (1905 முதல் 1920 வரை), காந்தியுகம்(1920 முதல் 1947 வரை) என
மூன்றாக வகைப்படுத்தலாம்.
வங்கப்பிரிவினை: 1905
ஆட்சியின் எளிமைக்கும், நிர்வாகம் வசதிக்காகவும் வங்காளத்தை, கிழக்கு வங்காளம் மற்றும் அசாமை இணைத்து ஒரு மாகாணமாகவும், மேற்கு வங்காளம் மற்றும் பீகாரை இணைத்து மற்றொரு மாகாணமாகவும் 1905ஆம் ஆண்டு கர்சன் பிரபு வங்காளப் பிரிவினையை அறிவித்தார்.
வங்காளப் பிரிவினையை தீவிரவாதிகளும், மிதவாதிகளும் “பிரித்தாளும் கொள்கையின்” அறிமுகம் என்று கருதினர்.
சுதேசி இயக்கம்: 1905-1906
1905ஆம் ஆண்டு பொருளாதாரப் புறக்கணிப்பு என்னும் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு வங்கப்பிரிவினை காரணமாயிற்று.
“சுதேசி” என்பதன் பொருள் சொந்த நாடு என்பதாகும். மேலும் அயல்நாட்டுப் பொருள்கள் பயன்பாட்டைப் புறக்கணிப்பதாகும்.
பக்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் இயற்றப்பட்ட “வந்தே மாதரம்” என்னும் தாய்நாட்டு பற்றுமிக்க முழக்கத்தை காங்கிரசார் எழுப்பினர்.
தீவிர வன்முறையாலும், எதிர்ப்பினாலும் 1911ஆம் ஆண்டு வங்காளம் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டது.
தன்னாட்சி இயக்கம்: 1916
1916ஆம் ஆண்டு பாலகங்காதர திலகர் தன்னாட்சி கழகத்தை மும்பையில் நிறுவினார்.
அயர்லாந்தைச் சேர்ந்த அன்னிபெசன்ட் அம்மையார் சென்னையில் தன்னாட்சி கழகத்தின் கிளையினைத் தொடங்கினார்.
அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய “நியூ இந்தியா” பத்திரிக்கையை ஆங்கில அரசு தடை செய்தது. மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் தன்னாட்சி இயக்கத்திற்கு தங்கள் முழு ஆதரவை தந்தனர்.
கிலாபத் இயக்கம்: 1919
உலக முஸ்லீம் மக்களின் சமயத் தலைவரான “காலிப்” ஆங்கிலேயரால் அவமதிக்கப்பட்டார்.
எனவே ஆங்கில அரசுக்கு எதிராக இந்தியாவில் முகமது அலி, சவுகத் அலி என்ற அலி சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினார்கள்.
காந்தி முழு மனதுடன் இவ்வியக்கத்தை ஆதரித்தார்.
ஒத்துழையாமை இயக்கம்: 1920-1922
பாலகங்காதர திலகர் 1920ஆம் ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து காந்தியடிகள் காங்கிரசின் தலைவரானார்.
ரௌலட் சட்டத்தை எதிர்த்தும் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்தும், மான்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டத்தின் பயனின்மையை ஆங்கிலேயருக்கு உணர்த்தவும் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொள்வது என காந்தியடிகள் அறிவித்தார். முதற்கட்டமாக ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதவிகளையும், பட்டங்களையும் விருதுகளையும் துறந்தனர். இரண்டாவது கட்டமாக வேலைநிறுத்தம் உட்பட பெரும் போராட்டங்களை நடத்தினர்.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் புற்கணிக்கப்பட்டன. முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1921ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், மக்கள் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மூன்றாவது கட்டமாக “வரிகொடா இயக்கம்” தொடங்கப்பட்டது.
சௌரி சௌரா சம்பவம்: 1922
ஒத்துழையாமை இயக்கத்தின்போது காந்தியடிகள், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். எனினும் வன்முறைகள் பல இடங்களில் தொடர்ந்தன.
1922ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாள், உத்திரப்பிரதேசத்தில் சௌரி சௌரா(கோரக்பூர்) என்னுமிடத்தில் ஆயிரம் விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இப்பேரணியின்போது காவலர்கள் விவசாயிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால் கோபமடைந்த விவசாயிகள் காவல் நிலையத்தை தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவலர்கள் உயிரிழந்தனர்.
இக்காரணத்தினால் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக கைவிட்டார்.
சுயராஜ்ஜியக் கட்சி 1923-1925
1923ஆம் ஆண்டு சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஒன்று சேர்ந்து சுயராஜ்ஜியக் கட்சியைத் தோற்றுவித்தனர்.
1919ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய அரசாங்க சட்டத்தின்படி நடத்தப்பட்ட தேர்தல்களில் பங்கேற்று, சட்டமன்றத்துக்குள் நுழைந்து அங்கிருந்தபடி ஆங்கில அரசின் இந்திய விரோத நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதை சுயராஜ்யக் கட்சி தனது நோக்கமாகக் கொண்டிருந்தது.
காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுதந்திர போராட்டத்;தை சுயராஜ்ஜிய கட்சி தலைமையேற்று நடத்தியது.
சி.ஆர். தாஸ் 1925ஆம் ஆண்டு மரணமடைந்ததால் சுயராஜ்ஜிய கட்சியும் கலைக்கப்பட்டது.
சைமன் குழு எதிர்ப்பு போராட்டம்: 1927-1928
1919 ஆம் ஆண்டு சட்டம் எந்த அளவிற்கு பயன்பட்டுள்ளது என்பதனை ஆராயவும், மேம்படுத்தவும், “ சர் ஜான் சைமன்” தலைமையில் 7 பேர் கொண்ட ஒரு குழுவை 1927ஆம் ஆண்டு ஆங்;;;;;;;;;;;;;;கில அரசு நியமித்தது.
இக்குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள் ஆவர்;.
“சைமனே திரும்பிச் செல்” என்று நாடு முழுவதும் குரலெழுப்பப்பட்டது.
பஞ்சாபின் சிங்கம் லாலா லஜ்பதிராய், சைமன் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தின் போது தடியடிக்கு உள்ளாகி உயிர் துறந்தார்.
லாகூர் மாநாடு: 1929
1929 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு லாகூரில் ஜவஹாலால் நேரு தலைமையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் பூரண சுதந்திரம் பெறுவதே இந்திய தேசிய காங்கிரஸ் நோக்கம் என அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 31, 1929 ஆம் ஆண்டு நள்ளிரவில் “வந்தே மாதரம்” என்ற பாடலுக்கிடையே “ராவி” நதிக்கரையில் இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.
ஜனவரி 26, 1930 ஆம் ஆண்டு நாடு முழுவதும் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டது.
சட்டமறுப்பு இயக்கம் (அ) உப்புச் சத்தியாகிரகம்:1930
சரோஜினி நாயுடு உட்பட 78 தொண்டர்களுடன் காந்தியடிகள் மார்ச் 12, 1930ல் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து பாதயாத்திரை தொடங்கி ஏப்ரல் 6ஆம் நாள் தண்டி வரை முடித்தார்.
“இது தண்டி யாத்திரை” அல்லது உப்புச் சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்டது.
பல லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் உப்பு மீது ஆங்கில அரசு வரி விதித்தது. இதனால் காந்தியடிகள் சட்டம் மறுப்பு போராட்டத்தை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் சி. ராஜகோபாலச்சாரியார் தலைமையில் திருச்சி முதல் தஞ்சாவூர் கடற்கரைப் பகுதியில் வேதாரண்யத்தில் உப்புச் சட்டங்களை மீறி, உப்பு காய்ச்சினார்.
முழக்கங்கள் முழங்கியவர்கள்
செய் அல்லது செத்து மடி காந்திஜி
கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் அம்பேத்கார்.
இந்தியா இந்தியர்களுக்கே தயானந்த சரஸ்வதி.
வறுமையே வெளியேறு இந்திராகாந்தி
சுயராஜ்யம் என் பிறப்புரிமை,
அதை அடைந்தே தீருவேன் திலகர்
இன்குலாப் ஜிந்தாபாத் பகத்சிங்
இரத்தத்தைக் கொடுங்கள்,
சுதந்திரம் தருகிறேன நேதாஜி
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கப்பட்ட பத்திரிக்கைகளும்
அவற்றை தொடங்கியவர்களும்.
ராஃப்ட் கோஃப்தார் (1861) – தாதாபாய் நௌரோஜி
மராட்டா (1881), கேசரி (1881) – பால கங்காதர திலகர்
சுதேசமித்ரன் (1882), தி இந்து (1878) – ஜி.சுப்பிரமணிய ஐயர்
இந்தியா (1906) – பாரதியார்
வந்தே மாதரம் (1906) – அரவிந்த கோஷ்
அல்ஹிலால் (1912) – அபுல் கலாம் ஆசாத்
காமன் வீல் (1914), நியூ இந்தியா (1914), மெட்ராஸ் ஸ்டேண்டர்ட் (1914) – அன்னிபெசன்ட்
யங் இந்தியா (1919), நவஜீவன், ஹரிஜன் (1931) – காந்தியடிகள்
இண்டிபென்டன்ட் (1919) – மோதிலால் நேரு
நேஷனல் ஹெரால்ட் – ஜவஹர்லால் நேரு
விடுதலை – ஈ.வெ.ரா. பெரியார்
யுகந்தர் – பூபேந்திரநாத் தத்
இந்திய விடுதலைப் போர் சட்டங்களும், ஒப்பந்தங்களும்
இந்திய கவுன்சில் சட்டம் (1861), இந்திய கவுன்சில் சட்டம் (1893), மின்டோ மார்லி சீர்திருத்தம் (1909) ஆகிய மூன்றையும் இந்தியாவில் பிரதிநிதித்துவ அரசாங்கத்திற்கான பாதை என்று கூறலாம்.
முஸ்லீம் லீக் தோற்றம்: 1906
1906ஆம் ஆண்டு டாக்கா நகரைச் சேர்ந்த நவாப் சலிமுல்லாகான் என்பவரது தலைமையில் முஸ்லீம் லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
முஸ்லீம்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, அவர்களுக்கு மேலும் பல சலுகைகளைப் பெறுவது, காங்கிரஸிலிருந்து அவர்களை தனியாகப் பிரிப்பது, தனித்தொரு பெறுவது ஆகியவற்றை நோக்கங்களாக முஸ்லீம்லீக் கட்சி கொண்டிருந்தது.
மின்டோ-மார்லிச் சீர்த்திருத்தங்கள்:1909
முஸ்லீம்களை திருப்திபடுத்த, 1909 ஆம் ஆண்டு மின்டோ-மார்லி சீர்த்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்தின்படி முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன. இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது.
லக்னோ ஒப்பந்தம்: 1916
இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு 1916ஆம் ஆண்டு லக்னோ நகரில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் இரு முக்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
மிதவாதிகளும், தீவிரவாதிகளும் ஒன்றுபட்டனர்.
காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் சுய ஆட்சி பெறுவதில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
மாநாட்டில், ஜவஹர்லால் நேரு, காந்தியை முதன்முதலாகச் சந்தித்தார்.
ஆகஸ்ட் அறிக்கை: 1917
- இந்தியாவின் எதிர்கால அரசியல் சீர்த்திருத்தங்கள் பற்றியும், இந்தியாவில் படிப்படியாக தன்னாட்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தனர்.
- இதனால் தன்னாட்சி இயக்கம் படிப்படியா முடிவுக்கு வந்தது.
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்:1919
- இச்சட்டத்தின்படி மத்திய மற்றும் மாகாண சட்டமன்றங்கள் விரிவுப்படுத்தப்பட்டன.
- மாகாணங்கள் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
- இச்சட்டத்தின்படி ஆங்கிலோ-இந்தியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஆகியோர்களுக்கு தனித்தனி தொகுதிகள் வழங்கப்பட்டன.
- இந்திய தேசிய காங்கிரஸ் இச்சட்டத்தை நிராகரித்தது.
- இச்சட்டத்தை வெளியிட்டது ஆங்கிலேயரின் பெருந்தன்மையற்ற செயல் எனவும் அதனை ஏற்றுக்கொள்வது இந்தியருக்கு மதிப்புடையதாகாது எனவும் “அன்னிபெசன்ட்” விவரித்தனர்.
ரௌலட் சட்டம்: 1919
- ஆங்கில அரசு இந்திய சுதந்திரப் போராட்டத்தை தீவிரமாக எதிர்கொள்ள 1919ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை கொண்டு வந்தது.
- இச்சட்டத்தின்படி “உத்தரவின்றி எவரையும் கைது செய்யவும்”, “விசாரணையின்றி சிறையில் அடைக்கவும்” ஆங்கில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை: 1919
- 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் பஞ்சாபின் தலைவர்களாக டாக்டர் “சத்தியபால் மற்றும் டாக்டர் சாய்ப்புதீன்” கிச்லு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- இதனை எதிர்த்து சுமார் பத்தாயிரம் மக்கள் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் (பூங்கா) அமைதியாகக் கூடியிருந்தனர்.
- இராணுவத் தளபதியான ஜெனரல் டயர் தம் படைவீரர்களுடன் அங்கு சென்று வாயிலை அடைத்தபடி எவ்வித முன்னறிவிப்பின்றி துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார்.
- இப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரவீந்திரநாத் தாகூர் தனது நைட்வுட் (முniபாவ-hழழன) பட்டத்தை துறந்தார்.
சைமன் கமிஷன் வருகைக்கு பின் :1927-1930
- சைமன் கமிஷன் தனது அறிக்கையில் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை ஒழிப்பதற்கு பரிந்துரைத்தது.
- மோதிலால் நேரு 1928ல் நேரு அறிக்கையை வெளியிட்டார்.
- நேரு அறிக்கையில் இந்தியர்களுக்கான 19 அடிப்படைக் கடமைகள் வலியுறுத்தபட்டன. ஆனால் டொமினியன் அந்தஸ்து மட்டும்தான் இந்தியாவிற்கு கோரப்பட்டது.
- மேலும் பிரிட்டி~; அரசு நேரு அறிக்கைக்கு சாதகமான பதிலை தராவிட்டால் 1929ல் முழு சுதந்திரம் தீர்மானம் நிறைவேற்றலாம் என்றார் காந்தியடிகள்.
- 1929ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழு இந்திய சுதந்திர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஜனவரி 26, 1930 அன்று சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டது.
- நேரு அறிக்கையில் கூறப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத முகமது அலி ஜின்னா தமது கோரிக்கையை 14 அம்ச அறிக்கையாக வெளியிட்டார்.
14 அம்ச கோரிக்கைகள்
- மாநிலங்களுக்கு எச்சதிகாரங்களை வழங்கும் கூட்டாட்சி அரசமைப்பு.
- மாநில சுயாட்சி
- மத்திய சட்டமன்றத்தில் முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு பிரநிதித்துவம் வழங்குதல்.
- சிந்து, பம்பாயில் இருந்து பிரிக்கப்பட வேண்டும்.
- அனைத்து சமூகங்களுக்கும் சமய சுதந்திரம் வழங்க வேண்டும்.
- தனித்தொகுதிகள்.
- மத்திய அமைச்சரவையில் முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் வழங்குதல்.
வட்டமேசை மாநாடு: 1930-1932
- முதல் வட்டமேசை மாநாடு: 1930
- சட்டமறுப்பு இயக்கத்தை ஆங்கில அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
- எனவே இந்திய அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஆங்கில அரசு லண்டன் நகரில் முதல் வட்டமேசை மாநாட்டைக் கூட்டியது.
- சட்ட மறுப்பு இயக்கத்தால், காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
காந்தி இர்வின் ஒப்பந்தம்: 1931 - முதல் வட்டமேசை மாநாடு தோல்வியில் முடிந்தது. எனவே பிரிட்டி~; அரசு இர்வின் பிரபுவை, காந்திஜியை சந்திக்க இந்தியாவிற்கு அனுப்பியது.
- இதன் முடிவில் 1931ஆம் ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இவ்வொப்பந்தத்தின்படி சட்டமறுப்பு இயக்கத்தை கைவிடுவது என்றும் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வது என்றும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.
- இதற்கு கைமாறாக, ஆங்கில அரசு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் விடுதலை செய்வதென்றும், உப்புச் சட்டங்களை திரும்ப பெறுவது என்றும் ஒப்புக்கொண்டது.
இரண்டாம் வட்டமேசை மாநாடு:1931
- காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின்படி, காந்தியடிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டார்.
- முழு சுதந்திரம், வகுப்பு பிரச்சனை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
- மேலும் காந்தி நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார். சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும்
தொடங்கப்பட்டது.
வகுப்புவாத அறிக்கையும் பூனா ஒப்பந்தமும்: 1932
- இங்கிலாந்து பிரதமர் இராம்சே-மெக்டொனால்டு வகுப்புவாத அறிக்கையை வெளியிட்டார்.
- இந்த அறிக்கையில் சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- இதை அம்பேத்கார் வரவேற்றார். ஆனால், காந்திஜி இதை ஏற்க மறுத்து சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
- 1932ஆம் ஆண்டு அம்பேத்காருடன் ஏற்பட்ட பூனா உடன்படிக்கைக்குப்பின் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
- சட்டசபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு அதிக அளவு எண்ணிக்கையில் இடங்கள் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
மூன்றாம் வட்டமேசை மாநாடு: 1932
- 1932ஆம் ஆண்டு மூன்றாவது வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது.
- காங்கிரஸ் தலைவர்கள் இதில் பங்கு பெறவில்லை.
1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
- மாகாணங்களில் தன்னாட்சி அறிமுகம், இரட்டை ஆட்சி ஒழிப்பு, மத்தியில் கூட்டாட்சி அரசாங்கம், கூட்டாட்சி நீதிமன்றம் நிறுவுதல், கூட்டாட்சி ரிசர்வ் வங்கி நிறுவப்படுதல் ஆகியவை 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் முக்கிய கூறுகள்.
- 1939ல் காங்கிரஸ் 8 மாநிலங்களில் அமைச்சரவைகளை ராஜினாமா செய்தன.
- காங்கிரஸ் கட்சி ராஜினாமா செய்ததை, ஜின்னா வரவேற்று 1939 செப்டம்பர், 22ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாடினார்.
- பின்னர், அவர் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக இருக்க முடியாது என்றும் அவர்களுக்கு தனித்தனியாக இரு நாடுகள் தேவை என்றும் கூறினார்.
பாகிஸ்தான் கோரிக்கை: 1940
- முகமது அலி ஜின்னா 1940 ஆண்டு லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டில் தனது தனிநாடு கோரிக்கையை வெளியிட்டார்.
- தனது “இரு நாட்டு கொள்கை”யின் மூலம் இந்தியா நாட்டை இந்துக்களுக்கு இந்தியா என்றும், முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் என்றும் பிரிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் நன்கொடை: 1940
- ஆங்கில அரசப் பிரதிநிதி லின்லித்கோ, காங்கிரசை திருப்தி செய்ய சில உறுதி மொழிகளை வழங்கினார்.
- இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், இந்தியாவிற்கு அரசியல் நிர்ணய சபை அமைக்க ஒரு குழு நியமிக்கப்படும் என்றும், அரசப் பிரதிநிதியின் நிர்வாகக் குழுவில் இந்தியருக்கு இடம் அளிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
- இது ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் இதனை முற்றிலுமாக நிராகரித்தது.
கிரிப்ஸ் தூதுக்குழு: 1942
- இந்திய அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, 1942ஆம் ஆண்டு சர் ஸ்டோபோர்டு கிரிப்ஸ் தூதுக்குழு என்று அழைக்கப்பட்டது.
- இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு உதவிகரமாய் இந்தியா இருக்க வேண்டும் என்றும், போருக்குப்பின் இந்தியர்களுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்தது.
- முழுசுதந்திரம் பற்றி கிரிப்ஸ் தூதுக்குழு எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, காந்தியடிகள் கிரிப்ஸ் தூதுக்குழு உறுதி மொழிகளை “திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை” எனக் குறிப்பிட்டார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்: 1942
- காந்தியடிகள் பின்பற்றி வந்த அகிம்சை வழிகள் எத்தகைய பலனையும் அளிக்கவில்லை என்பதை உணர்ந்தார். எனவே, அவர் ஆங்கிலேயர் இந்திய நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனக் கோரினார்.
- 1942ம் ஆண்டு ஆகஸ்டு 8ம்நாள் காங்கிரஸின் செயற்குழு, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.
- மும்பையில் நடந்த செயற்குழு கூட்டத்தில், காந்தியடிகள் “இந்தியாவை விடுதலை பெறச் செய்வோம் அல்லது அதற்காக செத்து மடிவோம்” என்றார்.
- இரண்டாம் உலகப்போர் 1945ஆம் ஆண்டு முடிவடைந்தது. இங்கிலாந்தில் தொழிற்கட்சி வெற்றி பெற்று கிளமண்ட் அட்லி ஆட்சி அமைத்தார். ஆட்லி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.
பாகிஸ்தான் கோரிக்கை வளர்ச்சி
- ஜின்னா தனது பாகிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்தி 1943ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி பாகிஸ்தான் தினத்தை கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தார்.
- காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இரண்டும் இணைந்து விடுதலைக்கான முயற்சியை மேற்கொள்ளும் வகையில் ராஜாஜி சி.ஆர். சூத்திரம் (ஊ.சு. குழசஅரடய) என்று அழைக்கப்படும் ராஜாஜி திட்டத்தை வெளியிட்டார்.
- முஸ்லீம் லீக்கு தனிநாடு கோரிக்கைக்கு காங்கிரஸ் வழங்கிய அங்கீகாரமாக சி.ஆர். சூத்திரம் குறிப்பிடப்படுகிறது.
- மக்களிடம் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும், அதன் அடிப்படையில் முஸ்லீம்களுக்கான தனி நாடு கோரிக்கை நிறைவேற்றப்படும்.
- நாட்டின் பாதுகாப்பு, வர்த்தகம், தகவல் தொடர்பு போன்றவற்றிற்கு கூட்டு முயற்சியில் செயல்பாடுகள் இருக்கும்.
- மேலே குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு, இங்கிலாந்து முழுச் சுதந்திரம் வுழங்கும் பொழுது மட்டுமே சாத்தியாகும்.
- சி.ஆர் சூத்திரத்தை ஜின்னா ஏற்கவில்லை, சி.ஆர் திட்டம் தோல்வியில் முடிந்தது.
வேவல் திட்டம் ூ சிம்லா மாநாடு: 1945 - 26இ28இ30இ32 இந்தியாவின் வைஸ்ராய் வவேல் பிரபு 1945ஆம் ஆண்டு ஜீன் மாதத்தில் ஒரு மாநாட்டை கூட்டினார். அந்த மாநாட்டில் விவாதிப்பதற்காக வவேல் பிரபு முன்வைத்த திட்டமே வவேல் திட்டமாகும்.
- இந்த செயற்குழுவில் அனைத்து உறுப்பினர்களும் இந்தியர்களாக இருப்பர்.
- ஜாதி இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
- 1935ஆம் ஆண்டு சட்டப்படி இடைக்கால அரசாங்கமாக செயல்படும். வவேல் திட்டமும் தோல்வியடைந்தது.
- “இரண்டாம் உலகப்போர் இந்தியாவின் விடுதலைக்காக கடவுள் கொடுத்த வரம்” என்றார் சுபா~;சந்திரபோஸ்.
- காங்கிரசில் இருந்து விலகி 1940ல், ஃபார்வர்டு பிளாக் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். பின்னர், இந்தியாவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றார்.
- சிங்கப்பூரில் போஸ் இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைமை ஏற்றார்.
- 1945-ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் நாள் ஜ.என்.ஏ தினம் கொண்டாடப்படுகிறது.
- 1946ஆம் ஆண்டு “சர் பெத்திக் லாரன்ஸ்”, “ஏ.வி. அலெக்சாண்டர்” மற்றும் “சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ்” ஆகிய மூவர் அடங்கிய குழு இந்தியாவிற்கு வந்தது.
- இது “காபினெட் அல்லது அமைச்சரவை தூதுக்குழு” என்றழைக்கப்பட்டது.
- இக்குழு கூட்டாட்சி அரசு அமைய பரிந்துரை செய்தது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட வேண்டும், மேலும் இடைக்கால அரசு ஒன்று மத்தியில் அமைக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.
- ஜவஹர்லால் நேருவைப் பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசு 1946ல் நிறுவப்பட்டது.
- இவ்வரசை ஏற்படுத்த நேரு ஜின்னாவின் உதவியை நாடினார்.
- தனது பாகிஸ்தான் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்த ஜின்னா மறுத்துவிட்டார். எனவே, இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாத ஒன்றாயிற்று.
- 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் நாள், இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட அட்லி (லேபர்கட்சி), ஜீன், 1948ஆம் ஆண்டுக்கு முன்னதாக பிரிட்டிஷார் கையில் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
- மேலும், வேவலுக்கு பதிலாக, புதிய வைஸ்ராயாக மவுண்ட் பேட்டனை நியமிக்கப்பட்டது குறித்தும் அறிவித்தார்.
- 1947ஆம் ஆண்டு மவுண்ட் பேட்டன் ஆங்கில அரசுப் பிரதிநிதியாக பதவியேற்றார். இவரே ஆங்கில அரசின் கடைசித் தலைமை ஆளுநர் ஆவார்.
- 1947 ஜீன் 3ல் மவுண்ட் பேட்டன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அது மவுண்ட் பேட்டன் அல்லது ஜீன் 3ஆம் நாள் திட்டம் என்றழைக்கப்பட்டது.
- இத்திட்டத்தின்படி இந்தியா, இந்திய யூனியன் என்றும் பாகிஸ்தான் யூனியன் என்றும் இரு நாடுகளாகப் பிரிக்கப்படும்.
- இந்திய சுதேசி அரசுகள், இவ்விரு நாடுகளில் ஏதாவது ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கொள்ளவோ அல்லது சுதந்திரத்துடன் இருக்கவோ செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
- இத்திட்டத்தை காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் ஏற்றுக் கொண்டன.
- இச்சட்டத்தின்படி இந்தியப் பிரிவினை 1947ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
- ஆங்கில அரசிடமிருந்து அதிகாரங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மாற்றப்பட்டன.
- பாகிஸ்தானில், முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளான மேற்கு பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் கிழக்கு வங்காளம், அசாம் மாநிலத்திலுள்ள சில்ஹட் மாவட்டமும் இடம்பெற்றன. மீதமுள்ள பகுதிகள் இந்தியாவில் இடம்பெற்றன.
- மவுண்ட் பேட்டன் பிரபு சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகவும், பண்டித ஜவஹர்லால் நேரு முதல் பிரதமராகவும் பொறுப்பேற்றனர்.
- பின்னர் சி. ராஜகோபாலச்சாரியார் சுதந்திர இந்தியாவின் முதல் “இந்திய” தலைமை ஆளுநராகப் பதவி ஏற்றார்.
- இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் ஏறத்தாழ 564 சுதேசி அரசுகள் இருந்தன. அவற்றை நவாப்புகள், அரசர்கள் மற்றும் நிஜாம்கள் ஆட்சிசெய்து வந்தனர்.
- இந்த அரசுகளை இந்தியாவுடன் இணைக்கும் பொறுப்பு யூனியனுடன் இணைந்தன. ஆனால் கா~;மீர், ஜதராபாத் மற்றும் ஜீனாகத் ஆகியவை இந்தியாவுடன் இணையத் தயங்கின.
- தனது அரசியல் திறமையினாலும், கடுமையான நடவடிக்கைகளாலும், அந்தப் பகுதிகளை இந்திய யூனியனுடன் இணைத்தார்.
- இதனால் “இந்தியாவின் பிஸ்மார்க்” என்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் போற்றப்படுகிறார்
- பிரெஞ்சு அரசின் அனுமதியுடன் பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகள் 1954ஆம் ஆண்டு இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டன.
- கோவா, டையூ மற்றும் டாமன் ஆகிய பகுதிகள் போர்ச்சுக்கீசியரின் வசமிருந்த பகுதிகளாகும்.
- எனவே, இந்திய அரசு தனது ராணுவ நடவடிக்கைகளின் மூலம் 1961ஆம் ஆண்டு அப்பகுதிகளை இந்தியாவுடமன் இணைத்தது. இவை இந்திய யூனியன் பகுதிகளாக மாறின.
சி.ஆர். சூத்திரத்தின் முக்கிய அம்சங்கள்
இந்திய தேசிய ராணுவம்: 1943-1946
அமைச்சரவைத் தூதுக்குழு: 1946
இடைக்கால அரசாங்கம்: 1946
அட்லியின் அறிவிப்பு: 1947
மவுண்ட்பேட்டன் திட்டம்: 1947
இந்திய விடுதலைச் சட்டம்: 1947
சுதேசி சமஸ்தானங்கள் இணைப்பு
பிரெஞ்சுப் பகுதிகள் இணைக்கப்படுதல்: 1954
போர்ச்சுக்கீசியர்கள் பகுதிகள் இணைப்பு: 1961

TNSCERT Books - Free Download
6th Standard
- Tamil I
- Tamil II
- Tamil III
- Science I (Tamil)
- Science I (English)
- Science II (Tamil)
- Science II (English)
- Science III (Tamil)
- Science III (English)
- Social Science I(Tamil)
- Social Science I(English)
- Social Science II(Tamil)
- Social Science II(English)
- Social Science III(Tamil)
- Social Science III(English)
7th Standard
- Tamil I
- Tamil II
- Tamil III
- English I
- English II
- English III
- Science I (Tamil)
- Science I (English)
- Science II (Tamil)
- Science II (English)
- Science III (Tamil)
- Science III (English)
- Social Science I (Tamil)
- Social Science I(English)
- Social Science II (Tamil)
- Social Science II(English)
- Social Science III (Tamil)
- Social Science III(English)
8th Standard
- Tamil Part I
- Tamil Part II
- Tamil Part III
- English Part I
- English Part II
- English Part III
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Maths Part III (Tamil)
- Science Part I (Tamil)
- Science Part II (Tamil)
- Science Part III (Tamil)
- Social Science Part I (Tamil)
- Social Science Part II (Tamil)
- Social Science Part III (Tamil)
- Maths Part I (English)
- Maths Part II (English)
- Maths Part III (English)
- Science Part I (English)
- Science Part II (English)
- Science Part III (English)
- Social Science Part I (English)
- Social Science Part II (English)
- Social Science Part III (English)
9th Standard
- Tamil Part I
- Tamil Part II
- Tamil Part III
- English Part I
- English Part II
- English Part III
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Maths Part III (Tamil)
- Science Part I (Tamil)
- Science Part II (Tamil)
- Science Part III (Tamil)
- Social Science Part I (Tamil)
- Social Science Part II (Tamil)
- Social Science Part III (Tamil)
- Maths Part I (English)
- Maths Part II (English)
- Maths Part III (English)
- Science Part I (English)
- Science Part II (English)
- Science Part III (English)
- Social Science Part I (English)
- Social Science Part II (English)
- Social Science Part III (English)
10th Standard
11th Standard
- Tamil
- English
- Maths Part I (Tamil)
- Maths Part II (Tamil)
- Physics Part I (Tamil)
- Physics Part II (Tamil)
- Chemistry Part I (Tamil)
- Chemistry Part II (Tamil)
- Botony Part I (Tamil)
- Botony Part II (Tamil)
- Zoology Part I (Tamil)
- Zoology Part II (Tamil)
- History Part I (Tamil)
- History Part II (Tamil)
- Geography(Tamil)
- Political Science Part I (Tamil)
- Political Science Part II (Tamil)
- Economics (Tamil)
- Ethics Science Part I & II (Tamil)
- History Part I (English)
- History Part II (English)
- Botony Part II (English)
- Zoology Part I (English)
- Geography (English)
- Economics (English)
- English
- Political Science Part I (English)
- Political Science Part II (English)
12th Standard
- History Part I (Tamil)
- History Part II (Tamil)
- Chemistry Part I (Tamil)
- Chemistry Part II (Tamil)
- Geography
- Accountancy
- Political Science Part I (Tamil)
- Political Science Part II (Tamil)
- Economics
- Ethics
- Bio Botany (Tamil)
- Economics (English)
- Political Science (English)
- History (English)
- Geography (English)